rp

Blogging Tips 2017

திறனாய்வுத் தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு, தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு என பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்த தேர்வை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டும் எழுதலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

TET- வெயிட்டேஜ் பகிர்வு-ஓர் கையடக்க விளக்கம்



B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற TNTEU செல்பவர்கள் கவனத்திற்கு

B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி"க்கு செல்பவர்கள் 150 ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும்.
மற்றும் சான்றிதழ் சரிபார்பிற்கான கடிதம் கொண்டு செல்ல வேண்டும். (பல்கலைகழக தகவல் தொலைபேசி எண் 044-28447304) முகவரி: Registrar, Tamilnadu teachers education university, chennai- 600 005)

TNTET 2013 - Paper 1 - All Passed Candidates Detail Now Available.


TNTET 2013 - Paper 1 - All Passed Candidate's Mark Detail with DOB & Caste Detail click here...

கல்வித்துறையில் பணியாற்றி வரும் தற்காலிக பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணிநீடிப்பு .


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அதற்கான விடைகளும், பின்னர் முடிவுகளும் வெளியிடப்பட்டது.

மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மனு தள்ளுபடி


மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரி வேலை நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 2006-ஆம் ஆண்டில் ஆயிரத்து 880 நிரந்தர கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் அரசால் உருவாக்கப்பட்டன. இந்த பணியிடங்களில் சேர 1999-2000-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த தாற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் பணி நிரந்தரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

கணினி ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முடியாது ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு பரிசீலனை செய்யக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றி வந்த 1,800 கணினி ஆசிரியர்கள் பணியை நிரந்தரப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தது. இதற்காக சிறப்பு தேர்வும் நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின், பணி நிரந்தரப்படுத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, பணி நீக்கம் செய்யப்பட் டவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடந்த மறுதேர்விலும் சுமார் 480 பேர் தேர்ச்சி பெறவில்லை.

பங்களிப்பு ஓய்வூதியம் நியமன நாள் முதல் கணக்கு எண் பெறப்படும்வரை ஊழியர் வாங்கிய ஊதியத்தில் பிடித்தம் செய்ய மாதிரி கணக்கீட்டு படிவம்


அகஇ - அகஇ சார்பில் நடத்தப்பட உள்ள மாணவர்களின் அடைவு திறன் குறித்த கால அட்டவணை மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செயல்முறைகள்

SSA TAMILNADU - ACHIEVEMENTS STUDY CONDUCT OF - INSTRUCTIONS TO VISIT CENTRES ON THE DATES OF SURVEY REG PROC CLICK HERE...

ஏசர் ரிப்போர்ட்-கல்வித்தரம் சார்ந்த ஆய்வு அறிக்கை

click here to download

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வு


நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்ப கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வை நடத்தியது. இந்த காலியிடங்கள் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் (தமிழ் நீங்கலாக) நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக தமிழ் பாடத்துக்கான தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்படவில்லை. பின்னர் வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து டிசம்பர் 23-ம் தேதி தமிழ் தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
முதலில் தேர்வு முடிவு வெளியான பாடங்களுக்கும் பின்னர் வெளியிடப்பட்ட தமிழ் பாடத்துக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட தற்காலிக இறுதி தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுவிட்டது. இதற்கிடையே, 2013-14-ம் கல்வி ஆண்டுக்கான 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கியது.
எனவே, இந்த 981 காலியிடங்களும் தற்போது நடத்தப்பட்ட தேர்வு முடிவு மூலம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களுக்கு அனுமதி பெறப்படுவதற்கு முன்பாகவே 2881 காலியிடங்களை நிரப்புவதற்கான பணிநியமன பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதால் தற்போதைய தேர்வு மூலமாக 981 காலியிடங்களை நிரப்ப முடியாது என்றும் இதற்கு தனியாக தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் விரைவில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க திடடம்


'கிராமப்புறக் கல்வித் தரம் வீழ்கிறது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது' தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வியின் தரம் குறைகிறது என்று ஆய்வு ஒன்று காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் முன்னாள் தொடக்கக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வியின் தரம் குறைகிறது என்று ஆய்வு ஒன்று காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் முன்னாள் தொடக்கக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு
BBC- வானொலிக்கு தங்கம் தென்னரசு அளித்த  நேர்காணல் கேட்க இங்கே சொடுக்கவும்

அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, முதல் கட்டமாக கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் துணை கலெக்டர்களுக்கு சென்னையில் தனித் தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது

ஊதிய நிர்ணயம் - கீழ் நிலை பதவியில் தொடர்ந்து பணிபுரிந்திருந்தால் பதவி உயர்வு பதவியில் பெறுவதைவிட ஊதியம் அதிகம் பெறுதல் சார்பான அடிப்படை விதி 4(3)ன் படி ஊதிய நிர்ணயம் செய்து உத்தரவு

PAY FIXATION - FUNDAMENTAL RULE 4(3) REG AEEO FIXATION ORDER CLICK HERE...

