rp

Blogging Tips 2017

டாக்டர்களின் அலட்சியமே அப்துல் கலாமின் மரணத்துக்குக் காரணம்... உதவியாளர் பொன்ராஜ் வேதனை

சேலம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு, சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவருடைய முகம் கறுப்பாக மாறிப்போனதற்கு, அங்குள்ள டாக்டர்களின் தவறான சிகிச்சை முறையும் ஒன்று எனவும் அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் வேதனையுடன் கூறியுள்ளார். கடந்த, ஜூலை, 27ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மேகாலாயா மாநிலம், ஷில்லாங்கில், ஐ.ஐ.எம்., நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற போது, மயங்கி கீழே விழுந்து மரணமடைந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில்

RTI Letter - SABL பாட ஆசிரியர்கள் WORK DONE REGISTER (ஆசிரியர் வேலை பதிவேடு) எழுதவேண்டியதில்லை

பள்ளிக்கல்வி - கணினி ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தமிழக அரசு ஆணை வெளியீடு


தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுசெயலர் திருமிகு .செ.முத்துசாமி அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு- ஆசிரியர் சார் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை இயக்குனர் அலுவலகத்தில் 23.09.2015 புதன் மாலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை பொதுசெயலர் திரு செ.முத்துசாமி அவர்கள் தலைமையில் சந்தித்தனர்.அப்போது இயக்குனர் பொதுசெயலரினை அவரது  இருதய அறுவை சிகிச்சைக்கு முடித்து 6 மாத ஓய்வுக்குபின்  சந்திப்பதில் தனது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் அவர் பூரண நலம் பெற்றமைக்குவாழ்த்துகள் கூறி மகிழ்ந்தார். பின்னர் பொதுசெயலர் ஆசிரியர் சார்ந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாகக்கூறி விளக்கம் தந்து விவாதித்தனர் உடன் மாநில தலைவர் திரு மணி,மாநில பொருளாளர்.திரு அலெக்சாண்டர்,தலைமை நிலையச்செயலர் திரு சாந்தகுமார், இதழாசிரியர் திரு. வடிவேலு மற்றும் பரமத்திவட்டாரத்தலைவர் திரு கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டனர்
கோரிக்கைகளும் இயக்குனர் பதிலும்
கோரிக்கைகள்.
1.ஆசிரியர்கள் மேல்படிப்பு முடித்து முன்னனுமதி பெறாமை-பல விண்னப்பங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனர் அலுவலகத்துக்கு அனைத்து ஒன்றியங்களின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு பலநாட்கள் ஆகியும் அதன் மீதான நடவடிக்கை தாமதத்தால் பலஆசிரியர்களின் பதவி உயர்வும்,ஊக்க ஊதிய உயர்வும் பெறாமல் வருத்தத்தில் உள்ளது சுட்டிக்காட்டப்பட்டு விரைவான ஆணை வேண்டப்பட்டது
இயக்குனர் விளக்கம்
     தமிழகம் முழுவதில் இருந்தும் சுமார் 3500 க்குமேலான விண்னப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அது குறித்து உரிய அரசாணை வெளியிடக்கோரி கல்வித்துறை செயலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்

EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது.

EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...

தளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது மாவட்டம்.,ஒன்றியம்.,பள்ளி,வகுப்பு என்பதை தேர்வு செய்வதன் மூலமாக அறியலாம்.I வகுப்பு மாணவர்களின் விபரங்களயும் ஏற்றலாம்.
                                                                              Click here EMIS site link...

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்? -RTI பதில்...

1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

           மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பல வகைத்தொழில் நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது பல்கலைக்கழக துறைகளை உள்ளடக்கிய 4 வளாகங்களையும்,

G.O Ms : 34 - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்.15 தேதியை "இளைஞர் எழுச்சி நாள்"- ஆக கொண்டாடுதல் - அரசானை வெளியீடு!!!


