rp

Blogging Tips 2017

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் எளிய கணக்குகளை சிக்கல் இல்லாமல் தீர்வு காண்பது தொடர்பாக மாணவர்களின் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் குறைபாடும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதே அடிப்படையில், இந்த ஆண்டும் முதற்கட்ட ஆய்வு பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு பிரிவாகவும், இரண்டாம் கட்ட ஆய்வுப் பணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வு அறிக்கை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி இயக்குநர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 815 தொடக்கப் பள்ளிகள், 7307 நடுநிலைப் பள்ளிகளில் இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 

DEE பணி நிரவலின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(நாள்:22.07.2016)

DEE:மனமொத்த மாறுதல் ஆணை வழங்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(நாள்:22.07.2016)


அனைத்து பள்ளிகளிலும் 2016-2017ஆம் ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்கள் EMIS ENTRY பற்றி மாநில திட்ட இயக்குனரும் தொடக்கக்கல்வி இயக்குனரும் செயல்முறைகள்


நாமக்கல்: ஆகஸ்ட் 2ம் தேதி விடுமுறை அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல்லில், வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு பதில், ஆகஸ்ட் 6-ம் தேதி வழக்கம் போல் பணிகள் செயல்படும் எனவும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

கணினி பயிற்றுநர்கள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர்களுக்கும் (வேளாண்மை ) பணிமாறுதல் கலந்தாய்வு முதுகலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் அன்றே நடைபெறும்

மடிக்கணினி, பாடப்புத்தகம், சீருடை, காலணி, சைக்கிள் என மாணவர்கள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு; தமிழக பட்ஜெட்டில் தகவல்.

மடிக்கணினிகள், விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், 4 சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பஸ் கட்டண சலுகைகள், சைக்கிள்கள் என மாணவர்கள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:–

நபார்டு வங்கி கடன்

பிளஸ் 2 தேர்வும் 'சென்டம்' ரகசியமும்.... குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வு பணிகளை கண்காணிக்கவும் சென்னையில் இருந்து இயக்குநர்கள், இணை இயக்குநர்களை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பது வழக்கம்.

மாணவர்களே இல்லாத பள்ளி: தூங்கும் தலைமை ஆசிரியர்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே, அரசு தொடக்க பள்ளியில், மாணவர்கள் இல்லாததால், தலைமை ஆசிரியர் வகுப்பறையை தாழிட்டு துாங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், ஆலயக்கவுண்டன்பட்டியில், 1989 முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இரண்டு மாணவர்கள் மட்டுமே படிப்பதாக வருகை பதிவேட்டில் உள்ளது. ஆனால், அவர்களும் இப்பள்ளிக்கு வருவது இல்லை. ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் பணியில் உள்ளனர். உதவி ஆசிரியர் அயற்பணியில் (டெபுடேஷன்) வேறு பள்ளிக்கு சென்று விட்டார். தலைமை ஆசிரியர் ராமராஜ் மட்டுமே உள்ளார்.

ஆடிக்கிருத்திகையினை முன்னிட்டு வரும் 28.07.2016. அன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

SYLLABUS FOR THE TWO-YEAR B.Ed DEGREE PROGRAMME FOR THE ACADEMIC YEAR 2016-17

CLICK HERE

தேர்வு நிலையை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கடந்தாண்டு பதவி உயர்வு பட்டியலுக்கு பெயர் அனுப்பாத ஆசிரியர்கள் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை - கல்வித்துறை

CLICK HERE-DSE ; PG Promotion Panel Regarding New instructions by JD

தமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில்  2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதன் சிறப்பம்சங்கள்,

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854 கோடி.

அடுத்த நிதியாண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு முனைப் பட்டா வழங்கப்படும்.


காவல்துறையை நவீனமயமாக்க ரூ.68.62 கோடி ஒதுக்கீடு.

சிறைக் காவல்துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கப்படுகிறது.

சாலைப் பாதுகாப்புக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இலங்கை அகதிகள் நலனுக்கு ரூ.105 கோடி.

நிதித்துறை - 2016-17ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கை

Revised Budget Speech for the year 2016_17 - Tamil Version

Revised Budget Speech for the year 2016_17 - English Version

ஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள்

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரது உயிரை காக்க முதலமைச்சர் மருத்துவ உதவிக்கு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர்.

