rp

Blogging Tips 2017

தேசிய கொடியில் சாதனைஉ.பி., மாநில அரசு முடிவு:

உ.பி.,யில், நாட்டின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில், மிகப் பெரிய தேசிய கொடியை பறக்க விட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.டில்லி, கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில், 207 அடி உயர கொடிக் கம்பத்தில், 60 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட தேசியக் கொடி பறக்க விடப்படுகிறது.


இது தான், நாட்டின் மிக உயரமான கொடிக் கம்பத்தில் பறக்க விடப்படும், பெரிய தேசியக் கொடி என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்தசாதனையை, உ.பி.,யிலும் தொடர, முதல்வர் அகிலேஷ் யாதவ்

Home Employees News Employment News Exam/Results Teachers News Home » Employees News » அரசு ஊழியர்களுக்கு மாநில தீர்ப்பாயம் சங்க தலைவர் வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கு மாநில தீர்ப்பாயம் சங்க தலைவர் வலியுறுத்தல்

சிவகங்கை: ''அரசு அலுவலர், ஆசிரியர் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் சம்பளக்குழுவை உருவாக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறினார்.

சிவகங்கையில் அவர் கூறியதாவது:அமைச்சு, தொழில்நுட்ப, சார் நிலை, களப்பணியாளர், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களைதல்

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.6 ஆயிரம் குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

குரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.15,600 ஊதியத்தை ரூ.9,300 ஆக குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ெசன்ைன ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.  

குரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து வரும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர், மீன்வளத்துறை ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் உட்பட 52 பிரிவில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு ராஜீவ் ரஞ்சன் கமிஷன், கடந்த 2010ல் மாத ஊதியம் ரூ.15,600 வழங்கலாம் என கூறியது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. 

ஆர்.கே. நகரில் ஐ.டி.ஐ.: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆர்.கே. நகரில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் 77 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 29 ஆயிரத்து 83 மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில், 15 தொழில் பயிற்சி நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்துள்ளார்.

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம்பரிசீலிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவு

'திறந்தநிலை பல்கலைக்கழக பட்டத்தின் அடிப்படையில், பதவி உயர்வு கேட்கும் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., பணியாளர் வெங்கடேசன் உட்பட, நான்கு பேர் தாக்கல் செய்த மனு:நாங்கள், 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். பணியில் சேரும் போது, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி போதுமானது என, கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1996ல், தலைமைச் செயலக ஊழியர்களுக்கு இணையாக, எங்களுக்கும் கல்வித் தகுதியை நிர்ணயித்து, அரசு உத்தரவிட்டது. அதன்படி, 'பதவி உயர்வு பெற, ஐந்து ஆண்டுக்குள் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது.

நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது.
10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. காலாண்டுத் தேர்வு முடிந்து, பள்ளிகளில் இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தீபாவளி விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவ இடைத்தேர்வை நடத்த, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

முதல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் கற்றுத்தருவது எப்படி? ஆய்வுக்கட்டுரை

click here to download                         thanks to TRS Trichy

கணினி வழி கற்றல் கற்பித்தலை எளிதாக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "Basic Computer Training" வழங்க முடிவு - இயக்குநர் செயல்முறைகள்


ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 1 மாத பயிற்சி - இயக்குநர் செயல்முறை

TNTET-2013 தேர்வு நடத்துவதற்கு NCTE -ன்அனுமதி பெறப்படவில்லை-RTI Letter.

  1. UGC Guide Lines for TET Exam - Click Here

நடுநிலைப் பள்ளியில் 6,7,8 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு 05.11.2015 மற்றும் 06.11.2015 ஆகிய நாட்களில் "Value Integrated Teaching and Learning (VITAL)" என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் - இயக்குநர் செயல்முறை....


எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!

* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.

கடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம்..

கடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..
. [Passport - No Objection Certificate - Proposal Format - Click here to Download...]

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவிபெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014-15ம் ஆண்டுக்கான கணக்குத்தாட்களை பதிவிறக்கம் செயது கொள்ளலாம்

Tamil Nadu PR No : 521 - On the Contributory Pension Scheme applicable for those Government Employees who joined service after 1st April, 2003 Click Here...

அக இ - 2015-16ம் ஆண்டிற்கு தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "EVERYDAY SCIENCE AND SIMPLE PROJECTS ON CCE" மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "PREPARATION FOR COMPETITATIVE AND TALENT SEARCH EXAMINATION" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் நடைபெறவுள்ளது

SSA - 2015-16 - CRC - PRIMARY CRC ON 07.11.2015 "EVERYDAY SCIENCE AND SIMPLE PROJECTS ON CCE" UPPER PRIMARY CRC ON 14.11.2015 "PREPARATION FOR COMPETITATIVE AND TALENT SEARCH EXAMINATION" REG PROC CLICK HERE..

