rp

Blogging Tips 2017

டிட்டோ ஜாக் கோரிக்கை 2 ஏன் 7 ஆனது? ஓர் அலசல்
டிட்டொஜேக் -ன் அனைத்துசங்கங்களும் ஏற்கனவே இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய வேண்டி, தனிப்பட்ட இயக்கங்களாக வட்டாரம்,மாவட்டம்,மாநில அளவில் பலவித ஜனநாயக போராட்டம் நடத்தியன.நாளையும் தனிப்பட்ட முறையில் ஓர் இயக்கம் உண்ணாவிரதம் நடத்துகிறது.

அனைத்து சங்க மாநில பொறுப்பாளர்கள் தனிப்பட்ட போராட்ட நிகழ்வுகளுக்கு பிறகு தனது மாநில அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அடிமட்ட தொண்டர்களின் நாடித்துடிப்பை பார்த்தன என்றால் மிகையாகாது!

.அடிமட்டத்தில் வட்டார அளவிலான பொறுப்பாளர்கள் அனைவரும் தனிப்பட்ட இயக்க போராட்டத்தால் வெற்றி இவ்வரசிடமிருந்து கிட்டாது.என்றும் ஒன்றுபட்ட இயக்கப்போராட்டம் தேவை என்பதையே பதிவிட்டார்கள்

2012 - டிசம்பர் மாதம் நடைபெற்ற எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு.

click here & get your result - National Means Cum Merit Scholarship Examination (NMMS) 


National Means Cum Merit Scholarship Examination (NMMS) Selected Students List  

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ். ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. 

இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

மராட்டிய மாநிலத்தில் இனிமேல் ஆரம்ப பள்ளிகளில்,ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்.

இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரேஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி
ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில்தான் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மாணவ–மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க நடமாடும் கவுன்சிலிங் மையங்கள் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா தொடங்கி வைத்தார்

மாணவமாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க நடமாடும் கவுன்சிலிங் மையத்தை ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா தொடங்கி வைத்தார். ஆலோசனை
மையம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூட மாணவமாணவிகளின் மன அழுத்தம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்களை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் (கவுன்சிலிங் சென்டர்) தொடங்கப்பட்டு உள்ளன

சுயமாக தொழில் தொடங்குங்கள் பட்டதாரிகளே

தமிழகக் கல்விக்கூடங்களிலிருந்து ஆண்டுதோறும் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் படித்து வெளியேறுகின்றனர். இன்றைக்கு இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையில், பெரும்பான்மையானவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையை பெற முடிவதில்லை, அதே போன்று பலருக்கும் வேலையும் கிடைப்பதில்லை, என்பதே உண்மை.

அப்படிப்பட்ட நிலையில் சுயமாக தொழில் தொடங்க சரியான ஆலோசனையும், வழிகாட்டுதலும் இன்றி பலரும் தவிக்கின்றனர். அவர்கள் சுருக்கமாக தெரிந்துகொள்ளும் வகையில் சில கருத்துக்களை காணலாம்

நல்ல நோக்கத்துடன், ஏற்பாடு செய்தோம்; எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது - பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன்

             கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை தீத்திபாளையம், அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களை நேற்று முன்தினம், அங்குள்ள கோவிலுக்கு சுற்றுலா அழைத்து சென்று திரும்பிய போது ஆட்டோ கவிழ்ந்து 7ம் வகுப்பு மாணவி ரஞ்சிதா உயிரிழந்தார். விபத்து குறித்து மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், ஏழு ஆசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம் (2012-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு)

தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த கல்வியாண்டில், தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பள்ளிகளில், 50 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 50 தொடக்க பள்ளிகளுக்குரிய, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

EMIS பற்றி சில தகவல்கள் -


EMIS பற்றி சில தகவல்கள் - பகிர்வு திருமதி.யசோதா தேவி அவர்கள், த.ஆ., ஊ.ஒ.தொ.பள்ளி, இனாம்குளத்தூர், திருச்சி மாவட்டம்.

