rp

Blogging Tips 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2

ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
தேர்வு கட்டணம் 

>ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500,
>எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
>மாற்றுதிரனாளிகளுக்கு ரூ-250-
>விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்

>பாரத் ஸ்டேட் வங்கி,கனரா வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் பணம் செலுத்தலாம்,
>டி.ஆர்.பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படவேண்டும்
>ஓ,எம்,ஆர் எனப்படும் வினண்ணப்பத்தில் மட்டுமே கோரப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்
>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 01.07.2013 மாலை 5.30 க்குள்ளாக நேரில் சமர்பிக்கப்பட வேண்டும்.
>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலில் ,விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை கட்டாயம் பெற அறிவிக்கப்பட்டுள்ளது.
>ஆன்லைன்,தபால்,பேக்ஸ்,கூரியர் போன்ற வழிகளிலும்,ஜெராக்ஸ் நகலில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் (டி ஆர் பி மையம் அல்லது வேறு அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டால்) நிராகரிக்கப்படும்.
நன்றி : திரு. கே.பி. ரக்ஷித்

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-ஓர் ஆய்வு(பாகம்-1)

தகுதிகள்
PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
=> தற்போது தனியார் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்- 23/8/2010 அன்றோ அதற்கு பிறகு நியமன ஆனண பெற்றிருப்பின் தேர்வு எழுதி கட்டாயம் 5 ஆண்டுக்குள் தேற வேண்டும்.
=>தற்போது தேர்வில் வெற்றிபெறுவோர் அனைவருக்கும் 7 ஆண்டுகள் செல்லத்தக்க ஆசிரியர் தகுதிசான்று வழங்கப்படும்.
=> தகுதிசான்று பெற்றவர்களுக்கு தனியாக வெயிட்டேஜ் (அரசு ஆணையின் படி)அடிப்படையில் பணிஆணைகள், இடஓதிக்கீடு மற்றும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
=>D.T.Ed., தகுதிபெற்றோர் தாள்-1,, B.Ed., தகுதிபெற்றோர் தாள்-2,க்குண்டான தேர்வுகள் எழுதலாம்,
=>இரண்டு தாள்களும் எழுத தகுதி பெற்றோர் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பித்து, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்தி தேர்வுகள் எழுத வேண்டும்
அன்புடன் திரு. ரக்‌ஷித்.K.P
.

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.


(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : [email protected]

தகவல் அறியும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம் - 23.08.2010க்கு முன் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, பின் நியமனம் செய்யப்பட்ட அரசு / தனியார் பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை

Add caption

all forms

எல்லா படிவங்களும்  டவுன்லோடு செய்யஇங்கே கிளிக் செய்யவும்

பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு கோடி புத்தகங்கள் தயார்

சென்னை: "வரும், 24ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியதும், ஒரு கோடி பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த, 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 4.25 கோடி புத்தகங்கள், இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்காக, 2.62 லட்சம், தமிழ் பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர விண்ணப்பங்கள் விற்பனை

சென்னை: அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகப்பட்டு வருகின்றன. சென்னை, வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட, 32 மாவட்டங்களில், 62 தொழிற் பயிற்சி மையங்கள் உள்ளன.
சென்னையில், அம்பத்தூர், கிண்டி, திருவான்மியூரில் அரசு தொழில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், வெல்டர், டர்னர், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பாடங்கள் வழங்கப்படுகின்றன.

IMPORTANT FORMS

  1. தற்செயல்விடுப்பு தலைமையாசிரியர் அனுமதிபடிவம்
  2. தற்செயல்விடுப்பு A.E.E.O. அனுமதி படிவம்
  3. C.P.S APPLICATION FOR ADMISSION 
  4. ஈட்டியவிடுப்பு ஒப்படைப்புபடிவம்
  5. விழாமுன்பணவிண்ணப்பம்
  6. APPLICATION FOR FINAL CLOSURE OF GENERAL PROVIDENT FUND
  7. வருங்கால வைப்புநிதி முன்பணம் பெறுவதற்கு விண்ணப்பப்படிவம்
  8. Health Insurance form
  9. உயர்கல்வி அனுமதிகோரும் படிவம்
  10. RENTAL HOUSING SCHEME IN THE CITY
  11. காலமுறை ஊதிய உயர்வு விண்ணப்பம்
  12. தகவல் அறிதல் உரிமை சட்டம் விண்ணப்பம்
  13. தொடக்க-நடுநிலை பள்ளிகளில் ஆய்வறிக்கை
  14.  Leave Travel Concession
  15. மருத்துவஈட்டிய விடுப்பு விண்ணப்பம்
  16. PASSPORT OBJECTION CERTIFICATES
  17. சம்பளப் பட்டியல் படிவம் 
  18. pay certificate 
  19. விருப்ப ஒய்வுகோரும் விண்ணப்பம்
  20. TeacherTransferApplication
  21. Vehicle Advance Format
  22. VRS  Form

TNTET 2012-13 NOTIFICATION | 2013க்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

TRB  வளைதளம் பார்வையிடஇங்கே சொடுக்கவும்
NOTIFICATION=CLICK HERE

T.N.P.S.C - APPLY FOR POSTS INCLUDED IN GROUP-VI SERVICES TOTAL VACANCY - (5566 VACS)

IMPORTANT INFORMATION
DATE OF NOTIFICATION LAST DATE FOR SUBMISSION OF APPLICATION LAST DATE FOR PAYMENT OF FEE THROUGH BANK OR POST OFFICE DATE OF WRITTEN EXAMINATION NO. OF VACANCIES
14.06.2013 15.07.2013 17.07.2013 25.08.2013 5566
IMPORTANT LINKS
1
HOW TO APPLY
2
APPLY ONLINE -  GROUP-IV SERVICESclick here
3
NOTIFICATION IN TAMIL
4
NOTIFICATION IN ENGLISH
5
INSTRUCTIONS TO CANDIDATES - OBJECTIVE TYPE EXAMINATIONS

பி.காம், பொருளாதாரம் படித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முடியாது

