rp

Blogging Tips 2017

ராங்க் முறை ரத்து -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் செ.முத்துசாமி வரவேற்று அறிக்கை

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் செ.முத்துசாமி  அவர்கள் இனி பொதுத்தேர்வுகளில் ராங்க் முறை ரத்து செய்ததை வரவேற்று அறிக்கை-நேற்று இவ்வறிவிப்பு வந்தவுடன்   கல்வித்துறை செயலர் மதிப்புமிகு உதயசந்திரன் ,இயக்குனர்கள்திரு.கார்மேகம்,திரு .இளங்கோவன்,திரு.கண்ணப்பன், ஆகியோர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகிழ்ச்சி மற்றும் வறவேற்பையும் பாராட்டையும் தெரிவித்தார்

+2 தேர்வு முடிவு வெளியிடப்படும் இணையதளங்கள்:-

http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in
http://tnresults.nic.in

பிளஸ் 2: விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

.அதன் விவரம்: பகுதி-1 மொழி ரூ.550, பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275. மறுகூட்டல் கட்டணம்: பகுதி- 1 மொழி, பகுதி- 2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் (இருதாள்களும் சேர்த்து)- ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205.

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும்.மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ் வழங்கப்படும். +1மற்றும் +2 பாட திட்டம் குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. மதிப்பெண் கொண்டு சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது. எனகூறினார்.

ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. மறுப்பு

 ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறைக்கும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் முதலிடங்களை ரத்து செய்து அரசாணை வெளியீடு


TNPSC- TIME TABLE FOR MAY-2017 DEPARTMENTAL EXAMINATION

click here to download the timetable

PGTRB-பாடவாரியாக காலிப்பணியிட விவரம்

+2 தேர்வு முடிவுகள் மே12 தேதி காலை 10:00 மணி அறிவிப்பு

*+2 தேர்வு முடிவுகள்*

*மே12 தேதி காலை 10:00 மணியளவில் வெளியாக உள்ளது..

தேர்வு முடிவுகளை மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.
*www.tnresults.in      *www.tnresults.nic.in

*www.tnresults.gov.in

தொடக்கக் கல்வி - நலத்திட்டங்கள் - மாவட்ட அளவில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் 11.05.2017 அன்று நடைபெறுதல் சார்ந்து செயல்முறைகள்

TRB- PG POST- INSTRUCTIONS FOR ONLINE REGISTRATION பதிவு செய்வதற்கான அறிவுரைகள் -தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்...

In order to register online for the Direct Recruitment of PG Assistants, the candidate has to visit the website http://trb.tn.nic.in.Read fully the instructions given therein and click Apply Now.The registration page opens up wherein, the candidate has to fill-in the online application form.

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழி
விண்ணப்பத்தினை பதிவுசெய்ய தேர்வர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.அங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக படித்து, அதன்பின் Apply Now -ஐ கிளிக் செய்யவும்.பதிவு செய்வதற்கான விண்ணப்ப பக்கம் திரையில் வரும், அதில் தேர்வர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.

G.O.No.125 Dt: 8th May 2017 | PENSION – Contributory Pension Scheme - Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April 2017 to 30th June 2017- Orders - Issued.

click here to download 

PG TRB: முதுநிலை பட்டதாரி பணிக்கு எழுத்துத்தேர்வு அறிவிப்பு.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஜூலை, 2ல், போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவியில், 1,663 இடங்களுக்கு, ஜூலை 2ல், தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, டி.ஆர்.பி.,யின், www.trb.tn.nic.in இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.இன்று முதல் வரும், 30 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், புத்தகம் போன்ற கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CPS : ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல் ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வட்டித் தொகை கணக்கிடப்பட்டு, ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

பிளஸ் 2 தேர்வு முடிவு 9 லட்சம் மாணவர்களுக்கும் செல்போனில் அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவர்களுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் செல்போனில் அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

கே.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்ட மாற்றம் குறித்து முதல்வருடன் இன்று நான் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினோம். அந்த கூட்டத்தில், பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் விரிவாக எடுத்துரைத்தார்.

SSA - தொடக்க மற்றும் உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான (15.05.2017 - 19.05.2017) பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்


உதயச்சந்திரன் IAS - பள்ளிக்கல்வி செயலாளர்-பழைய நேர்காணல்

கல்வித்துறைச் செயலராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் திரு. உதயச்சந்திரனின் பழைய நேர்காணல் ஒன்று இன்னமும் நினைவில் இருக்கிறது.
உதயச்சந்திரன் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். நடுத்தரக் குடும்பம். அவருடைய பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ‘பஞ்சாப் மாநில முதல்வர் யார்?’ என்கிற ரீதியில் கேள்விகளைக் கேட்டுத்தான் பாடங்களை ஆரம்பிப்பாராம். அந்த ஆசிரியருக்கு பதில் சொல்வதற்காகவே நாளிதழ்களை வரிவிடாமல் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டதாக நினைவில் வைத்துச் சொல்லியிருந்தார்.

