rp

Blogging Tips 2017

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்" என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

"நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.

சங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு பெற முடிகிறது

நெட் தேர்வில் பார்வையற்றோருக்கான பிரெய்லி வினா நிரல் - உயர்நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் நெட் தேர்வில், பார்வையற்றோருக்கென்று தனியாக பிரெய்லி வினா நிரலை தயாரித்து வழங்குமாறு யு.ஜி.சி.,க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு அமர்வு, இத்தீர்ப்பை வழங்கியுள்ளது

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வு மையம்

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மத்திய அரசு, ஆண்டுதோறும், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் போட்டி தேர்வை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவிதொகை வழங்குகிறது. குடும்ப ஆண்டு வருமானம், 1.5 லட்ச ரூபாய்க்குள் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம்.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் உறுதிமொழியின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கடந்த 11 மற்றும் 13ம் தேதி இரண்டு கட்ட போராட்டங்கள் நிறைவு பெற்றது. நேற்று பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நடக்க வேண்டிய மூன்றாம் கட்ட போராட்டம் ஒத்திவைப்பதாக திடீர் அறிவிப்பு வெளியானது.

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.177 கோடி ஒதுக்கீடு பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சி.காசியம்மாள்.
இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள

தொடக்கப் பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க கோரிக்கை

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக  மாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், 1.1.13 தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு
இன்று பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளில் கடந்த 2004-2005ம் ஆண்டு முதல் 23,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு என்பதே வழங்கப்படவில்லை. 

பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.நெடுந்தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்கள், மலைப் பிரதேசங்கள் ஆகியபகுதிகளில்
இயங்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் வீடியோ கான்பரசிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்ய உள்ளது.முதற்கட்டமாக 8

REVISED PG TEACHER PANEL AS ON 01.01.2013 FOR ALL SUBJECTS

PHYSICS CLICK HERE... BOTANY CLICK HERE...
 
CHEMISTRY CLICK HERE...
 
COMMERCE CLICK HERE...
 
ECONOMICS CLICK HERE...
 
ENGLISH CLICK HERE...
 
GEOGRAPHY CLICK HERE...
 
HISTORY CLICK HERE...
 
MATHS CLICK HERE...
 
PHYSICAL DIRECTOR GRADE - I CLICK HERE...
 
TAMIL CLICK HERE...
ZOOLOGY CLICK HERE...

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் (பாடவாரியாக)

DSE - ALL SUBJECTS BT TO PGT PROMOTION PANEL AS ON 26.12.2013 CLICK HERE...

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TO DOWNLOAD DSE - BT TO PG PROMOTION COUNSELING WILL BE HELD ON 28.12.2013 @ CONCERN CEO OFFICES REG PROC CLICK HERE...

அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.

பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் நாளை 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

3ம் பருவ பாடப் புத்தகம்: பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவத்திற்கான புத்தகங்களை விநியோகிக்கும் பணி துவங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் இயங்கி வருகிறது. பெங்களூரு, ஜதராபாத் மாநிலங்களில் அச்சடிக்கப்பட்ட தமிழக அரசின் பாடத்திட்ட 3ம் பருவத்திற்கான புத்தகங்கள், நேற்று முன்தினம் விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பாடம்

மகாராஷ்டிர மாநில கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையினர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் பெறுவதால், அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த மும்பை, ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.13 அன்று நடைபெற உள்ளது

47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் ஆன்லைன் கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும்

த.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு

பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு-The Hindu

பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

வெளிநாட்டு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் இந்தியர்கள்!

இந்திய மாணவர்கள், சுமார் 10 ஆயிரம் கோடிகள் வரை, வெளிநாட்டு கல்விக்காக செலவழிக்கிறார்கள். இதனால், இந்தியா நிறைய மனித வளங்களை இழக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை, விரும்பிய உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், இந்தியா தனது அந்நிய செலாவனியை பெருமளவில் இழக்கிறது. எனவே, இந்தியாவின் உயர்கல்வித் திட்டத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, அந்நிய செலாவனியை தக்க வைக்கலாம்.

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை

"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித விவரம், பள்ளி வளாகத்தில் பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்ளது.

7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்திய அரசு ஜரூர்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.
இந்த கமிஷன், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, இரண்டு ஆண்டுகளில், அறிக்கை அளிக்கும். இதன் பரிந்துரைகள், உடனடியாக அமலுக்கு வரும். 

மாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிடம் ஒப்படைப்பு!

வால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் வரை போதிய நிதி வசதி இல்லாததால் மூடப் போவதாக அறிவித்து வருகின்றன.

1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்?

உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார்?

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150க்கு மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்

இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்

மாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கட்டாயமாகிறது.

மாநில அரசின் குரூப்-1, குரூப்-2 அந்தஸ்தில் பணியாற்றும் அதிகாரிகள், அவர்களின் பணி மூப்பு, செயல்பாடுகளின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவது வழக்கம். இந்நிலையில், மத்திய பணியாளர் நலன் மற்றும் குறைதீர் அமைச்சகம் இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும் நெட் தேர்வு

கல்லூரி ஆசிரியர் பணிக்காக எழுதப்படும் நெட் தேர்வு, தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுதவற்கும் பயன்படும். UGC, தனது நெட் முடிவுகள் தரவு தளத்தை(database), பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுததிக் கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் முதுநிலை பட்டதாரிகள் பயன்பெற முடியும்.

NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 02.01.2014 முதல் 04.01.2013 வரை www.tndge.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89 அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு பின்பும் அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படவில்லை என ஆசிரியர்கள், பட்டு வளர்ச்சி ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், சாலை ஆய்வாளர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் முறையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் பெற்றோர்கள் புகார்

திட்டக்குடி அருகே எரப்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். திட்டக்குடியை அடுத்துள்ள எரப்பாவூரில் இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளியானது கடந்த 2008ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல லட்சங்களை கொட்டி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்பு பெயர் பட்டியல் (CHECK LIST) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்

DGE - INSTRUCTIONS REG CHECKLIST FOR HSC EXAM MARCH 2014 CLICK HERE...

அ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியல் சரிபார்த்து திருத்தங்களை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் 01.01.2014 முதல் 03.01.2014 வரை மேற்கொள்ள உத்தரவு

DGE - CHECK LIST NOMINAL ROLL CORRECTIONS SHOULD BE MADE FROM 01.01.2014 TO 03.01.2014 REG INSTRUCTIONS CLICK HERE...

TNTF.IN -ன் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

Christmas Quotes

அனைத்து வகை ஆசிரியர்களும் மேற்படிப்புக்கான தேர்வுஎழுத செல்ல தற்செயல் விடுப்பு அனுமதிக்கலாம்- RTI LETTER

 பல ஆசிரியர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இப்பதிவு பதிவிடப்படுகிறது

தொடக்கக்கல்வி இயக்குனரர் அவர்களீடம்  தகவல் பெறும் சட்டப்படி கேட்கப்பட்ட  கேள்விக்கடிதமும் இயக்குனர் பதிலும்.

உயர்கல்வித்தேர்வெழுதும் நாட்களில் தற்செயல் விடுப்பினை துய்க்கலாம் -

pls click here to down load the RTI LETTER

thanks to teachertn

தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி கோரிக்கை.

தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் :
தமிழக
அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.வணிக வரித்துறை கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.மணிவாசன்,

மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப் திட்டம்" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை.

"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு தேசிய
வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தொடக்கக் கல்வி - வழக்கறிஞரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.

DEE - DEE ORDERED TO ALL DEEOs FOR ARRANGE AEEO TRAINING REG COURT CASE REG PROC CLICK HERE...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுத் தீர்மானங்கள்:

இக்னோ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு

டெல்லி: எம்.பி.ஏ., மற்றும் டிப்ளமோ படிப்புகளின் ஜுலை 24 சுழற்சிக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வை வரும் பிப்ரவரி 23ம் தேதி இக்னோ நடத்துகிறது.
பைனான்சியல் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்,

தமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு, இன்று முதல், ஜன., 1 வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த, இரு வாரங்களாக, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றம் செய்து, தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அபூர்வ வர்மா உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜராமன், வணிகவரித்துறை முதன்மை செயலாளராகவும், நிரஞ்சன்மார்டிபொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை





ஆம்புலன்சில் வந்து, கலெக்டரிடம் இடமாறுதல் கோரி ஆசிரியை மனு

பணியிட மாறுதல் கோரி, ஆசிரியை ஒருவர், ஆம்புலன்சில் வந்து, மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தார். திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர், சகாயமேரி, 44. இவர், புதுக்கோட்டை

தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவலம்

ஏதேனும் ஒரு நிராகரிப்பின் வலியோடுதான் கடந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாணவனின் பள்ளிப் பருவமும், இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பல பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு முன்பதிவு

பட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு

செவ்வாய் தோறும் சட்ட ஆலோசனை "தகுதி தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து"

வெளியானது முதுகலை தமிழ் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 694 பேர் அழைப்பு

நீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேரில், 694 பேர், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூலை, 21ல், தேர்வு நடந்த நிலையில், தமிழ் அல்லாத பிற

மழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்

"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இன்றைய பரபரப்பான உலகில், நடமாடும் இயந்திரங்களாக மனிதர்கள்

குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2-வது வாரத்தில் வெளியிட முடிவு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி குரூப்-4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 556 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள்

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 30, 31.12.13 நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 5 மையங்களில் சான்றிதழ்

எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது.

எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
மத்திய அரசின், 100க்கும் மேற்பட்ட துறைகளில், மொபைல் மூலமான

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஓதியத்தூர் - தொடர் மற்றும் முழுமையான இரண்டாம் பருவ செயல்பாடுகள்

CCE - TERM - II OTHIYATHUR SCHOOL ALBUM CLICK HERE...

TNPSC - DEPARTMENTAL TEST SYLLABUS / BOOKS / PREVIOUS YEAR QUESTION PAPER


DEPTL TEST NEW SYLLABUS CLICK HERE...

Departmental Test- Books

List of Books
Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005 (Annexure I)

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (Pay Cell) department, dated 22-7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell -Admission of pay bills for the month of December, 2013 - Instructions Click Here...

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Examination Result and Provisional List for Certificate Verification (Tamil Subject)

CLICK HERE FOR EXAMINATION RESULT

CLICK HERE FOR PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
Click here for Final Key (Tamil Subject)

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 - PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION

CLICK HERE FOR CERTIFICATE VERIFICATION CENTRE LIST

டிச. 29ல் "நெட்" தேர்வு: பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு

யூ.ஜி.சி.,யின் நெட் தேர்வு திருச்சியில் பத்து மையங்களில் வரும் 29ம் தேதி நடக்கிறது என பாரதிதாசன் பல்கலை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலை பதிவாளர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தொலைதூர, திறந்தநிலை கல்விக்கான யு.ஜி.சி.,யின் புதிய வரைவு விதிமுறை

தொலைதூரக் கல்வி கவுன்சில் கலைக்கப்பட்ட பின்னர், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைதூரக் கல்வி நடைமுறையை கட்டுப்படுத்த ஒரு வரைவு விதிமுறையை யு.ஜி.சி. உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுவதாவது: 5 ஆண்டுகள் ஸ்பெஷலைஸ்டு துறைகளுக்கான திறந்தவெளி மற்றும் தொலைதூர

DA Rates from 01/01/2006 ( for Information) From - 2006

01-01-2006 -- NIL


01-07-2006 -- 2%

01-01-2007 -- 6%

01-07-2007 -- 9%

பெற்றோரே ஊக்குவிக்கும் அவலம்: டூ வீலர் ஓட்டும் பள்ளி மாணவர்கள்

சென்னையில் இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் இயக்கி வருவது அதிகமாவதாக புகார் எழுந்துள்ளது. பெற்றோரும் இதற்கு உறுதுணையாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில்

சென்னை உயர்நீதிமன்ற கிறிஸ்துமஸ் விடுமுறை.

சென்னை உயர்நீதிமன்றத்தின், கிறிஸ்துமஸ்விடுமுறை கால நீதிமன்றங்களில், பணியாற்றும் நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்கலையரசன்

D.T.E - Diploma Examination Results (Oct 2013)

TO VIEW DIPLOMA EXAMINATION RESULTS CLICK HERE...

SSLC - COMMON HALF YEARLY EXAM 2013-14 ENGLISH & SCIENCE KEY

SSLC - ENGLISH PAPER - I & II KEY CLICK HERE...

SSLC - SCIENCE EXAM KEY CLICK HERE...

SSLC - SCIENCE EXAM KEY IN TYPED FORMAT CLICK HERE...

SSLC - SOCIAL SCIENCE EXAM KEY CLICK HERE...