மராட்டிய மாநிலத்தில்8ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வி - மகாராஷ்டிராவில் இறுதி அறிவிப்பு

மராட்டிய மாநிலத்தில் பள்ளிக் கல்வி அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதி அறிவிப்பை அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 8ம் வகுப்பு வரை, ஆரம்ப கல்வி என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இன்று முதல் tntf.in என சுருக்கமாக நமது வலைதளம்

அன்பான வர்களே!
வணக்கம்,
தங்களின் மேலான பேராதரவோடு இதுகாரும்
www.taakkootani.blogspot.com என்ற நமது இயக்க வலைதளம்
இனி
tntf.in என எளிய வடிவில்

தொடர்ந்து பேராதரவை தந்திட வேண்டுகிறோம்
அன்புடன்
தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி

2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு

ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி - RMSA கீழ் 2009-10 / 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பியது போக எஞ்சிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பக பட்டியல் பெற்று விதிகளின் படி நிரப்பிக்கொள்ள உத்தரவு

DSE - 544 RMSA LAB ASST POSTS WILL BE FILLED THROUGH EMPLOYMENT LIST AS PER EXISTING APPOINTMENT RULES REG ORDER CLICK HERE...

மாணவர் விவரங்களைத் திரட்ட அவதிப்படும் ஆசிரியர்கள்!

மாணவர்களின் விவரங்களைத் திரட்டுவதற்கு தலைமையாசிரியர்கள் பெரிதும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, பள்ளி மாறிச் சென்ற மாணவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களது விவரங்களை புகைப்படத்துடன் இணையதளத்தில் பதிவு செய்ய பொருள் செலவும், கால விரயமும் ஏற்படுவதுடன் ஆரம்பக் கல்வியின் தரத்தையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

பாரத ரத்தினா விருது பற்றி ஒருசிறு குறிப்பு

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார். ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும். இந்த விருது ஏற்படுத்தப்பட்டபோது, அமரர்களுக்கு வழங்கப்படாது என்ற விதி பின்பற்றப்பட்டது. அதனால்தான் 1948-ல் மறைந்த மகாத்மா காந்திக்கு விருது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

8–வது வகுப்பு மாணவர்கள்: உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. 
 
      இந்த திட்டம் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

மாநில போக்குவரத்து எழுத்து குறியிடுகள் அறிவோம்


அருணாசலப் பிரதேசம்- AR
அஸ்ஸாம் AS
ஆந்திரப் பிரதேசம் AP
பீகார் BR
கோவா GA
குஜராத் GJ
ஹரியானா HR
இமாசலப் பிரதேசம் HP
கர்நாடகம் KA

பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும்

சுற்றுலா அழைத்துச்சென்றபோது மாணவி பலி: பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்

சுற்றுலா அழைத்துச்சென்றபோது மினிடோர் வேன் கவிழ்ந்து மாணவி பலியான சம்பவத்தில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவிலுக்கு சுற்றுலா
கோவை அருகே உள்ள தீத்திப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 227 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளி உதவி தலைமை ஆசிரியரான ரகோத்தமன், தலைமை ஆசிரியர் பொறுப்பையும் கவனித்து வருகிறார்

2013-2014ஆம் கல்வியாண்டு -ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி-நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு~23.11.2013

பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு வரும் டிச. 1ல் நடைபெற உள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டது. உரிய முறையில் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி ஆணை யம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் கூடுதல், குறைவான வயது, அரசு பணியாளர்களாக 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மொத்தம் 1,0 55 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பணியில் சேர்ந்த தும் பிறதுறை மற்றும் உயர் பதவிகளுக்காக தொடர்ந்து தேர்வு எழுதும் நிலை தற்போது வழக்கத்தில் உள்ளது. இதனால் வேலை கிடைக்காதவர்களின் வாய்ப்பையும் இவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை இருந்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியில் சேர்ந்தாலும் 5 ஆண்டுகளுக்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதிக்கொள்ளும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் காலியிட விபரங்கள் சேகரிப்பு

அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.2013 நவ.,1ல், தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர் காலிப் பணியிடங்கள், 2013 நவ.,1 முதல் 2014 மே 31 வரை பணிநிறைவு காரணமாக ஏற்படும் காலி பணியிட விபரங்கள்

சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு! நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்

மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள்: சரிபார்க்க அழைப்பு

"வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ஆன்-லைன் மூலம் உயிர்பதிவேட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சரி பார்த்துக்கொள்ளலாம்" என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற பதிவுகள் ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாராயநாடு உங்களை இனிதே வரவேற்கிறது - சி. இராஜாராம்

”ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற மக்கள் இப்போது மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். என்ன செய்வது? வெள்ளைக்காரர்களுக்குப் பதிலாக கொள்ளைக்காரர்கள் அல்லவா ஆட்சிக்கு வந்துவிட்டிருக்கிறார்கள்” கண்முன்னே நம்முடைய அடுத்த தலைமுறை புதைகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. சந்தோஷமோ துக்கமோ இன்றைய இளைஞன் மதுக்கடைகளை நோக்கியே ஓடுகிறான். பண்பாட்டின் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருக்கிறது. ஆள்வோர்களும் ஆன்றோர்களும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் துயரம்

கற்றல் குறைபாடு தீர்க்க முடியாத பிரச்னையா?


