rp

Blogging Tips 2017

கே.வி., பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற உத்தரவால் சர்ச்சை: 70 ஆயிரம் மாணவர் பாதிக்கப்படுவர் என கல்வியாளர்கள் புகார்

'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனால், 70 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போலி சான்றிதழ் கொடுத்த மத்திய இணையமைச்சர் மீது வழக்கு பதிவு

நவம்பர் 9ம் தேதி மத்திய அமைச்சரவையில் கல்வித்துறை இணையமைச்சராக புதிதாக பதவியேற்ற ராம் சங்கர் கத்தேரியா மீது போலி சான்றிதழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பிறகு போலி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி உள்ள இரண்டாவது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

அலுவலக கோப்புகளில் குறிப்புகள், தகவல்கள் எழுதும் போது, கறுப்பு அல்லது நீல நிற மையை பயன்படுத்த வேண்டும்

அலுவலக கோப்புகளில் குறிப்புகள், தகவல்கள் எழுதும் போது, கறுப்பு அல்லது நீல நிற மையை பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னர், இணை செயலர்கள் மற்றும் அதற்கு மேலான அதிகாரிகள் மட்டும், பச்சை நிற மையை பயன்படுத்தி கையெழுத்திட அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது போல, அரசின் பிற துறைகளுடனான தொடர்புக்கு, தந்தியை பயன்படுத்த வேண்டாம் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது. நாட்டில், 163 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த தந்தி, கடந்த ஆண்டு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தண்டனை கொடுத்த ஆசிரியை நீக்கம்

காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, ஆத்தூர் அருகே, தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் படிக்கும், நான்காம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, "தோப்புக்கரணம்' போடும்படி, தண்டனை வழங்கிய பெண் ஆசிரியையை, பள்ளி நிர்வாகம் நீக்கியது.

ஆத்தூர் அருகே, தலைவாசல் பஞ்சாயத்து, மும்முடி கிராமத்தில், தனியார் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், மும்முடி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த, செல்வம் மகள் விஜயஸ்ரீ, 9, நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இரு தினங்களுக்கு முன், பள்ளிக்குச் சென்ற மாணவி விஜயஸ்ரீ, "டைரி' எடுத்துவரவில்லை எனக்கூறி, பள்ளி ஆசிரியர், 300 முறை, "தோப்புக்கரணம்' போடும்படி தண்டனை கொடுத்தார். அதனால், மாணவிக்கு, கால் வீக்கம் ஏற்பட்டது குறித்து, அவரது தாய் தனலட்சுமி,

அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை .உத்தரவு
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
மனுவில், தமிழகத்தில் 1442 பெண்கள் பள்ளிகளிலும், 4278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை. 2080 பள்ளிகளில் கழிப்பறைகள் பயனற்றதாக உள்ளன. மாணவர்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் நோய்த் தொற்றுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கல்வித்துறை இணைய தளத்தில், 4375 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்றும் அதில் மாணவர்கள் படிக்கும் 4060 பள்ளிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கல்வித் துறை ஒழுங்குமுறை அமைப்புகள் மறு ஆய்வு: ஸ்மிருதி இரானி

உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

நாட்டின் நலன் கருதியே கேந்திர வித்யாலயாவில் சமஸ்கிருதத்தை சேர்த்தோம்: ஸ்மிருதி இரானி விளக்கம்

மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின்கீழ் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ‘கேந்திர வித்யாலயா’ பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலமும், தாய்மொழியாக இந்தியும், மூன்றாவது (விருப்ப) மொழியாக ஜெர்மனும் இருந்து வருகின்றன.
இதற்கிடையில், இந்தியாவின் தொன்மை வாய்ந்த மொழியான சமஸ்கிருதத்தை நீக்கிவிட்டு ஜெர்மன் மொழியை பாடத்திட்டத்தில் இணைத்த முந்தைய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், இது கல்விக் கொள்கைக்கு எதிரானது என்றும் கேந்திர வித்யாலயா ஆசிரியர்களில் சிலர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

14.10.2014-குழந்தைகள் தின விழா கொண்டாட -இயக்குநர் உத்தரவு

CLICK HERE-DIR-86942-CELEBRATE CHILDRENS DAY ON 14.10.2014-REG

EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை



emis online website address :click here www.emis.tnschools.gov.in



1, முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக்
இன் செய்யவும்.

