rp

Blogging Tips 2017

மார்ச் 24 வரை தமிழக சட்டசபை தொடர்!!!

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் திங்கள் (மார்ச் 20 ) முதல் மார்ச் 24 வரை 5 நாட்கள் நடத்துவது எனவும், கடைசி நாளான மார்ச் 24 அன்று நிதியமைச்சரின் பதிலுரை இடம்பெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது

TN BUDGET 2017-18: பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு : அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.3,680 கோடியும், உயர்கல்வி உதவித் தொகைக்காக ரூ.1,580 கோடி நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு!!!

தமிழக அரசுஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது!!

TN BUDGET 2017-18:150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார்

150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும் 
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.26,932 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் எண் அடையாளம் மட்டுமல்ல, அதுக்கும் மேலே...

கடந்த 15 நாட்களுக்குள் ஆதார் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமா அவசியமில்லையா
என்கிற குழப்பங்களை தெளிவுபடுத்தாமல் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆதார் எண் குறித்த அறிவிப்புகள் மக்களை மேலும் அலைகழிக்கிறது என்கின்றனர் ஒரு சாரர். இந்த நிலையில் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. விரைவில் 50 திட்டங்களுக்கான அறிவிப்புகள் வர உள்ளன. குறிப்பாக நேரடி மானியத் திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 84 திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை நடைமுறைக்கு கொண்டு வருவதுதான் இதன் நோக்கம்.
எல்பிஜி இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில் உள்ளது

பணிக்கொடை: திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்.

தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 1 முதல் புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார், பான் கார்டு எண்கள் கட்டாயம் - வட்டார போக்குவரத்துத் துறை உத்தரவு..

மத்திய- மாநில அரசுகளின் நல உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. ரே‌ஷன் கடை, கியாஸ் ஏஜென்சி வங்கி என படிப்படியாக அனைத்து துறைகளிலும்ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் விவரங்களை ஆதார் எண் மூலம் இணைப்பதால் அரசின் உதவிகள் எளிதாக வழங்குவதோடு அதனை முறைப்படுத்தவும் உதவுகிறது.போக்குவரத்து துறையில் தற்போது ஆதார் எண், பான்கார்டு, செல்போன் எண் ஆகியவை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம்அ கவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். ஓய்வூதியம் பெறும் 55.51 லட்சம் பேரும் இதனால் பயனடைவார்கள்

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்களை கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' அகராதி: வரும் கல்வியாண்டில் அறிமுகம்

தூய தமிழ் சொற்களை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க நற்றமிழ் அகராதி வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இந்த அகராதியை தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.tam

 இது குறித்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகத முதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.செழியன் புதன்கிழமை கூறியது: அகர முதலித் திட்டத்தின் தனித்திட்டப் பிரிவாகச் செயல்படுவது தமிழ்க் கலைக் கழகமாகும். தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை வழங்கப்பட்டது.

ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 
எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்புதான் பிறந்த தேதி, பெயரை மாற்ற முடியும்--மாணவர்களின் பெற்றோர் கவனத்துக்கு

சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்பு தான் அப்பணியை செய்ய முடியும். தேர்வு எழுதிய பிறகு மாற்றம் செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

 நான் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். நான் கடந்த 1989ம் ஆண்டு பிறந்தேன். எனது பெற்றோர் அதை மறந்து நான் பிறந்தது 1992ம் ஆண்டு என்று மாற்றி கொடுத்து விட்டனர்.

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.தமிழக அரசின் வருவாய், பல வகைகளில் குறைந்துள்ளதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவோதயா பள்ளி அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்

தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு: கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை, மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன.   75 சதவீதம்ஜ வஹர் நவோதயா வித்யாலயா என்பது, உண்டு, உறைவிடப் பள்ளி. அங்கு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்த பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, கட்டணம் இல்லை. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

பாடநூல் கழக இயக்குனர் திரு கார்மேகம் அவர்கள் உடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருப்பாளர்கள் சந்திப்பு

