rp

Blogging Tips 2017

தொடர்பு எல்லைக்கு அப்பால் '1100': மாவட்டங்களில் அதிகாரிகள் நிம்மதி!

சமீபத்தில், முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட, '1100' அம்மா அழைப்பு மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொண்டால், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வரும் தகவலால் பொதுமக்கள் நொந்து போயுள்ளனர்; அதிகாரிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.

7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்'. முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை.

பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார். 

மலைப்பகுதி பள்ளிக்கு செல்லாமல் 'பினாமி' நியமித்த தலைமை ஆசிரியை.

மலைப்பகுதியில் உள்ள, உறைவிடப்பள்ளி தலைமையாசிரியை, பள்ளிக்கு செல்லாமல், தன்னிச்சையாக ஒருவரை நியமித்து, சம்பளம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அடுத்த, போதமலை மலைப்பகுதியில் உள்ள கீழூரில், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக, உறைவிட துவக்கப்பள்ளி செயல்படுகிறது. 

10ம் வகுப்பு தேர்வு ரூ.115 கட்டணம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 115 ரூபாய் தேர்வு கட்டணம் வசூலிக்க, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்.அதன் அசல் கடிதம் ஒன்றை (செராக்ஸ் கூடாது) passport அலுவலகம் செல்லும் போது அங்கு கொடுக்க வேண்டும். இதில் பெறுநர் முகவரி pin code உட்பட முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.பெறுநர் பெயரும் தெரிந்திருக்க வேண்டும்.

பள்ளிக் கல்வி முடிக்கும் மாற்றுத்திறனாளிகள் 9 சதவீதம்!

நாட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளில் 9 சதவீதம் பேரே பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர் என, காந்தி கிராம பல்கலை மனையியல்துறை தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

காந்தி கிராம பல்கலை மனையியல்துறை சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வளர்ச்சிப் பணிகளில் ஏற்படும் சவால்களும் கவனிப்புகளும் எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. தலைமை வகித்த துணைவேந்தர் நடராஜன் பேசியதாவது:

ஆசிரியரா, பேராசிரியரா; பட்டதாரிகள் குழப்பம்

மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், சிசெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது. இந்த தேர்வு, அடுத்த மாதம், 21ல் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முதுநிலை பட்டதாரிகள், சிசெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 25/01/16 திங்கள் அன்று காலை 11 மணிக்கு வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்காளர் தின உறுதிமொழி " எடுக்கவேண்டும்.... NATIONAL VOTERS DAY(NVD PLEDGE)......

அறிவியல் ஒருமதிப்பெண் வினா(sslc science one mark questions Part 1)

வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்காக வெளியிடப்பட்ட கற்றல் கையேட்டில் உள்ள அறிவியல் பாடத்திற்காக தாயாரிக்கப்பட்ட ஒருமதிப்பெண் வினா பயிற்சி 1 ல் உள்ள வினாக்களுக்கு விடையுடன் கூடிய வீடியோ பதிவு ( please download or watch high resultion in you tube link )
thanks to      [email protected]  (DOOZY STUDY)

click here to download

பாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ், அனைத்து பிரிவு முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது

அடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும் ஓர் அளவு கோலா?

மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக RTI மூலம் கேட்கப்பட்ட கேள்வி

வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால், வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார். 
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:மார்க்சிஸ்ட் - டில்லிபாபு: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, வாடகை குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா?வைத்திலிங்கம்:

பள்ளிக்கல்வி - 2016 ஆண்டிற்கான மாவட்ட கல்வி அலுவலர் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் - இயக்குனர் செயல்முறைகள்

CLICK HERE- DEO PANEL PREPARATION 2016 - DIR PROC

ஆசிரியர்களுக்குள் அடிதடியால் கல்வி பாதிப்பு : பெற்றோருடன் மாணவர்கள் சாலை மறியல்.

ஆசிரியர்கள் சண்டையால், கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, பெற்றோருடன், மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

திடீர் செட் தேர்வு அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் வேதனை

அன்னை தெரசா பல்கலை கழகம் அடுத்த மாதம் 21-2-2016 தேதியில் செட் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால்  விண்ணப்பதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தேர்வு எழுத அளிக்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை என கவலை தெரிவித்துள்ளனர். 

கிராமப்புற பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை பராமரிக்க VPRC/PLF- களுக்கு வழிக்காட்டுதல் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் உத்தரவு...

தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் வகையில் வண்ண சித்திரங்களை வகுப்பறைகளில் உடனடியாக வரைய இயக்குனர் உத்தரவு - பள்ளிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் செலவீன விவரம் - செயல்முறைகள்


சி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில், 32 வருவாய் மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பணியிடங்கள் உள்ளன. இவர்கள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் நியமனம் மற்றும் தேர்வு பணிகள்; மற்ற அரசு துறை சார்ந்த ஆசிரியர்களின் பணிகளை கவனிக்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கட்டுப்பாட்டில், 32 மாவட்டங்களுக்கு தனியாக, 32 சி.இ.ஓ.,க்கள் உள்ளனர். இதன்படி, மொத்தமுள்ள, 64 சி.இ.ஓ., பணி யிடங்களில், 22 இடங்கள் காலியாக உள்ளன.மேலும், சி.இ.ஓ., கட்டுப்பாட்டில், கல்வி மாவட்டம் வாரியாக, 125 மாவட்ட கல்வி அதிகாரி இடங்கள் உள்ளன.

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு தடை

தனியார் நிறுவனம் நடத்தும் நடைபயண நிகழ்ச்சிகளில், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.மதுரையைச் சேர்ந்த, 'டான்' அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம், 'பசுமை மற்றும் துாய்மை' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களை கொண்டு, 14 மாவட்டங்களில் நடைபயணம் நடத்த, பள்ளிக்கல்வி துறையில் அனுமதி கேட்டுள்ளது.

INCOME TAX -2016 (A4 2 பக்கம் with form 16)

click here to download

லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு.

தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.லேப்டாப் பெற்றுக் கொண்டவுடன், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படவேண்டும். ஆனால் பலருக்கு இது தெரிவதில்லை. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான லேப்டாப்கள்,

New Health Insurance Scheme - Only New IDCard

Click Here

புதிய வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் காணலாம்

வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். தமிழகத்தில் இன்று வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.வாக்குச்சாவடிகள், மாநகராட்சி அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் இந்த இறுதிப் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.எனினும்,

9 மாவட்ட ஆட்சியர் மாறுதல்

தங்களின் சம்பள விவர பட்டியலை அனைத்து அரசு ஊழியர்களும் "ONLINE" - ல் பார்க்கலாம் - கருவூலத்துறை இயக்குனரின் செயல்முறைகள்


வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செய்தி குறிப்பு :-

அனைத்து தலைமை ஆசிரியர்களும் வழிபாட்டு கூட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் படிகட்டில் பயணம் செய்வதாகவும் இதனால் நடத்துனரிடம் சண்டையிட்டு, மாணவர்கள் காவல்துறையினரால் தண்டிக்கப்பட வேண்டியுள்ள சூழ்நிலை பத்திரிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையில் உள்ளதால், இது குறித்து தவறுகள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு தக்க அறிவுரைவழங்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறது

ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம்: கருவூலம்-கணக்குத் துறை தகவல்

வருமான வரி பிடித்தத்துக்கு உள்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை ("பான்') கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கருவூலம்-கணக்குத் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அத்துறை சார்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வூதியர்கள் மார்ச் முதல் பிப்ரவரி முடிய ஓராண்டில் பெறும் மொத்த ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவை ஆகியன கணக்கிடப்படுகின்றன.அவற்றின் மீது வருமான வரியானது மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்துபிடித்தம் செய்யப்படுகிறது.
வரும் 25-ஆம் தேதிக்குள்...
வருமான வரிச் சட்டத்தின் கீழ் தகுதியான முதலீடுகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களை ஓய்வூதியர்கள் ஜனவரி மாதத்தில் அளித்தால் அவற்றை சரிபார்த்து உரிய வரி மட்டும் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆவணங்களை ஜனவரி 25-ஆம் தேதிக்குள் அளிக்கத் தவறினால்

பீகார் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம், பெற்றோர்களுக்கு சிறை

பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உதவிசெய்யும்  பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

பீகாரில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த வருடம் மார்ச் 17–ந் தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு,  ‘காப்பி‘ அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கினர். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள். 

கல்வியிலுமா போலி?-தலையங்கம் dinamani

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணா மாநிலத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் ரூ.150 கோடி ஊழல் புகார் தொடர்பான வழக்கில் அன்றைய முதல்வர் சவுதாலா சிறை தண்டனை பெற்றார். அண்மையில், உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு என்பதால் சுமார் 3,000 நியமனங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
தற்போது, தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியர் நியமனம் பெற்ற சம்பவங்கள் அம்பலமாகி வருகின்றன. 

