rp

Blogging Tips 2017

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது; மாணவர்கள், பெற்றோர்கள் நிற்க பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிற்க பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக உள்ளது.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 538 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் வருடந்தோறும் கலந்தாய்வை நடத்தி வருகிறது.


இந்த கலந்தாய்வு ஒரு மாதத்திற்கும் மேலாக திருவிழா போல நடக்கும். மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து மகிழ்ச்சியாக என்ஜினீயரிங் இடங் களை தேர்ந்து எடுத்துச்செல்வார்கள்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்ததா? என்று பார்க்கும் வசதி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரேண்டம் எண்

மேலும் ரேண்டம் எண் 15-ந் தேதியும், ரேங்க் பட்டியல் 19-ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது.

ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்களின் விண்ணப்பம் தான் தகுதியானவை ஆகும்.

விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு 28-ந் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 29-ந் தேதியும் நடைபெற உள்ளது.

பொது கலந்தாய்வு 1-ந் தேதி தொடங்குகிறது

மாணவ-மாணவிகளுக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் கலந்து கொள்வார்கள். இந்த கலந்தாய்வு ஜூலை 31-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் செய்து வருகிறார்.

கலந்தாய்வு ஏற்பாடு குறித்து பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-

பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்கள் கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்து எடுக்கலாம். எந்த கல்லூரியில் இடம் உள்ளது என்ற விவரம் ஆயிரம் பேர் உட்காரக்கூடிய இடத்தில் திரையில் தெரிவிக்கப்படுகிறது. அந்த இடம் பெரிய கூடாரம் போல அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் குடிநீர் வசதி, மின்விசிறிகள் ஆகியவை செய்யப்பட்டு இருக்கும்.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: கடந்த ஆண்டு மாணவர்களின் பங்கேற்பு இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது

சென்னையில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை அனுமதித்து சேர்க்கைக் கடிதம் அளித்தால், அது வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டதாகும் என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
        சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில்பழைய மாணவர்களுக்கு தடை கோரி வழக்கு

மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர்களை மட்டுமே அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 'பழைய மாணவர்களை பரிசீலிப்பது, வழக்கின் இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

          கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவன் கபிலன் என்பவர் தாக்கல் செய்த மனு:இந்த ஆண்டு பிளஸ் 2 எழுதிய மாணவர்களுடன்

தீர்ப்பை சீக்கிரம் சொல்லுங்க! ஏங்கும் 6.3 லட்சம் மாணவர்கள்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில், நடைபெற்ற முறைகேடு வழக்கை, விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், நேற்று மீண்டும் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதனால், தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த, 6.3 லட்சம் மாணவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

முறைகேடு:

          மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, கடந்த மே 3ம் தேதி, நாடு முழுவதும் நடைபெற்ற, அனைத்திந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. அரியானாவில், ஒரு தேர்வு மையத்தில், ரகசிய ஒட்டுக்கேட்பு கருவிகள் மூலம், வெளியிடங்களில் இருந்து பதில்களை கேட்டு தேர்வு எழுதிய, 44 மாணவர்கள் சிக்கினர்.

பிளஸ் 2 மறு மதிப்பீடு, மறு கூட்டல்: 3,478 பேரின் மதிப்பெண்களில் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 3,478 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

           மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 16-ஆம் தேதி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? :கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில், இலவசப் பொருட்கள் வழங்குதல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும்' என, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:

* ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலரும், ஜூன் முதல் ஏப்ரல் வரை, குறைந்தது, ஒரு மாதத்தில், 18 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.

ஜூன் 15ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு  விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் பட்டியல் ஜூன் 15ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

            இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,82,260. இதில் மறுகூட்டல்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

         இப் பல்கலைக்கழக 2015-16ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம், பி.எஸ்சி விவசாயம், தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை கையேடு, விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப ஜூன் 22 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் ஜெ.வசந்தகுமார் தெரிவித்தார்

பள்ளி நேரம் மாற்றம் என்ற செய்தி தவறானது இச்செய்தி 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி.

