rp

Blogging Tips 2017

PAY BILL FOR ALL- EXCEL FILE-அனைவரும் பயன் படுத்தும் வகையில் சம்மளப்பட்டியல் எக்செல் கோப்பாக

CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FILE

பள்ளி மேலாண்மை குழு(SMC) உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயற்சி.

CLICK HERE TO DOWNLOAD -SMC MEMBERS 3 DAYS NON-RESDENTIAL TRAINING

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: டாக்டர்கள் வலியுறுத்தல்

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என டாக்டர்கள் வலியுறுத்தினர்.
சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல், சர்க்கரை நோய், குழந்தையின்மை பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு "நேருக்கு நேர்" நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் டி.காமராஜ், கே.எஸ்.ஜெயராணி காமராஜ், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பி.ஜி.சுந்தரராமன், மகளிர் சிறப்பு மருத்துவர் கே.ருக்மணி மற்றும் டாக்டர் பெரியாண்டவர் உள்ளிட்டோர் பொதுமக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அளித்த விளக்கம்:
மது, புகைப்பழக்கம், டாக்டர் பரிந்துரையின்றி தானாக மாத்திரைகளை சாப்பிடுவது, அடிக்கடி வெந்நீரில் குளிப்பது, இறுக்கமான ஆடைகளை அணிவது, மரபு வழி உள்ளிட்டவையும் விந்தணு உற்பத்தி குறைவுக்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக பொன்னுக்கு வீங்கி ஏற்பட்டால் சிகிச்சை பெறுவது சுலபம். அவ்வாறு செய்யத் தவறினால் ஆண்களின் விந்துப்பை பாதிப்பு ஏற்பட்டு, விந்தணுக்கள் குறைய வாய்ப்புள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் / பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடு வெளியீடு

SCHOOL EDUCATION DEPARTMENT SSLC GUIDE

SSLC - TAMIL PAPER - I CLICK HERE...
SSLC - TAMIL PAPER - II CLICK HERE...
SSLC - ENGLISH PAPER - I CLICK HERE...
SSLC - ENGLISH PAPER - II CLICK HERE...
SSLC - MATHS CLICK HERE...
SSLC - SCIENCE CLICK HERE...

SSLC - SOCIAL SCIENCE CLICK HERE...

SCHOOL EDUCATION DEPARTMENT HSC GUIDE

HSC - TAMIL - I & II CLICK HERE..
HSC - ENGLISH - I CLICK HERE...
HSC - ENGLISH - II CLICK HERE...

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் பி.ஏ.ஆங்கிலத்தில் 64.5 சதவீதம் மதிப்பெண்களும், பி.எட். படிப்பில் 82 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். தற்போது எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, 104 மதிப்பெண்கள் பெற்றேன்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு: 10.42 லட்சம் பேர் பங்கேற்பு

மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வை, 10.42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பொது தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர் விவரங்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வெழுதும் மாணவர் குறித்த,

'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிப்பதில் மாற்றம்: டி.இ.டி., முடிவில் புதிய உத்தரவு


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், இட ஒதுக்கீடு பிரிவினர், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான, 60 சதவீத மதிப்பெண்ணை, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். இதற்கு ஏற்ப, டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை, 'வெயிட்டேஜ்' அடிப்படையில் கணக்கிடும் முறையில், சிறிய மாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, நேற்று, அரசாணை பிறப்பித்தார். அதன்படி, டி.இ.டி., தேர்வில், தேர்வர் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் அளவு விவரம் வருமாறு:

* 90 சதவீதம், அதற்கு அதிகமாக பெற்றால் - 60 மதிப்பெண்

* 80 - 90 சதவீதம் வரை - 54

* 70 - 80 சதவீதம் வரை - 48

* 60 - 70 சதவீதம் வரை - 42

* 55 - 60 சதவீதத்திற்குள் எடுத்தால் - 36

பொதுத்தேர்வுக்கு வழிகாட்டும் கையேடு- பள்ளி கல்வித்துறை வெளியீடு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதுவதற்கு வசதியாக, அனைத்து பாடங்களுக்கான வழிகாட்டுதல் கையேடு பள்ளிக் கல்வித்து றை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஏற்கனவே கல்வி சார் மேலாண்மை தகவல் முறைமை திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் போன்றவர்களின் முழுமையான தகவல்கள், துறைகளுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துதல், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்விசார் பாடப் பொருள் பகிர்ந்தளிக்கும் தளம் போன்றவை இணைய தளம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுத் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி

தமிழகத்தில் உள்ள அரசுத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்:
அரசால் நடப்பு நிதியாண்டில் ரூ.50.89 கோடி செலவில், 10 புதிய அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.500 மாத

17ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவித்த நாளுக்குள்  விண்ணப் பிக்க தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ்  விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம்  தேதி தொடங்க உள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள்  தவிர தனித்  தேர்வர்களாக தேர்வு எழுத விரும்புவோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க  லாம். தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும்   ஒரு சிறப்பு  மையம் அமைக்கப்படுகிறது.

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை கணக்கிடுவது எவ்வாறு

அனேக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறு பதிவு
முறை-1
FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.16317 எனில், FEB -14 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.

உதாரணம்:
கட்டப்படவேண்டிய தொகை = ரூ.16317
இதை 10க்குநெருக்கமடங்காக( ROUNDED TO NEAREST  10 RUPEE ONLY NOT NEXT TEN RUPEES) மாற்ற-=ரூ-16320
சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட
வேண்டியத் தொகை 16320*0.97086 = ரூ.15845 என கொடுத்தால்
3% SURCHARGE தானே பிடிக்கப்பட்டால் = ரூ. 475
மொத்தம் = ரூ.16320 என கிடைக்கும்

முறை-2
(Tax Amount * 100)/103 இதுவும் ஒரு வழி நண்பர்களே!

அதாவது கட்ட வேண்டிய  வரிதொகை   =ரூ-24313
இதை 10க்குநெருக்கமடங்காக( ROUNDED TO NEAREST  10 RUPEE ONLY NOT NEXT TEN RUPEES) மாற்ற-=ரூ-24310
சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட
வேண்டியத் தொகை
24310x100=2431000
243100/103= 23602

3% SURCHARGE தானே பிடிக்கப்பட்டால் = ரூ. 708

மொத்தம் = ரூ.23602+708=24310 என கிடைக்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கேஜ்ரிவால்

ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற 49-வது நாளில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன், அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி விலகினர்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு அனுப்பியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆம் ஆத்மியின் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அரவிந்த் கேஜ்ரிவால், மக்களிடம் கருத்து கேட்டு காங்கிரஸ் ஆதரவுடன் செய்த ஆட்சியில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற சட்டப்பேரவையில் இன்று ஆதரவு கிடைக்கவில்லை என்றும், முகேஷ் அம்பானி மீதும், வீரப்ப மொய்லி மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டு விட்டதே இதற்குக் காரணம் என்றும் பேசினார்.

கணினி உங்கள் வசமாக சில குறிப்பிகள் CTRL + KEYBOARD SHORTCUTS

BASIC CTRL + KEYBOARD SHORTCUTS
************************
Ctrl + z = undo
Ctrl + x = cut
Ctrl + c= copy
Ctrl + v= paste
Ctrl + b= bold
Ctrl + n= new window
Ctrl + a= select all
Ctrl + s =save
Ctrl + y =redo
Ctrl + u =undrill
Ctrl + p =print
Ctrl + esc =start menu
Ctrl + w=close window
Ctrl + r=refresh
Ctrl + t= new tab
Ctrl +n =open new document
Ctrl + tab=moved to new window
**************************

பொது அறிவுக்குறிப்புகள்


1. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது : 55 மொழி
2. சூரிய உதயத்தை முதலில் பார்பவர்கள் : ரஷ்யர்கள்
3. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு : நியூசிலாந்து
4. அணுவை பிளந்து காட்டியவர் : ரூதர் போர்டு

5. தங்க போர்வை நிலம் எது : ஆஸ்திரேலியா
6. தகடாக அடிக்க முடியாத உலோகம் எது : சோடியம்
7. ருஷ்யாவில் பெட்ரோலிய வயல்கலுக்கு புகழ்பெற்ற இடம் :லெனின் கிராட்
8. 1984 ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடை பெற்ற இடம் :லாஸ்ஏஞ்சல்ஸ்
9. சுருக்கு எழுத்து முறையை கண்டுபித்தவர் : பிட்மேன்
10. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன : கிமோனா
11. பல்லவ பேரரசின் தலைநகரம் : காஞ்சிபுரம்