அரசு ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும்போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிக் கல்விக்கு ரூ.19 ஆயிரத்து 800 கோடி நிதி ஒதுக்கீடு: கே.சி.வீரமணி

பள்ளி கல்வி துறை மூலம் கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கரூரை அடுத்த புலியூரில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினார்.

PGTRB:ALL SUBJECTS SYLLABUS RELEASED



Direct Recruitment of PostGraduate Assistants for the year 2013-2014 and 2014-2015
SYLLABUS

Tamil              English             Mathematics           Physics            chemistry         Botany        

 Zoology            History           Economics             Commerce Physical Education Director Grade I

TNPSC : GROUP 2 MAINS ANSWER KEYS PUBLISHED (Date of Examination:08.11.2014)

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS) (GROUP-II SERVICES) 
(MAIN WRITTEN EXAMINATION)
(Date of Examination:08.11.2014)
     GENERAL STUDIES (OBJECTIVE TYPE) (DEGREE STD)
(Date of Examination:09.11.2014 (RE-EXAM))
        GENERAL STUDIES (OBJECTIVE TYPE) (DEGREE STD)
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 20th November 2014 will receive no attention.

த.அ.உ.ச 2005 - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி சார்பாக பள்ளிக்கல்வி இயக்குனரின் பதில்கள்

44 வது சர்வேதேச தபால் துறையின் “கடிதம் எழுதும் போட்டி”பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க DEE அறிவுறை


84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!
கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மகளி்ர் மேம்பாடு குழு நிர்வாக ஆணையராக அமுதவள்ளி நியமி்க்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்த கணேஷ் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாடநூல் கழக நிர்வாக இயக்குனராகக மைதிலி கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு உறுப்பினர் செயலராக சாம்புவேல் கலோலிகர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மின் நிதிநிறுவனம் கட்டமைப்பு மேம்பாட்டுகழக மேலான் இயக்குனராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தி்ட்டமிட்டபடி குழந்தைகள் தின விழா நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் ரூ.35 ஆயிரம் ஆக உயர்வு

பாராளுமன்றத்திலும், மேல்–சபையிலும் எம்.பி.க்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. தற்போது ஓய்வு பெற்ற எம்.பி.க்கள் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.
இந்த தொகையை ரூ.35 ஆயிரமாக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எம்.பி.க்களின் பதவி காலம் 5 ஆண்டுகள். இதில் அவர்கள் ஒரு நாள் எம்.பி.யாக இருந்தாலும் ஓய்வூதியம் கிடைக்கும்.
அதே சமயம் 5 ஆண்டுகள் முழுமையாக எம்.பி.யாக இருப்பவர்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் வருடத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும்.

சி.டி வடிவில் பாடதிட்டம்

தமிழக த்தில் எஸ்.எஸ்.ஏ திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

வெளிநாடு சென்ற ஆசிரியைக்கு சம்பள பிடித்தம் செய்ய தடை : ஐகோர்ட் உத்தரவு

விடுப்பில் வெளிநாடு சென்ற ஆசிரியையின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. பரமக்குடி பாரதியார் நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியை விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:
எனது மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு உதவ, 2014 ஜூன் 11 முதல் அக்.,5 வரை அமெரிக்கா செல்ல பள்ளிக்குழு ஈட்டா விடுப்பு அனுமதித்தது. பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

தற்போது 2014-2015 கல்வியாண்டில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் மட்டும் ஆன்லைனில் பதிவு

