rp

Blogging Tips 2017

குழந்தையை தத்தெடுக்கும் தமிழக அரசு பெண் பணியாளருக்கு(ஆசிரியர்கள் உட்பட) வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பு ஆணைநகல்

குழந்தையின்மை காரணமாக மாநில அரசு பெண் பணியாளர்கள் சட்டப்படி  குழந்தை தத்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு கீழ்கண்ட வாறு சிறப்பு விடுப்பு எந்த வித மருத்துவ சான்றும் இல்லாமல் அனுமதிக்கப்படலாம்

1.குழந்தை வயது பிறந்து 30 நாட்களுக்குள் தத்தெடுக்கப்பட்டால்- விடுப்பு காலம்-1 வருடம்

2. தத்தெடுக்கும் போது .குழந்தை வயது குழந்தை பிறந்து30நாட்களுக்கு மேல் 1 வருடத்திற்கு குறைவு எனில் -6 மாத காலம் அதாவது 180 நாட்கள்.

 கல்வித்துறையில் விடுப்புஅனுமதி அளிக்கும் அதிகாரம்

1.180 நாட்களுக்குள் எனில் மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர்/ பள்ளிக்கல்வி எனில் - மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர்.
2. ஒரு வருட காலம் எனில் தொடக்கக்கல்வி  இணை இயக்குனர்(நிர்வாகம்)  மற்றும்  பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி)

இங்கே பதிவிறக்கம் செய்து ஆணை நகலை பதிவிறக்கம் செய்யலாம்

தொடக்கக்கல்வி இயக்குனரிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டார ஆசிரியர் குறைகளைதீர்க்கக்கோரி அளிக்கப்பட்ட மனுவின் நகல்


தொடக்கக்கல்வி இயக்குனரிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டார ஆசிரியர் குறைகளைதீர்க்கக்கோரி அளிக்கப்பட்ட மனுவின் நகல்


தேர்தலில்- 17 A -Register of voters -இல் Remarks கலத்தில் என்ன குறிப்பிடலாம்


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று நிறைவு


வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடத்த நேர அட்டவணை மற்றும் படிவங்கள்


அன்பார்ந்த நண்பர்களே!
நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப் பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட குறுந்தகவல் அனுப்புதல் போன்ற பணியினை மறக்கக் கூடும்.

வாக்குச்சாவடியினை அடைந்த்து முதல் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரவாரியாகப் பிரித்துப் பட்டியலிட்டுக் கொண்டால் நல்லது தானே!
இதில் ஆண்,பெண் வாக்காளர்களைக் கணக்கிட எளிமையாக எண் பட்டியல், எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும், அரக்கு சீலிடும் முறை போன்ற பல பயனுள்ள விபரங்கள் படங்களாகவும் தரப்பட்டுள்ளன.
மாதிரி-வேலைத்தாளினைப் பதிவிறக்கம் செய்ய 
கிளிக் செய்க

இன்றைய தமிழகமுதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் அம்மா உள்ளிட்ட அனைத்து கட்சிதலைவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிபொதுச்செயலர் செ.முத்து சாமி கடிதம் மூலம் வேண்டுகோள்.

மக்களவைத்தேர்தல் சூடுபிடிக்கத்துவங்கியுள்ல இந்த வேளையில்
தமிழக் இடைநிலை ஆசிரியர் ஊதியக்குறைபாட்டுநிலை மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்  ரத்துசெய்யப்படவேண்டும் என்பது குறித்து அனைத்து கட்சி தலைமைகளுக்கும் கோரிக்கை கடிதம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக அதன் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்

கடித விவரம்

அ.இ.அதி.மு.க முன்னால் அமைச்சரும் சிதம்பரம் நாடளுமன்றத்தொகுதி பொருப்பாலர் திரு செங்கோட்டையன் அவர்கள் நமது பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்களுடம் தொலைபேசியில் பேச்சு.