அரசு பள்ளிகள் என்றால் பிரியம் அதிகம்: சகாயம்

நாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர் சகாயம்தான். காரணம் மிகவும் எளிது. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் வடிவமாக நேர்மைக்கு

160 மாணவர்களுக்கு மூன்றே ஆசிரியர்கள்

கூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், ஊராட்சி

தவறான தகவல் தந்த பள்ளி ஆசிரியைக்கு வினோத தண்டனை

கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்து, பொய் சொன்னதற்காக பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனையை அளித்துள்ளது. டில்லி காந்தி சமாதியில் தினமும், நான்கு மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு

புதிய பாட பிரிவுகளுக்கு பேராசிரியர் நியமனம் எப்போது?

அரசு கலை கல்லுாரியில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் நடப்பாண்டில், புதிதாக துவங்கப்பட்ட 16 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பேராசிரியர்

10 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை மொத்தமாக திருப்பி தர முடிவு

கடந்த 10 ஆண்டுகளாக எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படாத கல்விக் கட்டணத்தை மொத்தமாக திருப்பி வழங்க மாநில அரசு 131 கோடி

வி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு

கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், காலியாக இருந்த, 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) பதவிகள் கடந்த 2010ம்

எழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம் - SCERT முடிவு

ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், புதிய

பட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு: விரைவில் கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறலாம். இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள், இடமாறுதல் பெறலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், இந்த நடைமுறையை பள்ளிக்கல்வித் துறை

தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி-தீர்மானங்கள்-தினமணி நாளிதழ் செய்தி


தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர ஆசிரியர்கள் கோரிக்கை

தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின்

அனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்!


இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக

பிளஸ்-2 முடித்ததும் என்ன படிக்கலாம்? - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி

பிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்தக் கல்லூரியில் சேரலாம்? என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில் இருந்தே வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்

ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி அவரது

வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை?

தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பிலும் முப்பருவ

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

அரசு பள்ளிகளில் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு,

அரசுப்பள்ளிகளில் அரைகுறையாய் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கிலவழி, ஏழைத் தமிழ் மாணவர்களின் பரிதாபநிலை

தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களும்கூட அதுபற்றிக் கவலைப்படவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். அவர்கள் கவலைப்படாதது மட்டுமல்ல, ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான்

பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மருத்துவம்,

தமிழக அரசு உத்தரவு பள்ளி வளாகங்களில் புகைபிடிக்க தடை

 93463994பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனைபோன்று பள்ளிகள், கல்லூரிகள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால், பல்வேறு அரசு பள்ளிகள் போதிய காம்பவுண்ட் சுவர் ஏதுமின்றி திறந்த வெளிகளாக உள்ளன. இங்கு எந்த நேரமும் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளது.

இடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிப்பதற்காக, அவர்களை கணக்கெடுக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும், 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு, குழந்தை தொழிலாளர் சிறப்பு மையத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. பின்னர், அவர்கள், முறைசார் (ரெகுலர்) பள்ளிகளில், 6ம்வகுப்பு சேர்க்கப்படுகின்றனர். அங்கு பிளஸ் 2 வரை படிக்கலாம்

பள்ளிகளில் "கனெக்டிங் கிளாஸ் ரூம்": முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும், "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கை துவங்கி உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், இணையதள வசதி மூலம் புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதில் முன்னோட்டமாக மாவட்டத்துக்கு, ஐந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கான உபகரணம் வாங்கவும், வகுப்பறை அமைக்கவும், 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு, ஐந்து பள்ளி வீதம், இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு அதில் உள்ள குறைபாடுகள், சிக்கல்கள் களையப்பட்டு, மேம்படுத்திய பின், அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இணையதள வழி மரபியல் படிப்பு விரைவில் துவக்கம்

"இணையதளம் வாயிலாக, மரபியல் சார்ந்த சான்றிதழ் படிப்பு, விரைவில் துவங்கப்படும்" என இந்திய மரபணு சங்கத்தின் செயலர் ஆனிஹாசன் தெரிவித்தார்.
சென்னை சங்கர நேத்ராலயாவில் உயிரணு மரபியல் ஆய்வு கூடம் துவக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, சங்கர நேத்ராலயாவும், பார்வை ஆராய்ச்சி மையமும் இணைந்து சென்னையில் நேற்று மரபியல் ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனை குறித்த கருத்தரங்கை நடத்தின. கருத்தரங்கை, சங்கர நேத்ராலயா இயக்குனர்