சென்னை :  அரசுப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளி, உயர்நிலை பள்ளி வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்காக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் யார் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. அதனால் பி.எட் படித்த 6.50 லட்சம் பேர் தகுதித் தேர்வு எழுதினர். ஆனால் இந்த ஆண்டு தகுதித் தேர்வில் பி.காம். பட்டதாரிகளுக்கு ‘செக்’ வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று அந்த பாடங்களில் பி.எட் படித்தவர்கள் மட்டுமே தகுதித் தேர்வு எழுத முடியும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

பார்வயிட கிளிக் செய்யவும் 

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள் அரசுத் தேர்வுகள் துறையின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன.
மறுமதிப்பீட்டில் எந்தவித மாற்றமும் இல்லாத 2,440 பேர் அடங்கிய பட்டியல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பதிவு எண்ணோடு, பெயர், பாடம் மற்றும் மதிப்பெண்ணில் மாறுதல் இல்லை போன்ற தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் இடம்பெறாத மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் மாற்றமடைந்துள்ளதாக அறிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது முகவரிக்கு அருகில் உள்ள விநியோக மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்கள் படிக்கும்போதே அறிவியல் தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபட வேண்டும்_அப்துல் கலாம்

சென்னை : மாணவர்கள் கல்வி கற்கும்போதே அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்தார்.
திருவள்ளூர் கண்டிகைபேர் ஜெஎன்என் பொறியியல் கல்லூரி முதலாண்டு பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் வெமூரி லட்சுமிநாராயணா, அறக்கட்டளை தலைவர் உஷா ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.ராஜாராம் ஆகியோர் 220 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர். விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:

எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு 30 நாள்களுக்குள் துணைத் தேர்வு நடத்த வேண்டும்

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு தேர்வு முடிவு வெளியான 30 நாள்களுக்குள் துணைத் தேர்வை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கே.வெற்றிச்செல்வன் உள்ளிட்ட எம்.பி.பி.எஸ். மாணவர்கள் 14 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 2011-2012-ஆம் கல்வியாண்டில் நாங்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தோம். முதலாம் ஆண்டுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அந்தத் தேர்வில் நாங்கள் வெற்றி பெறவில்லை. பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் துணைத் தேர்வை நடத்தியது.

+2 விடைத்தாள் தவறாக திருத்திய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை=அரசுபள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்

""பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

பிளஸ் 2, மறு மதிப்பீடு திட்டத்தில், 5,726 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், பெரும்பாலான மாணவர்களின் மதிப்பெண்கள், ஏற்கனவே இருந்ததை விட, குறைந்து விட்டதாக, மாணவர்கள் புலம்பினர். குறிப்பாக, விண்ணப்பிக்காத மாணவர்களின் விடைத் தாள்களும், மறு மதிப்பீடு செய்ததால், பெரும் குளறுபடி ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா, நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்

தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை 17ம் தேதி வெளியிட அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த பூபாலசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகம் முழுவதும் சுமார் 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் எத்தனை கல்லூரிகள் தரமானவை என தெரியவில்லை.

அகஇ - 6 முதல் 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி கட்டாயமாக நடைமுறைப்படுத்தவும், நடைமுறைப்- படுத்தாத பள்ளிகளின் விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

please click hereto see the  rec pro

சி.ஆர்.சி மையக் கூட்டங்களும் பணியிடைப் பயிற்சியும்:

சி.ஆர்.சி மையக் கூட்டங்களும் பணியிடைப் பயிற்சியும்:

தொடக்க நடுநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு 2013-14 ஆம் ஆண்டிற்கான பணியிடைப் பயிற்சிகள் மற்றும் மாதாந்திரக் கூட்ட மையங்களை நடத்துவதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள SCERT மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி & பயிற்சி நிறுவனங்களை கல்வித்துறைச் செயலகம் அறிவுறுத்தியுள்ளதாக அறிய வருகிறது.
இதனடிப்படையில் DIET விரிவுரையாளர்கள் இந்த வாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் தலா ஒரு கருத்துக் கேட்புப் படிவத்தைக் கொடுத்து பலவுள் தெரிவு அடிப்படையில் அச்சிடப்பட்டிருந்த வினாப்பட்டிகளைப் பூர்த்தி செய்து பெற்றுச் சென்றனர். இதில் எந்த மாதிரியான பயிற்சிகள் தேவைப்படுகின்றன எனக் கேட்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் பெற்ற படிவங்களைத் தொகுத்து பெரும்பான்மையானோர் கேட்டுள்ளவாறு பயிற்சி நடத்தப் பரிந்துரைத்து தொகுப்பறிக்கையை இந்த வார இறுதிக்குள் SCERT மூலமாக செயலகத்திற்குச் சமர்ப்பிப்பதாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதனால் குறுவள மையக் கூட்டங்கள் (சி.ஆர்.சி) மற்றும் பயிற்சிகள் பற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ள வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்தப்படலாம்.

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்: தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.


சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்:

தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.

http://1.bp.blogspot.com/-NA4nfm-Pbzs/Ubr85tugDhI/AAAAAAAAAMM/zeu8gtQdy6k/s400/e-districttt.jpg
இனிமேல் நீங்கள் V.A.O, R.I, TAHSILDAR இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.

இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகையான சான்றிதல்கள் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்களிலும் ஏற்று கொள்ளப்படும்.

நாளை (15.06.13) அனைத்து தலைமையாசிரியர்கள் கூட்டம் - தொடக்கக்கல்வித் துறை உத்தரவு.

நாளை அவசரமாக அனைத்து வட்டாரங்களில் தலைமை ஆசிரியர் கூட்டம் நடத்த இயக்குனர் கடிதம் இங்கே கிளிக் செய்யவும்

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரும் மாணவர்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

2013–2014–ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பொறியியற் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னைக்கு வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு (1+1) அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் 50 சதவீதம் இருவழி பயண கட்டண சலுகை வழங்கப்படும்.

பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்

சென்னை: பொறியியல் கவுன்சிலிங் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், கவுன்சிலிங் தொடங்குவதற்கான இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், கவுன்சிலிங் தொடர்பான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜுன் 20 - அகடமிக் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்.
நடைபெறும் இடம் - நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
தொழிற்பிரிவு படித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள்

தமிழகத்தில், முதன்முறையாக, திருச்செந்தூர் அருகே பள்ளி ஆசிரியைகள், வெள்ளை நிற, "கோட்' அணிந்து, வகுப்பில் பாடம் நடத்துகின்றனர்.

மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், ஆசிரியையாகப் பணிபுரிவோர், நாகரிகமாக உடையணிய வேண்டும் என, தமிழக அரசு, சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவு, தமிழகத்திலேயே, முதன் முறையாக, திருச்செந்தூர் அடுத்த, மெய்ஞானபுரம், அம்புரோஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமலுக்கு வந்துள்ளது

483 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன்: நம்பர் ஒன் கிரீன் பார்க் பள்ளியின் தந்திரம்


பத்தாம் வகுப்பு தேர்வில் 483 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் வழங்கியுள்ளது நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி. இந்த பள்ளிதான் மாநிலத்தில் முதலிடம் பிடித்திருந்தது. இந்த பள்ளி முதலிடம் பிடித்ததற்கான காரணம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி பிடித்தது. ஆண்டு தோறும் இந்த பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை காட்டி வருகிறது. இதனால், இந்த பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாணவர்களுக்கு கட் ஆப் மார்க் 483 என்று நிர்ணயித்துள்ளது. இதில், 483 முதல் 489 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வளவு பணம் கேட்டாலும் பிள்ளையை இந்த பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தாலும், தங்கள் பிள்ளைகள் இந்த பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்குவது உறுதி என்ற எண்ணத்தாலும் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் லட்சக்கணக்கான பணத்தை கறக்கிறது.

குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இந்த பள்ளி சீட் வழங்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

குழப்பமான அரசாணையால் ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்: 20 ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு

எம்.எட்., உடன், எம்.பில்., மற்றும் பி.எச்டி., தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு, இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வழி வகை செய்யும் அரசாணை, குழப்பங்கள் நிறைந்ததாக இருப்பதால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊக்க தொகையை பெற முடியாமல், தவித்து வருகின்றனர்.
பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் (பட்டதாரி ஆசிரியர்) பணிபுரியும்போது, எம்.எட்., தகுதி பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்கத் தொகை வழங்கலாம் என, கடந்த ஜனவரி, 18ம் தேதி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது

மறுமதிப்பீடு: முக்கிய பாடங்களில் 10 மதிப்பெண் வரை குறைந்தது

மறு மதிப்பீட்டுக்கான கட்டணம் செலுத்தாமலேயே தங்களது விடைத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் குறைக்கப் பட்டுள்ளதாக புகார் அளிக்க சென்னையில் உள்ள மறுமதிப்பீட்டு முகாம் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை பெற்றோருடன் வந்த மாணவர்கள்.                                                மறு மதிப்பீட்டுக்கான கட்டணம் செலுத்தாமலேயே தங்களது விடைத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் குறைக்கப் பட்டுள்ளதாக புகார் அளிக்க சென்னையில் உள்ள மறுமதிப்பீட்டு முகாம் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை பெற்றோருடன் வந்த மாணவர்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு 10 மதிப்பெண் வரை குறைந்தது. இதனால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மறுமதிப்பீட்டுக்கான கட்டணம் செலுத்தாமலேயே தங்களது விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள், பெற்றோர்கள் சென்னையில் உள்ள மறுமதிப்பீட்டு முகாம் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை திரளாக வந்து புகார் அளித்தனர்

குரூப் 4 தேர்வு: 5 ஆயிரத்து 566 இடங்களுக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி தேர்வு நடைபெறும் TNPSC


இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:இளநிலை உதவியாளர் (பிணையம்) (62), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (3469), தட்டச்சர் (1738), சுருக்கெழுத்து தட்டச்சர் (242), பில்கலெக்டர் (19), வரைவாளர் (30), நில அளவர் (6) என மொத்தம் 5 ஆயிரத்து 566 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 ஆகும்.இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதா.... விவரம் கேட்கும் பள்ளிக் கல்வித்துறை

தமிழகம் முழுவுதும் பள்ளிகள் திறந்த நாளில், பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.

8,000 பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் அறிவிப்பு

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, 8,000 பள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. ஆண்டு கட்டணமாக, 3,000 ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, பள்ளிகளுக்கு தகுந்தாற்போல், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருகைப்பதிவேட்டில் ஜாதி பெயர் நீக்கம்

மாணவர்கள் வருகைப்பதிவேட்டில், ஜாதியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கான வருகைப்பதிவேட்டின் முதல் பக்கத்தில், மாணவர்களின் விபரக்குறிப்பு இடம் பெறும். இதில், மாணவரின் தாய், தந்தை, தொழில், மற்றும் ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தாண்டு முதல் ஜாதியை குறிப்பிட வேண்டியதில்லை. அவர் எந்த மதத்தை சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல்-சஸ்பெண்ட் செய்யப்பட்ட 77 ஆசிரியர்களில் இதுவரை மறுநியமனம் செய்யப்படாத இரு ஆசிரியர்கள் குறித்த உயர் நீதிமன்ற ஆணை

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குதல் சார்ந்து 77 தலைமை ஆசிரியர்கள் மற்ரும் உதவி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு,அவற்றில் 75 ஆசிரியர்கள் நமது பொதுச்செயலரின் அதீத முயற்சியால் மீளப்பணிநியமனம் RE INSET  செய்யப்பட்டனர்.
ஆயினும் மோகனூர் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி,ஓலைப்பாளையம் தலைமை ஆசிரியர், திருமதி டி.கீதா, என்பாரது சஸ்பெண்டு உத்திரவு ரத்து செய்யப்பட்டு,அவரை மீண்டும் பணிநியமனம் RE INSET செய்ய சென்னை உச்ச நீதிமன்றம் இன்று உத்திரவிட்டுள்ளது.
மேலும் மோகனூர் ஒன்றியம் ஆரியூர்,நிதி உதவி தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர் திரு செல்லப்பா என்பாரது சஸ்பெண்ட் உத்டிரவிற்கு இடைக்காலத்தடை உத்திரவையும் வழங்கி சென்னை உச்ச நீதிமன்றம் இன்று உத்திரவிட்டுள்ளது.  இம்முயற்சிக்கு வழிவகுத்த பொதுச்செயலருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்
தகவல்
செ.முத்துசாமி,பொதுச்செயலர்