இன்று காலை அ.இ.அதி.மு.க முன்னாள் அமைச்சரும் சிதம்பரம் நாடாளுமன்றத்தொகுதி பொறுப்பாளருமான திரு செங்கோட்டையன் அவர்கள் நமது பொதுச்செயலர் திருமிகு.செ முத்துசாமி அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு .இந்த மக்களவைத்தேர்தலில் அ.இ.அ.தி.முக விற்கு ஆதரவளிக்க  கேட்டுக்கொண்டார்
அதற்கு நமது பொதுச்செயலர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் இதுவரை எந்த அரசியல் இயக்கத்திற்கு சார்பாக அறிக்கை கொடுத்ததில்லை என்றும். ஆசிரியர் விருப்பத்தில் தலையிட்டதில்லை என்றும் ஆசிரியர் நலனில் அக்கறை கொள்ளும் அரசைப்பாரட்டவும் நன்றி தெரிவிக்கவும் என்றும் தயங்கியதில்லை என அவரிடம் தெரிவித்தார்.
சிதம்பரம் தொகுதி ஆசிரியர்கள் பொதுச்செயலரிடம் பேச்சு
அதன் பிறகு சிதம்பரம் தொகுதி ஆசிரியர்கள் பொதுச்செயலரை தொடர்புகொண்டு முன்னாள் அமைச்சர் இது சார்பாக மீண்டும் பேசுவதாக தெரிவித்தனர் அதற்கு அவ்வாசிரியர்களிடம் நமது பொதுச்செயலர்
சென்ற ஆட்சியின் முதல்வர் 2008ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எள் முனையளவும் குறையாமல் வழங்கப்படும் என கோட்டையிலே கொடியேற்றி அறிவித்தார்.ஆனால் அவ்வாறு வழங்கவில்லை.

திருவண்ணாமலை பௌர்ணமி நாட்களில் நகரத்தில் இயங்கும் தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு காலை 8.30 முதல் மதியம்1.00 மணி வரை மட்டுமே இயங்க ஏதுவாக அனுமதி வேண்டி இயக்குனரிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை-

பௌர்ணமி என்றால் திருவண்னாமலைஎனும் அளவிற்கு இன்று திருவண்ணாமலை கிரிவலம் புகழ் பெற்றுள்ளது.
அன்றையதினம் பல லட்சம் மக்கள் கிரிவலம் வர கூடுகிறார்கள்,
கிரிவலப்பாதையிலேயே
8 நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன
பிற பள்ளிகள் திருவண்ணாமலைக்கு வரும் முக்கிய சாலைகளில் இயங்குகிறது.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவல நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம், வாகனங்களின் தொடர் அணிவகுப்பு, போக்குவரத்து நெரிசல், வியாபாரத்திற்காக தற்காலிக க்கடைகள் திடீர் தோற்றம்-இது வாடிக்கை
இதனால்
தொடக்க /நடுநிலைப்பள்ளிகள் செயல் படுவதில் பெறும் சிக்கல் உள்ளது
குறிப்பாக மானவர்கள் வீட்டிற்கு 4.10 க்கு பிறகு செல்வதில் கடினம்,
கிரிவலப்பாதையில் உள்ள பள்ளிகட்ட்கு மாணவர்களை மதிய பாட வேளைக்கு பெற்றோர்கள் அணுப்பாமை

கிரிவலம் செல்;ல மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து செல்லுதல்
கூட்ட நெரிசலில் சினஞ் சிறிய மானவர்கள் சிக்குவதால் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சம்.
நகரில் உள்ள தனியார் சுயநிதிப்பள்ளிகள் அனைத்தும் ஒரு வேளை இயங்குவதால் அதேப்போன்று விடுமுறை விட பெற்றோர்களின் கோரிக்கை
ஆகியனவற்றி னை

பகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை ஐகோர்ட் கிளையில் கடலாடி பூதகுடி ராமர் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி பகுதி நேர ஆசிரியராக, 1980ல் பணியில் சேர்ந்தேன். 1990ல், அரசு பணி நிரந்தரம் செய்தது. முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அடைந்தேன். 2013ல் ஓய்வு பெற்றேன். பகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்கக் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.

