மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பா.ஜ., தலைவரும், முன்னாள் நடிகையுமான ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிருதியின் கல்வி தகுதி குறித்து காங்கிரஸ் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு ஸ்மிருதி இரானி, நான் வேலை செய்யும் விதத்தை வைத்து எனது தகுதியை மதிப்பிடுங்கள் என கூறினார். இதனையடுத்து கல்வி தகுதி குறித்த விவகாரம் சற்று ஓய்ந்தது.
ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை வெளியிட்ட டில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரை பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்தது. இதை அறிந்த ஸ்மிருதி அந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார்.
ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை வெளியிட்ட டில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரை பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்தது. இதை அறிந்த ஸ்மிருதி அந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார்.