40 சதவீத காலிப்பணியிடங்களால் புள்ளியியல் துறை பணிகளில் சிக்கல்

தமிழக புள்ளியியல் துறையில் 60 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் புள்ளி விபரங்கள் சேகரிப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது என, புள்ளியியல்துறை ஊழியர்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் 385 புள்ளியியல் துறை வட்டார அலுவலகங்கள் செயல்படுகின்றன. மாவட்டந்தோறும் துணை இயக்குனர்கள், 3 உதவி புள்ளியியல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், வட்டார

திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:

தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏதேர்வுக்கு அக்., 12 ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவ., 11. தேர்வு நாள் ஜன.,24. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க அறிக்கை கேட்கிறது அரசு

ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து புதிய கமுதி மாவட்டம் உருவாக்க அரசுஅறிக்கை கேட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்கள், 38 உள்வட்டங்கள், 400 வருவாய் கிராமங்கள் உள்ளன. மொத்தம் 13.53 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் வட்டங்கள் சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரயில்பாதை அமைக்கப்படவில்லை.

இங்கு சரியான குடிநீர், போக்குவரத்து, தொழில் வசதிகள் இல்லை.இதனால் கமுதியை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்ட மாக அறிவிக்க வேண்டும் எனவும்,

மதுரையில் இந்தியாவின் முதல் என்சிசி அகாடமி: 700 மாணவர்கள் பயிற்சி பெற வசதி

இந்தியாவின் முதல் என்.சி.சி. அகாடமி மற்றும் நிரந்தர முகாம் மையம் மதுரை இடையப்பட்டி யில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானம் முடிவுறும் நிலையில் இருப்பதாகவும் மார்ச் மாதத்தில் திறக்கப்படலாம் என்று சென்னை மண்டல குழுத் தலைவர் தீபக் நேர்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் அக்டோபர் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்ற என்.சி.சி. தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு- புதுச்சேரி- அந்தமான் மண்டலத்தை சேர்ந்த 3 பேர் பதக்கங்களை பெற்றுள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா சென்னை மருத்துவக் கல்லூரி யில் நேற்று நடைபெற்றது.

கலந்தாய்வில் 1.20 லட்சம் இடங்கள் காலி எதிரொலி: தமிழகத்தில் விற்பனைக்குத் தயாராகும் தனியார் பொறியியல் கல்லூரிகள்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள 58 சதவீத இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. இதன் எதிரொலியாக பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்காக பேரம் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 939 இடங்கள் இருக்கின்றன.

தீபாவளி போனஸ் 2 மடங்கு உயர்வு: உச்சவரம்பு ரூ.3,500-ல் இருந்து ரூ.7,000 ஆகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

CPS திட்டம்: இணையத்தில் கணக்கு விவரங்கள்: தமிழக அரசு தகவல்!

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரலில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள் உள்பட 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படிக்கென மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காகச் செலுத்தும்.

4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுக்காக சுமார் 8 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமி்க்கும் வகையில் கடந்த மே மாதம் 31-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. 

அரசு தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட் டவர்கள் எழுதினர். எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். இதில் தேர்ச்சி பெறுவோர் ‘ஒரு காலி யிடத்துக்கு 5 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.

அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சாரவைக் கூட்டம் இன்று காலைதில்லியில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணி நிரவல் சார்ந்த திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


அகஇ - புதிதாக நியமனம் செய்யப்பட்டதொடக்க நிலை/உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்

தன் பங்கேற்பு ஓய்வூதிய கணக்குத் தாளில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளுதல் சார்பான அரசு செய்திக்குறிப்பு


மூவகைச் சான்றுகள்(சாதி/வருமானம்/இருப்பிட சான்றிதழ்)-2015-16ஆம் ஆண்டு பள்ளிமாணவர்களுக்கு (6,10 மற்றும் 12) மின்மம் சார்ந்த சான்றுகள் (Electronic Certificate) - பெற விண்ணப்ப படிவம்

23.10.15 அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்திற்கு வரும் வெள்ளிக்கிழமை  23.10.15 சதயத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் நாள்  14.11.2015 -மாவட்டஆட்சியர் அறிவிப்பு.

ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

புதுடில்லி: மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர், அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், இனி, குற்ற வழக்குகளை சந்திக்கநேரிடும். 

