rp

Blogging Tips 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வு-மத்திய நிதியமைச்சகம் ஆணை வெளியிட்டது.

Finmin Orders on DA - Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014
No.1/1/2014-F-II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 27th March. 2014
OFFICE MEMORANDUM
Subject: Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014.
The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.I-8/2013-E-II (B) dated 25th September, 2013 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 90% to 100% with effect from January, 2014.

2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No.1(3)/2008-E-11(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.
3. The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.
4. The payment of arrears of Dearness Allowance shall not he made before the date of disbursement of salary of March. 2014.
5. These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will he issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.
6. In so far as the employees working in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued with the concurrence of the Comptroller and Auditor General of India.
sd/-
(A.Bhattacharya)
Under Secretary to the Government of India
Source: www.finmin.nic.in
[http://finmin.nic.in/the_ministry/dept_expenditure/notification/da/da01012014.pdf]

பஸ்களில் பயணிகளுக்கு இடையூறாக செல்போனில் பாடல்கள் கேட்பதை தடுக்க ஆர்.டி.ஓ. நடவடிக்கை

இன்றுள்ள இன்டர்நெட் காலத்தில் 100க்கு 99.99 சதவீதம் பேர் செல்போன் களை பயன்படுத்துகின்றனர். ஆரம்ப காலத்தில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட செல்போன்கள் இன்று முகம்பார்த்து பேசுவதற்கு மட்டுமல்லாமல், பாடல்களை கேட்கவும், படம் பார்க்கவும், வீடியோ கேம் விளையாடவும் பயன்படுகின்றன. சாதாரண செல்போன்களில் கூட மெமரி கார்டுகளை போட்டு பாடல் கேட்கும், படம் பார்க்கும் வசதிகளும் உள்ளன. தற்போது செல்போன்களை உபயோகப்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை பேசுவதற்கு பயன்படுத்துகின்றனரோ இல்லையோ பாடல்களை கேட்க அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

வேலை செய்யும் இடங்களில் மட்டுமல்லாமல் பஸ், ரயில் போன்றவற்றில் பயணிக்கும் நேரத்திலும் பலர் செல்போன்களில் சத்தமாக பாடல்களை கேட்டபடி பயணிக்கின்ற னர். பஸ், ரயில்களில் பயணிக்கும் சிலர் செல்போன்களில் சத்தமாக பாட்டு கேட்டபடி பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்களால் தன்னோடு பயணிப்பவர்களுக்கு இடையூறாக இருக்குமே என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கண்டுகொள்வது இல்லை. இதுபோன்று சத்தமாக பாடல் கேட்பவர்களால் வயதானவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், அமைதியை விரும்புவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மேலும் பாடல்கள் மூலம் பெண்களை கேலி செய்வதும், போட்டி போட்டு பாடல்களை கேட்பதும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது.

துறை தேர்வுகள் கடைசி தேதி 15.04.2014 வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது

2014-ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. 

அறிவிக்கை நாள் : 01.03.2014 
விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.
தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை. 

வெயில் தாக்கம் அதிகரிப்பு துவக்கப்பள்ளிகளில் நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலைநேரத்தை, குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், கோடை காரணமாக, நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் காணாமல் போய் விட்டதால், தண்ணீர் பஞ்சமும் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 220 நாட்கள் வேலைநாட்களாக அரசாணை உள்ளதால்,

தமிழ் முதல் தாள் தேர்வில் சர்ச்சை கேள்வி தேர்வுத்துறையிடம், இந்து முன்னணி புகார்

நேற்று முன்தினம் நடந்த, ௧௦ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது குறித்து, இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில், ஐந்தாவது கேள்வியாக, 'பகைவனிடமும் அன்பு காட்டு என, கூறிய நுால் எது' என்று கேட்டு, அதற்கு, 'ஆப்ஷன்' விடைகளாக, 'பகவத் கீதை, நன்னுால், பைபிள்' ஆகியவை தரப்பட்டன.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி : தேர்தலுக்கு பின் துவங்கி 5 நாட்களில் முடிகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய பாணி

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்' என, தேர்வுத் துறை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. 60 ஆயிரம் ஆசிரியர்கள் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது. தமிழகத்தில், 12 ஆயிரம் பள்ளிகளில் இருந்து, பாட வாரியாக, ஐந்து ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் கடும் நடவடிக்கை: பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடும் எச்சரிக்கை

தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் பணி அவர்கள் ,ஓய்வு வருங்கால வைப்புநிதி இறுதி பணம் பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இறுதி பணம் பெறுவதற்கான விண்ணப்பம் சென்னை மாநில கணக்காயருக்கு தாமதமின்றி அனுப்புதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது .
 
