தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் என்பவர் கடந்த 10-ந் தேதி கல்லூரி மாணவர்கள் 3 பேரால் படுகொலை செய்யப்பட்டார். கல்லூரியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் 3 பேரும் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமணி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, தூத்துக்குடியில் கல்லூரி முதல்வர் படுகொலையை கண்டித்து, கன்னியாகுமரியில் அனைத்து தனியார் கல்லூரிகளும் வருகிற அக்டோபர் 21ந் தேதி மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.