rp

Blogging Tips 2017

ஜாக்டோ போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம்

ஜாக்டோ போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம்
(-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)
தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742 
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
* பங்கேற்றோர் % -70.68 %
பள்ளிக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 1,07,473 
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 84,408
வேலை நிறுத்தத்தில்
* ஈடுபட்டவர்கள்- 23,065
* பங்கேற்றோர் % -21.46 %
ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 2,20,215
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 1,17,469
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 1,02,746
* பங்கேற்றோர் % - 46.65 %

பள்ளிக்கல்வி - பள்ளி, மாவட்ட, மாநில அளவில் மாணவர்களுக்கு "தனித்திறன்" போட்டி - இயக்குனர் செயல்முறைகள்

CHILD HELP LINE- அனைத்து பள்ளிகளிலும் தகவல் பலகை வைக்க கல்வித்துறை செயலர் ஆணை

பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் PASSPORT பெற NOC - தெளிவுரை வழங்கி இயக்குனர் செயல்முறைகள்


கட்' அடிக்கும் மாணவரை பிடிக்க பாடவாரியாக வருகை பதிவேடு

அரசு பள்ளிகளில், பாட இடைவேளையில், 'கட்' அடிக்கும் மாணவர்களைக் கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல பள்ளிகளில், மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளை நேரத்திலோ, மதிய உணவு இடைவேளையிலோ வகுப்பை, 'கட்' அடித்து விட்டு சென்று விடுகின்றனர்.

ஒய்வூதிய பங்களிப்புத் தொகை ரூ.30 ஆயிரம் கோடி எங்கே?ஜேக்டோ ஆசிரியர்கள் ஆவேசம்

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு "ஜேக்டோ' சார்பில் திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்களின் ஓய்வூதிய பங்களிப்புப் தொகை நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளது, என குற்றம் சாட்டப்பட்டது.
தமிழகத்தில் 29 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர், கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ), 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 15 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜேக்டோ மாவட்ட தொடர்பாளர்கள் ஜான்பீட்டர், சந்திரசேகர், உயர்மட்டக்குழு உறுப்பினர் மோசஸ் தலைமை வகித்தனர்.

ஜாக்டோ' போராட்டத்தால் கற்பித்தல் பணி பாதிப்பு: பெயரளவிற்கு செயல்பட்ட அரசு பள்ளிகள்

ஜாக்டோ' சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆசிரியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று பள்ளிகளை மூடுவதை தவிர்த்து, வழக்கம் போல் செயல்பட செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சத்துணவு அமைப்பாளர்கள், பகுதிநேர ஓவியம், தையல், உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் பள்ளிகளை திறந்தனர்.

ஜாக்டோ போராட்ட களத்தில் நம் பொதுச்செயலர் செ மு

ஆசி ரி யர் கள் போராட்டம் வலுக் கி றது நவம் ப ரில் கால வ ரை யற்ற ஸ்டி ரைக்ஒரு நாள் வேலை நி றுத் தத் தில் 90 சத வீத பள் ளி கள் முடங் கின


ஆசி ரி யர் கள் ஸ்டி ரைக்கை அடுத்து தமி ழ கம் முழு வ தும் நேற்று 90 சத வீத பள் ளி கள் மூடி யி ருந் தன. கோரிக் கை களை நிறை வேற்ற அரசு இனி மே லும் நட வ டிக்கை எடுக் கா விட்டால், நவம் ப ரில் கால வ ரை யற்ற ஸ்டி ரைக் நடத் தப் ப டும் என் றும் எச் ச ரிக்கை விடப் பட்டுள் ளது.
ஜேக்டோ அமைப் பி னர் அறி வித் த படி நேற்று தமி ழ கம் முழு வ தும் ஒரு நாள் ேவலை நிறுத் தப் போராட்டம் நடந் தது. பல மாவட்டங் களில் பெரும் பா லான பள் ளி கள் திறந் தி ருந் தும், வகுப் பு கள் நடக் க வில்லை.