FLASH NEWS தமிழக அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன் அரசு 19 ஆம் தேதியும் ,அனைத்து உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி சங்கங்களுடன் 20ஆம் தேதியும் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை.-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கலந்துகொள்கிறது-பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அறிவிப்பு

FLASH NEWS தமிழக அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன் அரசு 19 ஆம் தேதியும் ,அனைத்து உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி சங்கங்களுடன் 20ஆம் தேதியும் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை.-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கலந்துகொள்கிறது-பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அறிவிப்பு

ஆடு நனைகிறது... ஓநாய் அழுகிறது...!தினமணி தலையங்கம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது மேலும் சில லட்சம் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், "ஆசிரியர் தேர்வு தொடர்பான பள்ளிக்கல்வித் துறை அரசாணை 252-ஐத் திரும்பப்பெற வேண்டும்; தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி, "ஆசிரியர் தேர்வின்போது ஆந்திர மாநிலத்திலும், அசாமிலும் உள்ளது போல தமிழகத்திலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

20–ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி மார்க் பட்டியல்: பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி தொடங்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

சென்னை
எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் ஜூன் 20–ந்தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி மதிப்பெண் சான்றிதழ் 20–ந்தேதி வழங்கப்படும் என்றும் பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 10–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் முடிவு மே 31–ந்தேதி வெளியிடப்பட்டது. அத்தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவ–மாணவிகளுக்கு 20–ந்தேதி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், 2013–2014–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கும். என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Provisional Merit List For MBBS/BDS Courses 2013-2014 Session.

click here to see provisional list

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் கிடைக்குமா?

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இலவச "பஸ் பாஸ்" வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பள்ளி கல்வித் துறையும், போக்குவரத்து துறையினரும் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
மாணவ, மாணவியரின் நலன் கருதி இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 19 முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 19-ஆம் தேதி (புதன்கிழமை) முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு ஜூன் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 28,785 மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி புதன்கிழமை வெளியிட்டார்.

ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முதல் 7 இடங்களைப் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199.75 பெற்றுள்ள 3 மாணவர்கள் என சிறப்பிடம் பெற்ற 10 பேரின் பெயரை அமைச்சர் கே.சி. வீரமணி அறிவித்தார். சுகாதாரத் துறையின் இணை

யதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ்-ல் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடத்தவும், இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதித்துள்ள கூடுதல் 285 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தவும் மருத்துவக் கல்வித் தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

நாமக்கல் மாணவன் முதலிடம்: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் எஸ்.அபினேஷ், கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவர்கள் விவரம்: 1. எஸ்.அபினேஷ்-கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல், (200-க்கு 200); 2. ஜி.பரணிதரன்-எஸ்.வி.எம். மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை (200-க்கு 200); 3. எஸ்.பழனிராஜ்-வித்ய விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, வரகுராம்பட்டி, திருச்செங்கோடு (200-க்கு 200); 4. எஸ்.தினேஷ்-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 200); 5. கே.ரவீனா-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 200); 6. ஜி.நந்தினி-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 200); 7. என்.பி.ஜெயஓவியா-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 200); 8. எஸ்.முத்துமணிகண்டன், நசரேத் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆவடி, சென்னை (200-க்கு 199.75); 9. எஸ்.விக்னேஷ்-கிரீன் பார்க் மெட்ரிகுலஷன் பள்ளி, நாமக்கல் (200-க்கு 199.75); 10. கே.ஏ.ஹேம்நாத்-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 199.75).

பி.இ. ரேங்க் பட்டியலிலும் முதலிடம்: மேலே குறிப்பிட்ட 10 மாணவர்களில் முதலிடம் வகிக்கும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் அபினேஷ், பி.இ. ரேங்க் பட்டியலிலும் முதலிடம் பெற்றுள்ளார். இதே போன்று எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் இரண்டாவது சிறப்பிடம் பெற்றுள்ள ஊத்தங்கரை எஸ்.வி.எம். பள்ளி மாணவர் ஜி.பரணிதரன், பி.இ. ரேங்க் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ள ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி கே.ரவீனா, பி.இ. ரேங்க் பட்டியலில் நான்காவது சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.

10,629 முதல் பட்டதாரிகள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 28,785 பேரில், 10,182 பேர் மாணவர்கள்; 18,603 பேர் மாணவிகள்.

மொத்தம் 10,629 மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத 1,503 பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர்.

மொத்தம் விண்ணப்பித்த மாணவர்களில் 1,488 பேர் முற்பட்ட வகுப்பை (எஃப்ஓசி) சேர்ந்தவர்கள்; 12,131 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேரந்தவர்கள்.

ரேண்டம் எண்கள்: ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களில், 10 பேர் மட்டும் ரேண்டம் எண் மூலம் வரிசைப்படுத்தப்பட்டனர் என்று மருத்துவக் கல்வித் தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் கூறினார்.

ஊத்தங்கரை பள்ளி சாதனை

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த எஸ்.தினேஷ், கே.ரவீனா,

ஜி.நந்தினி, என்.பி.ஜெயஓவியா (நால்வரும் 200-க்கு 200) மற்றும் கே.ஏ.ஹேம்நாத் (200-க்கு 199.75) ஆகியோர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இதே போன்று எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் முதல் சிறப்பிடத்தைப் பெற்றுள்ள எஸ்.அபினேஷ் (200-க்கு 200), ஒன்பதாவது சிறப்பிடத்தைப் பெற்றுள்ள எஸ்.விக்னேஷ் (200-க்கு 199.75) ஆகியோர் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்தவர்கள்

கோவா பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் செக்ஸ் கல்வி


கோவா பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் செக்ஸ் கல்வி அமல்பனாஜி : கோவாவில் சமீபத்தில் பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய எம்எல்ஏ தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோரை கொண்ட இந்தக் குழு, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

B.E Rank List 2013

CLICK HERE TO KNOW YOUR RANK

முதுகலை ஆசிரியர்களுக்கு எட்டாக்கனியாகும் பதவி உயர்வு அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் தொடரும் சிக்கல்