ஜூன் 2ல் பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை நடவடிக்கை


கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. முப்பருவ பாட முறையே வரும் கல்வி ஆண்டிலும் தொடர்கிறது. இதில் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன.

ஆசிரியர்கள் சம்பளம் பெறும் கணக்கு உள்ள வங்கியில் தனி நபர் கடன் பெற ஏதுவாக உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஊதிய சான்று மறுப்பின்றி வழங்க உத்திடவிட வேண்டி தொடக்கக்கல்வி இயக்குனரிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்-

நேற்று(17.04.2014)அன்று மதியம் 100 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி.Ex.MLCதலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித்,தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது
ஆசிரியர்கள் குடும்பத்தில் விழா,மற்றும் பிள்ளைகளின் கல்வி செலவு என ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய வங்கியில் தனி நபர் கடன்(personal loan) பெற வசதி உள்ளது

ஏப்ரல் 30 தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு கடைசி வேலை நாள்-இயக்குனர்

நேற்று(17.04.2014)அன்று மதியம் 100 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி.Ex.MLCதலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித்,தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது
இவ்வாண்டு ஜூன்.2013 மாதத்தில் 10ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதாலும்,
தேர்தல் வகுப்புகள்
தேர்தல்பணிக்காக 3 நாட்கள் விடுமுறை போன்ரன
அளிக்கப்பட்டதாலும்
சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு
220 வேலைநாள்

ஜூன் 16-ஆம் தேதிமுதல் பிளஸ் 1 வகுப்பு தொடக்கம்

வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16-ஆம் தேதி தொடங்கப்படும்; மீதமுள்ள வகுப்புகளுக்கு ஜூன் 2-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

SEVENTH PAY COMMISSION PROJECTED / EXPECTED PAY STRUCTURE BY VARIOUS SITES: COMPARISON TABLE

7 வது ஊதியக்குழு 1.1.2016 முதல் நடைமுறைபடுத்தப்பட்டால் கிடைக்கும் நன்மைகள் (The Benefits of the Timely Implementation of the 7th Pay Commission ):-

7th Pay Commission Report and the Need for Timeliness Background of the 7th Pay Commission
The 7th pay commission report – when is it going to be submitted?
The announcement about the 7th pay commission report came out on September the 25th of 2013. This pay commission unlike the 6th pay commission was set up well in advance. This became possible due to significant efforts of various organisations, union lists and the finance commission report. Announcements say that the 7th pay commission will be implemented from 1.1.2016 and it will take approximately 18 months time for the report to be submitted.

பொதுச்செயலரின் பயணத்திட்டம்


7 ஆவது ஊதியக் குழுவின் படி ஊதிய நிர்ணயம் செய்யும் போது 2.24 ஆல் பெருக்க வேண்டும்!-செய்தி


தமிழகப்பள்ளிகளில் துப்புரவு பணியாலர் நியமனம்-பொதுச்செயலர் அறிக்கை


திருச்சி மாவட்டம் முசிரி ஒன்றியம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா

திருச்சி மாவட்டம் முசிரி ஒன்றியம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா 15.4.14 அன்று நடைபெற்றது.பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி மேனாள் ச.மே.உ.அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். பணி ஓய்வு பெற்றவர்கள் திருமதி.கோ.ருக்மணி,தலைமையாசிரியை ஊ.ஓ.து பள்ளி காமாட்சிப்பட்டி, திரு,வே.தங்கராசு பட்டதாரி ஆசிரியர் ஊ.ஓ.ந.நி பள்ளி பெரிய கொடுந்துரை. வட்டார,மாவட்ட,மாநில மேனாள் இந்நாள் பொறுப்பாளர்கள் மற்றும்  ஆசிரியர் ஆசிரியைகள் திரளாகப் பங்கேற்றனர்.

தொடக்கக் கல்வி - தேசிய அடைவு திறன் ஆய்வு - 2014ம் ஆண்டிற்கு தமிழகத்திலுள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடத்துதல் சார்பு

DEE - NCERT - NATIONAL ACHIEVEMENT TEST FOR FIFTH STD STUDENTS REG PROC CLICK HERE...