மதுரையில் ரூ. 5 கோடியில் விளையாட்டு அறிவியல் மையம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஊட்டியில் ரூ. 5 கோடியில் மலை மேலிட பயிற்சி மையம், மதுரையில் ரூ. 5 கோடியில் விளையாட்டு அறிவியல் மையம் உள்ளிட்ட விளையாட்டு மேம்பாட்டுக்கான பல புதிய திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கை:

''இந்தியாவிலேயே மலை மேலிட பயிற்சி முகாம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷில்லாரு மற்றும் கேரளாவில் உள்ள மூணாறு ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குளிர் பிரதேசங்களில் நடைபெறுவதால் நமது விளையாட்டு

தமிழகத்தில் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம்  5 உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,

1. கடந்த நான்கு ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் 14  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த நான்காண்டுகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும்,

Fake news spreading about DA Merger and Retiring age

Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.7.2015 : Finmin order

ஆதரவற்ற குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்க்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

அரசு குழந்தைகள் காப்பகங்களில் ஆதர வற்ற குழந்தைகளை சேர்க்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு சார்பில், பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், தந்தை அல்லது தாய் மட்டும் உள்ள குழந்தைகள் மற்றும் தீராத நோய் அல்லது மனநலம் குன்றிய பெற்றோரினால் பாதுகாக்க

நிதி உதவி பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்க உத்திரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்;

ஓய்வூதியம் குறித்து, தமிழக அரசு, 12 வாரங்களுக்குள் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம்
வெளியிட்ட அறிக்கை:சத்துணவு மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள் ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் மாயமலை, 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

DTEd முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே IGNOU BEd

DTEd முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே IGNOU BEd
மதுரை மண்டலத்தில், 'இக்னோ' நடத்திய பி.எட்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.15 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நுழைவுத் தேர்வு, மதுரை உட்பட ஒன்பது மாவட்ட மையங்களில் நேற்று நடந்தன. 
90 சதவீதம் பேர் பங்கேற்றனர். தேர்வு பணிகளை, மண்டல இயக்குனர் மோகனன் தலைமையிலான

தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இந்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 
இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு; 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, செப். 23–முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:–கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். தொடக்கப் பள்ளிகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ள 39 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நடுநிலைப் பள்ளி ஒன்றுக்கு 3 பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் வீதம் 15 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என, 78 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

CM's announcement regarding School Education Dept on 23.09.2015


பேராசிரியர் பணிக்கான தகுதியை மாநில அரசு உயர்த்திக் கொள்ளலாமா? யுஜிசி விளக்கம்

யுஜிசி வழிகாட்டுதல் 2010-இல் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியில் எந்தவித மாற்றமும் செய்யாமல், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதியை மாநில அரசுகள் தேவைப்பட்டால் உயர்த்திக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விளக்கம் அளித்துள்ளது.
பல்கலைக்கழகம், கல்லூரிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு யுஜிசி 2010 வழிகாட்டுதலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் தொடர்பாக கல்வியாளர்கள், மாநில உயர்கல்வித் துறை அதிகாரிகள் எழுப்பியுள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.

7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்!

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள கமிஷன், விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியர்கள், பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான, சம்பள உயர்வு குறித்த அறிக்கை தயாரித்து, அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. கடைசியாக, 2006ம் ஆண்டு, ஆறாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது.

"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு", பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும் கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம்: முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம்

மாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் தேசிய அளவிலான ‘நெட்’ தகுதித் தேர்விலோ அல்லது மாநில அளவில் நடத்தப்படுகின்ற ‘ஸ்லெட்’ தகுதித் தேர்விலோ கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம். அதேநேரத்தில் ‘ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும்.

விடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி

அரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித் துறையில், 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிலும், பள்ளிகளிலும், 15 ஆயிரம் நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு


டெங்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை

விருதுநகர்: டெங்கு காய்ச்சலுக்கு சுயமருத்துவம் செய்யக்கூடாது என, மாணவர்களிடம் வலியுறுத்தும்படி, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வகுப்பறை மற்றும் கழிப்பறையில் தண்ணீர் தேங்கியிருந்தால், தலைமையாசிரிடம் கூறி அகற்ற வேண்டும். குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டியை மூடிவைப்பதன்மூலம், கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும்.

'கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்' படிப்பா? கவலை வேண்டாம் இனி; வேலை உண்டு!

'திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வியில் வழங்கப்படும், அனைத்து பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 
தமிழகத்தில், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், அண்ணாமலை பல்கலை உட்பட, சில பல்கலைகளில், 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில், பட்டம் மற்றம் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

துவக்கத்தில், இந்த முறையில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு, அரசு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு தரப்பட்டதோடு, உயர்கல்வி கற்கவும் அனுமதி வழங்கப்பட்டது. 