கல்வித்துறையைக் காப்பாற்றுங்கள் அய்யா! இன்றைக்கு அதுதான் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

உதயச்சந்திரன் கல்வித்துறைச் செயலாளராக பதவியேற்கிறார் என்று தெரிந்தந்திலிருந்தே மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கு தமிழகத்தில் அதிகளவிலான சீரமைப்புத் தேவைப்படுகிற துறை அதுதான் அல்லவா?. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகார மட்டத்தினால் வழங்கப்பட்ட சலுகைகளின் காரணமாக அரசுப்பள்ளிகள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, மிரட்டக் கூடாது என்று ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மாணவர்களைச் சித்ரவதை செய்வார்கள். மாணவர்களை ப்ராய்லர் கோழிகளாக மாற்றி இரவு பகல் பாராமல் கண்விழிக்கச் செய்து மதிப்பெண்களைக் கக்க வைத்துவிடுவார்கள். நம் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்வதன் முக்கியமான காரணமே இதுதான். ‘அங்க மார்க் வாங்க வெச்சுடுறாங்க’ என்பார்கள்.

ஆசிரியர்கள் போராட்டம் : கோடை பயிற்சி ரத்து

பயிற்சிக்கு வர மறுத்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், அவர்களுக்கான கோடை பயிற்சியை, அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்கள் மூலம், கற்பித்தலின் புதிய முறைகள் குறித்து, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி தரப்படுகிறது. இதன்படி, கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு, இலவச உணவு, இருப்பிடத்துடன், குறிப்பிட்ட மாவட்டங்களில், நேற்று முதல், ஐந்து நாட்கள் கோடை கால பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

'நீட்' தேர்வுபடியே சேர்க்கை : மருத்துவ கவுன்சில் திட்டவட்டம்

நாடு முழுவதும், 'நீட்' தேர்வு, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. 2015ல், 'நீட்' தேர்வில் தில்லுமுல்லு நடந்ததால், இரண்டு முறை தேர்வு நடத்தப்பட்டது. எனவே, முறைகேடுகளை தடுக்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் நடந்த தேர்வில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும், 103 நகரங்களில், 1,921 மையங்களில், தமிழ் உட்பட, 10 மொழிகளில், 'நீட்' தேர்வு நடந்தது. இதற்கு, 11.38 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 95 சதவீதம் பேர் பங்கேற்றனர். 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 14 இணை இயக்குனர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோர்களின் பணியிட மாறுதல்

DSE - 14 JOINT DIRECTORS TRANSFER LIST CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 25 முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோர்களின் பணியிட மாறுதல்

DSE - 25 CEOs TRANSFER LIST CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 4 மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு அளித்து உத்தரவு

