rp

Blogging Tips 2017

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகளை 
www.cbse.nic.in
 
 www.ctet.nic.in
 
 ஆகிய இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 10 மணி நேரம் மின்வெட்டு அமல்: 10ம் வகுப்பு பொதுதேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதி


தமிழகம் முழுவதும் மீண்டும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியுள்ளது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன் 10,547 மெகாவாட். ஆனால் நாளொன்றுக்கு மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால், காலையிலேயே வெயிலின் உக்கிரம் தெரிகிறது. வெயிலின் தாக்கம், இரவு வரை நீடிக்கிறது. இதனால் மின்தேவை அதிகரித்துள்ளது. ஆனால், மின்உற்பத்தி குறைவாக உள்ளது. சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் தினமும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.


சென்னையில் பெரும் பாலும் இரவு நேரங்களில் மின்சப்ளை பாதிக்கப்படுகிறது. குறைந்த அழுத்த மின்சாரமே வினியோகிக்கப்படுவதால், மின்விசிறிகள் கூட சரியாக இயங்குவதில்லை. ஏற்கனவே கொசு தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புழுக்கம் காரணமாக இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பகலில் 2 மணி நேரமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் இரு முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் இரு முனை மின்சாரத்தை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாததால், விவசாயம் பாதித்
துள்ளது. இதேநிலை ஒரு வாரம் நீடித்தால், விவசாயம் முற்றிலும் முடங்கி விடும்.
மின்வெட்டு காரணமாக, 10ம் வகுப்பு பொதுதேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். கோவையில் மின்வாரியம் அறிவித்துள்ளபடி மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை. நேரம் மாறி மின்தடை செய்யப்படுவதால், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், சிறு மற்றும் குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில், ‘கடந்த ஆண்டு மின்வெட்டால் 45 சதவீத பம்ப்செட் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு இப்போதே மின்வெட்டு துவங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் உற்பத்தி பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 3 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ஆனால், இந்த உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என்ற புகார் பரவலாக இருந்து வருகிறது.

100 டிகிரியை தொட்டது வெயில்: மேலும் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் மாதத்திலேயே தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

தொடக்கக்கல்வி நீதிமன்ற வழக்குகள்-மேல் முறையீடு மற்றும் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய மாவட்டந்தோறும் NODAL OFFICER நியமித்து இயக்குனர் உத்திரவு

click here to see the DEE proceeding

T.N.P.S.C-GROUP- IV- கலந்தாய்வு ஏப்ரல்-24 ல் தொடக்கம்


D.T.Ed -ஏப்ரல் 2 முதல் செய்முறைத்தேர்வு தொடக்கம்


ஜூன் 3 வது வாரத்தில் பி.இ கலந்தாய்வு


பள்ளித் தலமனைத்துங் கோயில் செய்குவோம் என சொன்னது ஏன்

பாரதி அன்பர்கள் மத்தியில் பரவலாக எழும் ஐயப்பாடுகளில் ஒன்று, “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்’ என்கிற பாடலில் வரும் “பள்ளித் தலமனைத்துங் கோயில் செய்குவோம்’ என்கிற வரி பற்றியது.

தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று குறிப்பிடுபவர் பாரதி. கலைவாணியைத் துதித்துப் பாடும் 


“வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்’ பாடலில் கூடbharathi

”வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
 நாடு முற்றிலும் உள்ள வூர்கள் 
நகர்களெங்கும் பலபல பள்ளி; 
தேடு கல்வியிலாத தொரூரைத் 
தீயி னுக்கிரையாக மடுத்தல்” என்றும்,

“”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”-

என்றும் பாடிய மகாகவி பாரதி,

 எப்படி, எதற்காகப் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடினார்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள். தெரியாத பெருவாரியானவர்கள் மட்டும் மேலே படியுங்கள்.

10ம் வகுப்பு தேர்வு : ஹால்டிக்கெட் வினியோகம் தொடங்கியது

பத்தாம் வகுப்பு தேர்வுகள் 26ம் தேதி தொடங்குவதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்று ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.  அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறையில் இருந்து நேற்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்றே பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஹால்டிக்கெட்டுகளை வினியோகம் செய்தனர். பள்ளிக்கு வராத மாணவர்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கு தேர்வு தொடங்கும் நாளிலும் ஹால்டிக்கெட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். மதியம் 12 மணிக்கு முடியும்

ஆசிரியர் சுயவிவரங்கள் ஆன்லைன் பதிவு. -சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் விரிவாக்கம்

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் பள்ளிகள் போன்றவற்றில் பணிபுரியும் தொடக்க நடுநிலை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் ஆன்லைன் மூலம் உரிய வலைதளத்தில் (Part-I, Part-II) பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குரூப்-2ஏ தேர்வு ஜூன் 29-க்கு ஒத்திவைப்பு

மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக, மே 18-ல் நடைபெறவிருந்த குரூப்-2ஏ தேர்வு, ஜூன் 29-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாடு அலுவலர் வெ.ஷோபனா ஐ.ஏ.எஸ். இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே9ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வருகிற மே9ம்தேதி வெளியிடப்படும் எனஅரசு தேர்வுகள் துறை இயக்குனர்திரு.தேவராஜன்
தெரிவித்தார்

பிளஸ் 2 தேர்வில் பிட்: இடுப்பு வரை வெட்டப்பட்ட சுடிதார்: அவமானத்தால் கதறி அழுத மாணவிகள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் இருவர், சுடிதாரின் கீழ்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்களின் உத்தரவால் அவர்களது மேலுடையில் இடுப்புப் பகுதி வரை வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த மாணவிகள் வீட்டுக்குச் செல்ல அவமானப்பட்டு கதறி அழுதனராம்.

ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை காலை பிளஸ் 2 உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வு நடைபெற்றது. அங்கிருந்த நிலையான பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்தபோது, 2 மாணவிகள் தங்களது சுடிதார் மேலுடையின் கீழே உள்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்ததைக் கண்டுபிடித்தனராம்.

10ம் வகுப்பு தேர்வு நேரம்: அரசு ஆசிரியர்களிடையே குழப்பம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தை மாற்றியமைப்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்காத நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை பத்தாம் வகுப்பு தேர்வு, காலை, 10 மணிக்கு துவங்கி வந்தது. இந்த நேரத்தை மாற்றும் படி யாரும் எவ்வித கோரிக்கையும் வைக்காத நிலையில் அரசு தேர்வுத்துறை திடீரென 45 நிமிடம் முன்னதாக தேர்வு தொடங்கும் படி மாற்றியமைத்தது.
இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களும், பெற்றோரும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதுகுறித்து கோரிக்கை விடுத்த ஆசிரியர் சங்கங்களிடம், தேர்வுத்துறை இயக்குனரகத்திலும், "தேர்வு நேரத்தை மாற்ற, முதல்வரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதிமொழி

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாக நிரப்ப வேண்டும் என்றும் அவ்வாறு நிரப்பப்படாத விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்.. என்ன செய்யலாம்…?


அதிக விலைக்கொடுத்து வாங்கிய உங்களுடைய ஆண்ட்ராய்ட், ஐபோன் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை இப்பதிவில் பார்ப்போம். ஆம் நண்பர்களே.! உங்களுடைய விலைமதிப்புடைய iPhone அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில் விழுந்துவிட்டால் செய்ய வேண்டியவை:


எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடைய ஐபோனை தண்ணீரிலிருந்து உடனடியாக எடுத்து விடுங்கள். உடனடியாக உங்களுடைய போனை ஸ்விட்ஸ் ஆப் (Switch Off) செய்யவும்

எஸ்.எம்.எஸ்-சில் மாதிரி-வினாத்தாள் பெறும் வசதி அறிமுகம்


காப்பி அடித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது-தினமணி செய்தி


ஊதியம் குறைக்கப்பட்ட 20 துறைகளில் உள்ள 52 பணியிடங்களுக்கான ஊதியத்தை நிர்ணயக்க ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி தலைமையிலான 3 நபர் குழு அமைக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசாணை வெளியிட தாமதம் ஏன்?அரசு தரப்பில் மேல் முறையீடா??????????????????

 6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி அவர்கள் தலைமையில் 2முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  இக்குழு 20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் உள்ள இந்த ஊதிய முரண்பாடை அரசு அகற்ற வேண்டும். அதற்கு, சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் தனிநபர் ஊதியக் குறை தீர்வு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு நியமித்துக் கொள்ளலாம். புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தகுந்த விதிமுறைகளை இந்தக் குழுவுக்கு அரசு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை பெற்ற நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் இந்தக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். இந்தக் குழு ஆய்வு செய்து புதிய ஊதிய விகித்தை நியமிக்கும் வரை கடந்த 2011 மற்றும் 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடமுறைப்படுத்தக் கூடாது. அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய அளவு குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
இது குறித்து நேற்று தலைமைச்செயலக வட்டாரத்தில்  அரசானை நிலை குறித்து  அறிய விசாரித்த வகையில்