PAY FIXATION - FUNDAMENTAL RULE 4(3) REG DEEO ORDER CLICK HERE...

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் 21ல் தீர்ப்பு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை சட்டப்படியான அளவீட்டில் வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் 21ம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளது.தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 ஆசிரியர்களில் 74 ஆயிரத்து 200 பேர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 மற்றும் ரூ.4,200 என்ற அளவீட்டில் ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் வேலை அம்போ? அரசு மவுனத்தால் ஆசிரியர்கள் பீதி

மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ், வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், பீதி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசும், மவுனமாக இருப்பது, ஆசிரியர்களை, மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.

தொகுப்பூதியம்:
இரு ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர், அரசு பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். வாரத்திற்கு மூன்று அரை நாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில், இவர்கள், பணியாற்றி வருகின்றனர். அரசு வேலை, என்றாவது ஒரு நாள், பணி நிரந்தரமாகிவிடும் என்ற எண்ணத்தில், அதிக சம்பளத்தில் இருந்தவர்களும், அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர வேலைக்கு வந்தனர். மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்ட நிதியின் கீழ், இவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது.

அதிக நேரம் பள்ளியில் மாணவர்கள்: சுவையா...சுமையா?

ஒரு பக்கம் இப்படி மூட்டை என்றால், இன்னொரு பக்கம், அதிக நேரம் பள்ளியில் மாணவர்கள் இருப்பதும் நம் நாட்டில் தான் அதிகம். இது நல்லதா, கெட்டதா என்று இன்னமும் முடிவு காண முடியாத கேள்வியாகவே உள்ளது. அதனால் விடிவு ஏற்படவில்லை.
ஓஇசிடி... அதாவது, ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் கோவாப்ரேஷன் அண்டு டெவலப்மென்ட் கூட்டமைப்பு என்று சர்வதேச அமைப்பு உள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சி பற்றி ஆராயும் அமைப்பு. அமெரிக்காவில் ஆரம்பித்து இந்தியா வரை 35 வளர்ந்த, வளரும் நாடுகள் இதன் அங்கம்.கல்வி தான் பொருளாதாரம், வளர்ச்சிக்கு எல்லாம் அடிப்படை. அதனால் அது பற்றி இந்த நாடுகளில் ஒரு ஆய்வை இந்த அமைப்பு மேற்கொண்டது. எந்த நாட்டில் அதிக நேரம் பள்ளியில் குழந்தைகள் இருக்க நேர்கிறது? என்பதில் ஆரம்பித்து, நியாயமான, அறிவுக்கு விருந்தாகும் அளவுக்கு உகந்த மணி நேரங்கள் எவ்வளவு என்பது வரை சர்வே எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் -மாவட்ட வாரியாக கணக்கெடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.

வாசிப்புத் திறன் - பள்ளிக் குழந்தைகளின் அவலநிலை குறித்த ஆய்வு

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில், பாதிபேர் மட்டுமே 1ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தை படிக்கும் திறன் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதேபோல், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 31% பேர் மட்டுமே, பகுப்பு(division) செயல்பாட்டு திறனைப் பெற்றுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்- சீனியாரிட்டிக்கு பதில்"வெயிட்டேஜ் மதிப்பெண்" அறிமுகம், இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது- The Hindu

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிலாக பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று “வெயிட்டேஜ் மதிப்பெண்” முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம்

ஆர்.டி.இ. எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரவேண்டுமானால், கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரையில், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் (வெயிட்டேஜ் மதிப்பெண்) தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கற்றலில் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது

Student numbers go up in govt schools, but learning levels come down: Survey

Pratham's ninth Annual Status of Education Report (ASER) released on Wednesday shows that school education in rural India is a mixed bag of improving parameters like enrolment and compliance to Right to Education norms but declining learning outcomes.