டிச.27-இல் "நெட்' தேர்வு

இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குஆதார் எண் கட்டாயமில்லை!

 'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் இல்லை' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

             பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின், சுய விவரங்களை பள்ளிகள் சேகரித்து, தேர்வுத்துறைக்கு அனுப்புகின்றன. தமிழகத்தில், சமச்சீர் கல்வியை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரிடம்

செப்.26 முதல் அக்.4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை

 பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

பி.எட்., 'கட் - ஆப்' அறியஇணையதளத்தில் புதுவசதி

 பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

         தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.

டெங்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை

விருதுநகர்: டெங்கு காய்ச்சலுக்கு சுயமருத்துவம் செய்யக்கூடாது என, மாணவர்களிடம் வலியுறுத்தும்படி, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

          வகுப்பறை மற்றும் கழிப்பறையில் தண்ணீர் தேங்கியிருந்தால், தலைமையாசிரிடம் கூறி அகற்ற வேண்டும். குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டியை மூடிவைப்பதன்மூலம், கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும்.

டி.இ.ஓ., பதவி உயர்வில் விரும்பிய இடங்கள்! கல்வித்துறை திடீர் 'கரிசனம்'

     மதுரை:கல்வித் துறையில் மாநில அளவில், 70க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருந்தன. டி.இ.ஓ., பதவி உயர்வு 'பேனல்' ரெடியாக இருந்தபோதும் காரணமே தெரியாமல் பதவி உயர்வு அளிப்பதில் இழுத்தடிக்கப்பட்டது. இதனால், டி.இ.ஓ., பதவியே கிடைக்காமல் தலைமையாசிரியர் பலர் ஓய்வு பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.

                 நேற்று முன்தினம் இரவு 52 பேருக்கு பதவி உயர்வு அளித்து கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால், 80 பேர் 'பேனலில்' இருந்தபட்சத்தில், 76 காலியிடங்களுக்கு 52 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால், மீதமுள்ள பலர், ஓய்வு பெறும் வயதில் உள்ளதால் அவர்களின் டி.இ.ஓ., கனவு நிறைவேறாமல்

கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறப்படும் பி.எட். பட்டம்!

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். படிப்பை பலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறுவதாகவும், இந்த நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.  இதைத் தடுத்து தரமான ஆசிரியர்கள் உருவாக, சுயநிதி கல்லூரிகளில் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

           தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தவிர மற்ற அனைத்தும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்.

'அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும்'-அலகாபாத் ஐகோர்ட்

'அனைத்து அரசு ஊழியர்களும், தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளி யில் மட்டுமே சேர்க்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச மாநிலத்தில், அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்றும், அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்க, அரசு அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

காமுகனான கல்வி அதிகாரி-மாமாவான ஆசிரியர்-கதறிஓடும்ஆசிரியைகள்-பத்திரிக்கைசெய்தி

கருத்தடை மாத்திரை சாப்பிட்ட +1 மாணவி: ஏற்கனவே கருவை கலைத்ததாகவும் 'பகீர்'

கோவை: பிளஸ் 1 மாணவி ஒருவர், வகுப்பறையில் கருத்தடை மாத்திரை சாப்பிட்டதை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து, 'சைல்டு லைன்' அமைப்பிற்கு புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட மாணவி, ஏற்கனவே ஒரு முறை கருக்கலைப்பு செய்ததாக, 'பகீர்' தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த, 18ம் தேதி, கோவை பள்ளியில் படிக்கும், 16 வயது மாணவி ஒருவர், வகுப்பறையில் கருத்தடை மாத்திரை சாப்பிட்டதாக, 'சைல்டு லைன்' அமைப்பிற்கு, போன் அழைப்பு வந்தது. அதிர்ச்சியடைந்த அலுவலர்கள், உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். சம்பந்தப்பட்ட மாணவி, வகுப்பறையில் மிகுந்த சோர்வுடன் இருந்ததாகவும்,

90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கை

இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கையை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் தங்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைய தள பயன்பாட்டில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ்அப் செயலி (WHATS APP) ஆகும். மற்ற செயலிகளை விட வாட்ஸ் அப் மூலம் மொபைல் வாயிலாக இ-மெயில் தகவல்கள்,