தொடக்க வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு தமிழுக்கு தனிப்பயிற்சி! மாணவர் வாசிப்புத்திறன் மேம்படுத்த முயற்சி

 மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, தனிப்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
         ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களின் திறனை ஊக்குவிக்கவும், கற்பித்தல் கற்றல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும் பாடவாரியாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆய்வுகளின் மூலம், தமிழ் மொழிப்பாடத்தில், மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பின்தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. 

ஆசிரியர்கள் ஸ்டிரைக்: சத்துணவு அமைப்பாளர்களை வைத்து பள்ளிகளை நடத்துவதா? - இளங்கோவன் கண்டனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
27 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான ‘ஜேக்டோ” சார்பில் இன்று
முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படாமல் முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க சபீதா தீட்டிய திட்டங்கள் நிறைவேறியதா?

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் மற்றும் இணை இயக்குனர்கள் தலைமையில் குழுவை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அதிரடியாக
அமைத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் 27 சங்கங்களின் கூட்டு குழுவான ‘ஜாக்டோ’ சார்பில் இன்று பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். 6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய முரண்பாட்டை போக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

ஆசிரியர் வராமல் பள்ளிகள் நடந்தன ! 75 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை

Dinamalar Banner Tamil News: தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு துவக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு: ராமதாஸ் கண்டனம்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கின்றனர்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். ஆனால்,இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.ஆசிரியர்களின் ஊதிய

ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?- தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்

ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் உரிய பேச்சுவார்த்தை மூலம் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் எந்தத் தரப்பினருக்கும் நிறைவோ நிம்மதியோ இல்லை; ஆட்சி என்ற ஒன்று முறையாக நடைபெறுகிறதா என்பதே அனைவருக்கும் சந்தேகமாக உள்ளது

இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, வகுப்புகளை புறக்கணித்ததால், தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை; பல தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.
காலை, 8:00 மணிக்கே பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், தற்செயல் விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டு, கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், வேன் ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக ஆர்ப்பாட்டத்துக்கு சென்றனர். தலைமை ஆசிரியர்கள் மட்டும், பணிகளை கவனித்தனர்;

கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் நடந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் புதியதலைமுறையின் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.

மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு துவக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
               மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்குவழங்க வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும். பள்ளிகளில் சைக்கிள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது.

அக்டோபர் 8 போராட்டம் ---டாட்டா வின் அறிவிப்பு .

அக்டோபர் 8 போராட்டம் ---டாட்டா வின் அறிவிப்பு ...
1. 6 வது ஊதிய குழு முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் .இடைநிலை ஆசிரியரின் இரு வேறு பட்ட ஊதிய முரண்பாடுதீர்க்கப்பட வேண்டும்
2. CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்
3.2003--2006 தொகுப்பூதிய பணிக்காலம் பணிகலமாக ஏற்கப்பட்டு பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்யப்பட வேண்டும் .
என்ற கோரிக்கைகளை மட்டும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாட்டா ) அக்டோபர் 8 போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொள்கிறது மேலும் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்க கேட்டுக்கொள்ள படுகிறது.டாட்டா சங்கம் போராட்டத்திற்கு தடை வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தாக்கல் செய்ய வில்லை .
மாநில அமைப்பு ....டாட்டா கிப்சன் .

அக்டோபர் 08- ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம்.


மாணவர் வாசிப்பு திறன் அதிகரிப்பு : இணை இயக்குனர் பெருமிதம்

தமிழகத்தில் தொடக்கக் கல்வி மாணவர்கள் வாசிப்பு திறன் 10 சதவீதம் அதிகரித்துள்ளது," என, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார். மதுரையில்  நிருபரிடம் அவர் கூறியதாவது:

எஸ்.எஸ்.ஏ., மற்றும் தொடக்கக் கல்வி சார்பில் மாணவர்களை மதிப்பீடு செய்து, தமிழ், ஆங்கிலத்தில் எழுதுதல், வாசித்தல் மற்றும் அடிப்படை கணித அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையில், மாநில அடைவு தேர்வுகள்

கருவூல இயக்குனரை மாற்றக்கோரி ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு

கருவூலத்துறை இயக்குனரை மாற்றக்கோரி, தமிழகம் முழுவதும், கருவூல கணக்குத்துறை அலுவலர்கள், 3,000 பேர், நேற்று, ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் 
உள்ள கருவூல கணக்குத்துறை தலைமையகத்தில், ஒரு வாரத்திற்கு முன், மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், இயக்குனர் முனியநாதன், அதிகாரிகளை சரமாரியாக திட்டியதாக கூறப்படுகிறது. 'டார்ச்சர்' தாங்க முடியாத, மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அதிகாரி மூர்த்தி, 57, மாரடைப்பால், கூட்டத்திலேயே மரணம் அடைந்தார். இது, அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி

பொதுத் தேர்வை பல முயற்சிகளில் எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அளிக்க அரசாணை வெளியீடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச்-ஏப்ரல், ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர் ஆகிய பருவங்களில் நடத்தப்படுகின்றன. 

சென்னை மாவட்ட தொடக்க கல்வி அலுவலருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சந்திப்பு:

சென்னை மாவட்ட தொடக்க கல்வி அலுவலருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சந்திப்பு:
சென்னை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பெற்றுள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிப்புக்குரிய ரேவதி அம்மையார் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார் அவர்களது தலைமையில் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது திருவல்லிக்கேணி திரு. செல்லசாமி கருமாறன், இராயபுரம் திரு.பூபதி, அடையார் திரு.பெனடிக் இன்பராஜ் மற்றும் ஜார்ஜ் நகர் திரு.மோகன் குமார் உடனிருந்தனர்.

ஆதார் அட்டைக்காக தரும் விவரங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது: உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டைக்காக பொதுமக்களால் தரப்படும் விவரங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதார் அட்டை தொடர்பான வழக்கில், பொதுமக்களின் விவரங்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமனறம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலஸ்ரீ தேசிய விருதுக்கான போட்டிகள்: அக்.10,11 தேதிகளில் நடக்கிறது

10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கலைத்திறமைக்கு வழங்கப்படும் பாலஸ்ரீ விருதுக்கான போட்டிகள் சென்னையில் அக்டோபர் 10,11 தேதிகளில் நடக்கிறது.

இதுகுறித்து கலைப் பண்பாட்டுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் உள்ள தேசிய பாலபவன் சார்பில் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் பாலஸ்ரீ எனும் தேசிய விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேடை, அறிவியல், படைப்பு மற்றும் எழுத்து ஆகிய பிரிவுகளில் 16 விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, விருதுகள் வழங்கப்படுகின்றன.

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு தமிழ்நாட்டுக்கு 75 சதவீதம் நிதி வழங்க வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப் பதாவது:-
மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகத்தின் 216-வது கூட்டத்தில் 2015-16-ம் ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு மொத்தம் ரூ.2329.15 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய - மாநில அரசுகள் 65 மற்றும் 35 சதவீதம் பங்க ளிப்பை அளிக்கும் வகை யில் இந்த நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டுக்கு முதல் தவணையாக ரூ.162.78 கோடி நிதியை கடந்த செப்டம்பர் 1-ந்தேதி வழங்குவதாக தெரிவித்தது. பிறகு செப்டம்பர் 14-ந்தேதி மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச் சகம் எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசின் பங்காக 50 சதவீதம் மட்டுமே

குட்டையில் மூழ்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

பள்ளி நேரத்தில் வெளியே சென்ற மாணவன், குட்டையில் மூழ்கி பலியானான். 'பள்ளி நேரத்தில், மாணவன் வெளியே சென்றது எப்படி?' எனக் கேட்டு, தலைமை ஆசிரியருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த, சின்னா கவுண்டனுார் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ், 12, ஜெயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று, மதிய உணவு இடைவேளையில், மாணவ, மாணவியர் சாப்பிட்டுவிட்டு, பள்ளி வளாகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். சிலர், பள்ளி அருகிலுள்ள குட்டைக்கு விளையாட

ஆசிரியர்கள் நாளை 'ஸ்டிரைக்'; பள்ளிகளுக்கு ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு

அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த, 2003ல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' என்ற அமைப்பை துவக்கி, போராட்டம் நடத்தி, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். தற்போது, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.நாளை, மாநிலம் முழுவதும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், ஒரு லட்சம் பள்ளிகளுக்கு பூட்டுப் போட்டு, வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதனால், ஜாக்டோ உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து, அரசு நேற்று பேச்சு நடத்தியது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன், இணை இயக்குனர்கள் பழனிச்சாமி, கருப்பசாமி ஆகியோர், அரசு சார்பில் பேச்சு நடத்தினர். இரண்டு மணிநேர பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், 'திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும்' என, ஜாக்டோ நிர்வாகிகள் அறிவித்தனர்.