Get your annual statement salary(TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம் - )

 click here  http://epayroll.tn.gov.in/tngepay/Login/employeelogin.aspx

Get your 
🏼pay slip ,🏼annual salary statement , 🏼pay drawn particulars...
Enter your 


  1. 🏼Employee  code (TPF/CPS number)
  2. 🏼Suffix (EDN)
  3. 🏼Date of birth(DD/MM/YYYY)

புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை.

புதுச்சேரியில் நாளை 30க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள், 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் வலியுறுத்தி உள்ளனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் வரி விகிதத்தை குறைக்கவும் உயர்மட்ட குழு பரிந்துரை.

வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், வரி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு நியமித்த உயர்மட்ட குழு சிபாரிசு செய்துள்ளது.
உயர்மட்ட குழு
வருமான வரி சட்டங்களில், சில உட்பிரிவுகள், இரண்டு அர்த்தங்களைத் தரும் வகையில் இருப்பதால், பல்வேறு வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அத்தகைய உட்பிரிவுகளை ஆய்வு செய்து, அவற்றை எளிமைப்படுத்துவது குறித்து சிபாரிசு செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையிலான உயர்மட்ட குழுவைகடந்த ஆண்டு அக்டோபர் 27–ந் தேதி மத்திய அரசு நியமித்தது.அக்குழுவின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். முதல்கட்ட சிபாரிசுகளை ஜனவரி 31–ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது

ALL DEEO's Meeting held on 20/01/16 at Chennai SIEMAT HALL..

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR ) திருத்தத்திற்கு 10 & 12 வகுப்பு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது - சேலம் முதன்மை கல்வி அலுவலர்

திண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு 20-1-16 அன்று விடுமுறை

திண்டுக்கல் மாவட்டம் அருள் மிகு அபிராமி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 20;-1-16 அன்று நடைபெறுவதால் அன்றுதிண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை

ஆசிரியர்களுக்கு எதிராக ஒரு அரசியல் எப்போதும் செயல்பட்டு கொண்டே இருக்கிறது-திருச்சி கோ.நாகராஜன்

ஆசிரியர்களுக்கு எதிரான அக்கிரமம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. காத்து இருக்கிற தேர்வுபணி , தேர்தல் பணிக்கு முன்பாக ஆதார் இணைப்பு பணி..... ஊருக்கு இளச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி போல தாலுக்கா ஆபிஸ், ரெவுன்யூ ஆபிஸ் வேலை என்றால் அடிமைகள் ஆசிரியர்களா ? அதுவும் கல்விபணி பாதிக்காமல் பள்ளி முடிந்த பிறகு பார்க்க வேண்டுமா ? ஆடு நனைகிறது என்று ஓநாய்க்கு என்ன கவலை. உலகமயமாக்கலில் ஒரு அரசியல் ஒளிந்து இருப்பது போல ஆசிரியர்களுக்கு எதிராக ஒரு அரசியல் எப்போதும் செயல்பட்டு கொண்டே இருக்கும் . ஆசிரியர்களே ! தேர்தல் பணிக்கு Computer work க்கு கல்லூரி மாணவர்களை பயன்படுத்துவது போல இதற்கு பயன்படுத்த முடியாதா ? ஏன் VAO Office உக்கார்ந்து கொண்டு மக்களை வரச் சொல்லி இணைக்க முடியாதா ? வீதி ,வீதியாக, வீடு வீடாக செல்ல முத்திரை குத்திய நாம் இருக்கும்போது அவர்களுக்கு என்ன கவலை ? தோழர்களே! இனி நாம் கொஞ்சம் சொரணையுடன் எதிர்க்க வேண்டும் . இது 'தேசிய வேலை ' நீங்கள் தான் செய்ய வேண்டும் என்பான் அதிகாரகாரன் . ஆஹா ! என்றோ அடங்கி போகுதல் காரணமாக தான் நாம் இன்று வீதி ,வீதியாக அலைகிறோம் . மக்களே ! இயக்கம் சார்ந்து இறங்குவோம் ! இனி வரும் காலங்களில் 'இல்லை' வேறு பணி 'கல்வியை' தவிர ......என்ற நிலையை தொடுவோம் . எல்லா பணிகளிலும் மாற்றம் வந்து விட்டது. நமக்கு இன்னும் விடியவே இல்லை. அறுவைக்கு ஆள் பிடித்த காலம் மாறி ஆதாருக்கு ஆள் பிடித்து கொண்டு இருக்கிறோம் . வேதனையாக தான் இருக்கிறது தோழர்களே ! இயக்கம் சார்ந்து இயங்குவோம் இல்லையென்றால் உறங்குவோம் !!!!!

விடைத் தாள் நகல்: பக்கத்துக்கு ரூ. 2க்கு மேல் வசூலிக்க தகவல் ஆணையம் தடை.?