வகுப்பறையால் புறக்கணிக்கப்பட்ட பல குழந்தைகள் பின்னாளில் சாதனை சிகரங்களை எட்டி மற்றவர்களை வியக்க வைத்துள்ளனர். உலகளவில் கற்றல் குறைபாட்டினால் வகுப்பறையை விட்டு வெளியேறிய பலர் தனித்திறன் சாதனையாளர்களாக பயணத்தை தொடர்வதையும் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நம் அரசு பள்ளிக் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல கல்வித்துறை களம் இறங்கியுள்ளது.

ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்துப்பட்ட உரிய நாளுக்கு முன்னர் பணியினை துறப்பு செய்த ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் விவரம் அனுப்ப உத்தரவு

DEE - AIDED SCHOOL STAFFS RESIGNED B4 IMPLEMENTATION OF PENSION DETAILS CALLED REG PROC & GO CLICK HERE...

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய

போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் செய்ய ஒரு வசதி இருக்கிறது. 
முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு போல்டர...களை உருவாக்கிக் கொள்ளவும். 
EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும்.

தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை நீக்கம் செய்ய ஐகோர்ட் அதிரடி தடை - தினகரன் செய்தி

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் 7ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், தகுதி தேர்வில் வெற்றிப்பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெறவும் மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

TET - சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?


TET : சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?

பதில் -
தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி அந்த சான்றிதழிலேயே அச்சிடப்பட்டு இருக்கும்.

PTA மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்,TRB மூலம்ஆசிரியர்கள் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது 7 மாதங்கள் வரை இதில் எது முன்னரோ அதுவரை பணியாற்றலாம்

click here-PTA மூலம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமித்தல் -அரசாணை

14 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர் போதுமா? தமிழக அரசுக்கு கேள்வி

எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும், 14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமா?' என, தமிழக அரசிடம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின், மாநில பொதுச்செயலர், தேவி செல்வம், வெளியிட்ட அறிக்கை:

2012 ல்டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்

கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது. அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது.

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம்

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்,'' என, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அடுத்தபடியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், அதிகளவில் இயங்கி வருகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன் வரை, 250 பள்ளிகள் வரை தான் இருந்தன. தற்போது, 300ஐ தாண்டி விட்டன. இரு ஆண்டுகளில், 100 பள்ளிகளுக்கு, தடையில்லா சான்றிதழ்களை, பள்ளி கல்வித் துறை வழங்கி உள்ளது.தமிழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் தான், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழக அரசின் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல், தனி ராஜ்ஜியமாக, இந்த பள்ளிகள் இயங்கி வருகின்றன. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை, கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. எனினும், அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், இந்த வரம்பிற்குள் வருவதில்லை.மாணவர் சேர்க்கையிலும், எவ்வித வரன்முறையும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி, எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்க்கின்றனர். சமீபத்தில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், தடையில்லா சான்றிதழ் வாங்கத் தேவையில்லை' என, சி.பி.எஸ்.இ., போர்டு அறிவித்தது, சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துவோரிடையே, மேலும், குஷியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுக்குள் கொண்டுவர, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா கூறியதாவது:'மாநில அரசின் விதிமுறைகள், சட்ட திட்டங்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்' என, சி.பி.எஸ்.இ., சட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க, திட்டமிட்டுள்ளது.இந்த கருத்தை, முதல்வரின் கவனத்திற்கு, கொண்டு செல்ல உள்ளோம். அப்போது, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்.இவ்வாறு, சபிதா தெரிவித்தார்.
அரசின் முடிவு குறித்து, செயின்ட் ஜான்ஸ் குழும பள்ளிகளின், முதுநிலை முதல்வர், கிஷோர்குமார் கூறுகையில், ''தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதைத்தான், தமிழக அரசும் கூறுகிறது. எனவே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில், எங்களுக்கு, எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை,'' என, தெரிவித்தார்.
கல்வியாளர், ராஜகோபாலன் கூறியதாவது: கர்நாடகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளும், மாநில அரசின் கட்டுப்பாட்டில், பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. பேராசிரியர் யஷ்பால் குழு, 'சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாட திட்டங்களை மட்டும், சி.பி.எஸ்.இ., போர்டு வழங்கினால் போதும்; இதரபணிகளை, அந்தந்த மாநில அரசுகளே கவனிக்கலாம்' என, தெரிவித்துள்ளது.