உதவியாளர் பணி முதல் பட்டியல் வெளியீடு

: குரூப் - 2 பதவிகளில், 2,269 காலிபணியிடங்களுக்கு, 2014 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்ற வர்களில், தகுதியானோரின் இறுதிப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ளது. இதில், உதவியாளர் பணிக்கு, 1,365 பேர், அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எழுத்தர் பணிக்கு, 43 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது தவிர, உதவியாளர் பணிக்கு, சான்றிதழ் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், 43 பேருக்கு, வரும், 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

அரசு இணைய சேவை மையங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி

தமிழக அரசின் இணைய சேவை மையங்கள் மூலம், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி திங்கள்கிழமை (செப்டம்பர் 21) முதல் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஆதார் அட்டையைத் தொடர்ந்து, இந்த முக்கிய சேவையை இணைய வழி சேவை மையங்கள் அளிக்கவுள்ளன.
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம், தமிழகம் முழுவதும் இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள்,

மத்திய அரசின் 18000 ஆயிரம் பள்ளிகளில் யோகா கட்டாயமாக இருக்க வேண்டும்!

  The Minister for Human Resource Development,  Smriti Irani, has announced that all over the country, yoga has been made compulsory in all the Central Government run schools, including Kendriya Vidyalayas and Jawahar Navodaya Vidyalayas.
CBSE board, with over 18,000 schools, is planning a strategy on how to implement the order.
After releasing the handbook and syllabus for yoga sessions in New Delhi, Smriti Irani said, “80 marks will be given for practical yoga. Therefore, this will not become an additional burden on the students.”
Yoga has also been made compulsory for teacher training qualifications. In order to meet the growing demands for yoga teachers, three different levels have also been

அரசு‬ ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான பா.ம.கவின் வரைவு தேர்தல் அறிக்கை ..

தொடக்க கல்வி-டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...

7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: B/45706/CSB-2015/AWES
மொத்த காலியிடங்கள்: 7,000
பணி: PGT (Post Graduate Teacher)
தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உளவியல், உடற் கல்வியியல், கம்பியூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

அவினாசிலிங்கம் பல்கலைகக்கழகத்தை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் பழனியப்பன் அறிவிப்பு

கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைகக்கழகத்தை ஏற்று நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.தங்கவேல் (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:

பி.எட். படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்: ஓரிரு நாளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

இந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர 1,113 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பிஎட் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) புதிய விதிமுறையின்படி பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகள் சேரலாம்.

தொடக்கக்கல்வி-ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.08.2015 இல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிடம் நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்.

PFRDA ;ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் CPS பணத்தை , நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்கள் கையில் ஒப்படைப்பு!


Just as the country’s Employees Provident Fund Organisation (EPFO) started investing a small part (Rs 5000 crore) of its Rs 8.5 lakh crore corpus into equities, the Pension Fund Regulatory and Development Authority
(PFRDA) is gearing up to allow private-sector fund managers to manage its Rs 88,000 crore assets.

In an interview with CNBC-TV18, PFRDA Chairman Hemant Contractor told Sapna Das the organization had made a pitch to the Finance Ministry in the regard.

The recommendation to allow private sector fund managers to manage its corpus was made by the Bajpai committee, Contractor said. “We see some merit in that recommendation and forwarded it to the government. It is currently engaging its attention,” he said.

Currently, eight managers (including private sector managers such as ICICI, Kotak, Reliance, HDFC and Birla Sun Life) manage the Rs 6,300-crore portion made up by investments from private sector employees into the National Pension Scheme. But only LIC, SBI and UTI manage the remaining assets, made up from investments from central and state government employees.

அக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம்

சிவகங்கை:“பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 8ல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,” என சிவகங்கையில் உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: முதல்வர் ஜெ., கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார்.இன்று வரை ரத்தாகவில்லை .மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, கல்வி, வீட்டு வாடகை படிகளை மத்திய அரசு போல் வழங்க வேண்டும். 2004ல் பகுதி நேர ஆசிரியராக 55 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.

அவர்களை 2006ல் அரசு பணிவரன்முறை செய்தது. ஆனால் பணி, பணப்பலன்கள் இன்று வரை கிடைக்கவில்லை.

கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஆசிரியரை பணிவரன் முறை செய்ய வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை முன்வைத்து, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,அக்டோபர் 8ம் தேதி தமிழகம் முழுவதும்3 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதற்கு பின்னரும் அரசு செவி சாய்க்காவிடில், தொடர் போராட்டம் நடக்கும், என்றார்.சங்க மாநில செயலாளர் சேதுசெல்வம், மாவட்ட செயலாளர் இளங்கோ உடனிருந்தனர்.

52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 தமிழகம் முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 75-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்தன.
 இந்த நிலையில், பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் இருந்த 52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதன்மூலம் கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், சங்ககிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், திருநெல்வேலி, வேலூர், மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களும், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
 இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 
 அதேநேரத்தில், காலியாக உள்ள 25 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி., சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்

சென்னை:தமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு பின் உடற்கல்வி தேர்வு :'தினமலர்' செய்தியால் வந்தது மாற்றம்

தினமலர்' செய்தி எதிரொலியாக, 20 ஆண்டுகளுக்குப் பின், முறையாக வினாத்தாள் தயாரித்து, ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, உடற்கல்விப் பாடத்துக்கான தேர்வு துவங்கப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வாரத்திற்கு இரு நாட்களாவது, உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன், சமச்சீர் கல்வி அறிமுகமான போது, ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களின் செயல்திறனை மதிப்பிடும், சி.சி.இ., முறை அமலானது.

இந்த முறையில், உடற்கல்விப் பாடத்துக்கு தேர்வு நடத்தி, அதற்கு மதிப்பெண்கள் கொடுக்க வேண்டியது கட்டாயம்.ஆனால், கடந்த வாரம் வரை, உடற்கல்விப் பாடத்துக்கு பாடப்புத்தகமும் வழங்கவில்லை; தேர்வும் நடத்தப்படவில்லை.

உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், பெயரளவில் வினாத்தாள் தயாரித்து, சில இடங்களில் மட்டும் தேர்வு நடத்தினர். இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

இந்நிலையில், 1995க்குப் பின், முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், உடற்கல்விப் பாடத்துக்கு, சென்னை உட்பட பல மாவட்டங்களில், சனிக்கிழமை தேர்வு நடத்தப்பட்டது; வினாத்தாள்களும் அச்சடித்து வழங்கப்பட்டன.

மொத்தம், 40 மதிப்பெண்களுக்கு, 30 நிமிடங்கள் எழுதும் அளவுக்கு வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. வாள் வீச்சுப் போட்டி, கிரிக்கெட், யோகாசன முறைகள் மற்றும் கபடி உள்ளிட்ட, பல விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதும், தேர்வு நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். பொதுவாக வினாத்தாள் தயாரித்து அனுப்பினர். இதேபோல், பாடப்புத்தகங்களையும் விரைவில் வழங்கினால், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளிகளில் ஏவலாளாக செயல்படாமல், ஆசிரியர்களாக செயல்பட முடியும்' என்றனர்

பி.எட். கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

பி.எட். படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்களை, கல்வியியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் www.ladywellingtioniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் பி.எட், படிப்பு 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் மாணவர்களும், பி.எட். படிக்க இந்தாண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அரசு உதவி பெறும் பள்ளிகளில் முறைகேடு; கல்வித்துறை அதிர்ச்சி

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடம் தொடர்பாக முறைகேடு நடப்பதாக எழுந்துள்ள புகாரால், கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் சில அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாதபோதும், கூடுதல் பணியிடம் உருவாக்கி, பள்ளி நிர்வாகங்கள் முறைகேடு செய்வதாக, கல்வித்துறைக்கு புகார் வந்தது. அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், இது உண்மை என தெரியவந்தது. அதிக மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டி, கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது;

இராணுவப் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர் பணி.

 மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: B/45706/CSB-2015/AWES
பணி: PGT (Post Graduate Teacher)
தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உளவியல், உடற் கல்வியியல், கம்பியூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி: TGT (Trained Graduate Teacher)
தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறையில் இளங்கலை மற்றும் பி.எட் முடித்து மத்திய, மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7-வது ஊதியக்குழுவில் - 33 வருடம் பணி அல்லது 60 வயது முதிர்வு இதில் எது முதலில் வந்தாலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு முடிவு

7th Central Pay Commission – Regularisation of Retirement Age?
(completing 33 years of service or at the age of 60, whichever comes first)
          One more recommendation which is said to be an important one, is the regularisation of retirement age for the Central Government Employees. The Commission may recommend that an employee should retire after completing 33 years of service or at the age of 60 whichever comes first. For instance,  if an employee joins a central government establishment at the age of 23, his retirement age will be 56. If this recommendation is true, it will definitely create panic among the employees and it will not be a wise decision by the pay commission. All Federations and Associations will strongly oppose these type of recommendations…

அரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி

 ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை கொண்டு வர, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள், 8,000த்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் படிக்கும், 33 லட்சம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, 95 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது.

இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர் பணியிடங்களுக்காக அரசிடம் நிதி பெறுவதிலும், அதை பயன்படுத்துவதிலும், குளறுபடி நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.

பெண் கல்வி திட்டம்ரூ.55 கோடி ஒதுக்கீடு

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்திற்கு, 55 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் பள்ளி சேர்க்கையை, 100 சதவீதம் உறுதிப்படுத்தவும்,

'பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2011 - 12ம் கல்வி ஆண்டு முதல் செயல்படும் இத்திட்டத்தில், 3ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும், ஆதிதிராவிட, பழங்குடியின பெண் குழந்தை களுக்கு, ஊக்க உதவித்தொகையாக, ஒவ்வொரு மாதமும்,

கல்வி அதிகாரிகளுக்கு சைக்கிள் ஓட்ட உத்தரவு

 காந்தி பிறந்த நாளில், காந்தி சிலை முதல் காந்தி மண்டபம் வரை, ஏழு கிலோ மீட்டருக்கு, சைக்கிள் ஓட்டி வர, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

காந்தி பிறந்த நாளான அக்., 2ம் தேதி, ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், காந்தி மண்டபத்தில், கலைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வருவது ஏன்? மின்சார வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம்

 டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்ட மின்இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வருவது ஏன்? என்பதற்கு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

டிஜிட்டல் மீட்டர்

தமிழகத்தில் உள்ள மின்சார இணைப்புகளை பெற்றுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிடுவதற்காக பொருத்தப்பட்டுள்ள பழைய மின்மீட்டர்கள் அனைத்தையும் மாற்றிவிட்டு புதிதாக டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணியில் தமிழ்நாடு மின்சார வாரியம் இறங்கியுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்கங்கள் உள்ள ரூபாய் நோட்டுக்கள்

அரசு ஊழியர்களின் கேள்விகளுக்கு அரசு துறைகள்... மவுனம்: பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். 
இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கே என்பது தான், இப்போதைய கேள்வி.

தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகமானது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தம்:மாநிலம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) நடைபெறுகிறது.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 15 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 5.66 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் உரிய திருத்தங்கள் செய்யும் பணி, வட்டாட்சியர், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு

தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம்: வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது நிதியமைச்சகம்

 தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதன்படி தங்கத்தின் எடைக்கு இணையான விலை மதிப்புள்ள பத்திரங்களை அரசு வெளியிடும். 2,5,10 கிராம்கள் அல்லது இதற்கு அதிகமான எடைக்கு

தமிழகத்தில் 52 தலைமையாசிரியர்கள் டி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு. பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.



நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டம்: கிடைக்ககூடிய வருமானம்… முக்கியஅம்சங்கள்…. சிறப்பு பார்வை

உங்கள் வீடுகளில் உள்ள தங்க நகைகள் கூடுதலாக வருமானத்தையும் ஈட்டித் தந்தால் எப்படியிருக்கும்.ஆம்.அப்படி ஒரு வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன.இதில் எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

          வீடுகளில் உள்ள தங்க நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்து அதற்கு வட்டியாக சிறிய தொகையை பெறும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு விதிகளைமத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.தங்கத்தை குறைந்தபட்சம் 30 கிராமிலிருந்து வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுழ் கூட்ட அழைப்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு

மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.

TET தேர்வு அறிவிப்பு எப்போது -வருங்கால ஆசிரியர்கள் ஏக்கம்


பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா

அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம்

web stats

web stats