Released by Planning Commission deputy chairperson Montek Singh Ahluwalia amid the usual festive fervour and wide-eyed surveyors recounting their discovery-of-India kind of experiences, ASER said over 96% of all rural children in the age group of 6 to 14 were going to school. There was further good news as proportion of girls in the age group of 11 to 14 not enrolled in schools dropped from 6% in 2012 to 5.5% in 2013.

தமிழகத்தில் உள்ள கிராமப் பள்ளிகளில் பயிலும் (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) மாணவர்களில் பாதிப்பேருக்கு முதல் வகுப்பு (தாய்மொழி) தமிழ் பாடப்புத்தகத்தை கூட வாசிக்க தெரியவில்லை.

 THE TIMES OF INDIA பத்திரிக்கை அதிர்ச்சி ரிப்போர்ட்
 Half of Class 3-5 kids in Tamil Nadu can't read Class 1 text
Only half the number of children in Classes 3 to 5 in rural Tamil Nadu can read a Class 1 textbook in their mother tongue, and only 31% of children in Classes 6 to 8 can do division. The findings of the Annual Status of Education Report (ASER) released by non-government organization Pratham Foundation show that the learning levels of children in rural parts of the state are poor, and much lower than the national average.

As much as 53.4% of children in Class 1 can't identify alphabets in their mother tongue, while 34.2 % are able to identify letters, 10.3% can read words and less than 2% can read their class textbooks. The rate of children in Class 3 in private schools who can read a Class 1 level textbook has decreased since 2012, so has the rate of Class 5 children who can read a Class 2 level textbook since five years ago. Arithmetic skills of children have also declined.

In her article 'The first step' analyzing the learning outcome of children, ASER Centre director Rukmini Banerji said that serious discussions must be held to understand curriculum expectations in Class 1. "At age 5, children's ability to learn needs to be supported well, but in most states the Class 1 curriculum covers a great deal of content very quickly, so that many children are left behind even before they have started," she said.

5 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 3 இல் 2 பங்கு பேருக்கு எண்களை அடையாளம் காணத் தெரிய வில்லை. ‘Two-third of Class V students can’t identify nos'


The Annual Status of Education Report (ASER) painted a grim picture of the affairs in the state's education sector. The report says that 52.6% class V students failed in simple division while 75.5% can't do simple subtraction. Moreover, two thirds of class V students cannot recognize numbers from 1 to 9. The situation is similar in other classes and reading levels are also no different. In class III, 13.4% children cannot even read letters, 21.6% of the students in class VIII cannot read the texts of class II, the report says. Similarly, only 49.2% students can read class II level texts. Another striking feature is that only 24.5% students in classes from I-VIII can recognize numbers.

The report says the number of dropouts among girls in age group of 11-14 has increased. From 11.2% in 2012, the girl dropouts increased to 12.1% in 2013.

ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ்- சர்பார்த்தலின் போதுபின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

TRB - TNTET 2013 - INSTRUCTIONS FOR CV, H.Sc EQUIVALENT & DEGREE SUBJECTS EQUIVALENCE REG GOVERNMENT ORDERS CLICK HERE...

paper-1 ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சர்பார்த்தலின் போது கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்


ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சர்பார்த்தலின் போது ( paper-2)கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பயிற்றுனர்களாக நியமிக்க வேண்டும். - BRT Association Request

ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளித்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைமை நிலையச்செயலாளார் கி.வேலுச்சாமி கோரிக்கை.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இதில் வருடந்தோறும் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி மாறுதல் பெற்று வருகிறார்கள். இவர்கள் பல இடர்பாடுகளை கடந்து வட்டார வளமையங்களில் பணி யாற்றி வருகிறார்கள். கடந்த வருடத்திற்குறிய 500 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்யப்படும் என்று அறிவித்து ஆனால் இதுவரை பணி மாறுதல் செய்யப்படாமல் உள்ளனர்.

B.Ed படிப்பானது அனைத்து அடிப்படை பட்டங்களுக்கும்(B.A,B.Sc,B.COM,B.Lit) பாடங்களுக்கும் பொதுவானது

BEd is General For All UG Degeree - 
- RTI Detail give by Department of School Education.

மத்திய அரசுஊழியர்களின் அகவிலைப்படி,சம்மபளத்துடன்இணைக்க அதிக வாய்ப்பு ???????????????