1. அரசானை ஏதும் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை என அறியலாகிறது
2. தேர்தல் விதிகள்நடை முறையின் காரணமாக அரசாணை வெளியிட வாய்ப்பில்லை
3.இது நாள் வரை குழு அமைக்க,அரசாணை வெளியிட பூர்வாங்க பணிகள் ( தீர்ப்பில் கூறப்பட்டதைப்போன்று 3 வாரகாலங்கள் முடிந்தமையால்) ஏதும் தொடங்கப்படவில்லை என்பதால்
அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்களின் படி  சந்தேகிக்கப்படுகிறது

குளறுபடிகள்: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு வாபஸ்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடந்தது. தேர்வுகள் முடிந்து கடந்த 10ம் தேதி இரவு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் நன்றாக எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாகவும், தேர்வே எழுதாத மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாகவும், என பல்வேறு குளறுபடிகளுடன் முடிவுகள் வெளியாயின.இதை கண்டித்து வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களை நடத்தினர்.

தொடக்கக் கல்வி - கரும்பலகை திட்டத்தின் கீழ் 1610 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.1.2014 முதல் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது

SCERT-தேசிய அடைவுத் திறன் தேர்வு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 11 மற்றும் 15,16 ஆகிய தேதிகளில் 15மாவட்டங்களில் நடத்த திட்டம்

SCERT - NATIONAL ACHIEVEMENT TEST FOR CLASS V STUDENTS ON APRIL 10,11 & 15,16 @ 15DISTRICTS CLICK HERE...

TNPSC - Results of Departmental Examinations - DECEMBER 2013-துறைத்தேர்வு முடிவுகள்

TNPSC - Results of Departmental Examinations - DECEMBER 2013 Click Here...

List of Tests Published (PDF) Click Here...

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி மற்றும் சில்லரை செலவின பணியாளர்கள், 10ஆண்டு பணிமுடித்த நாள் பணிவரன்முறைப்படுத்துதல் - வழக்குகள் மற்றும் வழக்குகளின் மீது பெறப்பட்ட தீர்ப்பாணை சார்பு

GOVT LTR NO.7172 / CC3 / 2014 DATED.14.3.2014 - EMPLOYEES WORKING ON DAILY WAGES - BRINGING REGULAR ESTABLISHMENT ON COMPLETION OF 10 YEARS OF SERVICE REG ORDER CLICK HERE...

DSE - EMPLOYEES WORKING ON DAILY WAGES REG PROC CLICK HERE...

SUPREME COURT ORDER REG EMPLOYEES WORKING ON DAILY WAGES CLICK HERE...

பொது தேர்வுகளில் "ஜெல்' பேனா பயன்படுத்தலாமா?

பொது தேர்வுகளில், "ஜெல்' பேனாவை பயன்படுத்தலாம்' என, கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது. பொது தேர்வுகளில், விடை எழுத, பெரும்பாலான மாணவ, மாணவியர், நீல நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர். சிலர், கறுப்பு நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர்.
இத்துடன், "ஜெல்' பேனாவை பயன்படுத்தலாமா என்ற குழப்பம், மாணவர் மத்தியில் நிலவுகிறது

TPF-ஆசிரியர் வருங்கால வைப்புநிதி-தற்காலிக முன்பணம் பெறும் விண்ணப்பம்-Excel file வடிவில்

CLICK HERE TO DOWN LOAD THE FORM

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த சுமார் 12 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங் கள் அடங்கிய ரேங்க் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் வெளியானது. காலியிடங்க ளின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் பரிசீலிக்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் பரிசீலிக்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 7.3.2012ல் அறிவிக்கப்பட்ட ஓர் உத்தரவில்(எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 23.8.2013க்கு பின் பணிநியமனம் செய்வதில் அந்த ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக 25.5.2013ல், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது.

சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மார்ச் 20 முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை (மார்ச் 20) முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

TNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. 
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இப்போது நடைபெற்று வருகிறது. ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் 5 மையங்களில் நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் நாளை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, எட்டு லட்சத்து 26 ஆயிரம் மாணவ, மாணவியர் கடந்த, 3ம் தேதி முதல் எழுதி வருகின்றனர். தேர்வில் எவ்வித குளறுபடியும் ஏற்படக் கூடாது என்பதற்காக, தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நடுநிலை, துவக்கப் பள்ளிகளில் ஏப்.,21ல் பருவத்தேர்வு

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான, மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல், 21ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகளை மார்ச், 21ம் தேதி துவங்கி, 29ம் தேதி முடிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து துவக்க

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகிஓடும் பி.பி., சுகர்!

'காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே! இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல்பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.
காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.
இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்!
ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே!