தற்போது 2014-2015 கல்வியாண்டில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு
மாணவர்களின் விவரங்கள் மட்டும் ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று
வருகிறது. இது 1 மற்றும் 2 ஆம் வகுப்புகள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளுக்கும்  பொருந்தும்.
http://emis.tnschools.gov.in/accounts/login/?next=/

ஆங்கிலம் பேசாத 6 வயது மாணவனின் தலையை சுவரில் முட்டி கொன்ற ஆசிரியை.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி கிராமத்தில், தனியார் பள்ளியில் ஆங்கிலத்தில் பேசாததால் 6 வயது மாணவனின் தலையை ஆசிரியை சுவரில் முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் : ஆசியரிருக்கு சரமாரி அடி- கைது-போலீஸ் வழக்குப்பதிவு

மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மே-லூரில் இயங்கும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியர் பாண்டி என்பவரே தாக்குதலுக்கு உள்ளானவர் ஆவார். அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த மாணவி பள்ளியை விட்டு வெளியேறி கூச்சலிட்டதால் பொதுமக்கள் பள்ளியில் திரண்டனர்.

ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகளைச் சோதனை அடிப்படையில் வழங்க அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தேர்வு

ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகளைச் சோதனை அடிப்படையில் வழங்க அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இந்தப் பதிவேட்டின்படி, விரல் ரேகைகள், கருவிழிப்

குரூப் 4 தேர்வு: 10 லட்சம் பேர் விண்ணப்பம்

தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமையுடன் காலக்கெடு முடிந்தது. இந்தத் தேர்வை எழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை, கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழக அரசு அறிவிப்பு கணினி தமிழ் விருதுக்கான மென்பொருள் போட்டி

கணினி தமிழ் விருது மென்பொருள் போட்டிக்காக, விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இகுறித்து, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினி தமிழ் விருது’ ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு விருது தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் இடமாறுதலில் அமைச்சர் தலையீடா : இயக்குனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக்கு, அமைச்சகத்தின் சிபாரிசு அடிப்படையில் இடமாறுதல் நடந்ததாக தாக்கலான வழக்கில் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பரமக்குடி சாந்தி தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் பழாச்சிறை நடுநிலை பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக உள்ளேன். நவ.,1ல் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்றேன். பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள் விடுதி காப்பாளர் பணிக்கு மாறுதல் கோரினேன். எனக்கு பணி மூப்பு உள்ளது.

கல்வியாளர்கள் உள்பட 1.65 லட்சம் பேருக்கு பள்ளி நிர்வாக மேலாண்மைப் பயிற்சி

பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

PGTRB :விண்ணப்பங்கள் காலி; ஆசிரியர்கள் ஏமாற்றம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான விண்ணப்பம், நேற்றுமதியத்துடன் விற்றுத்தீர்ந்ததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான எழுத்து தேர்வு, வரும் ஜன., 10ல் நடைபெற உள்ளது.

ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மீது புகார்!

தமிழக அரசு சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்கு நடத்திய பட்டதாரிஆசிரியர்கள் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக்கான உரிமை சட்டத்தின் பிரிவுகள் மீறப்பட்டுள்ளன என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளியிலேயே மாணவரை அடித்துக் கொன்ற சகமாணவர்: திண்டுக்கல்லில் பயங்கரம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியில் பள்ளியிலேயே மாணவர் ஒருவரை, சகமாணவர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் இரத்து

தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளது,
தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்.


* தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

கல்வி தகவல் மேலாண்மை முறை (EDUCATIONAL MANAGEMENT INFORMATION SYSTEM)

கல்வி தகவல் மேலாண்மை முறை E M I S (EDUCATIONAL MANAGEMENT INFORMATION SYSTEM)

தமிழகக் கல்வித்துறை விபரங்கள் மற்றும் புள்ளிவிபரங்களை எளிதில் சேகரிக்கவும், அவற்றை தொகுக்கவும் பல்வேறு தொழில்நுட்ப ,மின்னணு அறிவியல் பயன்பாட்டு முறைகளைப்பயன்படுத்தி வருகிறது.

www.emis.tnschools.gov.in

emis online for I std and II std

லஞ்சம் வாங்குவதில் பத்திரப்பதிவு, மின்வாரியம் முன்னிலை: அடுத்தடுத்த இடங்களில் போலீஸ், ஆர்டிஓ அலுவலகம் Tamil Tamil The Hindu

லஞ்சம் வாங்குவதில் பத்திரப் பதிவு, மின்வாரியம், போலீஸ், ஆர்டிஓ அதிகாரிகள் முன்னிலை யில் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
லஞ்சம் அதிகம் வாங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. மாநில அளவில் தமிழகம் 17-வது இடத்தில் உள்ளது. லஞ்சம் வாங்குபவர்களை பிடிப்பதற்காக தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் உள்ளது.

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் ! : புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி


பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், 433 அரசு பள்ளிகளும், 270 தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி, விடுமுறை விடுவதற்கும், அரசு பள்ளிகளில் தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிப்பதற்கும், பெரும் வித்தியாசம் இருந்து வந்தது.
குறிப்பாக, அரையாண்டு தேர்வை பொருத்தவரை, டிசம்பர் மூன்றாவது வாரத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, தேர்வை முடித்து, விடுமுறை அறிவிப்பது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வழக்கமாக உள்ளது. அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி முதல் வாரத்தில், தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அரசு பள்ளிகளில், டிசம்பர் கடைசியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான்,

RTI Letter: B.Lit and D.T.Ed, & M.A. B.Ed Two incentive GO for Tamil Teachers.


CPS-Account Slip-ஓன்றிய/நகராட்சி/நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பிற பணியாளர்களுக்கு கனக்குத்தாள் உடன் வழங்கிடவும் ,விடுபட்ட தொகை யை சேர்க்க முழுமையான நடவடிக்கை விரைந்து எடுக்கவும் தொடக்கக்கல்வி அலுவலர் உத்திரவு

DEE-செயல்முறைகடிதம்-18827/CI/2/2012,DATED-10.11-2014

அனிமேஷன் முறையில் பாடங்கள் தயாரிப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

பத்தாம் வகுப்புக்கான கணக்குப் பாடக்கூறுகள் ‘அனிமேஷன்களாக’ உருவாக்கி வகுப்பறையில் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது:
பத்தாம் வகுப்புக்கான பாடங்களின் மையக் கருத்துகளை அனிமேஷனாக உருவாக்கி வகுப்பறையில் கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து மாநில அளவில் மாவட்டத்துக்கு 3 ஆசிரியர்கள் வீதம் 96 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்து, இந்த பயிற்சியை தொடங்கியுள்ளோம். தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாடப் பொருட்களில்

பள்ளிக் கல்வித் துறை-சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்களுக்கு நவம்பர் 13-இல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வியாழக்கிழமை (நவ.13) நடைபெற உள்ளது. இணையதளம் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

வெயிட்டேஜ் மதிப்பெண் அரசு பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில்வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 67 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் இரண்டு அரசாணைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த அனைத்து தேர்வாளர் களுக்கும் அரசு 5 சதவிகித மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ள மனுதாரர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பலரும் பாதிக்கப்படுவ தாக தெரிவித்துள்ளனர்.

IGNOU- 2014-ENTRANCE RESULTS

CLICK HERE-MED Entrance Exam Result

7 TH PAY COMMISSION HIGHLIGHTS

7th pay commission
HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED
BY J.R.BHOSALE

1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.

2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.

3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension and Family Pension Scheme.

ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது குறிப்பிட்ட அதிகாரிகள் கையெழுத்திட்ட உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்த நடைமுறை, ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமானதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அவர்களின் நலனுக்காக, ‘ஜீவன் பிரமான்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது, ‘ஆதார்’ அடிப்படையிலான டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் திட்டம் ஆகும்.