பள்ளி மாணவர்களுக்கான ஏழு இலவச பொருட்கள் : வரும் ஆண்டில் வழங்க ரூ.256 கோடிக்கு "டெண்டர்"

பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச, "கிரையான்ஸ்' பென்சில், புத்தக பை உள்ளிட்ட, ஏழு பொருட்களை வழங்க, 256 கோடி ரூபாய்க்கு, பாடநூல் கழகம், "டெண்டர்' அறிவித்து உள்ளது. தமிழக அரசு, மேற்கண்ட பொருட்கள் உட்பட, 14 வகையான இலவச திட்டங்களை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது.
இதற்காக, ஆண்டுதோறும், 4,000 கோடி ரூபாயை செலவழிக்கிறது. கடந்த ஆண்டுகளில், பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை சேர்ந்து, இலவச திட்டங்களை வினியோகித்தன. கல்வி பணியுடன், இலவச பொருட்கள் வழங்கும் பணியையும் சேர்த்து செய்வது, நடைமுறை ரீதியாக, பல சிக்கல்கள் இருப்பது குறித்தும், நிர்வாகப் பணிகள் பாதிப்பது குறித்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இலவச

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த திட்டம்

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2014-15-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ. 35,720.86 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ. 16,020.63 கோடியாகும்.

சுயநிதி பள்ளிகளின் பெயர் மாற்றம், அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பு

தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன. இந்த முறைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெயர் மாற்றப்படும். உதாரணமாக தற்போது செயிண்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, என்று அழைக்கப்படும் பள்ளி, இனிமேல் செயிண்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளிஎன்று அழைக்கப்படும்

ஆசிரியர் தகுதித்தேர்வின் வெயிட்டேஜ் மதிப்பிற்கான அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித்தேர்வின் வெயிட்டேஜ் மதிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில் 
55% முதல்  59% (82 to 89 மதிப்பெண்)வரை 36 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

GO.Ms. No:29 Dt: 14.2.2014
Click here Go...

School Education DepartmentYear : 2014 G.O Ms.No. 29 Dt: February 14, 2014 School Education - Teachers Recruitment Board - Recruitment of Secondary Grade Teachers and Graduate Assistants - Fixing the criteria for s election of candidates who have cleared the Teacher Eligibility Test for appointment to the post of Secondary Grade Teachers and Graduate Assistants - Partial modification to G.O Ms.No. 252, School Education Department, dated 05.10.2012 - Orders - Click Here...

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை கணக்கிடுவது எவ்வாறு

அனேக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறு பதிவு
முறை-1
FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.16317 எனில், FEB -14 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.

TNPSC- DEO தேர்வு அறிவிப்பு...


* NOTIFICATION
*.SYLLABUS
* Apply Online

HSE - MARCH - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET DOWNLOAD FROM INTERNET


HSE - MARCH - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET DOWNLOAD

NMMS அனுமதிச் சீட்டுகளை (Admission Card)இணையதளம் மூலம் 13.02.2014 முதல் 20.02.2014 வரை பதிவிறக்கம் செய்யலாம்.

NMMS ADMISSION CARD DOWNLOADING FROM 13.02.2014 TO 22.02.2014 REG PROC CLICK HERE...

டிஇடி தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 22 முதல் பயிற்சி

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் பிப்ரவரி 22 முதல் 40 நாள்கள் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் வியாழக்கிழமை (பிப்.20) வரை தங்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்காக 40 நாள்கள் பயிற்சி வழங்க அரசாணையும் வெளியிடப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வியின் நிலை என்ன?- ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்-THE TAMIL HINDU

அண்மையில் ப்ரதம் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தமிழக பள்ளிக் கல்வியின் நிலை அதிர்ச்சி அளிக்கும்படியாக இருந்தது. கிராமங்களில் உள்ள 5-ம் வகுப்பு மாணவர்களில் 31.9 சதவீதம் பேர் மட்டுமே 2-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உரைநடைப் பகுதியை வாசிக்க முடிந்ததாகவும், 14 சதவீதம் பேர் மட்டும் 3 இலக்க எண்ணை ஓர் இலக்க எண்ணால் வகுக்க முடிந்தது என்றும் அதில் தகவல் இடம்பெற்றிருந்தது. இந்த இரு கற்றல் விகிதங்களும் தேசிய அளவில் பார்க்கும்போது ஒவ்வொன்றும் 47 சதவீதமாக உள்ளன. (பார்க்க படம் 1, 2)