வாக்காளர் பட்டியலில் திருநங்கைகளுக்கு தனி பாலினம்: தேர்தல் ஆணையம் உறுதி



வாக்காளர் பட்டியலில் திருநங்கைகள் பெயர் சேர்ப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

இது குறித்து, புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம் கூறப்பட்டது.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், பிளஸ் 2 படிப்பில், கனிமொழி, தோல்வியுற்றார். அதன் பின், சென்னை பல்கலைகழகத்தின், திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., தமிழ் பட்டம் பெற்று, ரெகுலர் படிப்பில், பி.எட்., பட்டமும் பெற்றார். பின், அண்ணாமலை பல்கலையில், ரெகுலர் படிப்பில், எம்.ஏ., பட்டம் பெற்றார்.

மாற்றித்திறனாளிக்கான சிறப்பு தகுதித்தேர்வு தள்ளிவைப்பு

திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றபின்,+2 முடித்தாலும் முறையானபடிப்பாக கருதி அரசு வேலை வழங்க கோர்ட் உத்திரவு


March 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும்


இந்த நிதியாண்டுக்கான வரிகளை செலுத்துவதற்கு வசதியாக இம்மாத இறுதியில் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை இரத்து செய்ய உத்தரவிடப்பட்டதற்கு பெற்ற இடைகால தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து CEO / DEO-களுக்கு உத்தரவு

DSE - AIDED SCHOOLS - TEACHERS THOSE WHO R NOT QUALIFIED IN TET - APPROVAL CANCELLED ORDER - VACATE INTERIM STAY REG PROC CLICK HERE...

தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறை


தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் தமிழக இணைத் தலைமை தேர்தல் அதிகாரி அஜய்யாதவ் சனிக்கிழமை கூறியதாவது:

நடத்தை விதிகள் மீறல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்பட தேர்தல் தொடர்பான அனைத்து புகார் களையும் பொதுமக்கள் தெரி விக்க வசதியாக மாநில அளவில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிதம்பரம் ஒன்றியத்தில் பல மாதங்களாக மாதத்தின் இறுதி வேலை நாளில் ஊதியம் வழங்கப்படாமை துரித நடவடிக்கைக்கு-கடலூர் மாவட்டகருவூல அலுவலர் திரு.கருணாநிதி அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்கள் பேச்சு


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்ட சார்நிலைக்கருவூலம் மூலம் ஊதியம் பெறும் சிதம்பரம் உள்ளிட்ட  பல்வேறு ஒன்றிய  ஆசிரியர்களுக்கு மாதத்தின் இறுதி வேலை நாளில் ஊதியம் கடந்த சில மாதங்களாக வழங்கப்படுவதில்லை .மாறாக அடுத்த மாதத்தின் 10 தேதி வாக்கிலேயே வழங்கப்பட்டது. இதனால் சிதம்பரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்ரிய ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் குழப்பமும் ,சம்பளம் எப்ப வருமோ என்ற மன உளைச்சலிலும் இருந்தனர். இவ்விஷயம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

உடனடியாக அவர் இதற்கு காரணமான சிதம்பரம் சார் நிலைக்கருவூல அலுவலரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது.தோல்வியேமிஞ்சியது.

எனினும் நமது பொதுச்செயலர் அவர்கள் கடலூர் மாவட்டகருவூல அலுவலர் திரு.கருணாநிதி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிதம்பரம் கருவூல அலுவலரின் செயலால் மாதத்தின் இறுதிநாளில் ஊதியம் கடந்த சில மாதங்களாக வழங்கப்பாடாததை கூறி அதனால் ஆசிரியர்கள் பலர். குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதை எடுத்துக்கூறினார்

பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்!

சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில்பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும். உம். இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும்.

பள்ளிக்கு வரும் மாணவன் குளித்துவிட்டு, ஒழுக்கமாக உடை அணிந்து, புத்தகங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பம். அதற்கு மாறாக இன்றைய பெரும்பாலான மாணவர்களின் தலைமுடி முதல் காலணிவரை இருப்பது எல்லாம் நாகரிகம் என்ற போர்வையில் ஒழுக்கமின்மைதான். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் இந்த விஷயம் கை ஓங்கி இருக்கிறது. (இது எல்லாம் எங்கள் பள்ளியில் இல்லை என்பவர்களுக்கு வாழ்த்துகள்).