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிற்சி"

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிற்சி" என்ற தலைப்பில் 15/10/2015 மற்றும் 16/10/2015 ஆகிய நாட்களில் பயிற்சி - செயல்முறைகள்

TNTF FLASH NEWS-ஜாக்டோ அமைப்பினர் மற்றும் இயக்குனருடனான பேச்சு வார்த்தை முழு விவரம்-TNTF

இன்று 6.10.2015   பள்ளிக்கல்வி இயக்குனர்அழைப்பின் பேரில் மாலை 4 மணிக்குபள்ளிக்கல்வி  இயக்குனர் அலுவலகத்தில்  அரசு சார்பாக ஜாக்டோ கோரிக்கை குறித்தான பேச்சு வார்த்தை நடைபெற்றது.இப்பேச்சு வார்த்தையில் அர்சு சார்பாக  பள்ளிக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன்அவர்களும் ,தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் அவர்களும்  கூட்டாக கலந்துகொண்டனர். ஜாக்டோ  அமைப்பில் இணைந்துள்ள 24 சங்கங்களின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பொதுசெயலர் (பொ) திரு செல்வராஜ் அவர்களும்,தலைமை நிலையசெயலர் திரு சாந்த குமார் அவர்களும்கலந்துகொண்டனர்
          இயக்குனர் வரவேற்புக்கு பின்னர் ஜாக்டோவின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக ஜாக்டோ குழுவினர் ஒவ்வொருவராக  விளக்கமாக எடுத்துரைத்தனர்
                             அவற்றை கூர்ந்து கேட்ட இயக்குனர்கள் ஜாக்டோவின் கோரிக்கைகள் 15ல்  9 கோரிக்கைகள் நிதி சார்ந்தவைகள் ,4 கோரிக்கைகள் பணி சார்ந்தவை (நிர்வாகம்) என்றும் மீதமுள்ள 2 கோரிக்கைகள் பொதுவானவை என்றும் விளக்கினர்

பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதுமில்லை எனவே திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ அறிவிப்பு

சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.இதில் எவ்வித கோரிக்கை குறித்தும் ஏதும் வாக்குறுதி அளிக்க அதிகாரிகள் முன்வரவில்லை.உடன்பாடு ஏதும் எட்டாத காரணத்தால்  திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.

அரசு சார்பில் "ஜாக்டோ" அமைப்பிற்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பிற்கான ஆணை

இன்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோவிற்கு அவசர அழைப்பு-க.செல்வராஜ் பொதுசெயலர்(பொறுப்பு)

பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. இன்று பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் (பொறுப்பு) திரு.செல்வராஜ் அவர்கள்அவசர பயணமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார். 

கேந்திரிய வித்யாலயாவில் ஜெர்மன் மொழியை கற்பிக்க ஒப்பந்தம் கையெழுத்து

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியைக் கற்பிப்பதற்கான ஒப்பந்தம், திங்கள்கிழமை கையெழுத்தானது.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் வருகையையொட்டி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமை நிர்வாகிகளும், தில்லியில் ஜெர்மன் மொழியைக் கற்பிக்கும் மேக்ஸ் முல்லர் பவன் நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இனி வரும் காலங்களில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூடுதல் வெளிநாட்டு மொழியாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்படும்'' என்றார்.

இடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க எதிர்ப்பு

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கும்பகோணம் பள்ளியில், 94 குழந்தைகள் பலியான விபத்துக்கு பின், போதிய இடவசதி இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு, 11 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கவில்லை.