இயக்குனர் சுற்றறிக்கையை படிக்கஇங்கே சொடுக்கவும்

பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

இங்கே கிளிக் செய்து இயக்குனர் உத்திரவினை பதிவிறக்கம் செய்யலாம்

அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிக்கு முகாம் அலுவலர்கள் நியமித்து உத்தரவு

DGE - APPOINTMENT OF CAMP OFFICERS FOR SSLC MARCH / APRIL 2014 - VALUATION CAMP LIST CLICK HERE... 

கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு

கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது எதிர்பாராமல் நிகழும் கலவரங்கள், வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா? மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி


தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா' என, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர்.


தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுப் பணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முக்கிய பங்காற்றுகின்றனர்.

ஓட்டுப்பதிவு நாளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

லோக்சபா தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு, ஓட்டுப்பதிவு நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடக்கிறது. ஏப்ரல், 7ல் துவங்கி, மே மாதம், 12 வரை, தேர்தல் நடக்கிறது. இதில்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம்

அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி உட்பட கட்டமைப்பு வசதிகளை நோட்டீஸ்களாக வினியோகித்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி கல்வித்துறை துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கடந்த 2012-2013 கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி முறையினை கொண்டுவந்தது.

புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் - சட்டப்பிரிவு 12(5)ன் படி அரசு, ஏற்கனவே மற்ற ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களையும் பு.ப.ஒ.திட்டத்தில் சேர்க்கலாம்

PFRDA - DEMERITS OF PFRDA ACT CLICK HERE...

தொடக்கக்கல்வி - கடவுச்சீட்டு பெற சென்னை, பாதுகாப்பு பிரிவு, காவல்துறை கண்காணிப்பாளரிடம் மறுப்பின்மை சான்று பெறுதல் சார்ந்த விண்ணப்பம் மாதிரி படிவம்

DEE - PASSPORT SPCID NOC REG APPL CLICK HERE...

இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம்

கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்…

நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.
டபரா-டம்ளரைக் கும்பகோணத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வாயில் காபியை வைத்ததும் சூட்டின் காரணமாக நாக்கு ருசிக்கும் திறனை இழக்கிறது. அதனால், காபியின் ருசியே தெரியாது சாப்பிட்டுவிட்டு கும்பகோணம் டிகிரி காபி சாப்பிட்டதாக நினைத்துக்கொள்கின்றோம். கும்பகோணத்துக்காரர்களைக் கேட்டால், டிகிரி காபி பாலின் தரத்தால் வருவது என்பார்கள்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி B.ED. சேர்க்கை அறிவிப்பு வெளியீடு


வெயிலின் தாக்கம் -தொடக்க நடுநிலைப்பள்ளி வேலை நேரத்தை குறைக்கக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை-கடித நகல்

தமிழகத்தில் வெயிலின் தாக்கமும்,குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது.காலை 8.00 மணி முதல் மதியம்12.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க க்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை_ தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கடித நகல்
click here to down load the letter
இக்கடிதம்
மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவு,
மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர்,
மதிப்புமிகு-தமிழகஅரசின் முதன்மைச்செயலர்  
மதிப்புமிகு தமிழகத்தேர்தல்ஆணையாளர் ,

மதிப்புமிகு-தமிழககல்வித்துறை செயலர் ,
மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குனர்,
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர்,
ஆகியோர்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் நமது பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு இக்கோரிக்கை குறித்தும்,மாணவர்கள் படும் வேதனைகுறித்தும் விளக்கமாக் எடுத்துக்கூறினார். 
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்ந்த சில வருடங்களுக்கு முன்பு கடும் வறட்சியின் போது  இது போன்ற நடை முறை  பின்பற்றப்பட்டதை முன்னுதாரணமாகக்கொண்டு இதனை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு (CROSS MAJOR) முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு

தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்

இன்று துவங்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
8:00 மணிக்கு 'அட்டெண்டன்ஸ்':
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. 7.31 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். குளறுபடிகள் இன்றி, தேர்வை நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. காலை, 9:15 மணிக்கே, தேர்வு துவங்குவதால், முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர், அவரவர் தேர்வு மையத்துக்கு, காலை, 7:30 மணிக்கு சென்று விட வேண்டும். 8:00 மணிக்கு, வருகை பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம்-அதிகம் .காலை 08.30மணி முதல் மதியம்1.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்கக்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்களை 200 நாட்களாக என்பதை குறைக்க நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி  இயக்குனர் அவர்களிடம் நமது பொதுச்செயலர்  செ.முத்து சாமி தொலைபேசியில் பேசினார்.

எனினும் தற்போதைய அரசு விதிகளின் படி வேலைநாட்கள் 220 என்பதை குறைக்க இயலாது என்றும், இது குறித்து அரசு முடிவு செய்தால் மட்டுமே தங்களால் விடுமுறை விட இயலும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

TNTF-ன் வாழ்த்துக்கள் - 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு-தேர்வு நாட்கள் 2 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை- தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் TNTF-N வாழ்த்துக்கள்..

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 26-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது காலை 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் மாணவ-மாணவிகள் மனஇறுக்கத்தைப் போக்கி விடைகளை திட்டமிட்டு நல்ல முறையில் எழுத வசதியாக அதை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடம் (9.15 மணி முதல் 9.25 மணி வரை) வழங்கப்படும்.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 26ம் தேதி தமிழ் முதல் தாள்
மார்ச் 27ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4ம் தேதி கணிதம்
ஏப்ரல் 7ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 9ம் தேதி சமூக அறிவியல்

44 நிகர்நிலை பல்கலைகள் அந்தஸ்து தப்புமா?

நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின் (யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.
கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட, மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள், சிறந்த பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது, யு.ஜி.சி.,யின் விதி. இந்த விதிகளை பின்பற்றி, செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு

CPS - மசோதா பாராளமன்றத்தில் நிறைவேற்றும் போது மத்திய நிதியமைச்சரின் பேச்சு - நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை நிறைவேற்ற நிர்பந்தம் செய்ய வில்லை -இது மத்திய அரசின் திட்டம் என தகவல் -

                                                                         135-PAGE
THE MINISTER OF FINANCE (SHRI P. CHIDAMBARAM): Mr. Chairman, I am grateful to the hon. Members, 15 of them, who have participated in this discussion on the Pension Fund Regulatory and Development Authority Bill.
Sir, this Bill was first introduced in 2005. It was once reported by the Standing Committee on Finance chaired, at that time, by Maj. Gen. (Retd.) Khanduri. The Standing Committee favourably reported the Bill. There were one or two dissent notes, mainly from the Left Parties. That Bill lapsed with the dissolution of the Lok Sabha.

கடவுச் சீட்டு - பணி நியமன அலுவலர் வழங்கும் மாதிரிப் படிவம் | NOC - Appointment Authority Issuing Model Format

click here to download - NOC - Appointment Authority Issuing Model Format

வெயில் தாக்கம்: 1/2மணி நேரம் முன்னதாக தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு  இன்று 26–ந் தேதி  தொடங்கி ஏப்ரல் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது.


பத்தாம் வகுப்பு தேர்வை 11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை செய்துள்ளது. வழக்கமாக 10–ம் வகுப்பு தேர்வு 9.45 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு முடியும். இந்த ஆண்டு அரை மணி நேரம் முன்கூட்டியே 10–ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது.


வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு தொடங்கும் நேரத்தை முன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாணவ–மாணவிகள் கோடை வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில் தேர்வு நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய பலன்கள் பெற்று தருவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் பணியாளர் மீது நடவடிக்கை -பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை


தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் பணி அவர்கள் ,ஓய்வு வருங்கால வைப்புநிதி இறுதி பணம் பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இறுதி பணம் பெறுவதற்கான விண்ணப்பம் சென்னை மாநில கணக்காயருக்கு தாமதமின்றி அனுப்புதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது .


சுற்றறிக்கையை படிக்க

குரூப் - 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

 

TO VIEW RESULTS CLICK HERE...

 குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்  வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு


அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, துணை மாநில கணக்காயர் (நிதி) வர்ஷினி அருண் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம் : முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளி அங்கீகாரம் ரத்து

நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தேர்வில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கும். கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. விடைத்தாளின் முகப்பு படிவத்தில் மாணவர்களின் போட்டோ, பதிவெண் விவரங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை சரிபார்க்க 5 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. 26ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 26ம் தேதி தொடங்க உள்ளது. குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதையடுத்து 26ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். அவர்களுக்காக 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது

7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது


http://finmin.nic.in/7cpc/index.asp

Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)

http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf

PFRDA has issued necessary instructions to CRA for implementation of the withdrawal- CPS திட்டத்தில் செட்டில்மென்ட் கொள்கையினை வெளியிட்டது PFRDA

CLICK HERE-Exit rules under National Pension System for Government Employee Subscribers

அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை ஆதார் அட்டை அவசியமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என கோரும் அனைத்து உத்தரவுகளையும் வாபஸ் பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஆதார் அட்டைக்கு எதிரன வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி தேர்வு முடிவுகள் டிசம்பர் 2013 வெளியிடப்பட்டுள்ளன

CLICK HERE-ANNAMALAI UNIVERSITY EXAM DEC 2013 RESULTS 

TNTET - WEIGHTAGE - IN DETAIL

பவர்கட்... படிப்பும் 'கட்!'; 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 26ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில், பரவலாக துவங்கியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த பொதுத்தேர்வின் போது, அறிவிக்கப்படாத 15 முதல் 18 மணி நேர மின்வெட்டால் மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இக்கொந்தளிப்பு அனைத்து துறைகளிலும் எதிரொலித்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு, மின்வெட்டும் ஒரு காரணமாக இருந்தது. கடந்த ஆண்டிலும், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களை

இந்தாண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும்: வானியலாளர்கள் கருத்து

பகல் நேரம் அதிகரிப்பாலும், மழை பெய்யாததாலும், இந்தாண்டு கோடை வெப்பம், கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டில் வடகிழக்கு, தென் மேற்கு பருவ மழைகள் பொய்த்தன; இந்தாண்டும், இதே நிகழ்வு தான் பதிவாகியுள்ளது. இதன் விளைவு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.


வானியலாளர்கள் கணிப்பு : இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு, கோடை வெப்பம் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக, வானியலாளர்கள் கணித்துள்ளனர். இரவு மற்றும் பகல் நேரம் குறித்த ஆய்வில், இது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. சூரியனின் வட்டப் பாதையில், தமிழகத்தின் மீது சூரியன் வரும் போது,

10ம் வகுப்பு தேர்வு: 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்

பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வுகள் வரும் 25ம் தேதி முடிகின்றன. அதை தொடர்ந்து 26ம் தேதியே 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு 9.15 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, 12 மணிக்கு முடிகிறது. பொது தேர்வுக்காக 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் தேர்வு துறை புது திட்டம்

"பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும்,'' என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. விடைத்தாள்களை திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும், 66 மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, மார்ச் 21ல் துவங்கியது. மற்ற பாடங்களுக்கு, ஏப்., 3ல் துவங்குகிறது. கடந்த ஆண்டு, விடைத்தாள்களை சரியாக திருத்தாததால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தொழிற்கல்வி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த குளறுபடிகளை தடுக்க, விடைத்தாள் திருத்தும் பணியில், சில மாற்றங்களை செய்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் வேலை கிடைக்குமா? விரக்தியின் விளிம்பில் 73000 பேர்,வழக்கில் தத்தளிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்-தினமலர் செய்தி

கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றுள்ள 73 ஆயிரம் பேர், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நடந்தது என்ன? கடந்த, 2013, ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த ஜனவரி 20 - 27ம் தேதி வரை, நடந்து முடிந்தது. இறுதிப் பட்டியல் வெளியிட, தேர்வு வாரியம் தயாராக இருந்த நிலையில், இடஒதுக்கீடு பிரிவினருக்கான, 'மதிப்பெண் தளர்வு' அறிவிப்பை, கடந்த பிப்ரவரி 3ல், முதல்வர் வெளியிட்டார். இதற்குப் பிறகு தான், பெருவாரியான குழப்பங்கள், அரங்கேறத் துவங்கின.