10 ஆம் வகுப்பு தேர்வு மைய ஆசிரியர்களுக்கு கிடுக்குபிடி

70 லட்சம் புதிய ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் -யுனெஸ்கோ

அடுத்த 10 ஆண்டுகளில், உலகெங்கிலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள(UAE) ஒரு அமைப்பு மற்றும் என்.ஆர்.ஐ.,கள் நடத்தும் சர்வதேச கல்வி நிறுவனத்தின் நன்கொடை பிரிவு ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சி திட்டத்தை நடத்தவுள்ளன

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு

கீழ் கோர்ட் நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, சுப்ரீம் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொதுமக்கள், மாணவர்கள் படிப்பதற்கு வசதிக்காக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அம்பேத்கர் சட்ட பல்கலை முடிவெடுத்துள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழகம் முழுவதும் 7 அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் தினசரி புதிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை சட்டக் கல்லுாரி மாணவர்கள் முதல் கீழ் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது


மார்ச் 18-தமிழகத்தில் பொதுக் கல்வி வாரியம் கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறை நடை முறைக்கு வந்துள்ளது. பின் னர் 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தொடக்க நடு நிலைப் பள்ளிகளில் முப் பருவ முறையை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு 9ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை நடைமுறைக்கு வந்தது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேர மாற்றம் ரத்து செய்யப்படுமா?: முதல்வரின் முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்...!


கடந்த அரை நூற்றாண்டாக இருந்த வந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கு நேரத்தை தற்போது மாற்றியுள்ள கல்வித்துறையின் அறிவிப்பை முதல்வர் கவனத்தில் கொண்டு சென்று ரத்து செய்ய வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை தொடங்கப்பட்ட காலம்தொட்டு கடந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி- அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நேரம் காலை 10 மணியாகத்தான் இருந்து வந்தது. ஆனால், எவருமே நேர மாற்றம் குறித்த கோரிக்கையோ வேண்கோளோ அல்லது பரிந்துரையோ கருத்துக்கேட்போ எதுவுமின்றி நிகழாண்டுக்கான தேர்வு நேரத்தை சுமார் 45 நிமிடம் முன்னதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரமாற்றத்தால் ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகியோருக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளபடவில்லை என்பது வேதனைக்குரியது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர்களின் வீட்டிலேயோ அல்லது அரசியல் சார்ந்த நபர்களின் வீடுகளிலேயோ தங்க கூடாது

தேனி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், தேனி மாவட்டக் கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கி பயிற்சி அளித்தனர்.
அப்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும், தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கிக் கூறினர்.

மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு


அஞ்சுகிராமம் அருகே இரவிபுதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆடலின் கிளாடிஸ்.
நேற்று முன்தினம் பள்ளியில் 10–ம் வகுப்பு கணித பாட திருப்புதல் தேர்வு நடந்தது. தேர்வுக்கு முன்பு மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அங்கு தலைமை ஆசிரியை ஆடலின் கிளாடிஸ் சென்று பார்வையிட்டார்.

TNPSC: GR.-IV (2012-13) Counselling Schedule & Date-Wise vacancy position

Click here to know COUNSELLING SCHEDULE for the posts of JUNIOR ASSISTANT/DRAFTSMAN/FIELD SURVEYOR


OVER ALL VACANCY POSITION 


Junior Assistant 


Draftsman 


Field Surveyor

சேலம் மாவட்டம்- மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை மற்றும் கோடை விடுமுறை விவரம் ..

94-95 முதல் 2013-14 வரை T.P.F/G.P.F வட்டி கணக்கிட Excel file

click here to down load the excel file

DEE - தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கணக்குத்தாள் வழங்குதல் சார்பாக தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு

நன்றி நன்றி நன்றி நமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களுக்கு நன்றிகள் பல!!!!! திமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-


திருவண்னாமலை மாவட்டம் இன்று ,திருவண்ணாமலை,கீழ்பென்னாத்தூர்,தண்டராம்பட்டு ,போளூர்,செங்கம் ,ஜவ்வாதுமலை உள்ளிட்ட பல ஒன்றியங்களின் உதவித்தொடக்ககல்வி அலுவலர்கள் தொடக்க்கக்கல்வி இயக்குனரின் உத்திரவுப்படி, டிட்டோஜாக் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கான ஒருநாள் ஊதியம் பிடிப்பதற்கான ஏர்பாடுகளை மும்முரமாக செய்தனர்.இத [பற்றி அவர்களிடம் நமதுஇயக்கப்பொறுப்பாளர்கள் முறையிட்டமைக்கு,மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரிடம் இருந்து எந்தவித உத்தரவும்(,வாய்மொழியாக்கக்கூட) வராமையால் இதுபோன்ற நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

சிலர் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டமைக்கும் சரியான பதில் வரவில்லை.