டிட்டோ ஜாக்கின் அடுத்தகூட்டம் 14/12/13 அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெறும்.

டிட்டோ ஜாக்கின் அடுத்தகூட்டம் 14/12/13 அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெறும்.
தலைமை திருமிகு மீனாட்சி சுந்தரம்,பொதுச்செயலர் தமிழ்நாடு ஆசிரியர் மன்றம்

டிட்டோ ஜாக் கூட்ட நடவடிக்கை விவரங்கள்

இங்கே கிளிக் செய்து கூட்ட நடவடிக்கை பதிவுகள் பார்வையிடவும்

டிட்டோஜாக் தற்போதய நிலவரம்

இன்றைய முதல் அமர்வில் ஒவ்வொரு இயக்கமும் தலா 4 மாவட்டங்களை பிரித்துக்கொள்வது எனவும் எஞ்சியுள்ள மாவட்டங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிபோன்ற இயக்கஙகள் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது..முதலில் மாவட்ட அமைப்பு ஏற்படுத்த முடிவு எட்டப்பட்டது. மதிய அமர்வு மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதில் இரண்டு கோரிக்கைகளோடு இன்னும் சில கோரிக்கைகள் சேர்க்க கலந்தாலோசிக்கப்பட்டுவருகிறது அவை. மற்ற பணி நிலை ஆசிரியர்களை ஈர்ப்பதாக அமையும். மாவட்ட கூட்டங்களில் மாநில நிர்வாகிகள் பங்கேற்க முடிவாற்றப்பட்டது. மாவட்ட அமைப்பு கூட்டங்களை டிசம்பர் 4ந் தேதிமாலை 5.30 மணியளவில் மாவட்டத்தலைநகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது

13/11.13 அன்று அமைச்சர் பெருமக்கள் மற்றும் அலுவலர்களை சந்தித்து டிட்டோஜாக் க்கோரிக்கை மனு அளித்த குழு

டிட்டோஜேக்- ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு

டிட்டோஜேக் கூட்ட முடிவின் படி போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடத்தவும்,தொடர்பணிக்காகவும் டிட்டோஜாக் மாவட்டதொடர்பாளர் நியமிக்கவும் ஏதுவாக சமபங்கீடாக 7 சங்கங்களும் இணைந்து தங்களுக்குண்டான மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து செயலாற்றுவதென முடிவாற்றப்பட்டது
ஒதிக்கீடு பெற்ற மாவட்டத்தின் சங்கத்தை சார்ந்த மாவட்டசெயலாளர் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தொடர்பாளராக( CO-ORDINATOR)
 செயல் படுவார்கள்
மாவட்டப்பங்கீடு விவரம்

சென்னை மாநகராட்சிக்கு வந்த மொட்டை கடிதத்தால் போலீசில் சிக்கிய போலி ஆசிரியர்கள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பணியாற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது .இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அதிரடி வேட்டையில் குப்பன், ராஜா, முருகன் ஆகிய 3 போலி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் குப்பனும், ராஜாவும், கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி

டிட்டோஜாக் மாவட்டபோராட்ட ஆயத்தக்கூட்டங்கள் நடத்தும் தேதியை முடிவாற்றியது.