நெல்லை : தமிழக அரசு சார்பில் அரசு கலை கல்லூரிகளில் அவ்வப்போது பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணி அனுபவம் முதன்மையாக கருதப்படுகிறது. ஒரு சுயநிதி கல்லூரியில் 7 ஆண்டுகள் பணியாற்றும் நபர்கள் எளிதாக இப்பணியிடங்களை பெற்றுச் செல்கின்றனர். உரிய கல்வி தகுதிகள் இல்லாதபோதும் அவர்களுக்கு பேராசிரியர்கள் பணி கிடைப்பது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் உரிய கல்வி தகுதிகளோடு டாக்டர் பட்டம் வரை பெற்றவர்கள், பணி அனுபவம் இல்லை என்பதை காரணம் காட்டி புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதிக்கீடு நடைமுறைப்படுத்துதல்கூடுதல் அறிவுரைகள் வழங்கிமாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கடிதம்



பாரதிதாசன் பல்கலைக்கழகம் பிஎட் சேர்க்கை அறிவிப்பு

விளக்கக் குறிப்பேடுசொடுக்குக
விண்ணப்பம் சொடுக்குக

காலமுறை ஊதியம் கோரி முதல்வருக்கு கடிதம்: சத்துணவு ஊழியர்கள் முடிவு


காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி முதல்வருக்கு கடிதம் அனுப்ப சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. செயலர் அன்பழகன் வேலை அறிக்கை சமர்பித்தார். கடலூர் ஒன்றிய செயலர் மோகனசுந்தரம் வரவேற்றார்.மாவட்ட நிர்வாகிகள் மச்சேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, மாநில துணைத் தலைவர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை பற்றி விளக்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார்.

ஆரம்ப பள்ளி இடை நிற்றலை தடுக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு

பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட
நிதியை விட, இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.
          கிராமங்களில் நிலவும் வறுமை காரணமாக, பெண் குழந்தைகள் பலரும், படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள், ஆரம்பப் பள்ளி அளவிலேயே, படிப்பை நிறுத்தி வந்தனர்.

பொறியியல் பட்டப்படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு: மாணவர் அபினேஷ் முதலிடம்:

தமிழ்நாட்டில் 550–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு
லட்சத்து 89 ஆயிரத்து 397 பேர் விண்ணப்பித்தனர். என்ஜினீயரிங் விண்ணப்பித்த ஒரு லட்சத்து 89 ஆயிரம் மாணவமாணவிகளுக்கும் கடந்த 5–ந் தேதி கம்ப்யூட்டர் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY CALLED DISTANCE EDUCATION (B.Ed )APPLICATION 2013

CLICK HERE FOR BEd APPILICATION &PROSPECTS

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு, நான்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே,
இதன் நோக்கம். அதன்படி, அனைவருக்கும் கல்வி வழங்குவதற்குத் தேவையான, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் படிப்பு, தொழில் கல்வி, மாற்றுத்திறனாளிகள் கல்விக்கு முக்கியத்துவம், மாணவியர் விடுதிகள் அமைப்பது என, நான்கு திட்டங்களை அமல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.இதற்கான ஒப்புதல், ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு, பாட ஆசிரியர் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரையாண்டு தேர்வுக்கு பின், பயிற்சி வழங்கினால், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தாண்டு பயிற்சியை, ஜூலையில் துவங்கி, ஆகஸ்டில் முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மருத்துவப் படிப்பு தர வரிசை பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாணவர் அபினேஷ் முதலிடம்:


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர சுமார் 29 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து இன்று கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அமைச்சர் வீரமணி ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.

அதில் முதல் 10 இடங் களைப் பிடித்த மாணவ- மாணவிகள் பெயர் விவரங்களை அவர் அறிவித்தார். அவர் கூறியதாவது:-

மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 29 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 616 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 28 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 10 ஆயிரத்து 182 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 603 பேர் மாணவிகள். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் எடுத்து 7 பேர் முதலிடத்தில் உள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு: ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு:


தமிழ்நாட்டில் 18 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளன. இந்த ஆண்டு திருவண்ணாமலையில் அரசு மருத்துவ கல்லூரி புதிதாக தொடங்கப்படுகிறது.

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பாடப்புத்தகங்கள் வாங்க அலைமோதும் பெற்றோர் கூட்டம் பிளஸ்–1 பாடப்புத்தகம் கிடைக்காமல் அவதி:


சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பாடப்புத்தகங்கள் வாங்க அலைமோதும் பெற்றோர் கூட்டம் பிளஸ்–1 பாடப்புத்தகம் கிடைக்காமல் அவதி:

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனை மையத்தில் இன்று பள்ளி பாடப்புத்தகங்கள் வாங்க மாணவர்களின் பெற்றோர் கூட்டம் அலைமோதியது. பிளஸ்–1 பாடப்புத்தகம் இருப்பு இல்லாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பாடப்புத்தகங்கள்

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி நோட்டுகள், ஜாமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள், புத்தகப்பை, அட்லஸ், காலணிகள், சீருடைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவை தவிர, மேல்நிலை கல்வி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்–டாப் ஆகியவற்றையும் இலவசமாக வழங்குகிறார்கள்.

வரலாறு, கணக்கியல் மாணவர்களுக்கு நர்சிங் அட்மிஷன் வழங்குவதை நிறுத்துவது பற்றி மருத்துவ கல்வித்துறை பரிசீலனை


நெல்லை: டிப்ளமோ நர்சிங் மாணவர்கள் தேர்ச்சி குறைந்ததால், வரும் கல்வி ஆண்டில் வரலாறு, கணக்கியல் மாணவர்களுக்கு நர்சிங் அட்மிஷன் வழங்குவதை நிறுத்துவது பற்றி மருத்துவ கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணை நிலை மருத்துவ பட்டப் படிப்பு படிக்க, மாணவர்கள் மத்தியில் ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரிக்கிறது. நர்சிங் ( டிப்ளமோ) பயில அறிவியல் மற்றும் கணித பாடத்தை பிரதானமாக படித்திருக்க வேண்டும் என்ற நியதி இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2வில் வரலாறு மற்றும் கணக்கியல் பாடம் எடுத்து பயின்றவர்களுக்கும் நர்சிங்கில் சேர அனுமதி வழங்கப்பட்டது.

அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு:


அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் நலத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப்பள்ளிகளும், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு அரசு வழங்கும் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை, காலணிகள், ஜாமெட்ரிபாக்ஸ், சீருடைகள் போன்றவற்றை முன்னிறுத்தியும் மாணவர் பேரணி, சிறப்பு கூட்டம், நாடகங்கள், விழிப்புணர்வு பாடல்கள் மூலமாகவும் நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேசுவரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் பல்வேறு துறைகளில் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்:




அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

5,500 காலி இடங்கள்

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர் மற்றும் பில் கலெக்டர், வரைவாளர், சர்வேயர் ஆகிய பதவிகள் குரூப்–4 தேர்வு மூலமாக நியமிக்கப்படுகின்றன. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

TNTET 2013 - விண்ணப்பங்கள் விற்பனை செய்வது தொடர்பான தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய...

தகவல் மேலும் அறிய
இங்கே சொடுக்கவும்

தொடக்கக் கல்வி துறை - 2013-2014 ஆம் கல்வியாண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கியது - கூடுதல் விவரம் கோருதல் சார்பு

DEE - 2013-2014 ENGLISH MEDIUM SCHOOLS ADDITIONAL DETAILS CALLED REG CLICK HERE...

பள்ளி வாகனங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு அமைச்சர் தலைமையில் இன்று(11.06.2013) தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr110613c.jpg

முதல்வரின் முயற்சியால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வு: தோப்பு வெங்கடாச்சலம்

முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குள்பட்ட சிங்காநல்லூர் ஊராட்சி நத்தக்காட்டு வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்தும், விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கியும் அவர் பேசியதாவது:

கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை : அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எவ்விதமான கட்டணமும் வசூலிக்க கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவர் களுக்கு அரசின் சார்பில் புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, செருப்பு, அட்லஸ், ஜாமன்ட்ரி பாக்ஸ், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை என 14 வகையான உபகரணங்களை இலவசமாக வழங்கப்படுகிறது.

பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பார்த்து போங்க குழந்தைகளே...


பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பார்த்து போங்க குழந்தைகளே...
பள்ளிகள் இன்று திறந்தாச்சு. விடுமுறை அலுப்பு சலிப்பும் தீர்ந்தாச்சு. புதிய புதிய நண்பர்கள், விதவிதமான அனுபவங்களை மாணவ மணிகள் பெறப்போகிறீர்கள். ஆசிரியர் அறிவுரை ஒருபக்கம், பெற்றோர் அறிவுரை மறுபக்கம் என ஆலோசனை மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. எனினும் இன்றிலிருந்தே கவனமாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலவற்றை நாம் பகிர்வது நல்லது....

தினமணியே தனியார்பள்ளிகளை இவ்வளவு புகழ்வது நியாயம்தானா? தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன? - நா.முத்துநிலவன் கட்டுரை


இப்போது, அரசுப்பள்ளிகளில் பெருகிவரும் கல்விஉதவிகள், அறிவியல் ஆய்வக, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த நினைக்காத பெற்றோர், பெரிய பெரிய கட்டடஙகளைப் பார்த்து, மயங்கித் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும்போது, அவர்கள் இவர்களை ஒட்டக் கறந்துவிடுவதும், மாணவரும் மனிதர்தான் என்பதை மறந்துவிடுவதும் தொடர்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய அவசியமும் எழுந்தது. - நா.மு.

"ஆல் பாஸ்' திட்டத்தை நிறுத்துங்கள்!

ச.பா.சங்கர நாராயணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித் துறை செயலரே, களத்தில் இறங்கி, தலைமை ஆசிரியர்களுக்கு, "டோஸ்' விட்டு, யோசனையும் சொல்வது சரியல்ல. ஏனெனில், அரசியல்வாதிகளின்
குறுக்கீடுகள், அதிகாரிகளின் அலட்சியங்கள், கட்டட பராமரிப்புகள் குறைவு,
கழிவறை சுகாதார பராமரிப்பு கேவலம் என்றளவில் தான், பெரும்பாலான அரசுப்பள்ளிகள் இயங்குகின்றன.

மருத்துவ பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகப் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30-க்குள் அனுப்ப வேண்டும்.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2013-2014 ஆம் ஆண்டுக்கான மருத்துவ ஆய்வக பட்டயப்படிப்பு, செவிலியர் உதவியாளர் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன.

IGNOU - Master of Education (M.ED) Programme - January 2014 Admission Announced

click here to To Download Prospectus & Student Hand book of Master of Education (M.Ed.) Programme (January 2014)

யோகா மற்றும் தியானம் மேலும் பல செயல்பாடுகளை CCE உடன் செயல்படுத்தி மாணவர்களின் பல்திறன்களை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை - அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2012 -2013 கல்வியாண்டு முதல் செயல்படுத்த அரசாணை வெளியீடு

மீண்டும் நினைவிற்கு அரசாணை பதிவிறக்கம் செய்ய இங்கே “கிளிக் செய்யவும்”

குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு

குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த முதல் நாளே பெற்றோர் அதிர்ச்சி, குடியாத்தத்தில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளிக்கூடத்துக்கு 2 ஆசிரியைகள் தலைமை ஆசிரியர் பதவிக்கு உரிமை கொண்டாடியதால் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்த முதல் நாளே பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அனைத்து வகையான பள்ளிகளிலும் 12.6.2013 ( புதன்) குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் - உத்தரவு

தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறை
தரவிரக்கம் மற்றும் பார்வையிட இங்கே சொடுக்கவும்

வேலூர் மாவட்டம்!!! முழு விவரம் தகவல் களைஞ்சியம்

வேலூர் மாவட்டம்!!!

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.