பள்ளிக் கல்வி முதன்மை செயலாளர் திரு.உதயசந்திரன்.இ.ஆ.ப அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் சந்திப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க வரலாற்று நாயகனோடு மாநில பொறுப்பாளர்களும் , சென்னை மாநகர உறுப்பினர்களும் சந்தித்த நிகழ்வு...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க வரலாற்று நாயகனோடு மாநில பொறுப்பாளர்களும் , சென்னை மாநகர உறுப்பினர்களும் இன்று சந்தித்த நிகழ்வு...      
               முதலில் மாண்புமிகு கல்வி அமைச்சரை சந்திக்க சென்ற போது , அவர் நமது அய்யாவை பார்த்தவுடன் வாங்க அண்ணா என்று அன்போடு வரவேற்று , ஏன் அண்ணா உடல் இளைத்து உள்ளீர்கள் , நலமாக இருக்கீறர்களா ? தற்போது நாமக்கல்லில் தானே இருக்கிறீர்கள் என்று அன்போடு விசாரித்து உள்ளார்.    
      
                           பிறகு  , MLC கால நிகழ்வுகளையும் இருவரும் சுகமான நினைகளோடு பகிர்ந்து கொண்டனர் .                           அதன் பிறகு நமது பொறுப்பாளர்களை பார்த்து இந்த தலைமையின் கீழ் பணிபுரிய நீங்கள் எல்லாம் பெருமைபட்டு கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்கள். 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநில பொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு .செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு

DEE - ஆதார் அட்டையில் பிறந்த தேதியினை திருத்தம் செய்தல் சார்பான தகுதியான ஆவணங்கள் வெளியிடப்பட்டமை சார்பு - தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள்!!


நாளை தமிழக பட்ஜெட்

தமிழக சட்டப் பேரவையில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார்.

இதற்காக சட்டப் பேரவையை காலை 10.30 மணிக்குக் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார். வரும் 23-ஆம் தேதி, வரும் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் டி.ஜெயகுமார் உரையாற்றவுள்ளார். 

அரசு ஊழியர்களின் சேம நல நிதியிலிருந்து (GPF) தொகையை திரும்ப பெறுவதற்கு விதிகள் தளர்த்தி மத்திய அரசு உத்தரவு


DEE PROCEEDINGS - நாள்:13/3/17- தேசிய கீதம் இசைக்கப்படும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்துதல் சார்ந்த உத்தரவு


ஏப்., 15 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 வரை,
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், மார்ச் 2ல், பிளஸ் 2; மார்ச் 8ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி நடந்து வருகிறது

3rd Term Exam - 2017 Time Table

6th TO 9 th STD THIRD TERM EXAM TIME TABLE - 2017

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியீடு...

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர்.

TNPSC - Departmental Exam. (துறைத் தேர்வு) - தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த எந்த துறைத் தேர்வுகளை எழுத வேண்டும், எந்த தேர்வுக்கு என்ன புத்தகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. (துறைத்தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை..) [முழு விபரங்களுடன்]

தமிழக பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வு தாள்கள் 👇

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்

உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும். 👇

750 PP - தனி ஊதியத்தை பதவி உயர்வில் எப்படிநிர்ணயிக்க வேண்டும் என்ற திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் மாதிரி நிர்ணயம் - புதிய கணக்கீடு


வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்கிறதா..? உங்களது செல்போன் எண், ஆதார் விவரம் வழங்க ரெடியாகுங்கள்!


தற்போதுள்ள சேமிப்பு கணக்குதாரர்களில் 65 % அளவுக்கே செல்போன் நம்பரை கொடுத்துள்ளனர்.50 % வாடிக்கையாளர்கள்தான் ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர்.சேமிப்பு கணக்கு வைத்துள்ளோர் அனைவரும் செல்போன் மற்றும் ஆதார் எண்ணை வங்கிகளுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடுபிடி விதித்துள்ளது.மேலும், மொபைல் பேங்கிங் வசதியை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றும், அரசு கூறியுள்ளது.தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TRB நாளிதழில் அறிவிக்கை (திருத்தம் / விளக்கம்) - 23.08.2010 க்கு முன் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு, Aided & Un-Aided பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வை எழுத தேவையில்லை. - TRB அறிவிக்கை தகவல். (நாள்: 07.03.2012)

 TRB நாளிதழ் அறிவிக்கை எண்: 04/2012,  நாள்: 07.03.2012

              திருத்தம் / விளக்க அறிவிக்கை 👇

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை.


RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்

No automatic alt text available.

web stats

web stats