rp

Blogging Tips 2017

பாரதத்தின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மறைவைமுன்னிட்டு நாளை பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

CPS a/c slip published

தமிழ்நாட்டில் பக்ரீத் விடுமுறை 22.08.2018 - புதன்கிழமை தான். தமிழக தலைமை காஜி அறிவிப்பு

மாதிரிப் பள்ளித் திட்டம்-தமிழக அரசு இன்று (15.8.18) துவக்கம்:

தமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம், பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு, 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பல்வேறு வகைப் பள்ளிகள் இணைப்பு என, பல புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில், மத்திய அரசு நிதியுதவியுடன், மாவட்டம் தோறும் குறைந்தபட்சம், ஒரு மாதிரிப் பள்ளி உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, ஒரு மாதிரிப் பள்ளி அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், இன்று (15.8.18) துவக்கி வைக்கிறார். சென்னையில், எழும்பூரில் உள்ள, மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியை, மாதிரிப் பள்ளியாக மாற்ற, அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் நகர, வட்டாரக் கிளைகள் சார்பில் 13.08.2018 மாலை 5மணிக்கு தமிழினத் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தும் மெளன ஊர்வலம் நாமக்கல்லில் நடந்தது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் நகர, வட்டாரக் கிளைகள் சார்பில் நேற்று  13.08.2018 மாலை 5மணிக்கு தமிழினத் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தும் மெளன ஊர்வலம் நாமக்கல்லில் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் செ.முத்துசாமி  பொதுச்செயலாளர்  செல்வராஜு  மற்றும் *மாவட்ட, வட்டார,நகர நிர்வாகிகள் , ஆசிரியர் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்

அனைவருக்கும் இனிய சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்!


G.O.Ms.No.271 Dt: August 13, 2018 PENSION – Contributory Pension Scheme – Rate of interest for the financial year 2018-2019 – with effect from 01.07.2018 to 30.09.2018 is 7.6% – Orders – Issued.

G.O.Ms.No.271 Dt: August 13, 2018 

DEE PROCEEDINGS- சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைகளுக்கு சார்பு அலுவலர்கள் செல்லும் போது தவறாது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறைகள்


குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்யத் தகுதியானோரின் பட்டியல் வரும் 27-இல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4-இல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை கடந்த பிப்ரவரி 11-இல் நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 30-இல் வெளியிடப்பட்டது. தேர்வு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய தேதி வரும் 16 முதல் 30-ஆம் தேதி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கால தாமதத்துக்குக் காரணம்: கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்பட்டதன் காரணமாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு அதற்குறிய சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கண்டறிய கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் வரும் 27-ஆம் தேதியன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும். அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரும 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தச் சேவைக்கென தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு இணைய சேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் இல்லாவிட்டால்...: பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரகள் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு அதற்குரிய சான்றிதழ்களை கண்டிப்பாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒருவேளை விண்ணப்பத்தில் தவறான தகவல்களைப் பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை எனில் தங்களிடம் சான்றிதழ் இல்லை என்பதைக் குறிப்பிட்டு தேர்வுக் கட்டுப்பாடு அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து உரிய இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள ஏதேனும் சில விவரங்களுக்கு மட்டும் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வு: சான்றிதழை பதிவேற்றுவதற்கு தேர்வானோர் பட்டியல் வரும் 27-இல் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்யத் தகுதியானோரின் பட்டியல் வரும் 27-இல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4-இல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை கடந்த பிப்ரவரி 11-இல் நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 30-இல் வெளியிடப்பட்டது. தேர்வு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மாணவிகள் தங்கள் புகார்கள் ,குறைகள் கூற தொலைபேசி எண் அறிமுகம்


மது தேசிய சின்னங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோமே?

தேச தாய் - பாரதமாதா
தேசதந்தை - மகாத்மா காந்தி,
தேச மாமா - ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி - அன்னை தெரசா,
தேச சட்டமேதை - அம்பேத்கார்,
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், 
அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி - 1957 சக ஆண்டு,
நகரம் - சண்டிகார், 
உலோகம் - செம்பு,
உடை - குர்தா புடவை,
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத்,
தேச நிறம் - வெண்மை,
தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,
தேச பாடல் - வந்தே மாதரம்,
தேசிய கீதம் - ஜனகனமன,
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, 
தேசிய நதி - கங்கை, 
சிகரம் - கஞ்சன் ஜங்கா,
பீடபூமி - தக்கானம்,
பாலைவனம் - தார், 
கோயில் - சூரியனார், )
தேர் - பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் - பென்சில், 
வாகனம் - மிதிவண்டி,
கொடி - மூவர்ணக் கொடி, 
விலங்கு - புலி,
மலர் - தாமரை, 
விளையாட்டு - ஹாக்கி, 
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி,
பறவை - மயில்,
இசைக் கருவி - வீணை,
இசை - இந்துஸ்தானி,
ஓவியம் - எல்லோரா,
குகை - அஜந்தா,
மரம் - ஆலமரம்,
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை,
நீர் உயிரி - டால்பின்,
அச்சகம் - நாசிக்,
வங்கி - ரிசர்வ் வங்கி, 
அரசியலமைப்பு சட்டபுத்தகம்,
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)


நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

பக்ரீத் விடுமுறை தேதியில் மாற்றம் மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசின் ‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா"

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக கருதப்படும்”ஆயுஷ்மான் பாரத் யோஜனா"

மத்திய அரசின் ‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா"என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நமது பாரத பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார்.இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மொத்தம் 50 கோடி ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது
..
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்.....
  • முதற்கட்டமாக கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புற கூலி தொழிலாளர்கள் உட்பட 10.74 கோடி மக்களுக்கு இதனைக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
  •  வங்கி கணக்கு வைத்திருக்கும் 70 வயதுக்குட்பட்டு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
  •  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும்.ஆண்டிற்க்கு ₹1000.00 ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
  • பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்
  • .இத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்கு மேல் சிகிச்சையளிக்கப்படும்.
  • தடுக்கக் கூடிய 70 நோய்களுக்கும், மற்றும் புற்றுநோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க, 30 நோய்களுக்கு கட்டாயம் சிகிச்சையளிக்கப்படும்.
  •  ஆயுஷ்மான் பாரத்திட்டத்தில் பயனாளியாக இணைய ஆதார் அவசியமில்லை என மத்திய சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது.இந்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் இத்திட்டத்தில் பயனாளியாக இணைய முடியும். 


உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி பயன்பெறுங்கள்.....


SPD PROCEEDINGS - அனைத்து பள்ளிகளிலும் கண்காட்சி நடத்த உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்!



web stats

web stats