DA merger likely : Unconfirmed reports
  source-www.staffcorner.com
This article is based on unconfirmed reports. Reader discretion is advised

It has been reported that the government is considering the merger of 50% of the DA with the basic. The government is likely to take a decision during the budget session of Parliament in February 2014. The information was given by sources close to the Central Government Employees Federations. The federations were demanding the merger from January 2011.

During the 5th pay commission period there was a clause that the DA will be merged with the basic once it touches 50%. But this was removed by the 6th pay commission. However the unions were constantly demanding the merger. The current DA stands at 90% and is likely to touch or cross 100% by January 2014, which will be announced in March. he government may consider the demand of merging of 50% DA with basic Pay in view of forthcoming Parliament elections.

Once the AICPIN for Industrial workers for the Month of December 2013 is announced, the rate of dearness allowance to be paid from January 2014 can be calculated. It is certain that the rate of DA will be 100 or 101% with effect from 1st January 2014. (Read : November CPI IW up by 2 points, at 243. Chances of 101% DA from Jan 2014) After the DA increased to 100%, the demand merger willbe stronger. Probably the demand would be for 100% DA merger. So the unions expect the government may consider 50% DA merger soon.

''கல்வித்துறை கூடாரமே காலியா கெடக்கு வே...'' =தினமலர் டீ கடை பெஞ்ச்


''கல்வித்துறை கூடாரமே காலியா கெடக்கு வே...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்தார் அண்ணாச்சி.

''ஏன், என்னாச்சு ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்றேன் வே... ரொம்ப வினோதமான துறை எதுன்னா, அது, பள்ளி கல்வித்துறை தான்... ஏன்னா, அரைச்ச மாவையே, திரும்ப, திரும்ப அரைச்சிட்டு இருப்பாவ... அரசு நலத்திட்ட பணிகளை பத்தி, மாநில அளவுல, ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்துவாங்க... இதுல, மாநிலம் முழுக்க இருந்து, அதிகாரிங்க வருவாங்க...

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய மெட்ரிக் பள்ளிகள் சங்கம் கோரிக்கை.

ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மண்டல மாநாடு மாவட்டத் தலைவர் மலைச்சாமி நடராசன் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. பள்ளிகளின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கே.முத்துகணேச மூர்த்தி, மணிவண்ணன், சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கேஆர் நந்தகுமார், துணைத்தலைவர் ஸ்ரீதர், மாநில அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், திருச்சி சந்திரசேகர் ஆகியோர் விருதுகள் வழங்கிப் பேசினர். தீர்மானங்களை விளக்கி பிவி கந்தசாமி, திருஞானமூர்த்தி, சாலியவாகனன், மாரிச்செல்வம் ஆகியோர் பேசினர்.

மிழர் திருநாளை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள்!- எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை இல்லை.

தமிழகத்தின் கொங்கு பகுதி மாவட்டங்களில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமிழர் திருநாளான பொங்கலை புறக்கணித்துள்ளன. பத்தாம் மற்றும்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நெருங்குவதால் ரகசிய உத்தரவு மூலம் சிறப்பு வகுப்புகள் என்கிற பெயரில் பொங்கல் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையால் ஒவ்வொரு ஆண்டுக்கான விடுப்பு நாட்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு ஆண்டு குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

பேரிடர் நாட்களில்...

மழை, புயல் போன்ற பேரிடர் நாட்களில் மாநில அரசு அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுப்பை முடிவு செய்வர். பொதுவாக விடுப்பு நாட்களில் தனியார் பள்ளிகள் பள்ளியை நடத்தினால், அப்பள்ளி நிர்வாகத்துக்கு அரசு அபராதம் விதிக்கும். இது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சென்றுவிடும்.

கொங்கு மண்டலத்தில் புறக்கணிப்பு!

ஆனால், ஒவ்வொரு முறையும் பொங்கல் திருவிழாவின்போது பொதுத் தேர்வுகளை காரணம் காட்டி கொங்கு பகுதியின் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, ஊத்தங்கரை, திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பெரும்பான்மையான அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பொங்கல் விடுமுறையை புறக்கணிக்கின்றன. இம்முறை மீலாது நபி, பொங்கல் பண்டிகைக்காக இன்று தொடங்கி வரும் 16-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்தப் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை மட்டுமின்றி மீலாது நபி விடுமுறையையும் மேற்கண்ட பள்ளிகள் புறக்கணித்துள்ளன. சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடப்பது மட்டுமின்றி, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளும் நடக்கின்றன. ஏனெனில் ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளுக்கு முறையே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்கள் கற்பிக்கப்பட்டு, பொதுத் தேர்வு பாணியிலான தேர்வுகள் தனியார் பள்ளிகளால்நடத்தப்படுகின்றன.