IGNOU - DEC 2013 REVALUATION RESULTS RELEASED

IGNOU - DEC 2013 REVALUATION RESULTS CLICK HERE...

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு அழைப்பு


தொடக்கக் கல்வி - கருவூல ஒத்திசைப் பணி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலிருந்தும் ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 முடிய கருவூல ஒத்திசைவு செய்யப்பட்ட தொகை குறிப்பிடப்பட்டு கருவூல அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று அனுப்ப உத்தரவு

DEE - DEE ORDERED TO SUBMIT FOR RECONCILIATION MONTHLY STATEMENT WITH TREASURY OFFICER SIGN REG PROC CLICK HERE..

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% கடந்ததால், 25% கூடுதல் படிகள் பெற வாய்ப்பு

The Fifth Central Pay Commission had recommended uniform neutralization of DA at 100% to employees at all levels and increase in DA calculation too, according to the 12 monthly average of AICPIN for Industrial Workers (1982=100) as on 1st January 1996, of 306.33. The Linking Factor of 303.33 has now changed to 115.76. This was calculated as 4.63 in the 4th CPC. It was due to this change that the Dearness Allowance has increased in recent years. The 6th Pay Commission had promptly calculated it and said that the true impact of price rise and inflation would only then be known.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு-குழப்பிய கேள்விக்கு ஒரு மதிப்பெண்; தேர்வுத் துறை அறிவிப்பு

மாணவர்களை பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை: முதன்மை செயலர் எச்சரிக்கை

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பணி என்ன? சிலைடு ஷோ விளக்கம்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பணி 

என்ன? சிலைடு ஷோ விளக்கம் 

Pls Click Here

வாக்குப்பதிவு இயந்திரத்தை எளிமையாக கையாளுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்

LOKSABHA ELECTION 2014 - EASY WAY OF HANDLING FOR ELECTRONIC VOTING MACHINE REG GUIDELINES CLICK HERE...

PREPARAED BY MR.AMMAIYAPPAN, VOC.TR., GHSS, THUVARANGURICHI, TRICHY DIST.

ஏழு கல்வி நிறுவனங்களின் எம்.எட். படிப்புக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு


ஏழு கல்வி நிறுவனங்களின் எம்.எட். முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரி, ஸ்டான்லி கல்வியியல் கல்லூரி உள்பட ஏழு கல்வி நிறுவனங்கள், கட் ஆஃப் தேதிக்குள் தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு மன்றத்தின் (நாக்) அங்கீகாரச் சான்றிதழ் பெறவில்லை. அதனால், 2013-14 ஆம் ஆண்டுக்கான எம்.எட். முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஏழு கல்வி நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

தேர்தல் பயிற்சி பெற 5முதல் 7மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்; வாக்குச்சாவடி அலுவலர்கள் கடும் அதிருப்தி

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான 2வது கட்ட பயிற்சி வேலூர் மாவட்டத்தில் இன்று (13.04.2014) நடைபெற்றது. இதற்கான ஆணை இரண்டு நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது. இதையடுத்து வேலூர்,மற்றும் திருவண்ணாமலை  மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பயிற்சி நடைபெற்றது. இந்த 2ம் கட்ட பயிற்சி பெற சுமார் 5 முதல் 7 மணி நேரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும் சிரம்மத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
 
ஆனால் கடந்த மாதம் தமிழக தேர்தல் ஆணையர் திரு.பிரவீண் குமார் அளித்த பேட்டியில், பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிகள் பின்பற்றாமல் ஆணை வழங்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது என்று பெண் ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

கிறிஸ்துவர்களை புறக்கணிக்கிறதா கல்வித்துறை-பெரிய சனி அன்று பள்ளி வேலைநாள் மற்ரும் கல்விப்பணி