பள்ளி நேரம் மாற்றம் என்ற செய்தி தவறானது இச்செய்தி 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி. வதந்திகளை நம்பவேண்டாம்.ஆதாரமாக 2013ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியைபகிர்ந்துள்ளோம்

தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம்

 தனியார்களும், தொண்டு நிறுவனங்களும் நிர்வகிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சரிக்கட்டவும், அரசின் உதவி திட்டங்களை தொடர்ந்து பெறவும், 2 லட்சம் போலி மாணவர்களை கணக்கு காட்டியிருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

           பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இ.எம்.ஐ.எஸ்., எனப்படும் கல்வி மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் மூலம் இந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது.தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு

TNPSC : ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள்

அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.* அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

நமது பொதுசெயலரின்56 ஆண்டு கால இயக்கசேவையை பாராட்டி 2015-ஜூலை-5 அன்று நடைபெற உள்ள பாராட்டுவிழா அழைப்பிதழ்



இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்குமகப்பேறு விடுப்பு உண்டு'

'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

       ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு: எனது முதல் பிரசவத்திற்காக, கடந்த, 2011ல், 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். எனக்கு,

எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம் :நடைபெறும் இடம் ஓமந்தூரார் கல்லூரிக்கு மாற்றம்

 இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்று வந்த, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கலந்தாய்வு, இந்த ஆண்டு முதல், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான, 'ரேண்டம்' எண் வெளியீடு, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது.'ரேண்டம்' எண் விவரத்தை, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் ஆகியோர் வெளியிட்டனர். பின், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:விண்ணப்பித்த அனைவருக்கும், 'ரேண்டம்' எண் தரப்பட்டுள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், 'ரேண்டம்' எண் விவரம் அறியலாம்.

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாணவி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

 கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் 24 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவிக்கு விடைத்தாள் நகல் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், அவர் 123 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

 கிருஷ்ணகிரி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. தொழிலாளி. இவரது மகள் கவிதாமணி. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 கணக்குப்பதிவியல் பாடப் பிரிவில் பயின்று வந்த அவர், பொதுத் தேர்வை எழுதினார்.

அக இ - 20.06.2015 மற்றும் 27.06.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சியில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மேற்கொள்ளவும், 12 பள்ளிகள் பார்வையிடவும் இயக்குனர் உத்தரவு

DEE - AEEO / AAEEO VISITS & INSPECTION REG PROC CLICK HERE...

அரசு பள்ளிகள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு

ரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் செயல்பாட்டில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
            இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், அரசு பள்ளிகளை ஆய்வு செய்து,

கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 மாணவியின் விடைத்தாள் மாறியது: தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் கவிதாமணி. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 பொது தேர்வை எழுதினார்.
         இந்த தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில் மாணவி கவிதாமணி தோல்வி அடைந்தார். பொருளியல் பாடத்தில் 24 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்திருந்தார்

பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

GO.41 - GOVT EMPLOYEE COMPULSORY RETIREMENT REG CLARIFICATION CLICK HERE...

Award-kalpana chawla&Gandhi peace award 2015-nomination called Regarding....


‘பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகளை சரி செய்ய வேண்டும்’ தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளியில் திறந்த வெளி கிணறுகள் ஆபத்தான வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
       இதுகுறித்து தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பள்ளிகள் ஆய்வு
ஊராட்சி ஒன்றியம், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டு ஆய்வு, பள்ளிகள் பார்வை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் பெற பொது இ சேவை மையத்தை அணுகலாம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

         இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.

பள்ளி கழிவறைகளை பராமரிக்க ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளல் - அரசு ஆணை

Lab Assistant Exam நாங்கள் நடத்தவில்லை - TNPSC அறிக்கை

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

        பள்ளிக்கல்வித் துறையில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உள்ளீட்டு எல்லைக்கு உட்பட்டதல்ல. அப்பதவிகான தேர்வினையோ

தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ உண்மை தன்மை அறிவது எப்படி?

நுகர்வோர் வாங்கும் தலைக்கவசத்தின் உண்மைத் தன்மையை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என, இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரையை உரிய அனுமதியின்றி பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது புகார் அளிப்பவர்களுக்கு ரூ.5,000 வரை சன்மானம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு

பழைய வாக்காளர்களுக்கும் வண்ணமயமான 'ஸ்மார்ட் கார்டு' வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஜன.,5 முதல் வாக்காளர்களுக்கு'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவற்றில் உள்ள 'பார் கோடில்' வாக்காளரின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டை குஜராத் அகமதாபாத்தில் தயாரிக்கப்படுகிறது.