ஆசிரியர்களுக்கு கெடுபிடி


6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில துணைப் பாடப் புத்தகம்

சமச்சீர் கல்வியின் கீழ் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில துணைப் பாடப் புத்தகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியின் கீழ், தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பொதுப்பாடத் திட்டம் 2011-12-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ், ஆங்கிலப் பாடத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் கழிப்பறை வசதி கல்வித்துறை இயக்குனர் அதிரடி

கழிப்பறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிப்பறை கட்ட பள்ளி கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கழிப்பறை இல்லாத பள்ளிகள் பல உள்ளன. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.

தந்தை உயிரிழந்த பிறகு விவாகரத்தான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


அரசுப் பணியில் இருக்கும் தந்தை உயிரிழந்ததால், விவாகரத்தான அவரது மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக பி.ஆர். ரேணுகா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
‘‘கால்நடை பராமரிப்புத் துறை யில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த எனது தந்தை கடந்த 1998-ம் ஆண்டு உயிரிழந் தார். அதனையடுத்து கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கு மாறு கோரி நான் மனுதாக்கல் செய் தேன். எனினும் எனது தந்தை மரண மடைந்தபோது நான் திருமணம் ஆனவர் என்பதாலும், அதன் பிறகு ஒன்றரை வருடம் கழித்துதான் எனக்கு விவாகரத்து கிடைத்தது என்ற காரணத்தைக் கூறியும் கருணை அடிப்படையில் வேலை தர கால்நடை பராமரிப்புத்துறையினர் மறுத்து விட்டனர். ஆகவே இது தொடர்பான அவர்களது உத்தரவை ரத்து செய்யவும் எனக்குப் பணி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்’’ என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE - JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH

TO VIEW GOVT DATA CENTRE, CHENNAI CPS LINK CLICK HERE...

 

1807 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: போட்டித்தேர்வுக்கு 2 லட்சம் விண்ணப்பம்

அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி இயக்குனர்களும் (கிரேடு–1) போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று (10–ந்தேதி) முதல் 21–ந்தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத தகுதியானவர்கள் யார்?

முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் தகுதியானவர்கள்.
ஏற்கனவே பி.எட் முடித்து விட்டு முதுகலை பட்டத்திற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று சான்றிதழ் களுக்காக காத்திருப்பவர்கள் தகுதியானவர். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு நேரத்தில் உரிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
முதுகலை பட்டம் பெற்று பி.எட் தேர்வை எழுதி வெற்றி பெற்று சான்றிதழுக்காக காத்திருப்பவர்களும் தகுதியானவர்கள் தான்.

TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும் GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும் GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொண்டு, அதற்கு அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும். சலுகை சம்பந்தமாக இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன் சேர்த்துவிசாரிக்கப்படும்.ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.

பள்ளி மாணவர்களின் கல்விச்சுற்றுலா; பெற்றோர் அனுமதி கடிதம் கட்டாயம்

பள்ளி மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான, அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது விதிமுறைகள் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பில், சமீபத்தில் கல்விச்சுற்றுலாவின் போது அதிகரித்து வரும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மாநில அரசுகள் தகுந்த விதிமுறைகளை வகுக்க உத்தர விட்டது. தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைக்கான தொகுப்புகளை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.கல்விச்சுற்றுலா மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், கலைத்திட்டத்துடன் இருப்பதை உறுதி செய்தல்; மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் அவர்கள் சார்ந்த

மாணவர்களுக்கான 'ஸ்மார்ட் கார்டு' என்னாச்சு? தலைமையாசிரியர்களுக்கு தொடரும் தலைவலி

பள்ளி மாணவர்களுக்கான 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. புள்ளி விபரங்களை தொகுத்து அளிக்கும் பணியில், காலம் விரையமாவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் சேர்க்கை கட்டணம் எவ்வளவு? பள்ளிகளில் விபரம் சேகரிப்பு