எதிர்த்து பேசினால்…

பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத்திலும், பிளஸ் 2 தேர்வுகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலும் அக மதிப்பீடு, புற மதிப்பீடு மதிப்பெண்கள் அந்தந்த பள்ளி நிர்வாகங்களால் வழங்கப்படுகின்றன. எதிர்த்து பேசினால் மதிப்பெண்கள் பாதிக் கப்படும் அபாயம் இருக்கிறது. இதனால், பெற்றோர்களால் பள்ளி நிர்வாகத்தின் இப்போக்கை எதிர்க்க முடியவில்லை.பெரும்பாலான பண்டிகைகள் மதம் சார்ந்த விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. ஆனால், பொங்கல் பண்டிகை மட்டுமே தமிழர் பண்பாடு சார்ந்தும் உழவுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் கொண்டாடப் படுகிறது. ஏற்கெனவே இளம் தலைமுறையினர் இடையே தமிழ் மொழிப்பற்று, தமிழர் பண்பாடு மற்றும் விவசாயம்சார்ந்த விழிப்புணர்வு மங்கி வருகிறது. மேலும், இன்றைய மாணவர்களுக்கு பாடத் திட்டம் சார்ந்தும், தேர்வுகளின் கடுமையான போட்டிகள் சார்ந்தும் மன அழுத்தங்கள் மிக அதிகம். இதனால், தற்கொலைகளும் தொடர்கின்றன. இவைதவிரகூட்டுக் குடும்பம், உறவுகளின் பிணைப்புகள் அறுந்துவரும் நிலையில் இதுபோன்ற பண்டிகை களே கிராம வாழ்க்கையையும் உறவுகளையும் புத்துணர்வு பெறசெய்கின்றன.சமூகத்துக்கு முன்னு தாரணமாக இருக்க வேண்டிய பள்ளிகளே பொங்கலை புறக்கணிப்பது வேதனைக்குரியது. வள்ளலார் நாள் போன்ற நாட்களின்போது மாவட்ட நிர்வாகங்கள் முன்கூட்டியே அன்றைய நாளில் மது, மாமிசம் கடைகள் செயல்படக்கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுகின்றன

டி.ஆர்.பி., மீது அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில்இருந்து விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்,என்ற கோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

துறையூர் கொப்பம்பட்டி அசோகன் உட்பட 7 பேர் தாக்கல் செய்த மனு: இளநிலை, முதுகலை பட்டங்கள்,பி.எட்., தேர்ச்சி, வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளோம். அந்த பதிவு மூப்பு அடிப்படையில்,பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2010 மே 12 முதல்14 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. நாங்கள் பங்கேற்றோம்.பின், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ.,)பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என, 2010ஆக.,28 ல் உத்தரவிட்டது. இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை, 'ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்,' என 2011 நவ.,15 ல் உத்தரவிட்டது.என்.சி.டி.இ., உத்தரவிடும் முன்,எங்களின் பணி நியமன நடவடிக்கை துவங்கியது. என்.சி.டி.இ.,

6 கட்டமாக லோக்சபா தேர்தல்: தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிப்பு

லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்ற பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, எப்போதும் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, தலைமை தேர்தல் ஆணையர், எச்.எஸ்.பிரம்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த தேதியில்லோக்சபா தேர்தல் எந்த தேதியில் நடைபெறும் என்பதை, பிப்ரவரி மாத இறுதியில் அறிவிப்போம். கடந்த, 2009 தேர்தலுக்கு, பிப்ரவரி இறுதியில் தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இம்முறை, ஆறு கட்ட தேர்தலாக நடைபெறும்; 2009ல் ஐந்து கட்ட தேர்தலாக நடந்தது. இந்தியா முழுவதும் உள்ள நிலைமைகளை அலசி ஆராய்ந்து, மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பின் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்.தேர்தலுக்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தையும், தேர்தல் ஆணையம் துவக்கி விட்டது. தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக நடைபெறும், கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்துக்கு

2013-14 நிதியாண்டிற்கான தொழிலாளர் பி.எப். வட்டி விகிதம் 8.75% ஆக உயர்வு


2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பி.எப் வட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசிரிய சகோதர / சகோதரிகளுக்குm வாசகர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!