வருகிற புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நாளாகும். நாற்பது நாட்களாக விரதம் இருந்து புனித வெள்ளி அன்று கோவிலுக்கு சென்று விடிய விடிய பிராத்தனையில் ஈடுபடுகின்றனர். அடுத்த நாளான சனிக்கிழமையும் அன்று இரவும் ஒரு முக்கியமான நாளாகும். ஆனால் ஆசிரியர்களை எப்போதும் வஞ்சிக்கும் அரசு 19.4.14 (பெரிய சனிக்கிழமை) அன்று பள்ளிக்க்கல்வியில் விடைத்தாள் திருத்தும் பணி யும் தொடக்கக்கல்வித்துறை வேலை நாளாகவும் பள்ளி நடைபெறும் என்று தெரிவித்து உள்ளது. இதுவரை ஒரு நாள் கூட பெரிய சனிக்கிழமை அன்று பள்ளியோ, தேர்வோ , விடைத்தாள் திருத்தும் பணியோ நடைபெற்றது இல்லை. ஆனால் இந்த வருடம் பெரிய சனிக்கிழமை அன்று விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறித்தவ ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் பயிற்சிவகுப்பு- பெண் ஆசிரியர்கள் சலுகை கிடையாது அறிவிப்பு மட்டுமே.அதைஅமுல் படுத்தாத அதிகாரிகள்

தேர்தல் ஆணையம் பெண் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு 2 மணி நேரத்தில் வாக்கு சாவடிக்கு செல்லும் விதத்தில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
ஆனால்
பெரும்பாலான மாவட்டங்களில் வெவ்வேறு பாராளுமன்றத்தொகுதிக்கு நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பயிற்சி வகுப்புக்கே 100 கிமீ தூரம் செல்ல வேண்டி உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
அரசியல் கட்சிகளின் தேர்தல் நேர வாக்குறுதி போன்று தேர்தல் கமிஷனனின் அறிவிப்பு.
அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின்பே காற்றில் பறக்கும்,ஆனால் தேர்தல் கமிஷனின் வாக்குறுதி தேர்தலின் போதே பறக்கிரது.

மூன்றாவது ஊதியக்குழு (01.04.1979) முதல் அகவிலைப்படி உயர்வு வீதங்கள் - ஊதிய நிலுவைப்பட்டியல்கள் தயாரிக்க பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படுகிறது

CLICK HERE TO DOWN LOAD THE DA PARTICULARS

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: 2014ம் ஆண்டுக்கான பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு, நுழைவு தேர்வு கிடையாது


ஜூன் 18ல் கல்லூரி திறப்பு கல்வித்துறை அறிவிப்பு


உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரி கல்வித்துறை, அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அடுத்த கல்வி ஆண்டுக்காக, ஜூன், 18ம் தேதி திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் செயல்படும், 27 பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, 67 அரசு கல்லூரி, 162 அரசு உதவிபெறும் கல்லூரி, 274 சுயநிதிக் கல்லூரி என, 503 கலை மற்றும் அறிவியல், உடற்கல்விக் கல்லூரிகள் செயல்படுகிறது. அந்த கல்லூரிகளில், வழக்கமாக செமஸ்டர் தேர்வு, ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் துவங்கும்.

அரசுப் பணியாளருக்கு வீட்டுக் கடன் -முழு விவரம்

பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.
ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:

 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது.

 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க ஏழு நாள் கெடு ஏன்?- பள்ளி கல்வித் துறை

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க, ஒரே கால அட்டவணையை பின்பற்றவில்லை என்றால், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு அட்டவணையை பின்பற்றும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித் துறை பதிலளித்து உள்ளது.
இவ்வழக்கின் மீதான உத்தரவை, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னை, விருகம்பாக்கத் தைச் சேர்ந்த, "பாடம்' நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கான, 25 சதவீத இடங்களை நிரப்புவதற்கு, மே, 3ல் இருந்து 9ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, பள்ளி கல்வித் துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை, ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
சம வாய்ப்பு : இதற்கு, பள்ளி கல்வித் துறையின், இணைச் செயலர் அழகேசன் தாக்கல் செய்த பதில் மனு:

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வசதி: திருவண்ணாமலை கலெக்டர் தகவல்

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் போது, எந்த தொகுதியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள தொகுதிக்குள் தேர்தல்

அடிக்கடி பழுதாகும் தமிழக அனல்மின் நிலையங்கள்: அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு கொள்ளை அம்பலம் DINAMALAR NEWS

அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு சதியால், மின்வாரியத்தின், பணம் காய்ச்சி மரங்களாக கருதப்படும் தெர்மல்கள் அடிக்கடி பழுதடைவதும், மின் உற்பத்தி பாதிப்பதும் தொடர் கதையாகிறது. இது, தமிழக முதல்வரின் நேரடி கவனத்துக்கு சென்றுள்ளதால், ஊழலில் ஈடுபட்ட மின்கழக அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில், தெர்மல் (அனல் மின் நிலையங்கள்) மூலம், 2,970; நீர்மின் நிலையங்களில், 2,237; காற்றாலைகளில், 7,240 மெகாவாட் என, 10,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
இதில், சீசன் சமயத்தில் மட்டுமே, காற்றாலை, புனல்மின் நிலையங்கள் கைகொடுக்கும். ஆனால், ஆண்டு முழுவதும் மின்தேவையை சமாளிப்பது தெர்மல்கள் மட்டுமே. இதனால், தெர்மல்களில் தடையில்லா மின் உற்பத்தி செய்வதற்காக, அரசு, அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்துகிறது.
பணம் காய்ச்சி மரம்:
தெர்மல்களில் மின் உற்பத்தி பாதித்தால்,

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.
உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன்
வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள். இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்

மே முதல் வாரத்தில் பொறியியல் விண்ணப்பம் : அறிவித்தது அண்ணா பல்கலை


பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம், மே முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகள், தகுதிகள் குறித்து, பல்வேறு அறிவிப்புகளை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. "மே, 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்' என, ஏற்கனவே, தேர்வுத்துறை அறிவித்துவிட்டது. இதையடுத்து, பொறியியல் சேர்க்கை பணிகளை, அண்ணா பல்கலை துவக்கி உள்ளது. www.annauniv.edu என்ற, பல்கலை இணையதளத்தில், "டிஎன்இஏ - 2014' என, தனி பகுதியை, பல்கலை துவக்கி உள்ளது.

எம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோர்ட் உத்தரவு


ஏழு தனியார் கல்லூரிகளில், எம்.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர் கல்வி பல்கலை, ஒப்புதல் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.எட்., வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள், 2012, ஏப்ரல், 1ம் தேதிக்கு முன், தேசிய தர மதிப்பீட்டு குழுவிடம், சான்றிதழ் பெற இணையம் மூலம், விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், எட்டு மாதங்களாக இணையம் செயல்படாததால், கல்லூரிகளால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதற்கிடையில், கட் - ஆப் தேதிக்குள்

கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை:

# கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்து கணினித் திரையின் வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம்.
# கணினித் திரையின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துக்கொள்வது நல்லது.
# 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது.

விடுமுறை இல்லை; ஆசிரியர்கள் புலம்பல்


விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் லோக்சபா தேர்தல் பணிக்காக, விடுமுறை மறுக்கப்படுவதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வரும் 17ம் தேதி, மூன்றாம் பருவ தேர்வு துவங்குகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கு, மே 1 முதல், கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது; வரும் 19 வரை இப்பணி நடைபெறும். லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.

மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் கல்வி திட்டங்களின் கதி என்னவாகும்? தமிழக கல்வித்துறை கவலை

மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால், ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் துவங்கி, பள்ளிகள் உட்கட்டமைப்பு, புதிய பள்ளிகள் அமைப்பு என, பல தொடர் திட்டங்களுக்கான நிதி, தொடர்ந்து கிடைக்குமா என, தெரியாமல், கல்வித்துறை தவித்து வருகிறது.
பெரும் தொகை : பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.

web stats

web stats