பள்ளி, கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா இன்று 05.10.2015 தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பால் வளத்திட்டங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணப் பட்டுவாடா மற்றும் பால் பொருட்கள் விற்பனை குறித்து ஆவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பால் வளத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பணப் பட்டுவாடா

புதிய சிகிச்சை கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் அறிவிப்பு

2015-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை வில்லியம் சி.கேம்பல், சதோஷி ஒமுரா மற்றும் யூயூ டு ஆகியோர் வென்றனர்.

வில்லியம் சி.கேம்பல் அயர்லாந்தைச் சேர்ந்தவர். சதோஷி ஒமுரா ஜப்பானையும், யூயூ டு சீனாவையும் சேர்ந்தவர்களாவர்.

வில்லியம் சி.கேம்பல் மற்றும் சதோஷி ஆகியோர் உருளைப்புழு (ரவுண்ட் வோர்ம்) ஒட்டுண்ணிகளை முறியடிக்கும் புதிய முறை சிகிச்சையைக் கண்டுபிடித்ததற்காகவும், யூயூ டு என்பவருக்கு மலேரியா நோய்க்கான புதிய சிகிச்சையைக் கண்டுபிடித்ததற்காகவும் நோபல் பரிசுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கேம்பல் மற்றும் ஒமுரா Avermectin என்ற புதிய மருந்தைக் கண்டுபிடித்தனர். இதனையொத்த விளைமருந்துகள் ரிவர் பிளைண்ட்னெஸ் என்ற கடுமையான சரும நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கிறது. ஒட்டுண்ணி கண்களைத் தாக்கினால் பார்வை பறிபோகும் அபாயமும் இருப்பதால் இதனை ரிவர் பிளைண்ட்னெஸ் என்று அழைக்கின்றனர். மேலும் பல ஒட்டுண்ணிகள் விளைவுக்கும் நோய்களுக்கு எதிராகவும் இந்த மருந்து செயல்படுகிறது என்று நோபல் அகாடமியின் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

யூயூ டு என்பவர் Artemisinin என்ற சாதனை மருந்தைக் கண்டுபிடித்தார். மலேரியா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறிப்பிடத்தகுந்த அளவில் இந்த மருந்து குறைத்துள்ளது.

ஒட்டுண்ணிகளை பொறுத்தவரை helminths என்ற ஒட்டுண்ணிப் புழுக்கள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைத் தாக்குகிறது. குறிப்பாக சப்-சஹாரா ஆப்பிரிக்கா, தெற்காசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இந்த ஒட்டுண்ணிப் புழுக்களின் தாக்கம்

கிராமப் பகுதி மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி: ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்

கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகளை வழங்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.
கற்பித்தலின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்கிற திட்டத்தை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கி வைத்து அவர் பேசியது:
இன்றைய சூழலில் ஏராளமான இளைஞர்கள் ஆங்கிலத்தில் தகவல்தொடர்பு திறன் இல்லாததால் தங்களது பணியிடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். 
பள்ளி மாணவர்களை

2020 ஆம் ஆண்டிற்குள் 1 கோடி ஆசிரியர்கள் தேவை: யுனெஸ்கோ தகவல்

சர்வதேச அளவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை அளிக்க வேண்டும் என்பதே, சர்வதேச ஆசிரியர்கள் தினத்தில் நாம் எடுத்திருக்கும் தீர்மானம் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது.

கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்., 8 வரை கால நீட்டிப்பு

முதுகலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான, கேட் 2016 தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும்,8ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

முதுகலை இன்ஜினியரிங் படிப்புகளில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் மேற்கொள்ள, கேட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே, முதுகலை இன்ஜி.

மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருமா?

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாக, செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால், திட்டம் நடைமுறைக்கு வருவதில், சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.

பல்வேறு காரணங்களால், பள்ளிகளில் ஏற்படும் இடைநிற்றலை தவிர்க்க, மாணவர்களின் ஒட்டுமொத்த விவரங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை, 2011ம் ஆண்டு மாநில அரசு கல்வித்துறை மூலம் அறிமுகப்படுத்தியது.

இன்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோவிற்கு அவசர அழைப்பு-க.செல்வராஜ் பொதுசெயலர்(பொறுப்பு)

பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. இன்று பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் (பொறுப்பு) திரு.செல்வராஜ் அவர்களும் அவசர பயணமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

web stats

web stats