அரசு பள்ளிகளில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அதிகம் சேர்ப்பதற்கு முன்வர வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைவதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கடுமையாக முயற்சிக்க வேண்டும்அமைச்சர் வைகைச்செல்வன்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டபேரவை தொகுதிக்குபட்ட இ.முத்துலிங்காபுரத்தில் இன்று விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது:

பெண்களின் சிரமங்களையும், துயரங்களையும் தாயுள்ளத்தோடு உணர்ந்து அறிந்துதான் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். கடந்த ஆட்சியில் நிதிநிலைமை மோசமான நிலையில் விட்டுச் சென்றனர். ஆனால், முதல்வர் பொறுப்பேற்ற இரண்டாண்டுக்கு உள்ளாகவே நிதி நிலையை போக்கி, ஏழை மக்கள் அனைவரும் நலமாக இருப்பதற்காக 20 மணிநேரம் பணியாற்றி பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சமூக விடுதலை என்பது பெரும் பொருள் இருப்பதால் மட்டும் ஏற்பட்டு விடாது. அரசு பணிகளில் உயர் பதவிகளை வகிக்கும் போது தான் சமூகம் உங்களை மதிக்கிறது. அப்போது சமூக விடுதலை என்பது தானக வந்து விடுகிறது. அதற்காக பள்ளிக் கல்விக்காக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 16875 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பொருள்களான நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கிராமங்களில் பொருளாதாரம் முன்னேறினால் தான் நாடு வளரும் என்பதை அறி்ந்து, கறவை மாடு மற்றும் ஆடுகளை கிராம மக்களுக்கு வழங்குகிறார். தற்போது, பள்ளிகளில் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், கிராமங்களில் அரசு பள்ளிகளில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அதிகம் சேர்ப்பதற்கு முன்வர வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைவதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி திட்டத்தை, வாக்குறுதியாக அளித்து உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் தேர்தலில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனால், ஒரு திட்டத்துக்கே வெற்றி என்றால் இந்தியா முழுவதும் இது போல் திட்டங்கள் செயல்படுத்தினால் வளமான பாரதம் உருவாகும். அதனால் விலையில்லா பொருள்கள் பெற்ற அனைத்து பயனாளிகளும் உபயோகிக்கும் போது முதல்வரை நினைத்துபார்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். இதேபோல், பாப்பாகுடி, மேட்டுப்பட்டி, கொண்டாலபுதூர், பெத்துரெட்டிபட்டி, போத்திரெட்டிபட்டி மற்றும் உப்பத்தூர் ஆகிய கிராமங்களிலும் விலையில்லா பொருள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிவகாசி கோட்டாட்சியர் ரெங்கன், ஒன்றியக் குழு தலைவர் வேலாயுதம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாலமுருகன், வட்டார ஊராட்சி உறுப்பினர் மாரியப்பன், ஊராட்சி தலைவர் மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

"முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, போட்டித் தேர்வு, ஜூலை மாதம் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மே, 31ம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 2 லட்சம் பேர் வரும், 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வு எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்கும்போதே, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் முன்அனுபவம் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றி வரும் பள்ளியில், தங்களது வருகைப்பதிவேடு, வகுப்பு எடுத்த கால அட்டவணை ஆகியவற்றின் நகலுடன், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் கையெழுத்து மற்றும் மெட்ரிக்குலேசன் ஆய்வாளர் கையெழுத்து, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கையெழுத்து பெற்று, இணைத்து வழங்க வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.

இந்த புது நிபந்தனையால், விண்ணப்பத்தாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: வழக்கமாக, அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு செய்யப்பட்ட பின் தான், வருகைப்பதிவேடு நகல், கால அட்டவணை, சம்பளப் பட்டியல், பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்து போன்றவை கேட்பர். நடைமுறை சிக்கல் அவற்றை சரிபார்த்த பின், "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவர். அதன்பின், ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவர். முன்கூட்டியே இவற்றைக் கேட்பதால், நடைமுறை சிக்கல் உருவாகும் நிலை உள்ளது. முன்அனுபவத்தின் அடிப்படையில், ஓராண்டுக்கு, 1, மூன்று ஆண்டுக்கு, 2, ஐந்து ஆண்டுக்கு, 3, 10 ஆண்டுக்கு, 4 என, "வெயிட்டேஜ்' மதிப்பெண், வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பதில், காலதாமதத்தை தடுக்க, டி.ஆர்.பி., இந்த புதிய நிபந்தனையை விதித்துள்ளது நல்ல விஷயம் தான். ஆனால், தனியார் பள்ளியில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தும், ஒருவேளை தேர்ச்சி பெறவில்லையென்றால், அந்த தனியார் பள்ளியில், மீண்டும் அந்த ஆசிரியருக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுமா, என்பது சந்தேகம்.

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் முயற்சிக்கிறார் என்பது தெரிந்தால், தனியார் பள்ளி நிர்வாகம், வேண்டுமென்றே சான்றுகளை வழங்காமல் இழுத்தடிக்கும். இது போன்று, ஏற்கனவே தமிழகத்தில், பல பள்ளிகளில் நடந்து ள்ளது. தற்போது சில பள்ளிகளில், வருகைப்பதிவேடு சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்துகின்றன. குறைந்த கால அவகாசம் மட்டுமே உள்ளதால், இந்த சான்றுகளை தயாரிப்பதில், பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. மாவட்டம் விட்டு, மாவட்டம் வேலை பார்ப்பவராக இருந்தால், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், பள்ளியிலும் இதற்கான சான்றிதழ்களை வாங்கி வரவேண்டும். குறையும் இதனால், சிலர் விண்ணப்பிக்க தயங்குகின்றனர். எனவே, இந்த புது நிபந்தனையை டி.ஆர்.பி., தளர்த்தினால், பயனுள்ளதாக இருக்கும். இல்லை யென்றால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி?

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.

SSLC சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை

SSLC சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை

இந்த மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணையை தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
வ.எண் நாள் கிழமை தேர்வு
1 24.06.2013 திங்கள் மொழித்தாள் - I
2 25.06.2013 செவ்வாய் மொழித்தாள் - II
3 26.06.2013 புதன் ஆங்கிலம் முதல் தாள்
4 27.06.2013 வியாழன் ஆங்கிலம் இரண்டாம் தாள்
5 28.06.2013 வெள்ளி கணிதம்
6 29.06.2013 சனி அறிவியல்
7 01.07.2013 திங்கள் சமூக அறிவியல்

தமிழகம் முழுவதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல், கல்வித்துரை கெடுபிடியால் குழப்பம் - தினமலர் செய்தி


சென்னை: அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், இன்று துவங்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடு குறித்து அரசு அறிவிக்காததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வாழ்த்துக்கள்