அ தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மார்ச் 2014 மாணவர்களுக்கான தேர்வு தொகை ரூ.115/- ஜனவரி 17 முதல் 23 வரை வசூலிக்கவும், அரசு கணக்கில் ஜனவரி 23ம் தேதி செலுத்த உத்தரவு

DGE - SSLC PUBLIC EXAM MARCH 2014 - REMITTANCE OF EXAM FEES REG INSTRUCTIONS CLICK HERE...

பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் 2013 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மேற்கொள்வது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உத்தரவு

DSE - PG ASST 2013 & TET PAPER 2013 - I & II TEACHERS APPOINTMENT FOR CERTIFICATE VERIFICATION REG DSE INSTRUCTIONS CLICK HERE...

அரசு வேலைவாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகள் அரசு அறிவிப்பு


தமிழ்நாட்டில் உள்ள பல படிப்புகளுக்கு சமமான படிப்புகளை அரசு அறிவித்துள்ளது.

சமமான படிப்புகள்

தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு சில பட்டங்களை பெற்றவர்கள் வேலைவாய்ப்பிலும் சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த படிப்பு மற்ற பல்கலைக்கழகத்தில் உள்ள பட்ட படிப்புக்கு சமமானதா என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் படித்த பட்டதாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் நலன் கருதி தமிழக உயர் கல்வித்துறை ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்ட எம்.எஸ்சி. அப்ளைடு புவியியல் பட்டம், எம்.எஸ்சி. புவியியல் பட்டத்திற்கு சமம்.

திருச்சியில் உள்ள ஹோலிகிராஸ் சுயாட்சி கல்லூரியில் படித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பி.எஸ்சி. விலங்கியல் (உயிரி தொழில்நுட்பத்தில் சிறப்பு) பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்ற பி.எஸ்சி. விலங்கியல் பட்டத்திற்கு சமமானதாகும். கோவாவில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேசன் பட்டய படிப்பு, தமிழ்நாட்டில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேசன் பட்டயப்படிப்புக்கு சமமானதாகும்.

பி.ஏ. ஆங்கிலம்

பாரதி தாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பி.ஏ. இங்கிலீசுடன் ஸ்பெஷலைசேஷன் இன் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பு பி.ஏ. ஆங்கில படிப்புக்கு சமமானதாகும்.

உயில் எழுதுவது எப்படி ?

தான் பாடு பட்டு சேர்த்த சொத்து தனது காலத்துக்கு பிறகு தன் பிள்ளைகள் பிரச்சினை இன்றி அனுபவிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக இருக்கும். அதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது உயில். அதில் யார் யாருக்கு எந்த சொத்து போய் சேர வேண்டும் என்ற விவரத்தை தெளிவாக குறிப்பிட்டு எழுதி வைத்தால் தனது மறைவுக்கு பிறகு சொத்தை வாரிசுகள் பாகப்பிரிவினை செய்வதில் சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

தெளிவாக குறிப்பிட வேண்டும்

சொத்தை தனது விருப்பத்துக்கு ஏற்ப பிடித்தமானவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதி வைக்கும் ஆவணமான இந்த உயில் எழுதியவர் மறைவுக்கு பிறகு தான் நடைமுறைக்கு வரும் என்பதால் அதில் இருக்கும் விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அதனால் பின்னாளில் பிரச்சினை எழுந்து விடக்கூடாது. உயில் எழுதுபவர் நல்ல மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாத நிலையில் எழுதப்படும் உயில் செல்லாததாகி போய்விடும். குடிபோதையில் எழுதப்பட்ட உயிலும் செல்லாததாகி விடும்.