மழலையர் முன்பருவ கல்வி.வரைவு வழிகாட்டுதல்.வெளியீடு

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான (பிளே ஸ்கூல்) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றரை வயது நிறைவு செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation என்ற இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

AEEO-PANAL-2015-உதவித்தொடக்க்கக்கல்வி அலுவலர்கள் முன்னுரிமைப்பட்டியல்-2015

CLICK HERE
CLICK HERE TO DOWNLOAD Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ
CLICK HERE TO DOWNLOAD Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ
CLICK HERE TO DOWNLOAD Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ

மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் சார்பான அரசு விளக்கக்கடிதம்

மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் சார்பான அரசு விளக்கக்கடிதம்

பணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான அரசுக்கடிதம் நாள் : 21. 05. 2015

பணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான அரசுக்கடிதம் நாள் : 21. 05. 2015

சுயநிதி பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு கே.ஜி., - முதல் வகுப்பு வரை மட்டுமே

:தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் பெறும் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் சேர்க்க கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்துகிறது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் பொழுது 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில்...பிறந்த தேதியின் அடிப்படையில் உரிய வகுப்பில் சேர்த்திட வேண்டுதல் சார்பு செயல்முறை

SSA - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு (MODULE)

CLICK HERE - PRIMARY 20/06/2015 & UPPER PRIMARY 27/06/2015 CRC MODULE

அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது

மதுரை:'அரசு வேலைவாய்ப்பில், வயது வரம்பு சலுகை காட்ட முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேனி, பெரியகுளம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கனி என்பவர் தாக்கல் செய்த மனு:
கனரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்று, கடந்த, 2002ல், தேனி மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 13 ஆண்டுகளாக, எந்த நேர்காணலுக்கும் அழைக்கவில்லை.

B.Ed படிப்பு ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா?- அரசு தீவிர பரிசீலனை

இந்த ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், படிப்பு காலம் ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா? என்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.2015-16-ம் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் பிஎட் படிப்பு காலம் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) அறிவித்துள்ளது

பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் நிறைவு

 மதுரை, கோவையில் நடந்த பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் பணிகள் நிறைவுற்றது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட்டன. இதன்பின் மே 8 முதல் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள்

இலவச புத்தக வாகன வாடகை உயர்வு:தலைமை ஆசிரியர்கள் குழப்பம்

 இலவச பாடப்புத்தகங்களை ஏற்றி வரும் செலவு, கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், அவற்றை எப்படி ஈடுகட்டுவது என,” தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், விலையில்லா புத்தகம், நோட்டு, புத்தகபை, காலணி, கணித உபகரண பெட்டி, கிரையான் உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை 'சம்பந்தப்பட்ட ஸ்டோர் பாயிண்ட்' எனப்படும், அலுவலகங்களிலிருந்து, பள்ளிகளுக்கு எடுத்து வருகின்றனர்.

AEEO-PANAL-2015-உதவித்தொடக்க்கக்கல்வி அலுவலர்கள் முன்னுரிமைப்பட்டியல்-2015

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியல்-2015
CLICK HERE TO DOWNLOAD

5% பி.எஃப் தொகை பங்குச் சந்தையில் முதலீடு

வருங்கால வைப்புநிதி 5%பங்குத்தொகை முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்

      பி.எஃப் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் முதல்கட்டமாக ஒரு சதவீத தொகை இம்மாதத்தில் முதலீடு செய்யப்படும்.பின் நிதியாண்டின் இறுதிக்குள் படிப்படியாக ஐந்து சதவீதம் செய்யப்படும்

அகஇ - பகுதி நேர ஆசிரியர்களின் பணி சார்ந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் அறிவுரைகள்

SSA - PART TIME TEACHERS - DUTIES & RESPONSIBILITIES CLICK HERE...