கோடை விடுமுறை முடிந்துஇன்று  பள்ளி துவங்குகிறது... அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசிரியர்கள் , வாழ்க்கையில் சாதிக்கும் ஆசை கொண்ட மாணவர்கள் இவைதான் முக்கிய கருப்பொருள்கள் இங்கு. அரசாங்கம் எத்தனை சலுகைகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கினாலும் இந்த இரு அடிப்படை உணர்வுகள் ஒன்று சேராவிட்டால் அது வெற்றியடைவது சாத்தியமல்ல. சம்பளம் முக்கியம் என ஆசிரியரும் கல்வி சான்றிதழ் , உதவிப்பணம் மட்டும் முக்கியம் என மாணவரும் இருப்பின் இங்கு படித்து வெளிவரும் எதிர்கால சந்ததியினரின் கையில் சான்றிதழ் இருக்கும் ஆனால் அறிவுக்கூர்மையும் சாதிக்கும் திறனும் இருக்காது .. பிற துறையினர் வெளிப்பார்வைக்கு தோன்றுவதை சொல்வார்கள் .. ஆனால் இனம் மொழி மதம் பணம் தாண்டி கல்வி என்பது கற்கும் ஆசையினால் மட்டுமே பெறமுடிந்த செல்வம்.. இலக்கியம் எப்படி இலக்கிய உலகத்தினை சேர்ந்தவர்களுக்கு உரியதோ(!!!) அப்படியே கல்வியும் ... எல்லோராலும் காணப்படும் உலகம் வேறு .. அத்துறையினர் காணும் உலகம் வேறு ..கல்வியும் , வாழ்க்கைத் திறனும், தெளிவும் கொண்ட அற்புதமான சமுதாயம் அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன், கனவுடன் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாணவர்க்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்
அன்புடன் 
கே.பி,ரக்‌ஷித்
மாநில துணைத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு


கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன.

கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது.

ஆசிரியர் நியமனம்: இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தல்


ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசாணை எண். 252 இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது.

எனவே, அந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

தகுதித் தேர்வோடு இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் "வெயிட்டேஜ்' வழங்கி இந்த அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது

அரசுப் பள்ளிக்கு விருது

தூய்மையான, பசுமையான, பிளாஸ்டிக் இல்லாத பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு, மாநில அளவில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அரங்கில் புதன்கிழமை உலக சுற்றுச் சூழல் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருந்தது, மரங்களை நட்டு பசுமையாக வைத்திருந்தது, பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் இருந்தது போன்றவற்றைக் கடைப்பிடித்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, தமிழக அளவில் மூன்றாமிடம் பிடித்த திருவண்ணாமலையை அடுத்த தொரப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கான விருதை பள்ளித் தலைமை ஆசிரியர் வே.தட்சிணாமூர்த்தியிடம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். இவ் விருதுடன் ரூ.2 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

வாழ்த்து: விருது பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் வே.தட்சிணாமூர்த்தி, பள்ளி கல்வித் துறை செயலாளர் எஸ்.சபிதா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே, பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன், தொடக்கக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத், மாவட்ட கல்வி அலுவலர் எம்.சசிகலாவதி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்,நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை மிளிரவைப்போம்_நம்பிக்கையுடன்



நாளை பொழுது எப்போதும் போல துவங்கும்
ஆனால்
நம்மை நம்பி நாளை முதல்
பெற்றோர்கள் தம் பிள்ளைகளை
அனுப்பும் பொழுதோடு விடிகிறது.
தினமும் வீட்டு பாடம் கொடுங்கள்
கற்றல் தினமும் நடக்கட்டும்
அவன் வாழ்வில் மேன்மை அடையும்
அடித்தளம் நம்மை நம்பியே
என்பதை எண்ணி
அடித்தளத்தை கவனத்தோடு
வலிமையாக அமையுங்கள்
சென்ற கல்வியாண்டின்
தேர்வு முடிவுகள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின்
சிறப்பான அடித்தளத்துக்கு ஆதாரம்
தேர்வு முடிவுகள் மேலும் உயர
அடித்தளமான தொடக்கக்கல்வி
மேலும் மேம்படுத்த
தங்கள் முயற்சியும் அற்பணிப்பும்
தியாகமும் தேவை
நாளைய நாள் இனிதாகட்டும்
இக்கல்வியாண்டு உங்களையும்
மாணவர்களையும் மேம்படுத்தட்டும்
பணியை தொடங்குங்கள்
என்றும் அன்புடன் 
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

செயல்வீரர் செ.மு _ஓர் பார்வை








எமக்குத் தொழில், ஆசிரியர்க்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராது இருத்தல்"


செயல்வீரர் செமு , இயக்கச்செம்மல் என நல்லோர்களால் போற்றப்படும் செ.முத்துசாமி - தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் மரூர்பட்டி என்ற சிற்றூரில் 10-03-1937 பிறந்தார். தன்னுடைய பேச்சாற்றலாலும், சீரிய சிந்தனையாளும் 1968 முதல் ஆசிரியர் கூட்டணியில் பொதுச்செயலாளராக பணியாற்றுகிறார். மேலும்1970 முதல் தமிழ்நாடு அரசு மேலவை உறுப்பினராக ஆசிரியர் தொகுதியில் 12 ஆண்டுகள் தொண்டாற்றினார்.

ஆசிரியர் இனக் காவலராகத் திகழும் இவர் தன்னைச் சார்ந்த ஆசிரியர்களை, ஒழுக்கத்தோடு ஆசிரியப்பணி ஆற்ற வழிகாட்டுகிறார். நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் பண்பையும் சுய மரியாதையுடனும் பகுத்தறிவுடன் கூடிய வாழ்க்கை வாழவும் , அதிகார வர்க்கம் நடத்திடும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் "கடமையைச் செய்து உரிமையைக் கேட்கும் துணிச்சலையும் வளர்க்கிறார்"
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது -- என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர்.



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


செ. முத்துசாமி அரங்கம், 3/28, பிளாக்கர்ஸ் சாலை, சென்னை - 2.
 Phone: 044-28411577, 28411888
Mobile: 94441 76288 
6,
கண்டர்பள்ளி சாலை, நாமக்கல்,தமிழ்நாடு 637001,
 Phone: 04286-230160; Fax: 04286-225860
website:- http://www.taakkootani.blogspot.in/

இந்த வளைதளத்தில் செய்திகள் வெளியிட தொடர்பு கொள்ளவும்


web stats

web stats