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தேர்வு நடத்தும் நிறுவனங்கள் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத் தாள்களின் நகலைப் பெறுவதற்கு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யக் கூடாது என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகியவை இந்த உத்தரவின் நகல்களை அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஆப்னே இன்கிடி என்பவர் தனது ஐந்து விடைத்தாள்களின் நகல்களை, தகவல் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டு மனு அளித்தார். பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 750 வீதம் ரூ. 3750 கட்டுமாறு உத்தரவிட்டது.

வாக்காளர் இறுதி பட்டியல்: நாளை வெளியீடு

தமிழகம் முழுவதும், 2015 செப்., 15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பட்டியல் திருத்தப் பணி, அக்., 24ல் நிறைவடைந்தது.வாக்காளர், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, மூன்று சிறப்பு முகாம் நடந்தது. 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.மொத்தம், 22.81 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன

மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ரவரி 5 வரை நடைபெறும்

தமிழகம் முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தகவல் சேகரிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இது குறித்து, மக்கள் கணக்கெடுப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் சேகரிப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, குடும்பத்தினர் பற்றிய தகவலை சேகரிப்பார். 

உதவி பெறும் பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தருமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம், பள்ளி பராமரிப்பு செலவு மற்றும் மாணவர்களுக்கான சலுகைகளை, அரசே ஏற்றுக்கொள்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட ஆணை .

வருமான வரி-2016 - மாதிரி கணக்கீடு (வெளியீடு-Income tax department of india)

CIRCULAR NO : 20/2015,North Block, New Delhi Dated the 2 nd December, 2015
F.No. 275/192/2015-IT(B) Government of India Ministry of Finance Department of Revenue Central Board of Direct Taxes.
page no-51 Example-6வாட்ஸ்அப் இனி முற்றிலும் இலவசம்

முனிச் : இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினராலும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப் அப்ளிகேசனை, இனி முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் அப்ளிகேசனை, முதல் ஆண்டில் மட்டுமே இலவசமாக பயன்படுத்தமுடியும் என்ற நிலை இருந்தது, பின் இந்தியாவில், ஆண்டிற்கு ரூ.54 கட்டணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கட்டணமும் ரத்து செய்யப்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனர் ஜேன் கௌம் கூறியுள்ளார்.

INCOME TAX CALCULATION- EXCEL FILE WITH FORM 16


INCOME TAX CALCULATION- EXCEL FILE  WITH FORM 16
CLICK HERE A4 SHEET FILE

CLICK HERE LEGAL SHEET FILEThanks to
Mr.L.LOUIS.,M.A.,M.A.,M.Ed.,M.Phil.
,B.T. Asst,
P.U.MUSLIM MIDDLE SCHOOL,
THIRUVADATHANUR,
THANDARAMPET TALUK,
THIRUVANNAMALAI DISTRICT

INCOME-TAX DEDUCTION FROM SALARIES DURING THE FINANCIAL YEAR 2015-16 UNDER SECTION 192 OF THE INCOME-TAX ACT, 1961.

INCOME-TAX DEDUCTION FROM SALARIES DURING THE FINANCIAL YEAR 2015-16 UNDER SECTION 192 OF THE INCOME-TAX ACT, 1961. CLICK HERE

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள்: ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாததால் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள்.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரி யர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் களுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தாலும் தமிழ கத்தில் அது தொடர்பான அர சாணை 15.11.2011 அன்றுதான் வெளியிடப்பட்டது.

தேர்வு அமைப்புகளுக்கு திடீர் கட்டுப்பாடு

புதுடில்லி: 'பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் 
கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை., திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பாடப்பிரிவுக்கு, 750 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதை எதிர்த்து, ஒரு மாணவர், மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த தகவல் ஆணையம், 'திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பக்கத்துக்கு இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.

மக்கள் தொகை விவரம் உறுதிபடுத்தும் பணி இன்று துவக்கம்!

மக்கள் தொகை விவரம் உறுதிபடுத்தும் பணி இன்று துவக்கம்

மக்கள் தொகை விவரங்களை உறுதிபடுத்தும் பணியை ஆசிரியர்கள் இன்று துவக்குகின்றனர். இந்தியாவில் கடந்த 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை!!!

கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை
கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள், விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.
      
இன்சூரன்ஸ் கட்டுப்பாடு ஆணையம், 'இ - வாஹன் பீமா' என்ற புதிய திட்டத்தை துவக்கி உள்ளது. இதன்படி, இன்சூரன்ஸ் ஆவணங்கள் அனைத்தும் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளன.

ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதிய கணக்குகளுக்கு விடிவு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

        புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.  இவர்களில், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில்

CPS ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே - தகவல் தொகுப்பு மைய ஆணையாளர் அறிவிப்பு

துறை மாறும் அரசு ஊழியர்கள்Cps கணக்குகளை இணைக்கலாம்-தினமலர் இன்றைய செய்தி

மகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுக்கக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் பிரவீனாமேரி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான், 23.12.2009 அன்று வருவாய்த்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்தேன். 2015-ம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வு பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை. காரணம் கேட்ட போது, நான் 5 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்று தெரிவித்தனர். நான், 272 நாட்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தேன். இந்த விடுமுறை காலத்தை பணிக்காலமாக சேர்க்கவில்லை.

அசத்தியகோவை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.


கோவை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  விஜய் டிவி யின் ”ஒரு வார்த்தை ஒருலட்சம்” நிகழ்ச்சியின் கால் இறுதி போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு  தகுதி பெற்றுள்ளனர்.பங்கேற்ற மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியருக்கும் மனமார்ந்த  வாழ்த்துக்கள் tntf.in

போலி ஆசிரியர்களை ‘களை’ எடுக்க உத்தரவு!

போலி சான்றிதழ் புகார்களால், 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன், 37, வேலூர் மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி கிராம அரசு தொடக்கப்பள்ளியில், போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும், போலி சான்றிதழ் சப்ளை செய்த கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

"ஆண்டுதோறும் 1 லட்சம் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்கள்'

அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து தில்லியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில், 70 சதவீத அங்கன்வாடிகள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.

அலுவலகத்தில் டேரா போடும் ஆசிரியர்கள்: தொடக்கப்பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு

சேலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், பல்வேறு அலுவலக பணிகள் செய்வதாக கூறி, பல ஆசிரியர்கள் பள்ளி பணிகளை புறக்கணித்து வருகின்றனர். இதனால், பல பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில், 1,488 துவக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிர்வாக வசதிக்காக, ஒன்றியத்துக்கு, ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம்

அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார்.

பிரிட்டோ 800 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் எடுத்து 74.38 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றார்.

சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதுடில்லி: சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

கடந்த மாதம் முடிவடைந்த, பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடரில், சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா - 2015 நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்ததை அடுத்து, அந்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணையை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

தொடக்க கல்வி-நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு 2015-ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சாரந்த இயக்குநர் செயல்முறைகள்..

  • CLICK HERE FOR DIR PROC

தகதிகாண்பருவம் முடித்தவர்களுக்குச் சான்று அளிக்கப்பட்டு விட்டதா என்ற விவரங்கள் அனுப்ப உத்தரவு.

குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பரிசீலனை முடிந்த நிலையில், தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'டை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. நிராகரிப்பு பட்டியலில் இல்லாமல், முறையாக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியோருக்கு, ஹால் டிக்கெட்

ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் :ஆசிரியருக்கு "பிரிண்ட் அவுட்' விண்ணப்பம் வழங்கல்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஜன.,18 முதல் இப்பணியை ஆசிரியர்கள் துவக்குகின்றனர். 
          2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று குடும்ப தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்து,

தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடை மாற்றம், பதவி உயர்வு, மற்றும் அலுவலக பணியிடங்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்று வருவதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு புகார் சென்றது.

எம்.சி.ஏ. - எம்.இ. பட்டதாரிகளை பேராசிரியராக நியமிக்ககூடாது: ஏஐசிடிஇ உத்தரவு.

முதுநிலை கணினி அப்ளிகேஷன்ஸ் (எம்.சி.ஏ.) முடித்து முதுநிலை பொறியியல் (எம்.இ.) பட்டம் பெற்றவர்களை பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியராக நியமிக்கக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. இயற்பியல், எம்.எஸ்சி. மின்னணுவியல், எம்.எஸ்சி. கணினி அறிவியல், எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம், முடித்து எம்.இ. முடித்திருப்பவர்களையும் ஆசிரியர் பணிக்கு பொறியியல் கல்லூரிகள்எடுக்கக் கூடாது எனவும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு.

பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

          பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்தல், பொதுத் தேர்வு பணிகளுக்கு பயிற்சி

30 ஆயிரம் TET ஆசிரியர்கள் தவிப்பு

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் நியமிக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் முதல் இரண்டாண்டு பணியை,(probationary period) பயிற்சியாக கணக்கிட வேண்டும். அந்த பயிற்சிக்கான சான்றிதழை வழங்கி, பணிமூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.

web stats

web stats