ப்ரதமின் இந்த ஆய்வறிக்கை ஒரு மாதிரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இதுபோன்ற ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதில் தொடர்ந்து தமிழக கிராமப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் குறைவாக இருந்து வருவதாக கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இரட்டைப்பட்டம் வழக்கில் 1.1.2012 நாளிட்ட பதவி உயர்வு குழு பட்டியலை திரும்ப பெறுவது உறுதி. -


இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதால் ஒருங்கிணைப்பாளர்கள் உச்சநீதி மன்றம் செல்ல முடிவெடுத்தனர். இது குறித்து வழக்கை நடத்தி வரும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் தெரிவித்ததாவது: இவ்வழக்கு சம்பந்தமாக வழக்குரைஞரை சென்ற வாரம் சந்திந்து ஆலோசணை நடத்தியுள்ளோம். எனவே உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். இது வரை இவ்வழக்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களை இணைத்துக்

2014-2015ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை முழு விவரம்.

Budget for the year 2014-2015 - Tamil Version Click Here...
Budget for the year 2014-2015 - English Version Click Here...

அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடும் தகுதித்தேர்வு தேர்ச்சியாளர்கள்- அரசுப் பள்ளிகளில் குறைந்த காலியிடங்கள் எதிரொலி.

அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட வுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக இருப்ப தால்,

குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில்,

உயர் கல்வித்துறைக்கு 3, 627 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித்துறைக்கு 2014-15 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.3,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளி கல்வித் துறைக்கு ரூ.17,731 கோயும், இலவச புத்தகங்களை வழங்குவதற்காக ரூ.264.35 கோடியும், பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைக் குறைக்க ரூ.55.11 கோடி ரூபாயும், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி கட்டண உதவிக்காக ரூ.585.17 கோடி ரூபாயும், பிளஸ் டூ மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.4,200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு

* 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை   மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.384.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய ரூ.1631.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக பட்ஜெட் 2014 -2015 : முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். 2014-2015 ஆம் ஆண்டிற்கான தமிழக திட்ட செலவினமாக ரூ. 42,185 கோடி நிர்ணயக்கப்பட்டுள்ளதாக பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்:
காவல்துறைக்கு 5186.20 கோடி நிதி ஒதுக்கீடு.

டிஇடி தேர்வு எழுதியவர்கள் ஹால் டிக்கெட்டை தொலைத்துவிட்டால், அவர்கள் தங்கள் ரோல் நம்பரை தெரிந்துகொள்ள டிஆர்பி ஏற்பாடு

டிஇடி தேர்வு எழுதியவர்கள் ஹால் டிக்கெட்டை தொலைத்துவிட்டால், அவர்கள் தங்கள் ரோல் நம்பரை தெரிந்துகொள்ள டிஆர்பி ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது ஆசிரியர் தகுதித் தேர்வு 2013ல் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்தது.இதற்கிடையே,
Teachers Recruitment Board  College Road, Chennai-600006
TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
Click here for Paper I           
Click here for Paper II           

Dated: 11-02-2014
Member Secretary
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் பிசி, எம்பிசி, எஸ்டி, எஸ்சி உள்ளிட்ட இட ஒதுக்கீட் டின் கீழ் வருவோர் டிஇடி தேர்வில் 55% மதிப்பெண் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது. அதற்கான உத்தரவில் 150க்கு 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்றும் அரசு உத்தரவிட்டது. 

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி.எட் பட்டதாரிகளுக்கு சிறப்புத் தேர்வுக்கு இலவச பயிற்சி.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி.எட் பட்டதாரிகள் சிறப்பு தகுதித் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறும் வகையில் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையங்களின்
சார்பில் இலவச பயிற்சி அளிப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள பி.எட் படித்து பணியில்லாமல் இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக பணி கிடைக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கிறவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2007-08 / 2008-09 மற்றும் 2011ஆம் ஆண்டில் கணித பாட பட்டதாரி ஆசிர்யர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கி உத்தரவு

DSE - 2007-08 / 2008-09 & 2011 TRB APPOINTED MATHS BT - REGULARISATION ORDER ISSUED - ORDER CLICK HERE...

பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டி வெளியாகாது

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு-மேலும் கூடுதல் விவரங்கள்-

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு-மூத்த பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி Ex.M.L.Cஅவ்ர்கள் முயற்சி செய்து வருகிறார்.

 தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மூத்த தலைவரான திருமிகு ஈஸ்வரன் அவர்களிடமும்,
அதன் பொதுச்செயலருமான.திருமிகு.ரங்கராஜன் அவர்களுடனும்
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு
பேசி யதற்கு பிறகு 

சமுதாய வளர்ச்சிக்கே கல்வி தினமனி கட்டுரை


பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்குஇன்று (13.02.2014)முதல் நுழைவுச்சீட்டு



பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை (பிப்.13) முதல் (பிப்.16) வரை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 தனித்தேர்வு எழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான www.dndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன?-தினமணி


அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பள்ளி பாட புத்தகங்களை ஏலத்தில் விட ஆந்திரா முடிவு

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் ஐதராபாத் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் வரும் 19-ம் தேதி பள்ளி பாட புத்தகங்களை ஏலத்தில் விட முடிவுசெய்துள்ளதாக அதன் செய்தி குறி்ப்பில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவை தெரிவித்திருப்பதாவது: ஏலம் விட உள்ள புத்தகங்கள் அனைத்தும் ஒன்று முதல் ஒன்பதாம்வகுப்பு வரையிலானபாடபுத்தகங்கள். இவை அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்டவை.புத்தகங்கள் அனைத்தும் 40 மெட்ரிக் டன் அளவு கொண்டவை. தற்போது அவை அனைத்தும் பயன்படு்த்த முடியாத நிலையில் உள்ளதால் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கல்வி அதிகாரி சுப்பாரெட்டி தெரிவித்தார்.
Click Here

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்


தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.தமிழக சட்டப்பேரவை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2014-2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பேரவையில் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையை அமைச்சர் படித்து முடித்ததும், பேரவை நிகழ்ச்சி அத்துடன் ஒத்திவைக்கப்படும். இதையடுத்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடக்கும். அதில், பட்ஜெட் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். பட்ஜெட் மீதான விவாதம் வரும் 17ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது.

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு-மூத்த பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி Ex.M.L.Cஅவ்ர்கள் முயற்சி செய்து வருகிறார்.

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு-மூத்த பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி Ex.M.L.Cஅவ்ர்கள் முயற்சி செய்து வருகிறார்.
தகவல்-கே.பி.ரக்‌ஷித்,மாநில துணைத்தலைவர்

அனைத்து சங்கங்கள் இணைந்து (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் சேர்த்து) ஒருமித்த உணர்வோடு வேலை நிறுத்தப்போராட்டத்தை ஒன்று பட்டு நடத்திட மூத்த பொதுச்செயலாளரும்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி Ex.M.L.Cஅவ்ர்கள் முயற்சி செய்து வருகிறார்.

நேற்றைய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தனித்த போராட்ட அறிவிப்பு முடிவினை அறிந்து

தொடக்கக் கல்வி - அரசாணை (நிலை) எண்.234 ப.க.(ஜி)து நாள்.10.09.2009-ஐ நடைமுறைப்படுத்தக் கோரி வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்களின் விவரம் கோரியது சார்பான ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து உத்தரவு

DEE - GO.234 IMPLEMENTATION COURT ORDER REG DETAILS CALLED CLICK HERE...

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து இத்தேர்வில் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், இந்த 45 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்று முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 16,932 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி மாதம் நடைபெற்றது.


இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை அண்மையில் அரசு அறிவித்தது. இதனால், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 ஆகக் குறைந்தது.


மதிப்பெண் சலுகை காரணமாக, இரு தாள்களிலும் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மொத்தம் 6.6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் சலுகை காரணமாக சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


5 சதவீத மதிப்பெண் சலுகை: சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்


ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்: பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்


பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு குறித்து பல மாணவர்களுக்கு பயம் இருக்கிறது. அதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அதைப் போக்குவதற்காக ஆர்எம்எஸ்ஏ(மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம்), எஸ்இஆர்டி(மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்) ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 10ம் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி சென்னையில் 12, 13ம் தேதிகளில் நடக்கிறது.