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

போலியோ இல்லாத நாடாக மாறியது இந்தியா: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவை போலியோ எனப்படும் முடக்குவாத நோய் இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் போலியோ நோயின் பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட்ட பின், இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிடுகிறது. 2011ம் ஆண்டு மேற்குவங்கத்தில் ருக்சார் என்ற 2 வயது சிறுமிக்கு ஏற்பட்ட போலியோ பாதிப்பே கடைசியானது ஆகும். ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு வந்த இந்தியாவில், இந்த வியத்தகு சாதனை எட்டப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதி பேர் இந்தியர்கள் என்பது நினைவுக் கூறத்தக்கது. கடந்த ஆண்டுகளில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடி செலவளித்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 2-ந்தேதி பேரணி: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க-நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய 7 அமைப்புகளின் சார்பில் உயர்மட்டக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பேரணி நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,

மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்

வருமான வரி செலுத்துவோருக்கு நிதி துறை புதிய சலுகை

வருமான வரி கணக்கை, இணையதளம் மூலம், "இ-பைலிங்' செய்பவர்கள், தபால் மூலம், ஐ.டி.ஆர்.வி., படிவத்தை இனிமேல் அனுப்பத் தேவையில்லை. இதற்கான, அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. மாத சம்பளதாரர்கள், தங்களின் வருமான வரிக் கணக்கை, ஆண்டுக்கு ஒருமுறை, வருமான வரித்துறையிடம், நேரிலும், இணையதளம் மூலமும், தாக்கல் செய்து வருகின்றனர்.

வாசிப்பு திறனை மேம்படுத்துங்கள் : ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு

மாணவர்களிடம் "வாசிப்பு திறன்' குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அடிப்படை, கட்டட வசதிகள், மாணவர்களுக்கு தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்ட நிலையில், வட்டார மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பணியை, ஆசிரியர் பயிற்றுனர்களின், சீனியர் பொறுப்பில் இருப்பவர்கள், கூடுதலாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தற்போது, பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை அறியும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் என்று அமைச்சர் கே.சி. வீரமணி பேசினார். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்ந்த வேலூர் மண்டல கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளி பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 18 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த..

மாணவிக்கு கூடுதல் மதிப்பெண் போட்டு மோசடி: அண்ணா பல்கலைக்கழக அதிகாரி இடைநீக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு கூடுதல் மதிப்பெண் போட்டு மோசடி செய்ததாக தேர்வு கட்டுப்பாட்டு துணை அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சில வருடங்களுக்கு முன் செமஸ்டர் தேர்வில் உள்ள விடைத் தாள்களை மாற்றி மோசடி செய்யப்பட்டதாக புகார் செய்யப்பட்டு பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு புகார் அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்துள்ளது.

18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது.

முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

த.அ.உ. சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசின் அலுவலகங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

தொடக்கக்கல்வி - ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான முன்பணம் வழங்க தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி ஆணை வெளியீடு

DEE - 2013-14 FA ADDL ALLOTMENT ORDER FOR TAO / PAO CLICK HERE...

11.01.2014 அன்றைய டிட்டோஜாக் கூட்ட தீர்மானங்கள்



டிட்டோ ஜாக்- கூட்டமைப்பில் இருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டமிட்டே வெளியேறியது என்பதற்கான காரனம் இதுதானோ? டிட்டோஜாக் தலைவர்களிடையே அதிர்ச்சி?


டிட்டோ ஜாக்- கூட்டமைப்பில் இருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டமிட்டே வெளியேறியது என்பதற்கான காரனம் இதுதானோ? டிட்டோஜாக் தலைவர்களிடையே அதிர்ச்சி?

அப்படியா அல்லது இப்படியா??????????????????

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்

சார்பாக தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல்

அதாவது பிப்ரவரி 1-ம் தேதி முதல்

தமிழக அரசை வலியுறுத்தி

ரத யாத்திரை நடத்தப்பட உள்ளதாக தகவல்

டிஆர்பி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆளறிசான்றிதழ் மற்றும் இணைப்புப் பட்டியல்

சான்றிதழ் சரிபார்ப்புக்கானடிஆர்பி இணையத்தில்  வெளியிடப்பட்டுள்ள ஆளறிசான்றிதழ் மற்றும் இணைப்புப் பட்டியல்
பதிவிறக்கம் செய்ய ஏதுவாக  வெளியிடப்படுகிறது

click here to download

அரசு பள்ளிகளை தத்தெடுப்பதில் சிக்கல்?


பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ‘தத்தெடுப்பு திட்டத்தை’ அரசு அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில், முழுமையான அளவிற்கு உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் உடனுக்குடன் கிடைத்திடவும் தமிழக அரசு இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை தேவையான வசதிகளை செய்து கொடுக்க அனுமதி அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தால், அரசு பள்ளிகளுக்கு கூடுதலான வசதிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. செல்வந்தர்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும், அரசு பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், பள்ளியை தத்தெடுக்க நினைப்பவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. எந்தெந்த அரசு பள்ளிகளுக்கு, என்னென்ன தேவை என்ற விவரம் அவர்களுக்கு தெரியாத நிலை இருக்கிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களைத் தொடர்புகொண்டு கேட்டால் விவரம் கிடைக்கும் என்றாலும், நடைமுறை ரீதியாக தாமதம் உள்ளிட்ட பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்படலாம்.