தமிழக பட்ஜெட் 2016-17:7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு

தமிழக பட்ஜெட் 2016-17:7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழுசட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்  21/07/2016 தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அப்போது அவர் கூறுகையில்

,அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

EMIS :2016-2017 கல்வியாண்டிற்கு தங்களது பள்ளியின் மாணவர்களை பதிவு செய்யலாம். EMIS இணையதளம் 2016-2017

கல்வியாண்டிற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது. தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளும் கீழ் காணும்  வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1.2016-17 கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்.

EMIS website opened. So kindly update your first standard students details as well as new students on your UDISE .

EMIS website opened. So kindly update your first standard students details as well as new students on your  UDISE .

click here

அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கி வைப்பு

அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்து, ஐந்து அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஜூலை, 1ம் தேதி முதல், நான்கு ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை, சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம், ஜூலை, 1ம் தேதி முதல், 2020 ஜூன் 30 வரை, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

*புதிய திட்டத்தில், அரசு பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும், மருத்துவ காப்பீட்டுத் தொகை, நான்கு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

DEE - NEW TRANSFER FORMS 2016 - CLEAR COPY

  • CLICK HERE - DEE - GENERAL TRANSFER FORM 2016 (pdf)
  • CLICK HERE - DEE - UNIT TRANSFER FORM 2016      page1,  page2,   page3
  • CLICK HERE - DEE - GENERAL TRANSFER FORM 2016

மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், பள்ளி துவங்கி இரு மாதங்கள் ஆகிவிட்டன. மாணவர் சேர்க்கை, வளாக பராமரிப்பு, கல்வி திட்டங்கள் பின்பற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நடைமுறைகளுக்கு, கல்வித்துறை சார்பில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அறிவுறுத்துவது வழக்கம். மாணவர்கள் ஒழுக்க நெறிமுறைகள் பின்பற்றுவதை, கட்டாயமாக்கும் விதமாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை,

2016 -தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட மாறுதல் விண்ணப்ப படிவ மாதிரிகள்

click here to download

சி.ஏ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழன்!

இந்தியளவில் நடைபெறும் தேர்வுகளில் சி.ஏ. தேர்வு (Chartered accountant) மிகவும் கடினமான ஒன்று. அதில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பதே கடும் சவால். ஆனால், இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம். கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ முதலிடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிலையில், இந்த ஆண்டு ஸ்ரீராம் மூலம் தமிழகம் அந்தப் பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

பிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு

பிளஸ் 1 புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில், பெற்றோர் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புகள், அரசு பள்ளிகளில், ஜூன் 23ம் தேதியும்; தனியார் பள்ளிகளில், ஜூன் முதல் வாரத்திலும் துவங்கின. அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொருளியல் பிரிவு பாட புத்தகங்கள் மட்டும் இருப்பு இல்லாததால், கடந்த வாரம் வழங்கப்பட்டது.

அகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்ந்த இயக்குனரின் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள்

CLICK HERE TO DOWNLOAD SG/MG GRANTS PROCEEDING IN PDF

பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்கபஸ் பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்கபஸ் பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.31 லட்சம் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லாபஸ் பயண அட்டை திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி : 500 ஆசிரியர்களிடம் விசாரணை

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக, 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 3,500 மாணவர்கள், 'எங்கள் விடைத்தாள்கள் சரியாக திருத்தம் செய்யப் படவில்லை' எனக் கூறி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம் : மனப்பாட பதிலுக்கு இனி 'சென்டம்' கிடைக்காது

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாளில், இந்த ஆண்டு பெரியளவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இனி, மனப்பாட பதிலுக்கு முழு மதிப்பெண் கிடைக்காது. மருத்துவம், இன்ஜி., மற்றும் சட்டம் போன்ற மேல் படிப்புகளில், பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்த பின், முதல் ஆண்டு பருவத்தேர்வில் பல பாடங்களில், 'பெயில்' ஆகின்றனர்.

முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணே, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில் சேர்வதற்கான அடித்தளமாக உள்ளது. எனவே, இன்ஜி., மற்றும் மருத்துவ, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற வைப்பதில், தனியார் பள்ளிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

அண்ணாமலைப் பல்கலை: வேளாண் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூலை 23-ல் கலந்தாய்வு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை (B.Sc. Agriculture), பிஎஸ்சி தோட்டக்கலை(B.Sc. Horticulture) ஆகிய  படிப்பில் சேருவதற்கான தரவரிசைப்பட்டியல் (Rank List) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.கலந்தாய்வு வருகிற ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

பெண்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.

ஆசிரியர்கள் :பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை'

'ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமும், வட்டார வள மையங்கள் மூலமும், விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.

ஆதார் அட்டை எண் இருந்தால் தான் இந்த மாதம் ஊதியம் என கட்டாயப் படுத்தக்கூடாது. (RTI) தகவல் .

இரு மடங்காகிறது எம்.பி.,க்கள் சம்பளம்

எம்.பி.,க்களின் சம்பளத்தை, 100 சதவீதம் உயர்த்துவதற்கான பரிந்துரைக்கு, அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பள உயர்வு குறித்து, ஆய்வு செய்த எம்.பி.,க்கள் கமிட்டி, 'சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தலாம்' என, கூறி பரிந்துரைத்தது. இப்பரிந்துரைகளுக்கு,அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, கேபினட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

11 விதிமுறையுடன் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

-‘மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:
* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.
* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.
* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது
* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.
* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.
* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.
* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.
இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

பேஸ்புக்’கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமும், வட்டார வள மையங்கள் மூலமும், விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. 

உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மூலமும்; மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் மூலமும், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சிகளின் போது, ஆசிரியர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டு மொபைல் போன்களில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களை பார்த்து, நேரத்தை வீணடிப்பதாக புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, பயிற்சி நேரத்தின் போது, ஆசிரியர்கள் மொபைல் போனைபயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வட்டார வள மைய பயிற்சிக்கு வரும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், பயிற்சி நேரத்தில் மொபைல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சி வகுப்புகளுக்கு வரும் ஆசிரியர்களிடம், நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பள்ளிகள் அருகில் நொறுக்கு தீனி விற்க தடை.

அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
  வறுத்த உணவு, சிப்ஸ், குளிர்பானம், நுாடுல்ஸ், பீட்ஸா, பர்கர், உருளைக்கிழங்கு பிரை, சாக்லேட், சமோசா உள்ளிட்ட கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகமுள்ள நொறுக்கு தீனி, உணவுகளை, பள்ளி வளாகத்துக்குள்ளும், பள்ளியை சுற்றி, 200 மீட்டர் துாரத்திலும் விற்பனை செய்யக் கூடாது.இதை, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு.

இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டம் மாநிலம் முழுவதும் செயலாக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரிசோதனை முயற்சியில் தொடங்கப்பட்ட இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

GPF வட்டி:நிதித்துறை : 01.04.2016 முதல் 30.06.2016 காலகட்டத்திற்கு GPF வட்டிவிகிதம் 8.1% - ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு - நாள்:15.07.2016

நிதித்துறை : 01.04.2016 முதல் 30.06.2016 காலகட்டத்திற்கு GPF வட்டிவிகிதம் 8.1% - ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு - நாள்:15.07.2015
Click Here

பள்ளிக்கல்வித்துறை கலந்தாய்வு அட்டவணை 2016-17 - PROCEEDINGS



தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு: ஆகஸ்டு 3 முதல் நடைபெறவுள்ளது


G.O 258 :2016 -2017 கலந்தாய்வு விதிமுறைகள் அரசாணை - ALL 8 PAGES

click here to download

பள்ளிக் கல்வி : ஆசிரியர் பணியிட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஆக.6ம் தேதி முதல் தொடங்குகிறது. வரும் 19ம் தேதி முதல்(நாளை மறுநாள்) இணையதளத்தில் ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

* நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கவுன்சிலிங் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ஆக., 3 முதல் 21 வரை கவுன்சிலிங்

ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட், 3 முதல், 21ம் தேதி வரை, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதுகுறித்து, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

web stats

web stats