இது குறித்து வட்டாரப்பொறுப்பாளர்கள் மாவட்டச்செயலர் திரு.கே.பி.ரக்‌ஷித் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அவர் உடனடியாக நமது பொதுச்செயலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை விளக்கி இது குறித்து இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு வேண்டினார்

இன்று எழுத்தறிவு மதிப்பீட்டு தினம்


தரவரிசை மாநிலம் எழுத்தறிவு விகிதம் (%)
[2013 மதிப்பீடு] எழுத்தறிவு விகிதம் (%) - 2001
Census[1] எழுத்தறிவு விகிதம் (%)
- 2011 Census % உயர்வு
1 கேரளா 95.5 92.19 93.91 3.04%
2 மிசோராம் 93.4  88.8  91.6   2.80%
3 திரிபுரா 91.5 73.19 87.8 14.61%
4 கோவா 90.5 87.4 87.4 0.00%
5 ஹிமாச்சல் பிரதேசம் 86.5 76.48 83.8 7.32%
6 நாகலாந்து 85.9 76.88 82.9 6.02%
7 சிக்கிம் 86.2 68.81 82.2 13.39%
8 தமிழ்நாடு 83.0 73.45 80.3 6.85%
9 மகாராஷ்டிரா 83.2 66.59 80.1 13.52%

தற்பொழுது 2014ல் நடைபெறும் பொதுத் தேர்வின்.முக்கிய அம்சங்கள்-கடந்த ஆண்டோடு-ஓர் ஒப்பீடு

தவறான கேள்விக்கு 6 மதிப்பெண்: தேர்வுத்துறை அறிவிப்பு

''பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஆய்வு செய்த தேர்வுத்துறை, 47வது கேள்வியை, 'தொட்டிருந்தால்' அதற்குரிய ஆறு மதிப்பெண்ணும், முழுமையாக வழங்கப்படும் என,

இன்றைய டிட்டோஜாக் கூட்ட முடிவுகள்-18/03/2014

இன்று டிட்டோஜாக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அதில் டிட்டோஜாக் அமைப்பில் உள்ள 6 சங்க பொறுப்பாலர்கள் கலந்து கொண்டனர்
அக்கூட்டத்தில் ஒருநாள வேலை நிறுத்தம் மற்றும் அதன் விளைவுகள்சார்பாக விவாதிக்கப்பட்டது
பின்னர்
1)
06.03.2014 அன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டு வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றி அடையச்செய்த அனைவருக்கும்மாநில டிட்டோஜாக் சார்பில் நன்றி  தெரிவிக்கப்பட்டது
2
தமிழக அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படியை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு  உடனே வெளியிட வேண்டும்

3.
தேர்தலுக்குப் பின்னர் டிட்டோஜாக் அமைப்பின் அடுத்த உயர்மட்டக்குழுகூட்டம் ஜூன்-14 முதல் வாரத்தில் கூடி  அடுத்தகட்ட போராட்டம்  குறித்து வியூகங்கள் அமைத்து போராட்டத்தை தொடர்வது குறித்து முடிவு எடுப்பது என முடிவாற்றியது

தகவல்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

நாம் டெட் தேர்வை ரத்து செய்யக்கோருகிறோம்.ஆனால் மதிப்பெண் குறைத்ததற்கே விஷமப்பிரச்சாரம் செய்யும் இவர்களை என்னவென்று சொல்வது

ஒரு சில சமூகங்களுக்காக 55 சதவீதம் என குறைத்தால் அடுத்தடுத்த தலைமுறைகளின் கல்வி மேலும் பாதிக்கப்படாதா !!! தினமலர் கட்டுரை

பாரதிதாசன் பல்கலை: இளங்கலை தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள்

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இளங்கலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதத்தில் இளங்கலையில் பி.ஏ, பி.எஸ்சி, பி.சி.ஏ, பி.பி.ஏ ஆகிய படிப்புக்கான தேர்வுகள் எழுதப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE

1
7/2014 17.03.2014
VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE
  • NOTIFICATION  - TAMIL
  • NOTIFICATION  - ENGLISH
  • SYLLABUS
17.03.2014
15.03.2014
14.06.2014
Apply Online

தமிழ்நாடு அமைச்சுப்பணியாளர் பவானி சாகர் அடிப்படை பயிற்சி விதிதளர்வு வழங்குதல் சார்பு

CLICK HERE-DSE-RC.NO 93821/A4/E3/2009-DATE -10.2.2014- PRO

திருவள்ளுவர் பல்கலை.யில் குளறுபடி 100க்கு 107 மதிப்பெண்: மாணவர்கள் அதிர்ச்சி

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 29ம் தேதி வரை நடந்தன. மொத்தம் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுகள் நடந்த போதே, கேள்வித்தாள்கள் இமெயிலில் அனுப்பப்பட்டது, ஜெராக்ஸ் எடுத்து வினியோகிக்கப்பட்டது என்று குளறுபடிகள் நடந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் காண வந்த மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆன தாகவும், பல மாணவர்களின் பதிவு எண்கள் வேறு படிப்பை படிக்கும் மாணவர்களது எண்களாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

விரல்களும் -மோதிரம் அணிய வேண்டிய வழி முரைகளும்


திருமணம் ஆக போகிறவர்கள் மற்றும் ஆனவர்களுக்கு அவசியமான ஒன்று...