என்ன பிரச்னை? பொதுவாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, 60 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும். அதாவது, மொத்த மதிப்பெண்களான, 150க்கு, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால், முதல்வரின் அறிவிப்புப்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம்

ஆண்-விட்டுக்கொடுத்தலின் அடையாளம்-ஓர் சிறப்பு பதிவு

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,

உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்ற தலைமையாசிரியை, உதவி ஆசிரியை 'சஸ்பெண்ட்': மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை

மதுரை மாவட்டம், மேலுார் அருகே கீரனுார் ஊராட்சிஒன்றிய துவக்கப் பள்ளித்
தலைமையாசிரியை மற்றும் உதவிஆசிரியை 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டனர். இப்பள்ளி மாணவர்களைஇவர்கள், சில நாட்களுக்கு முன்
உரிய அனுமதியின்றி திருச்சிக்குகல்விச்சுற்றுலாஅழைத்துச் சென்றனர்.
அப்போது நடந்த விபத்து ஒன்றில், மாணவர்ஒருவர் இறந்தார்.

தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெய்யில்! மனம் மாறுமா கல்வித்துறை அலுவலர்களின் மனது??????????????


தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெய்யில்!

மனம் மாறுமா கல்வித்துறை அலுவலர்களின் மனது??????????????

கண்டுகொள்ளாத தொடக்கக்கல்வித்துறை,

பாராமுகத்தில் தமிழக அரசு

வெயிலில் வாடும் 6-14 வயது பிள்ளைகள்

தமிழக அரசு கட்டாய கல்வி சட்டத்தின் எல்லா ஷரத்துகளையும் அமுல் படுத்தும் போது

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள் 200 என்பதை அமுல் படுத்தாதது ஏன்? கல்வியாளர்கள் கேள்வி?

எல்லா அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளிகளிலும் மின்சார வசதி இல்லாததது மட்டுமல்லாமல்

பேஸ்புக் மற்றும் டிவிட்டருக்கு தமிழக அரசு அலுவலகங்களில் தடை


அனைவருக்கும் உயர்கல்வித்திட்டம்-பரிந்துரை அனுப்பாத தமிழகம்


தேர்தலால் தள்ளிப்போகும் அண்ணா பலகலைக்கழக தேர்வுகள்


கற்றல் திறனில் தமிழகம் 18 வது இடம்


சமச்சீர் கல்விக்கு சத்தமில்லாமல் மூடுவிழா

11 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப்பு தேர்வு: நாளைக்குள் ஹால் டிக்கெட் விநியோகம்

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.
இந்த ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

+2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தேர்வுத்துறை தடை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்டமாக முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 24ம் தேதி உதவி தேர்வாளர்கள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். முதல் கட்டமாக மொழிப் பாட விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் பிற பாட விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளது.

அண்ணாமலை பல்கலையில் பொது கலந்தாய்வு முறை அறிவிப்பு

'அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு பல்கலையாக மாற்றப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கைச் சட்டம் விதிமுறைகள்படி, மாணவர்கள் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் நடைபெறும்' என, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பள்ளிக்கு வராமல், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட ஏழு ஆசிரியர்கள் மீது, மாவட்ட கல்வி அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மேலந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்பது ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமில்லை, காலை9.15மணிக்கு தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பு

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.

இந்த ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 35 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 66 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வுக்காக தேர்வு மையங்களை தயார் செய்தல், விடைத்தாள் புத்தகத்தில் கூடுதல் பக்கங்களைத் தைத்தல், தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம், வினாத்தாள்களை கட்டுக்காப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. வினாத்தாள்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுக்காப்பு மையங்களுக்கு காப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

web stats

web stats