rp

Blogging Tips 2017

டீச்சர் வராட்டி என்ன.. நான் பாடம் எடுக்கிறேன்.. அதிரடி சேலம் கலெக்டர் ரோகிணி!

சேலம்: அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார்.

ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்

ஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், 7-வது ஊதிய குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்கவில்லை என்றாலும், சென்னை, கிருஷ்ணகிரி, கோவை அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

DGE - SSLC September/October 2017 Conduct ofScience Practical for Private candidates - Press Release

மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு : ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் பீதி

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான பொது கவுன்சிலிங், 
ஆண்டுதோறும், மே மாதம் நடத்தப்படும். 2011-2016 வரை, ஆகஸ்டில் இந்த கவுன்சிலிங் நடந்தது. ஆனால், பள்ளிக்கல்வி செயலராக, உதயசந்திரன் பொறுப்பேற்றதும்,

ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் தமிழகம் முழுவதும் மறியலில் 7 லட்சம் பேர் கைது

ஜாக்டோ-ஜியோ அறிவித்த தொடர் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. அதன் ஒருபகுதியாக நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 7 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர் வேலை நிறுத்தம் நடத்துவது தொடர்பாக ஜாக்டோ-ஜியோவில் நிலவிய கருத்து மோதல் காரணமாக கணேசன், இளங்கோவன் தலைமையில் ஒரு அணியும், சுப்பிரமணி, மாயவன் தலைமையில் ஒரு அணியாகவும் ஜாக்டோ-ஜியோ பிரிந்தன. இந்நிலையில், சுப்பிரமணி, மாயவன் தலைமையிலான அணியினர் நேற்று தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் இந்த அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்த மிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் (ஜெஎஸ்ஆர்க), இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் (சிஏ), தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், சத்துணவு பணியாளர்கள் சங்கம், சமூக நல அலுவலர்கள் சங்கம், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம், நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம், நிர்வாக அலுவலர்கள் சங்கம் என 60க்கும் மேற்பட்ட சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

: JACTTO - GEO அனைத்து அலுவலகங்களின் வருகைப்பதிவேட்டை தலைமை செயலகத்தித்திற்கு அனுப்ப முதன்மை செயலாளர் உத்தரவு - ஆணை நகல்

இன்றைய போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பங்கேற்கிறது.-பொதுச்செயலாளர் அறிவிப்பு

இன்றைய போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பங்கேற்கிறது.-பொதுச்செயலாளர் அறிவிப்பு

ஜேக்டோ ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு* 💥💥💥💥💥💥💥💥💥💥 இன்று 7.9.2017 வியாழன் முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்.

*ஜேக்டோ ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு*
💥💥💥💥💥💥💥💥💥💥
இன்று 7.9.2017 வியாழன் முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்.

CPS ரத்து
ஊதிய முரண்பாடு களைந்து ஊதியக்குழு அமல்
தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை ஊதியம் அமல் போன்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 7.9.2017 திட்டமிட்டபடி வட்டத் தலை நகரங்களில் காலை 10 மணிக்கு மறியல் நடைபெறும்.

JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

*JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:*

1. M.சுப்பிரமணியன்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

2. A.மாயவன்
த.நா உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

3. இரா.தாஸ்
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி



*தொடக்கக் கல்வித்துறை இயக்கங்கள்*

☀த.நா. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀த.நா. தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

☀தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

web stats

web stats