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்த தமிழக அரசு தடை

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதை முறியடிக்கும் வகையில்  பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.தமிழகம் முழுவதும் 68,000 சத்துணவு மையம், 34,000 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன;
 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  ஊதியம், ஓய்வூதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்ட கலெக் டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடக்கிறது.இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசின் சமூக ஆணையர் சேவியர் கிறிசோ நாயகம், கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHIS சந்தா தொகை வருமான வரி பிரிவு 80D-ன் கீழ் சலுகை பெற 6மாவட்ட கருவூலங்கள் ஒப்புதல்

தமிழ்நாடு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த (ஆண்டு சந்தா) ரூ.1800/-ஐ (ரூ.150/- * 12 = ரூ.1800/-) வருமான வரி பிரிவு 80Dன் கீழ் முழுமையான சலுகை பெற இன்று மாலை வரை சில மாவட்ட கருவூலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட கருவூலங்கள் சார்ந்த சார்நிலை கருவூலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைநிலை ஆசிரியருக்கு ஆங்கில பயிற்சி 19.02.2014 முதல் 20.03.2014வரையில் 30 நாட்கள்.

தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரதி மாதம் பிடித்தம் செய்யப்படும் ரூ.150/-ஐ வருமான வரி 80D பிரிவின் கீழ் முழுமையான வரிச் சலுகை பெறலாம் என்பதனை திருவண்ணாமலை சார் கருவூலம் ஏற்பு

                                 இதுகுறித்து நேற்று நமது வலைதளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அரசு கடிதத்தினை வெளியிட்டோம். இதையடுத்து அந்த கடித நகலினை கொண்டு நமது மாநிலத்துணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித் அவர்கள்  திருவண்ணாமலை சார்நிலைக்கருவூல அலுவலர் திரு புகழேந்தி அவர்களை சந்தித்து கடித நகலைக்கொடுத்து கேட்ட பொழுது அவர்  தெரிவித்தாவது:
                              தமிழ்நாடு அரசின் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகையை வருமான வரி பிரிவு 80D-ன் கீழ் சலுகை பெறலாம் .”” இத்தகவல் ஏற்புடையதே எனவும் தெரிவித்தார்.அவருக்கு நன்றிகூறி விடைபெற்றார்.
                         இதன்  மூலம் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும்அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வரித்தொகையில்-185 ரூபாய் கழிவு கிடைக்கும்


பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 3900 பட்டதாரி ஆசிரியர்கள் / 2645 முதுகலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க ஆணை வெளியீடு

DSE - FINANCE CONTROLLER - PAY ORDER FOR PTA APPOINTED 3900 BT ASST / 2645 PG ASSTs FOR 7MONTHS REG ORDER CLICK HERE...

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு: ரயில்வே அமைச்சகம் பரிந்துரை


புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து வேலை நிறுத்த கோரிக்கைகளை அரசு ஏற்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE-AIRF LETTER

வகுப்பறையில் பாடம் நடத்திய ஆசிரியை மயங்கி விழுந்து சாவு

கடையநல்லூர் அருகே வகுப்பறையில் பாடம் நடத்திய ஆசிரியை மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட மாணவ– மாணவிகள் கதறி அழுதனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:–
பள்ளிக்கூட ஆசிரியை

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கலைஞர் காலனி பொதிகைநகரைச் சேர்ந்தவர், வாசுதேவன். இவர் மம்சாபுரம் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி சரோஜா (வயது 45). அவரும் ஆசிரியை ஆவார். இவர் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வளையர் இந்து தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை சரோஜா வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் மதியம 12 மணி அளவில் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவ– மாணவிகளும் ஆர்வமுடன் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தனர்.

TET தேர்வு பட்டியல்: உச்சக்கட்ட குழப்பத்தில் TRB

வருமான வரி பிடித்தம் குறித்த திருவண்ணாமலை சார்கருவூல அலுவலரின் வழிகாட்டு சுற்றறிக்கை






உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவும் 14 சிறந்த வழிகள்!