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோரை குறிக்கிறது.

ஐகோர்ட்டு உத்தரவு -15 வயது பூர்த்தியாகாத மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதிக்க

15 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி மாணவரை, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மரிச்சுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆங்கிலவழி கல்வி சேர்க்கைக்கு இலக்கு'; விழிபிதுங்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்

அரசு ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மறைமுகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாநில அளவில், 23 ஆயிரத்து 522 அரசு ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்து 63 ஆயிரத்து 767 மாணவர்கள் படித்துவருகின்றனர்

Monday, March 17, 2014 அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - முதன்மை விடைத்தாள், முகப்புச் சீட்டு வழங்குதல், தேர்வு நடத்துவதற்கான முன்பணிகள் முடித்தல், முகப்புச் சீட்டினை இணைத்து தைப்பதற்கான அறிவுரைகள்

DGE - SSLC - MARCH 2014 - MAIN BOOK & TOP SHEETS REG INSTRUCTIONS TO CEO / DEOs CLICK HERE...

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

இந்த ஆணை வெளிவர நமது பொதுச்செயலர்  திருமிகு செ.முத்துசாமி அவர்கள் முன்முயற்சி எடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.இயக்குனர் அவர்களுக்கு மீண்டும் நமது நன்றிகள்

DEE - PASSPORT - DELEGATION OF POWERS TO DEEOs (APPOINTMENT AUTHORITY) REG ISSUING NOC FOR PASSPORT FOR "B" "C" & "D" CATEGORY EMPLOYEES & TEACHERS REG ORDER CLICK HERE...

தொடக்கக் கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) - நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் 20.3.14 அன்று பயிற்சி

DEE - 2014 - INSPIRE AWARD - PREPARATIONS REG INSTRUCTIONS CLICK HERE...

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி வெளியாகிறது. முதல் முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி வெளியாகிறது. முதல் முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. 
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி-டெட் என்று அழைக்கப்படும் இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. 

1342 கிராம நிர்வாக அலுவலர் (VAO) காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு

2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது : பள்ளிக் கல்வித் துறை

வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

தமிழக துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி சேர்க்கை துவக்கம்

நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் இன்னமும் முடிவடையாத நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப் பள்ளியாக கருதப்படுகிறது. தமிழக, அரசு துவக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு ஆங்கில வழிக் கல்வி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி, ஒன்றாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. ஒரே பள்ளியில் ஒரு வகுப்பறையில் தமிழ்வழிக் கல்வியும், மற்றொரு வகுப்பறையில் ஆங்கில வழிப் பாடமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆங்கில வழி கல்விக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு துவக்கப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி ஜூன் 8-ல் முதல்நிலைத் தேர்வு

நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு

+2 விடைத்தாள் திருத்தும் பணி - முழு விவரம்



ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மற்ற பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி ஏப்ரல் 3 ம் தேதி தொடங்கி 10 ம் தேதிக்குள் முடிக்கவும் (8 நாட்கள்) உத்தரவு .

இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு, மாநில பதவி முன்னுரிமை பட்டியலின் படி நடந்தால் நன்றாக இருக்கும் : ஜோ.எஸ்.நாதன்

இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு, மாநில பதவி  முன்னுரிமை பட்டியலின் படி நடந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒரு இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு வாயிலாக தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுவிட்டால் அடுத்த ஒன்றியத்துக்கு செல்ல முடியாத நிலையே இன்றுவரை நிலவி வருகிறது. அப்படியே மாறுதல் வேண்டுமெனில் இடைநிலை ஆசிரியராக பதவி இறக்கம் பெற்றே செல்ல முடியும். ஏன் இந்த அவலநிலை தோழர்களே! அது மட்டுமா ஒரு ஒன்றியத்தில் இருந்து வேறு ஒன்றியத்துக்கு குடும்ப சூழல் காரணமாக மாறுதலில் சென்றால் அந்த ஆசிரியரின் அவலநிலையை சொல்லவே வேண்டாம். அவர் எவ்வளவு ஆண்டுக்காலம் பணியாற்றியவராக இருந்தாலும், மாறுதலான ஒன்றியத்தில் இளையவராகத்தான் செல்ல முடியும். காலம்காலமாக உள்ள ஒர் அபத்தமான நடைமுறை நம் தொடக்கக் கல்வித் துறையில் உள்ளது.
ஓர் இடைநிலை ஆசிரியராக நான் ஒன்று கேட்க விருப்பப்படுகிறேன், ஒவ்வொரு ஆசிரியரையும் என்ன அவரவர் சொந்த இருப்பிட ஒன்றியத்திலேயா பணிஅமர்ததப்பட்டார்கள்? இல்லையே, பிற ஒன்றியத்தில்(பிற மாவட்டமும் கூட) பணியமர்த்தினால் சொந்த ஒன்றியத்திற்கு வர கூடாதா? அவ்வாறு சொந்த ஒன்றியத்திற்கு மாறுதல் கேட்டதற்கு தண்டனையா இந்த பதவி உயர்வு பட்டியலில் கடைசிநிலை. இப்படி பல அவலநிலைகள் இந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமைப் பட்டியலில் காணப்படுகிறது.அதனால் மாநில முன்னுரிமையே இந்த அனைத்து குறைகளுக்கும் தீர்வாக அமையும்.