தற்போதைய ஆலோசனை டிட்டோஜாக்
மாவட்ட ஆயத்தக்கூட்டங்கள் நடத்தும் தேதியை முடிவாற்ற கருத்துகள்
பகிர்வு
டிசம்பர் 4ஆம்தேதி மாலை 5.30 க்கு அந்தந்த மாவட்டத்தலைநகரில் நடத்த திட்டம்
ஒருசங்கத்திற்கு 4 மாவட்டங்கள் பிரித்து மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்க முடிவு

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர விவாதத்தில் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள்


டிட்டோஜாக் கூட்டத்தில் தலைவர்கள் கருத்திட்ட காட்சிகள்

திருமிகு.செ.முத்துசாமி

திருமிகு.ரெங்கராஜன்

டிட்டோஜாக் கூட்டம் தொடங்கியது-

டிட்டோஜாக்கூட்டம் தற்போதுதொடங்கியது தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர்  திருமிகு செ.முத்துசாமி துவக்கௌரை ஆற்றி வருகிறார்

7 சங்கங்களின் பொதுச்செயளர்கள்,(மன்றம் திரு மீனாட்சி சுந்தரம் தவிர) தலைவர்கள்,பொருளாளர்க கலந்து கொண்டுள்ளனர்

டிட்டோஜாக் 20/11/13 அன்றைய கூட்ட அழைப்பிதழ்


TET தேர்ச்சி இல்லை - 499 ஆசிரியர்கள் பணிநீக்கம் - இதுவரை பெற்று வந்த ஊதியத்தையும் திரும்ப செலுத்த உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி.:30 துணை ஆட்சியர், 33 டி.எஸ்.பி நேரடி நியமனத்துக்கு குரூப்-1 தேர்வு விரைவில்

0 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.

குரூப்-1 தேர்வு

வருவாய் கோட்டாட்சியர்
(துணை ஆட்சியர்), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிற இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வைப் போன்று தமிழக அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

இந்திய பள்ளிகளில் பணியாற்ற சீன ஆசிரியர்கள் தயார்

இந்திய பள்ளிகளில் பணியாற்றுவதற்காக சி.பி.எஸ்.சி . பள்ளி நிர்வாகம் 25 சீன ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளது. கடந்த 2011-12-ம் ஆண்டிலிருந்து சீனாவுடனான வர்த்தம் அதிகரித்துள்ளதையடு்த்து தலைநகர் புதுடில்லியில் சி.பி.எஸ்.சி மற்றும் தனியார் பள்ளி நிறுவனங்களில் சீன மொழிகளை கற்போரி்ன் எண்ணிக்கை அதி்கரித்து வருகிறது.
இதனையடு்த்து முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதத்தில் சுமார் 25 ஆசிரியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அரசு பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்கள், ஜவஹர் நவோதயா வித்யாலயாஸ் பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்கள், கேந்திர வித்யாலா பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்கள், மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 10 பள்ளிகள் என மொத்தம் 25 ஆசிரியர்கள் நியமி்க்கப்பட உள்ளனர் என சி.பி.எஸ்.சி சேர்மன் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்

குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்" என பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா தெரிவித்தார்.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டது. எனினும், பெரும்பாலான அரசு பணிகளுக்கான கல்வி தகுதியை, தமிழ் வழியில் படிக்க முடியாத நிலைமை தான் உள்ளது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களில், பலர், தாங்கள் தமிழ் வழியில் படித்ததாக கூறி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.
மேலும், தமிழ் வழி கல்வித்தகுதி குறித்து, பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் பலர், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் (டி.ஆர்.பி.,) வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ் வழியிலான கல்வித்தகுதி எனில், "10ம் வகுப்பில் துவங்கி, பணிக்கு உரிய கல்வித்தகுதி வரை, அனைத்திலும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்" என முதலில், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், "குறிப்பிட்ட பணிக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும்" என, பின்னர் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரத்தில், தற்போது வரை, குழப்பம் நிலவி வருகிறது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா கூறியதாவது: தமிழ் வழியில் படித்தவர்கள், 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலை பெறுவதற்கான வழி முறைகளில், தமிழக அரசு தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தேவையில்லாமல், இதில், பலரும் குழம்பி வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணி எனில், இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும். 10ம் வகுப்பையும், பிளஸ் 2 படிப்பையும், ஆங்கில வழியில் படித்திருந்தாலும், கவலையில்லை.

மூன்று மாதங்களுக்கு ரூ.2,500: பரிதவிப்பில் பட்டதாரிகள்

"கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு" என்ற மோகம் குறையவில்லை என்பதற்கு, தற்போது கல்வித்துறையில், ரூ.2,500 சம்பளத்திற்கு, 3 மாதங்களுக்கு நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் சாட்சியாக உள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், 9ம் வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில், வாசிக்க மற்றும் எழுத தெரியாத மாணவர்களுக்கு, மாலை நேரத்தில், சிறப்பு வகுப்புகள் எடுக்க, ரூ.2,500 சம்பளத்தில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் வரும் பிப்ரவரி வரை 3 மாதமே பணி செய்ய வேண்டும். தினமும் மாலை 5.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில், பகல் 12.30 மணி வரையிலும், பள்ளியில் இருக்க வேண்டும். இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரி ஒருவரை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நியமிக்கலாம்.