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

மாணவர்களுக்கு சோப்பு தர உத்தரவு

சத்துணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கை கழுவ வசதியாக, கட்டாயம் சோப்பு வாங்கி வைக்கவும், சாப்பிடுவதற்கு துருப்பிடிக்காத, ஸ்டீல் தட்டுகள் வாங்கி வைக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டப் படி தனியார் பள்ளிகள் வழங்க வேண்டிய 25 சதவீத ஒதுக்கீடு குறித்த பட்டியலை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டப் படி தனியார் பள்ளிகள் வழங்க வேண்டிய 25 சதவீத ஒதுக்கீடு குறித்த பட்டியலை மெட்ரிக்குலேஷன்  பள்ளிகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள் அதில் தெளிவாக  குறிப்பிடவில்லை. மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கொண்டு  வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு  ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையின் போது, சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடம்  ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட வேண்டும்

மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை : பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

ஆசிரியர்கள் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்ததாக ஆடை அணிய வேண்டும். மாணவிகளை தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. தொந்தரவு செய்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கை: மாணவ, மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும், வழிக்காட்டியாகவும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மீதான தடையை நீக்கியது சென்னை ஐஐடி

சென்னை: மாணவர்கள் நடத்தி வந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதித்த தடையை  ஐஐடி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு, புதிய கண்டுபிடிப்புகள்  மற்றும் அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் தங்களுக்கிடையே அரசியல் மற்றும் பல்வேறு  இயக்கங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். இதில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பு  மாணவர்களிடையே நடப்பு அரசியல் சூழல் குறித்த பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில்

பரவலாகும் ஆங்கிலம்; பரிதவிக்கும் அன்னைத்தமிழ்!

கோவை:ஆங்கில மொழித்துறை துவங்க அனுமதி கோரும் கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சொற்ப அளவிலான கல்லூரிகளே தமிழ்த்துறை துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

பாரதியார் பல்கலையின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 108 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில்,

Top news கதி! கட்டாந்தரையே மாணவர்களுக்கு கதி! 'பெஞ்ச், டெஸ்க்' இல்லாத பள்ளி ஆய்வகங்கள்

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகங்களில், 'பெஞ்ச்', 'டெஸ்க்' மற்றும் செய்முறை உபகரணங்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில், மாணவர்கள் கட்டாந்தரையிலேயே அமரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

3,500 பள்ளிகள்:
தமிழகத்தில், 6,300 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு.ஜூன் 3வது வாரத்தில் தேர்வு முடிவு

தமிழகத்தில் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததால், ஜூன் 3வது வாரத்தில் பிஎட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 670 பிஎட் கல்லூரிகள் செயல்படுகின்றன. பிஎட் தேர்வுகள் கடந்த மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது.

ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 615 சங்கங்கள் நீக்கம்:பதிவுத்துறை நடவடிக்கை

மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத, 615 சங்கங்களை அதற்கான பதிவு பட்டியலில் இருந்து நீக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

          தமிழகத்தில், கல்வி, கலை, சமூக மேம்பாடு போன்ற காரணங்களுக்காக துவங்கப்படும் சங்கங் கள் மற்றும் மன்றங்கள் அனைத்தும், 1975ம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும்.இதன்படி, தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 1.52 லட்சம் சங்கங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சங்கங்கள், உரிய கால இடைவெளியில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளன.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை?

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வி - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், இலவச மாணவர் சேர்க்கையை கட்டாயம் நடத்த வேண்டுமென்று, தமிழக திட்டக்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

       மத்திய கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்களில், ஆறு முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களை, இலவசமாக சேர்க்க வேண்டும்.அவர்களுக்கான மானியத்தை மத்திய அரசே பள்ளிகளுக்கு வழங்கும்.தமிழகத்தில் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி.,யில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஆசிரியர் 'கவுன்சிலிங்' தாமதம்

ராமநாதபுரம்:ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலால் பணியிட மாறுதல் 'கவுன்சிலிங்' தாமதம் ஆவதாக ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

     தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் பணிபுரிகின்றனர்.

கணினி இயக்க தெரியாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி தர கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விவரங்களை, கணினியில் பதிவேற்ற ஆசிரியர்கள் திணறுவதால், அவர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சி அளிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

       அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் சரியான எண்ணிக்கை தெரியா மல், கல்வித் திட்டங்களை வடிவமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு மாணவர், எந்த வகுப்புகளில் படிக்கின்றனர் என்ற தெளிவான விவரங்கள் கல்வித்துறையில் இல்லை.

web stats

web stats