தேர்வுத்துறைக்கு சபாஷ்! சாலை விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்,மருத்துவமனையில் கணிததேர்வு எழுதினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 கணித தேர்வு எழுத, அஜீத் குமார் என்ற மாணவர், தன் பைக்கில் நண்பர்கள், சீனு, சுந்தரமூர்த்தியுடன் சென்றுக் கொண்டிருந்தார்.
மேலக்கொந்தை சாலை பிரியும் இடத்தில், பைபாஸ் சாலையைக் கடக்க முயன்ற போது, மாருதி கார், பைக்மீ து மோதியது. இதில், மூவரும்

அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2014 - விடைத்தாட்கள் / படிவங்கள் 18.03.2014 அன்று சம்பந்தபட்ட NODAL POINT லிருந்து பெற்றுக் கொள்ள இயக்குனர் உத்தரவு

DGE - SSLC PUBLIC EXAM MARCH / APRIL 2014 - ANSWER SCRIPTS COLLECT FROM NODAL POINTS & MEETING REG INSTRUCTIONS CLICK HERE...

ஆசிரியர் ஓய்வூதியர்கள், ஆசிரியர் குடும்ப ஓய்வூதியர்களின் மாதிரி கையொப்பம், கைரேகை, புகைப்படம் கணினியில் பதிவு செய்யப்படுகிறது: மாவட்ட கருவூல அலுவலர் தகவல்



"ஏப்ரல், 1ம் தேதி முதல் ஓய்வூதியர்களின் நேர்காணல் போது மாதிரி கையொப்பம், கைரேகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது,'' என, மாவட்ட கருவூல அலுவலர் பத்மா தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஏப்ரல், 1ம்தேதி முதல் நடைபெறும் ஓய்வூதியர்களுக்கான நேர் காணலின் போது, மாதிரி கையொப்பம், கைரேகை மற்றும் புகைப்படம் ஆகியவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளன. இதனால், காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஓய்வூதியர்கள் அலுவலக வேலை நாட்களில் மட்டும் நேர்காணலுக்கு, பான் கார்டு ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.
ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரவேண்டிய தேதி அட்டவணை விபரம்:
* அனைத்து வங்கிகளில் பென்ஷன் பெறும், போலீஸ் ஒய்வூதியர்கள் ஏப்ரல், 1, 2ம் தேதி.
* ஆசிரியர் குடும்ப ஓய்வூதியர்கள் (அனைத்து வங்கிகள்): ஏப்ரல், 3, 4ம்தேதி.
* ஆசிரியர் ஓய்வூதியர்கள் (அனைத்து வங்கிகள்): ஏப்ரல், 7, 8 மற்றும் 9ம்தேதி.

பிளஸ் 2 கணித தேர்வு:தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு, முழுமையாகமதிப்பெண் வழங்கப்படுமா?தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன்பதில்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணித தேர்வு, நேற்று நடந்தது. இதுவரை நடந்த தேர்வுகள் எளிதாக இருந்ததைப் போல், கணித தேர்வும் இருக்கும் என, மாணவர் எதிர்பார்த்த நிலையில், 16 மதிப்பெண்களுக்கான, இரு கட்டாய கேள்விகள், அவர்களை திணறடித்தன. மேலும், ஆறு மதிப்பெண் கேள்வி, தவறாக கேட்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட, தொழிற்கல்வி படிப்புகளில் சேர, அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில்பெறும் மதிப்பெண், மிகவும் முக்கியம்.இந்த பாடங்களில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான்,தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கிறது. நேற்று, மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. தேர்வை முடித்து, ?வளியே வந்த மாணவர் முகத்தில்,வழக்கமான மகிழ்ச்சி இல்லை. அரசு பள்ளியில் மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவ,மாணவியரும், 16 மதிப்பெண்களுக்கான,

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி தவிர அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

web stats

web stats