புதிய பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லை: மத்திய அரசு நிதி வழங்காததால் தொய்வு

னைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை இரு ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு கல்வித்தரத்தை மேம்படுத்த தமிழக அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககம் செயல்படுகிறது. இதில், ஒவ்வொரு, 5 கி.மீ., சுற்றளவில், ஒரு உயர்நிலைப் பள்ளி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 2009-10ல், 200 நடுநிலைப் பள்ளிகள், 2010-11ல், 344 நடுநிலைப் பள்ளிகள், 2011-12ல், 710 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இதில் பாடவாரியாக குறைந்தது, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள், ஐந்து வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, நூலகம் உள்ளிட்டவைக்காக ஒவ்வொரு பள்ளிக்கும், 58 லட்சம் ரூபாய் மத்திய அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிதி, 2009-10ல் நிலை உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின், நிலை உயர்த்தப்பட்ட 344 மற்றும் 710 பள்ளிகளுக்கு, கட்டட நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், நிதி வழங்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில், புதிதாக நிலை உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகள், புதிய கட்டடம் ஏதுமின்றி, ஏற்கனவே இயங்கி வந்த, நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்தி வருகின்றன. வகுப்பறை கட்டட பற்றாக்குறையால், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் போது, எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி, நிர்வாக ரீதியாகவும், கட்டட ரீதியாகவும் இரண்டாக பிரிக்கப்படும். அதில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் கட்டடம் உயர்நிலைப் பள்ளியில் இணைக்கப்படும். இவர்களுக்கான புதிய கட்டடம், திட்ட நிதியில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஏற்கனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2009-10ல், நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும், ஒதுக்கீடு செய்த, கட்டட நிதியை, மத்திய அரசு வழங்கியுள்ளது. அதுவும், பற்றாக்குறையாக இருந்ததால், கட்டி முடிக்க முடியாத நிலையில், தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, அப்பணிகளை முடித்தது. ஆனால், பற்றாக்குறை நிதி கூட, அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கவில்லை. இதனால், 2010-11ம் ஆண்டிலிருந்து, நிலை உயர்த்தப்பட்ட, 1,054 புதிய பள்ளிகளில், புதிய கட்டட பணிகள் துவக்கப்படவில்லை.

நாளை நடைபெற உள்ள டிட்டோஜாக் கூட்ட நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவேற்றப்படும்

நாளை நடைபெற உள்ள டிட்டோஜாக் கூட்ட நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவேற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வலைதள செய்திக்குழு முடிவாற்றியுள்ளது.
விவரங்கள் உடனுக்குடன்
www.taakkootani.blogspot.com
ல் பதிவிடப்படும்

தமிழ் இலக்கணப்புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

  CLICK HERE TO  FREE DOWNLOAD TAMIL ILAKKANAM BOOKS

சென்னை மாநகராட்சிக்கு வந்த மொட்டை கடிதத்தால் போலீசில் சிக்கிய போலி ஆசிரியர்கள்


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பணியாற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அதிரடி வேட்டையில் குப்பன், ராஜா, முருகன் ஆகிய 3 போலி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் குப்பனும், ராஜாவும், கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கே.கே. நகர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முருகன் பணியாற்றி வந்துள்ளார்.

10–ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் பிளஸ்–2 சான்றிதழையும், ஆசிரியர் பயிற்றி சான்றிதழையும், ரூ.30 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

IGNOU B.Ed Dec -2013 Term End Exam Hall Ticket வெளியீடு

இங்கே கிளிக் செய்து ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யவும்

நமது வலைதளம் விரைவில் எளிய வடிவில் tntf.in என மிகச்சுருக்கமாக

அன்பானவர்களே !
இதுகாரும்
www.taakkootani.blogspot.com என பலராலும் பெரிதும்  விரும்பப்பட்ட நமது வலைதளம் விரைவில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் ஆங்கில
 வடிவான
Tamil Nadu Teachers Federation என்பதன் முதலெழுத்துக்களைக்கொண்டு