திகமான கொழுப்பு உடம்பில் சேர்ந்துவிட்டதா? இதை குறைப்பதற்கான வழிகளை மேற்கொண்டுள்ளீர்களா? இதனுடன் சேர்த்து உணவையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இந்த பகுதியில் பார்ப்போம். கொழுப்பை கரைக்கும் செயலில் உதவும் உணவுகள் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஆனால் மற்றவர்கள் சொல்வதை கேட்டு அதே முறையை பின்பற்றினால் உங்களுக்கும் அதே வகையில் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களின் கொழுப்பு குறைவதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தாலும், அவர்களுக்கு சில நேரங்களில் தெரியாமல் போய்விடும். அவசியம் படிக்க வேண்டிவை: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த 25 வழிகள்!!! மேலும் அவர்கள் அதற்கு தவறான ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டு, அதையும் உங்களுக்கு கூற வாய்ப்புகள் அதிகம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் எடையை குறைக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மாரடைப்பை தடுக்க 30 எளிய வழிகள்!!!

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள்


"தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013--14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடக்கக் கல்வித்துறையில், 1 முதல் 5 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. 6 முதல் 10 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பதால், இவர்களுக்கான காலியிடங்களை பொறுத்து, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது. இது போன்ற நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு இல்லாததாலும், தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதாலும் ஆசிரியர்

10ம் வகுப்பு புத்தகம் அச்சடிப்பதில் குழப்பம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிகிறது. அதேபோல கீழ் வகுப்புகளுக்கும் ஆண்டுத் தேர்வுகள் நடக்க இருக்கின்றன.இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும்  தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் 9ம் வகுப்புக்கான பாடங்களை மேலோட்டமாக நடத்தி விட்டு, வருடத்தின் பாதியில் இருந்து 10ம் பொதுத் தேர்வுக்கு அவர்களை தயார்படுத்தும் பணியில் இறங்குகின்றன. அதனால் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 10ம் வகுப்புக்கான பாடங்களை நடத்தத் தொடங்கிவிடுகின்றனர். இதனால் 9ம் வகுப்புக்கு வரும்போதே 10ம் வகுப்பு பாடப்புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.அரசுப் பள்ளிகளிலும் இதே நிலைதான்.  மே மாத விடுமுறையிலோ அல்லது பள்ளிகள் திறக்கும்போதோ புத்தகங்களை  வாங்கச் சென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் புத்தக பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பும் உள்ளது. அதை கணக்கிட்டு சில  பெற்றோர், இப்போதே புத்தகங்களை வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள திட்டமிடுகின்றனர். அதனால் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு இப்போதே பெற்றோர் படை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வும் சலுகைகளும்

இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கான சுதந்திரப் பிரகடனமாக, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகஸ்டு 26, 2009 இல்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்குவந்து 60 ஆண்டு காலத்திற்குப் பின்னர் இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவுங்கூட, 2002இல் பாராளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்தின் 86ஆவது திருத்தம் இதற்கு உந்துதலாக இருந்தது.
இவ்விரண்டு சட்டங்களும் 6வயது முதல் 14வயதுவரையில் உள்ள இந்தியக் குழந்தைகள் இலவசமாகவும் கட்டாயமாகவும் தொடக்கக் கல்வியைப் பெற உறுதியளிக்கின்றன. இச்சட்டம் 2010, ஏப்ரல் முதல் நாளிலிருந்து நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது

தொடக்கக் கல்வி துறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்விதுறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடத்தின் விவரத்தை

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்குமா? கானல் நீராகுமா?

தொடக்கக் கல்வி துறையில் கடந்த 2013 மே ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது .இக் கலந்தாய்வில் நடு நிலை நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொடக்க பள்ளி  தலைமையாசிரியர்கள், போன்ற பதவி உயர்வு வழங்கப்பட்டன .இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்னென்றால் தொடக்கக் கல்வி இயக்குநர் 11.05.2013 அன்று அவர் வெளியிட்ட  கலந்தாய்வு செயல் முறையில்  இரட்டைப் பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

RTI-அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்.

கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

விழுப்புரம் அருகே, கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், எசாலம் கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். ராமநாத ஈசுவரர் கோவில், தெற்கு திருச்சுற்று சுவர் அருகே, நிலை நிறுத்தப்பட்டு, மக்கள் வழிபட்டு வரும் கொற்றவை சிலையை ஆய்வு செய்தனர்.

