ஒரு அரசனின் மகளை இளைஞன் ஒருவன் காதலித்து விட்டான் அவனை சிறையில் அடைத்த அரசன் இளைஞனுக்கு ஒரு விநோதமான தண்டனை அறிவித்தான் அதன்படி சிறையில் இருந்து வெளியேற இருவாசல்கள் உள்ளன ஒருவாசலின் வழியே வெளியேறினால் பாதாளக்குழிக்குள் விழுந்து இறக்க நேரிடும் மற்றொரு வாசலின் வழியே வெளியேறினால் தப்பிக்கலாம் ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு காவல்காரர்கள் உண்டு
இரண்டு காவல்காரர்களுள் ஒருவன் உண்மை பேசுபவன் மற்றொருவன் பொய்பேசுபவன் இரண்டு காவல்காரர்களுக்கும் தப்பிக்க வைக்கும் வைக்கும் வாசல்தெரியும் மேலும் யார் உண்மைபேசுவது யார் பொய் பேசுவது எனவும் தெரியும்
இளைஞனுக்கு யார் உண்மை பேசுவது யார் பொய் பேசுவது என சொல்லாமல் இரண்டு காவல்காரர்களில் ஒருவரிடம் ஒரே கேள்வி மட்டும் கேட்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது அதன்படி சிறையில் இருந்து தப்பித்து வந்தால் தன் மகளை மணந்து கொண்டு இந்த நாட்டிற்க்கே இராஜாவாக இருக்கலாம் இல்லை என்றால் பாதாளக்குழிக்குள் விழுந்து இறந்து போக வேண்டும் என்று தண்டனை அளிக்கப்பட்டது .இளைஞன் ஒரே கேள்வியை கேட்டு சிறையில் இருந்து தப்பித்து வந்து அரசனின் மகளை மணந்து நாட்டிற்க்கே இராஜா ஆனான். இளைஞன் கேட்ட கேள்வியை உங்களால் யூகித்து சொல்ல முடியுமா ? உங்க IQ வை ஒத்துக்கறேன் .
காவல்காரர்களில் ஒருவனிடம் சென்று “ நான் தப்பித்துச்செல்ல சரியான வாசல் எது என்பதை உன் உடன் உள்ள காவலாளியிடம் கேட்டால் அவன் எந்த வாசலை காட்டுவான் ? “ என்று கேட்டு அவன் காட்டிய வாசலை தவிர்த்து மற்ற வாசலின் வழி சென்று சென்று தப்பித்து விடுவான்
விளக்கம் .......
என்னங்க தெளிவா குழப்பற மாதிரி இருக்கா கவலைய விடுங்க விளக்கீட்டா போச்சு இளைஞன் கேள்வி கேட்ட காவலாளி உண்மை பேசுபவனாக இருந்தால் அடுத்தவன் பாதாளத்திற்க்கு செல்லும் வாசலை கூறுவான் என்று பாதாளத்திற்க்கு செல்லும் வாசலை காட்டுவான் எனவே அதை தவிர்த்தால் தப்பித்து விடலாம்
இளைஞன் கேள்வி கேட்ட காவலாளி பொய் பேசுபவனாக இருந்தால் உண்மை சொல்லுபவன் கூறும் தப்பிக்கும் வாசலை சொல்லாமல் பொய் சொல்ல வேண்டும் என்பதால் பாதாளத்திற்க்கு செல்லும் வாசலை காட்டுவான் எனவே அதை தவிர்த்தால் தப்பித்து விடலாம்
நன்றி திரு :- குரு ......
No comments:
Post a Comment