இனி   tntf.in

  என மிக எளிய வடிவில்
 விரைவில் தங்கள் பார்வைக்கு 

தங்களின் மேலான ஆதரவை தொடர வேண்டுகிறோம்
அன்புடன்
வலைதளசெய்திக்குழு  ,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு வீட்டுவசதி வாரியத்தில் வேலை தயார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 108 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்கள்மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அரசுவிதிமுறையின்படி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு
அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதன்படி, உதவி பொறியாளர் (சிவில்) பதவியில் 20 சதவீத இடங்கள் அதாவது, 21 இடங்கள் தமிழ்வழியில் படித்த பி.இ. சிவில் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்படும். இந்தஇடஒதுக்கீடு ஒவ்வொரு பிரிவிலும் (ஒ.சி., பி.சி, எஸ்.சி., எஸ்.டி. போன்றவை) தனித்தனியே பின்பற்றப்படும். அரசின் இடஒதுக்கீட்டு

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேசுவரமுருகன் அரசு பள்ளிக்கூடங்களில் திடீர் ஆய்வு!


தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேசுவரமுருகன் நேற்று மதுரையில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் பாடங்கள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை மேற்பார்வை செய்தார். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆலோசனை கூறினார்.

453 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அப்போது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணி மூப்பு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் கடந்த ஜூன் மாதம் சென்னை மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.
இதற்காக முன்பே பதவி உயர்வுக்காக, பட்டதாரி ஆசிரியர்களில் பாட வாரியாக பணி மூப்பு பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் தமிழ் மற்றும் தெலுங்கு பாடங்களில் பட்டம் பெற்றிருந்த பணி மூப்பு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் யார் பெயர் முதலில் இடம் பெறுவது என்பதில் சர்ச்சை எழுந்தது. தமிழாசிரியர்கள் தங்கள் பெயர்தான் பட்டியலில் முதலில் இடம் பெற வேண்டும் என்றனர். அதற்கு தெலுங்கு மொழி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

20 ஆண்டு பணியாற்றிய ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் தர முடியாது

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருளப்பன் உள்பட 129 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:நாங்கள் பள்ளி கல்வித்துறையில் கடந்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை

மாற்றுத் திறனாளிகள் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை தமிழக அரசு சலுகை


மாற்றுத் திறனாளிகள்   சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை தமிழக அரசு சலுகை மேலும் ...

10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தொடக்க / நடுநிலைப்
பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள் - மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது

விடுமுறை நாட்கள் - 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணைகள் பதிவிறக்கம் செய்ய...

G.Os of Public Department - List of Public Holidays for the year 2014 Click Here...

2014 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு,

2014 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாடகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மொத்தம் அறிவிக்கப்பட்ட  21 நாட்களில்,4நாட்கள் ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.

பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் RTE 2009 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத 499 ஆசிரிய நியமனங்களை உடனடியாக இரத்து செய்ய உத்தரவு

DSE - 499 TEACHERS DISMISSED IN AIDED SCHOOLS FOR NOT QUALIFIED IN TET EXAM WITHIN TIME LIMIT REG PROC CLICK HERE...

வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பு (Income Tax Utility-FY-2013-14)


வருமானவரி கணக்கிடும் எக்ஸ்.எல். படிவம் பெற கிளிக் செய்க.
சிறப்பாக உள்ளது  பயன்படுத்த எளிமையாக உள்ளது
thanks to- kalvisms

வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பினைப் பயன்படுத்த முனைந்தமைக்கு நன்றி!
1. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி எக்செல் ஃபைல் கையாளுவது நலம்.

. அரசு அலுவலகங்களுக்கு வருவோர் நாகரீகமாக உடை அணிந்து வர வேண்டும்.இந்த விதி ஏற்கனவே அமலில் உள்ளது. இருப்பினும், இதனை கடுமையாக்கியுள்ளோம்-கோவை ஆர்டிஓ.,

கோவை ஆர்டிஓ., அலுவலகத்தில் மாடர்ன் உடைக்கு தடை: மீறுவோர்க்கு லைசென்ஸ் இல்லை 
கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு வருவோர், மாடர்ன் உடைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தினசரி ஏராளமானோர் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு வருவோரில் சிலர் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் முகம் சுழிக்கும் வகையிலான உடைகளை அணிந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது

TRB-உதவிப்பேராசிரியர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்பிற்கான அழைப்புக் கடிதம் வெளியீடு.