அரசு உத்தரவின் படி, கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம் எப்போது வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகள் காத்திருக்கும் சூழலில், கட்டண விபரம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச - கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங்களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.அதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு, 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.இதன் படி, தனியார் பள்ளி ஆரம்ப வகுப்பில் சேரும் மொத்த மாணவர்கள் சேர்க்கையில், 25 சதவீதம் நலிந்த பிரிவை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலரின் கட்டுப்பாட்டில், 263 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது

PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சான்றிதழ் நகல்களில் சுயச் சான்று போதுமானது: யுஜிசி

சான்றிதழ்களின் நகல்களில் மாணவர்களின் சுயச் சான்று போதுமானது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு:
ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதுபோல, உண்மையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் இடங்களில் மாணவர்களிடம் சுயச் சான்று செய்த மதிப்பெண் சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றால் போதுமானது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திங்கள்கிழமை (நவ.10) மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாப் புத்தகங்கள் திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.
இதற்காக மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அரசு வேலையை உதறிய 2,000 பகுதிநேர ஆசிரியர்கள்:பணி நிரந்தரம் ஆகாததால் கடும் விரக்தி

அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.
வேலையை உதறிவிட்டு...:

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 500 பேர், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று அரைநாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், இவர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பணி என்பதால், ஒருசில ஆண்டுகளில் பணி நிரந்தரமாகி விடும் என நினைத்து, நல்ல சம்பளத்தில் இருந்த பலரும் அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர ஆசிரியர் பணியில் சேர்ந்தனர்.

பள்ளிகளில் கலவை சாதம்-மெனு வகைகள்


'இளம் விஞ்ஞானி' படிப்புக்கு இப்போதே தேர்வு: சாதித்தார் வடுகபட்டி பள்ளி மாணவர்

ஒட்டடை அகற்றும் இயந்திரம், நடைமேடை மின்சார உற்பத்தி கருவி, பிளாஸ்டிக் வீடு... என புதிய கண்டுபிடிப்புகளை, பெரியகுளம் அருகே வடுகபட்டி மாணவன் யோகேஷ், 14, உருவாக்கியுள்ளார். இந்திய அறிவியல் ஆராய்ச்சிக்கழகத்தில் 'இளம் விஞ்ஞானி' ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.

தேனி மாவட்டம் வடுகபட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்; சுமை துாக்கும் தொழிலாளி. மனைவி சுப்புலட்சுமி வீட்டு வேலைகளை செய்கிறார். இவர்களது மகன் யோகேஷ், வடுகபட்டி வேளாளர் நடுநிலைப்பள்ளியில் ௮ம் வகுப்பு வரை படித்து, தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல் ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது !

அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக 'பாஸ்' மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.
அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் 'பாஸ்' செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.
இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
(Refer para 9 (c) minimum elgibility mark)
பாஸ் மார்க் எவ்வளவு?
அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து 'பாஸ்' செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். 'பாஸ்' செய்தவர்கள் எண்ணிக்கை குறை வாக இருந்தால், எஞ்சிய பணி யிடங்கள் காலியாகவே வைக்கப் படும். 'ஃபெயில்' ஆனவர்களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப் படாது. இதுபோன்ற 'பாஸ்' மதிப் பெண் முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் (30 சதவீதம்) பின்பற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.

28,889 பேருக்கு திருத்திய ஓய்வூதியம்

திருத்திய ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள், அனுப்ப வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் (ஓய்வூதியம்) ெவளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 1988 முதல், 95ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், 60 ஆயிரம் பேர், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை ெவளியிட்டது.

இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி பதவி உயர்வு சார்பாக பள்ளிகல்வி இயக்குனர் விளக்கம்


தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் தற்போது 6,7,8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி பதவி உயர்வு சார்பாக பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த விளக்கம் - சார்பு

மாணவியின் நெற்றியில் பேனாவால் எழுதிய ஆசிரியை - தாசில்தார் விசாரணை

வால்பாறை அருகே வீட்டுப்பாடம் செய்ய தவறிய, பள்ளி மாணவியின் நெற்றியில், பேனாவால் ஆசிரியை எழுதியது குறித்து, தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பழைய வால்பாறை பகுதியில் ஆங்கிலப்பள்ளி (நர்சரி) செயல்படுகிறது. இந்த பள்ளியில் வால்பாறை நகரை சேர்ந்த மாணவி, ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளிக்கு செல்லும்போது, வீட்டு பாட நோட்டு கொண்டு செல்லவில்லையாம்

படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடியின மாணவர்கள்: கவனிப்பார்களா கல்வித்துறை அதிகாரிகள்


கூடலூர் காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், சாலை சரியில்லாத காரணத்தை முன்வைத்து, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியாம் பாறையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தில், காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த 20 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்கள் பயன்படுத்தும் புளியாம்பாறை - காபிகாடு சாலையில், ஒரு கி.மீ., சாலை சீரமைக்காமல், மோசமான மண் சாலையாக உள்ளன. இதன் வழியாக நடந்து தான், மாணவர்கள் புளியாம்பாறை அரசு பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக, இந்த கிராமத்துக்கு செல்லும் மண்சாலை, சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால், நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்லமுடியாத காரணத்தால், 14 மாணவர்கள் திடீரென பள்ளி செல்வதை நிறுத்தி விட்டனர். சிலர் தோட்டவேலையில் ஈடுபட துவங்கியுள்ளனர்

ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )


உங்கள் உயிருக்கு முக்கிய செய்தியுடன் உங்கள் மருத்துவ நண்பன் Dr.சுரேஷ் குமார், ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !
நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் - புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கல்வி விதிமுறைகளில், சில திருத்தங்களை கொண்டு வந்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

மாணவியின் நெற்றியில் பேனாவால் எழுதிய ஆசிரியை - தாசில்தார் விசாரணை

வால்பாறை அருகே  வீட்டுப்பாடம் செய்ய தவறிய, பள்ளி மாணவியின் நெற்றியில், பேனாவால் ஆசிரியை எழுதியது குறித்து, தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பழைய வால்பாறை பகுதியில் ஆங்கிலப்பள்ளி (நர்சரி) செயல்படுகிறது. இந்த பள்ளியில் வால்பாறை நகரை சேர்ந்த மாணவி, ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளிக்கு செல்லும்போது, வீட்டு பாட நோட்டு கொண்டு செல்லவில்லையாம்

பாட புத்தகங்களை எடைக்கு விற்றுரூ.14 லட்சம் பெற்றது யார்?பலிகடாவாகிறார் வியாபாரி?

கோவையில், 350 டன் பள்ளி பாடப் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில், புத்தகங்களை எடை போட்டு வாங்கிய வியாபாரியை தேடி, தனிப்படையினர் கோவில்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசு, 2011ம் ஆண்டு கோவை மாவட்டத்துக்கு அனுப்பி வைத்த சமச்சீர் கல்வி அல்லாத, 350 டன் எடை கொண்ட பாடப் புத்தகங்கள், அரசுக்கு தெரியாமல், எடைக்கு விற்பனை செய்யப்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

துவக்கப்பள்ளி இல்லாத குடியிருப்புபட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

துவக்கப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.வரும் 2015-16 கல்வியாண்டில், புதிதாக தொடங்க வேண்டிய துவக்கப்பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய துவக்கப்பள்ளிகள் குறித்த பட்டியலை, உடனடியாக தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வரும் மார்ச்சில் நடக்கும்பிளஸ் 2 தனித்தேர்வுஅறிவிப்பு வெளியீடு

வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - குறைத்தீர் மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள்

P&R DEPT - PETITIONS - PROCEDURES FOR DEALING WITH GRIEVANCE PETITIONS - INSTRUCTIONS CLICK HERE...

பள்ளியில் போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பணியின் போது மதுபோதையில் இருந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

web stats

web stats