பள்ளிப் புத்தகங்களில் பிழை திருத்தும் பணி தொடக்கம்

அடுத்த கல்வியாண்டின் (2014-15) முதல் பருவத்துக்கான புத்தகங்களில் பிழை திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே இந்தப் புத்தகங்கள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இருந்தாலும், அதில் உள்ள சிறிய குறைகள் கூட சரிசெய்யப்பட்டு புத்தகங்கள் புதிதாக அச்சடிக்க வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் தலைமையில் ஒவ்வொரு பாடத்துக்கும் பிழைகள் நீக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

+2 மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்!

மிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது குறித்து புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வுக்கான விடைத்தாள், சம்பந்தப்பட்ட மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவுடன், தேர்வு மையத்திலேயே, மாணவர் பெயர், பள்ளி பெயர், பதிவெண் பகுதியை, அறை கண்காணிப்பாளர் கிழித்து வைத்துக் கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய விடைத்தாளை "பார்கோடிங்' முறையில் மட்டுமே, அடையாளம் காணும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது

இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் உச்ச நீதி மன்றத்தில் SLP போட முயற்சி

சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் இரட்டைப்பட்டம் வழக்கு தள்ளுபடியானதால் இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 9.2.2014 அன்று வழக்குரைஞரை சென்னையில் சந்திந்து உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் மனு போடுவது குறித்து நீண்ட ஆலோசனை மேற்கொண்டனர். எனவே ஒரு வார காலத்திற்குள் புது தில்லி சென்று உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தொடக்க, நடுநிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு சரியாக எழுதவும் படிக்கவும் தெரியவில்லை - dinamani

கடந்த ஆண்டிற்கான (2013) "ஆசர்' கருத்துத் திரட்டல் (சர்வே), இந்தியாவின் 550 மாவட்டங்களில் உள்ள 16,000 கிராமங்களைச் சேர்ந்த 3.3 லட்சம் குடும்பங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் நேரடியாகப் பேசி, அதிலிருந்து திரட்டிய விவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் அறிக்கை இது என்பதால்தான், இந்த அறிக்கையின் முடிவுகளுக்கு ஆட்சியாளர்களும் கல்வியாளர்களும் முக்கியத்துவம் தருகிறார்கள்.
கல்வித் தரத்தை அதிகரிக்கவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், குறிப்பாக கிராமப்புற அளவில் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து அடித்தட்டு மக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு ஈர்க்கவும் மத்திய, மாநில அரசுகளால் மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த நிதி ஒதுக்கீட்டிற்கு இணையான முன்னேற்றம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே கருவூல அலுவலர் வழிகாட்டு நெறிமுரையில் தகவல்

அப்பாடா!.தனிநபரின் மொத்த வருமானத்தை 5 லட்சத்துக்குள் என கருதாது வரிக்குட்பட்ட வருமானத்தை கணக்கில் கொண்டு  அது 5 லட்சத்துக்குள் இருந்தால் ரூ-2000/- கழிவு பெறலாம்.என திருவண்ணாமலை சார் கருவூல அலுவலர்அதன் வரையறுக்குட்பட்ட அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
tntf.in

இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

இரட்டைப்பட்டம் செல்லாது எனவும்,பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இரட்டைப்பட்டம்
பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய இந்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

இன்று திங்கள் கிழமை இரட்டைப்பட்டம் தீர்ப்பு நகல் வெளியிடப்படும்.

தீர்ப்பின் நகல் கிடைத்ததும் ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடாரவுள்ளதாக தகவல்.

முதல்வர் கை கொடுப்பாரா ? 45,000 ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம்

பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் புதிய வடிவமைப்பில் விடைத்தாள் அச்சிடப்படுகிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விடைத்தாள் அச்சிடப்படுகிறது. இந்த விடைத்தாளில் முகப்புத் தாள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் மாணவர்கள் பெயர், பதிவு எண், தேர்வு எழுத வேண்டிய பாடம், பள்ளி, தேர்வு நடக்கும் தேதி ஆகியவை அச்சிட்டே வழங்கப்படும்.

web stats

web stats