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு

உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
2014ம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில், எதிலிருந்து மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.
கடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது.
ஒரு தேர்வு நடந்தால், அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்கு மேல் வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் குறைந்தபாடில்லை

விடுமுறை: இது வாழ்கைக்கான களப்பயிற்சி

தேர்வு காலம் நெருங்கிவிட்டாலே தேர்வு பயம் மாணவர்களை எந்த அளவுக்கு பதட்டம் கொள்ள வைக்கிறதோ, அதை விட அதிக அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அதற்கு பின்னர் வரும் விடுமுறை. ஆனால் பெற்றோருக்கோ கவலையை ஏற்படுத்திவிடுகிறது.

ஏனென்றால் பள்ளி, பாடம், பரீட்சை என்று பரபரப்பாக ஒரு இயந்திர வாழ்க்கையில் பிள்ளைகள் இருந்துவிட்டு, சுதந்திரம் கிடைத்தவுடன் தேவையில்லாத நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, செலவு வைப்பது, வீட்டில் உடன்பிறந்தோருடன் சண்டை சச்சரவில் ஈடுபடுவது, அதை செய்து கொடு, இது வேண்டும் என் பல வகை உண்வு பதார்த்த வகைகளை கேட்டு அடம் பிடிப்பது என பிள்ளைகளால் விடுமுறைக்காலங்களில் பெற்றோர் படும் பாடு நாம் அறிந்ததே.

நிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 48 பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும் 1000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமலும் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில் அங்கீகாரம் தொடர்பான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு

பொரித்த உணவை அதிகமாக உட்கொள்வதால் இதயநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் மாணவர்கள் மூலம் இதனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தது.

இன்றைய சூழ்நிலையில் பாஸ்புட் உணவுகள், பொரித்த உணவு பண்டங்கள் போன்றவற்றை அதிகமாக வாங்கி சாப்பிடுகிறோம். அதிக எண்ணிக்கை பொரித்த உணவு பொருட்கள், குடிப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் 30 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களின் இதயநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (வேல்டு ஹெல்த் ஆர்கனைசேஷன்) தெரிவித்துள்ளது.

ஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணியிடத்தால் அரசு பணம் விரயம்

சேலம் மாநகராட்சி, பரமகுடி நன்னுசாமி தெருவில், ஒரே வளாகத்தில், இரண்டு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, நான்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
ஒரே பள்ளியாக மாற்ற முயற்சி எடுக்கப்படாததால், ஆசிரியர் பணியிடமும், அதற்கான அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது. மூன்றாண்டுகளாகியும் கண்டுகொள்ளாமல் இருக்கும், கல்வித்துறையின் நடவடிக்கை அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
சேலம் மாநகராட்சி பள்ளிகளில், இடிந்துவிழும் நிலையில் கட்டிடங்கள், போதிய பராமரிப்பின்மை, நிதி ஒதுக்கீடு இல்லாததால் நிர்வாகமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பரவலாக காணப்படுகிறது. தனியார் பிரைமரி, நர்சரி பள்ளிகளின் ஆதிக்கத்தால், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது.

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் பதிவு

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

CBSE பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் 13.25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 70,000 அதிகம். அதேபோன்று, 12ம் வகுப்பு தேர்வில் 20,000 மாணவர்கள் வரை அதிகரிக்க உள்ளனர். இத்தேர்வுகளுக்கான தேதி விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பெண் மட்டும் போதுமா? அரசுப் பள்ளிகள் vs தனியார் பள்ளிகள்-=ஓர் சிறப்புக்கட்டுரை

தனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள்தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.

தனியார் பள்ளிகளில் தரமான கல்வி வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இலவச அனுமதியோடு சத்துணவு, சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள், உதவித் தொகையாகப் பணம், உயர் கல்வி பெறும்போது பல்வேறு சலுகைகள். இப்போது இலவச சைக்கிள், லேப்டாப் என்று பல சலுகைகள் கூடி விட்டன. ஆனால், கல்வி தரமானதாக இருக்குமா

புதிய தொழில்வரி விகிதங்கள்-2013 அக்டோபர் முதல் அமுலாக்கம்-2014 பிப்ரவரரி மாதம் தமிழக அரசு ஊழியரகள் மற்றும் ஆசிரியர்கள் செலுத்தவேண்டியதொகை விவரம்


web stats

web stats