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here to Download Certificate Verification Call Letter click here....

நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு

DEE - NATIONAL INTEGRATION DAY - OBSERVANCE ON 19TH NOVEMBER REG PROC & PLEDGE CLICK HERE...

தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி

நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்கவும் வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். 

சி.பி.எஸ்.இ.,12ம் வகுப்பிற்கான தேர்வு தேதி அறிவிப்பு


சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மண்டல இயக்குனரகம்

சதுரங்கம் ஆடுவது எவ்வாறு?

சதுரங்கம் சுமார் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தி யாவில் முதலில் ஆடப்பட்டது. ஏழாம்நூற்றாண்டில் இது பாரசீகத்துக்கு (இன்றைய ஈரான்) பரவியது. இஸ் லாமியர்கள் பாரசீகத்தைப் பிடித்த பின்பு முஸ்லீம் நாடுகளில் இது விரிவடைந்தது. அங்கிருந்து பத்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவுக்கு சென்றது. பின்னர் இது பலவகை மாற்றங்களுக்கு ஆளானது. இன்று ஆடப்படும் சதுரங்கம் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆட்டவிதிகளுடன் வடிவமைக் கப்பட்டது
அட்டை விளையாட்டு
கறுப்பும் வெள்ளையுமாக மாறி மாறி அமைந்த எட்டுக்கு எட்டு கட் டங்கள் வரையப்பட்ட அட்டை அல்லது கட்டையில் ஒரு தரப்புக்கு 16காய்களுடன் ஆடப்படும் விளை யாட்டு. ஒரு தரப்பு வெள்ளை நிறக் காய்களுடனும், மறுதரப்பு கறுப்பு நிறக்காய்களுடனும் ஆடும். இதில் இருநிறத்திலும் ஒரு ராஜா, ஒரு ராணி, இரண்டு மந்திரிகள், இரண்டு குதி ரைகள், இரண்டு யானைகள் அல்லது கோட்டைகள் இருக்கும். அவற்றுடன் எட்டு சிப்பாய்களும் சேர்க்கப்படும். இரண்டு நிறங்களிலும் சேர்த்து மொத்தம் 32 காய்கள் இருக்கும். பலகையை ஆட வைக்கும் போது வலதுபுறத்தில் வெள்ளைக்கட்டம் வருமாறு வைக்க வேண்டும். மூலைக்கட்டங்கள் இரண்டிலும் யானைகள் வைக்கப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் கிளார்க் நியமனம் எப்போது?


கூட்டுறவு வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. இப்பணியிடங்களுக்கு கடந்த டிச., 9ல்  மாநில அளவில் எழுத்துத் தேர்வு நடந்தது. பத்து நாட்களில் தேர்ச்சி பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. டிச., கடைசியில்சென்னையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி பயிற்சி

தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடை பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை பாரதரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல்

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 16,600 பேருக்கு விரைவில் பணி நியமனம்

தமிழகத்தில், இதுவரை நடத்தப்பட்ட 3 ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்த அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் முறையாக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், 2ம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர். இரு தாள்களையும் சேர்த்து மொத்தம் 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 6.6 லட்சம் பேரில் 4.09 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற 27 ஆயிரத்து 92 பேரும், தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்க அழைக்கப்பட்டு சொந்த மாவட்டத்திலேயே ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று ஏக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரேஷன் கார்டில் மீண்டும் ‘உள்தாள்’ ஒட்ட திட்டம் : 2015ல்தான் மின்னணு கார்டு

தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடைசியாக, தமிழகத்தில் 2005ல் பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய கார்டு வழங்கப்பட்டது. 2010ல் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2010 முதல் 2013வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் பழைய ரேஷன் கார்டுகளிலேயே ‘உள்தாள்‘ ஒட்டப்பட்டது. ஒரே ரேஷன் கார்டை 9 ஆண்டுகள் உபயோகித்து விட்டதால், ரேஷன் கார்டு கிழிந்து விட்டது.2012 இறுதிக்குள் மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால்,

மழை காரணமாக மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு தள்ளிவைப்பு

யல் மற்றும் கன மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2013-14-ஆம் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என

தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  இன்று நடத்தப்படவிருந்த'தேசியத் திறனறித் தேர்வு'அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

web stats

web stats