DSE - 4 DEOs TO CEOs PROMOTION LIST CLICK HERE...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -17வது மாநில மாநாடு- மலர் வெளியீட்டுக்கு- மாநில ,மாவட்ட, வட்டார,,இயக்க முன்னாள் ,பொறுப்பாளர்கள் இந்நாள் உறுப்பினர்கள் -கட்டுரை கவிதை,மடல்.இயக்க வரலாற்று நிகழ்வுகள் அனுப்ப கோரப்படுகிறது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 17வது மாநில மாநாடு மற்றும் இளைஞரணி மாநாடு வரும் ஜூன்.11 அன்று திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. அமாநாட்டில் மாநாடு மலர் வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகள்நடைபெற்று வருகின்றன.
மாநாட்டு மலரில் இடம் பெறும் வண்ணம் மாநில ,மாவட்ட, வட்டார, முன்னாள் இந்நாள்,பொறுப்பாளர்கள் ,மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் தமது-கட்டுரை கவிதை,மடல்.இயக்க வரலாற்று நிகழ்வுகள்   ஆகியவற்றை தமது புகைப்படம் ,முகவரி கைபேசி  எண் ஆகியவற்றுடன் உடன் நாமக்கல் முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. வட்டார மாவட்ட பொறுப்பாளர்கள் ஆசிரிய உறுப்பினர்களை அணுகி உடன் அனுப்பி வைக்க தக்க நடவடிக்கை எடுக்க கோரப்படுகிறது/மேலும் மாநாட்டு மலருக்கான் விளப்பரங்கள் பெற்று அனுப்பிவைக்க கோரப்படுகிறது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- மாநில பொதுக்குழு வரும் ஜூன் 4-ல் நடைபெறும்-மாநில அமைப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கடந்த 3/5/2017 அன்று திருச்சி -ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது வரும் ஜூன் 11 ஆம் நடைபெற உள்ள  17வது மாநில  மாநாடு மற்றும் இளைஞர் அணி மாநாடு சிறப்பாக நடைபெற வழி வகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும்  மாநில பொறுப்பாளர்களின்  கல்வி அமைச்சர் சந்திப்பு,கல்வித்துறை இயக்குனர்கள் சந்திப்பு,மே -2 ல் நடைபெற்ற அமைச்சர் உடனான ஆலோசனைக்கூட்ட சந்திப்பு ஆகியனவற்றின் நிகழ்வுகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் மாநில அரசு அமைத்த 7வது ஊதியக்குழு முன்பு நமது இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைமனு,அதிலுள்ள கோரிக்கைகள் விவரங்கள் ஆகியனவும் அக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்தநிகழ்வுகளையும் விளக்கப்பட்டன.
மேலும் 17வது மாநில மாநாட்டின் உத்தேச வரவு செலவுதிட்டம்  தயாரிக்கப்பட்டு பொதுக்குழுவின் முன்னர் படைக்கப்பட்டது.மாநாடு நன்கொடை வசூலுக்காக வட்டார, மாவட்ட பொறுப்பாளர்களால் முடிக்க கால அவகாசம் அளிக்கும் படி கோரப்பட்டது.மேலும் ஜூன்மாதம்-4ஆம் தேதி மேலும் ஒரு பொதுக்குழு கூய்ட்டம் நடத்தப்பட்டு அதில் மாவட்ட,வட்டார வசூல் செய்த தொகைகளை அளிப்பது எனவும் ,மாநாட்டு மலருக்கான விளப்பரம் அளிப்பது எனவும் முடிவாற்றப்பட்டது

TPF Account Slip இல்லாதவர்கள் மற்றும் Missing Cridit -உடனே சரிசெய்தல் வேண்டும்-கண்காணிப்பாளர் மற்றும் பிரிவு எழுத்தர் சார்பான கூட்டுபொருள் விவரம்-


பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மருத்துவ கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு மற்றும் கூடுதல் மதிப்பெண் தர முடியாது என்றுசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் ஏற்கனவே இரு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில், 3வது நீதிபதியாக விசாரித்த சத்தியநாராயணன், இரண்டு நீதிபதிகளில் ஒருவரான எஸ்எம்.சுப்ரமணியத்தின் தீர்ப்பைஉறுதி செய்துள்ளார்.

ஏ.இ.இ.ஓ., பதவியா: ஆசிரியர்கள் ஓட்டம்!

உதவி தொடக்க கல்வி அதிகாரி என்ற, ஏ.இ.இ.ஓ., பதவிக்கு வர, பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் மறுப்பதால், பதவி உயர்வு கவுன்சிலிங் முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஏ.இ.இ.ஓ., பதவிக்கு, 800 இடங்கள் உள்ளன; ஆண்டுதோறும், 50 இடங்கள் காலியாகின்றன. அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களில், துறை ரீதியாக, ஐந்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏ.இ.இ.ஓ., பதவி வழங்கப்படும்.
இந்த பதவிக்கு வருவோர், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள, 30 தொடக்க, நர்சரி பள்ளிகளை நிர்வகிக்க வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., மற்றும் முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ.க்களுக்கு, நிர்வாக ரீதியாக பதில் அளிக்க வேண்டும்.இதற்கு, கூடுதல் சம்பளமோ, பதவி உயர்வோ கிடையாது.

அனைத்து பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளில், தினமும் காலையில், பிரார்த்தனை கூட்டம் நடப்பது வழக்கம். 2011 முதல், இந்த முறை கைவிடப்பட்டது. பின், வாரம் ஒரு நாள் மட்டும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.பல பள்ளிகளில், வகுப்பு பிரார்த்தனையே நடத்தப்படவில்லை.

DEE - TRANSFER NEWS - IMPORTANT INSTRUCTIONS TO BE FOLLOWED DURING COUNSELLING 2017 - DIR. INSTRUCTIONS

விலையில்லாப்பொருட்கள் பள்ளிகளுக்கே சென்று வழங்குதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு


web stats

web stats