அரசு பள்ளிகளின் தேவை குறித்த விவரங்களை, கல்வி மாவட்ட வாரியாக, வருவாய் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியிட்டால் நன்கொடையாளர்களுக்கு உதவியாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறை குறித்த முழுமையான புள்ளி விவரங்களுடன், ‘பள்ளிக்கல்வி.காம்’ என்ற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் தேய்ந்து வரும் மாணவர் சேர்க்கை

இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி  உள்ளனர். கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்.
ஆனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் குறைந்து வருவது தான் அதிர்ச்சியூட்டும் விஷயம்.

அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி

காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.
இதுவரை 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது, சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி, அந்தச் சட்டத்தினை 1994 ஆம் ஆண்டு அரசமைப்பு (76 ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், என்னையுமே சாரும்.

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. முதுநிலை பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின் இரண்டாவது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்களிடம் 2 நாளாக தொடர் விசாரணை

மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் நிவேதா (16).
அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிவேதா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.நிவேதாவின் தாய் புவனேஸ்வரி, புதுவண்ணாரப்பேட்டை போலீசில் அளித்த புகாரில், பள்ளி ஆசிரியர்கள் திட்டியதால் தான் எனது மகள் இறந்தாள். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அரசு பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து மாணவன், மாணவி படுகாயம்

மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை தளத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மணலி அருகே உள்ள சடையன்குப்பம் பகுதியில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது.


1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி

அரசு பள்ளி மாணவர்களையும் 'சென்டம்' பெற வைக்க தீவிரம்: பழைய மாணவர்களின் விடைத்தாள்களை வழங்கி பயிற்சி

தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும், 100 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, கடந்த பொதுத்தேர்வில், 'சென்டம்' மதிப்பெண் பெற்றவர்களின் விடைத்தாள் வழங்கி, பயிற்சி அளிக்குமாறு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 10 வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு, வரும், மார்ச் மாதம் துவங்க உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10 வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கான அரைஆண்டு தேர்வு முடிந்து, செய்முறைத் தேர்வு, பருவத் தேர்வு, அலகுத் தேர்வு நடந்து வருகிறது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், 10 வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே, மாநில அளவில் நடத்தப்படும் பொதுத்தேர்வில், பெரும்பாலும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே, முதல் மூன்றிடத்தை பெற்று விடுகின்றனர். ரேங்க் பட்டியலில் இடம்பெறும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. அதனால், அரசு பள்ளி மாணவர்களின்

TET 2013 - Certificate Verification Venue Center List

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Certificate Verification Venue Center List 

TET- 2013 BIODATA FORM AND IDENTIFICATION CERTIFICATE PAPER -2

CLICK HERE TO DOWNLOAD BIODATA FORM AND IDENTIFICATION CERTIFICATE

TET 2013-CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE PAPER 1

CLICK HERE FOR PAPER I CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE

சுயநிதி கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு எஸ்.சி. எஸ்டி மாணவர்களின் உதவி தொகை குறைப்புக்கு தடை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளின் நிர்வாகங்கள் சங்க தலைவர் கே.பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: கோவை அண்ணா பல்கலை அங்கீகாரம் பெற்றுள்ள (இணைப்பு) எங்கள் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம். சுயநிதி கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயத்தின் அடிப்படையில் கட்டணங்களை வசூலிக்கிறோம். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர் பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி

புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று, அதிரடியாக வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் பெற்று, தோல்வி அடைந்த தேர்வர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறு மதிப்பீடு காரணமாக, தோல்வி அடைந்த தேர்வர், 2,500 பேர் வரை, தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், 15 ஆயிரம் ஆசிரியருக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த, ஆளும் அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அரசு முடுக்கி விட்டுள்ளதால், பல மாதங்களாக தேங்கியிருந்த தேர்வு முடிவுகள், இரு நாட்களாக, வரிசையாக வெளியிடப்பட்டன.

web stats

web stats