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:அரசின் உயர் பதவிகளில் பணியாற்றியவர்கள் பலர், ஓய்வு பெற்றதும், அரசு சாரா அமைப்பிலோ, தனியார் நிறுவனங்களிலோ சேருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவற்றில், சில அரசு சாரா அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையிலும், நாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் போராட்டத்தை துாண்டி விடுகின்றன.

மாநகராட்சி மூலம் பயிற்சி பெற்ற 11 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்கு தகுதி

சென்னை மாநகராட்சி மூலம் பயிற்சி பெற்ற 11 மாணவர்கள் யுபிஎஸ்சி முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சிபெற்று பிரதான தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் படிக்கும் ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பு கருதி மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) மூலம் நடைபெறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும்,

இன்றைய அரசுப் பள்ளிகளில் - குறிப்பாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது? SSAதிட்ட நடைமுறை சிக்கல் ஓர் அலசல்

• பள்ளிகளைக் கண்காணிக்க அதிகாரிகளின் படிநிலைத் தவிர, ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு, அன்னையர் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் எனப் பல ‘சனநாயக அமைப்புகள்’ உள்ளன. பள்ளி மேலாண்மைக் குழு என்பது பெற்றோர் ஆசிரியர் கழகப் பெண் உறுப்பினர் (தலைவர்), மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் (துணைத் தலைவர்), தலைமை ஆசிரியர் (செயலர்), உதவி ஆசிரியர், பெற்றோர்கள் 75%, அதில் பெண்கள் 50% வார்டு உறுப்பினர், தன்னார்வலர், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர் முதலிய 20 உறுப்பினர்களைக் கொண்டது.

தொடக்கக்கல்வி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த மத்திய அரசு உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்

தமிழக அரசின் தன்னிறைவுத்திட்டம் (அரசானை 2011-2015) – Self Sufficient Scheme – GO 2011-2015.

அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மனதுவைத்தால் அப்பகுதி மக்களின் உதவியுடனும், அரசின் துணையுடனும் ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் தனியார் பள்ளியில் கிடைக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரமுடியும்.
-------------------------------------------------------------------------------------------
(முதலில் தமிழ் நாடு அரசின் இணையதளமான ஊரகவளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதற்கு நமது கடுமையான கண்டணங்கள்)

தமிழக அரசின் ஊரகவளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை மூலம் பொதுமக்களிடையே சுய சார்பை வளர்த்தெடுக்க வருடந்தோறும் 100 கோடி ரூபாயை தன்னிறைவுத்திட்டத்திற்காக ஒதுக்கிவருகிறது. இத்திட்டம் கிராமப்புறம், நகர்ப்புறம் என எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும்

பள்ளிக்கல்வி - சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்துதல் சார்பு

DSE - CHILDREN DAY - GOVT MUSEUM - SPEECH & DRAWING COMPETITIONS FOR SCHOOL STUDENTS REG PROC CLICK HERE

சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் எது?

சரஸ்வதி பூஜை (புதன்கிழமை) இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சரவஸ்வதி பூஜை நடத்த உகந்த நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை, மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் நமது பொருட்களை ‘கலைமகள்’ முன்னிலையில் வைத்து வழிபட்டால், எல்லா நலன்களும், வளங்களும் வந்து சேரும்.
நமது இல்லத்து பூஜை அறையில் சரஸ்வதிதேவியின் உருவ பொம்மை அல்லது சரஸ்வதிதேவியின் படம் வைத்து வழிபட வேண்டும். சரஸ்வதிதேவியின் அருகில் விநாயகப் பெருமான் மற்றும் லட்சுமிதேவியின் படங்களை வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும். பூஜை அறைக்குள் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி வைத்து,

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்-தினமலர் செய்தி

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர். 
பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

வங்கிகளுக்கு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை

சரஸ்வதி  பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி,இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை (அக்.21), வியாழக்கிழமை (அக்.22) ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (அக். 23) அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.

   அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையிலிருந்து (அக்.23) சனிக்கிழமைக்கு (அக்.24) மாற்றி தமிழக அரசு திங்கள்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (அக்.23) செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் சனிக்கிழமை (அக்.24) 4-ஆவது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை நாளாகும்.

கஜானாவுல காசு இல்லன்னு கை விரிச்சிட்டாங்களாம்ங்க...'' DINAMALAR டீ கடை பென்ச்

'கஜானாவுல காசு இல்லன்னு கை விரிச்சிட்டாங்களாம்ங்க...'' என பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

''யாருக்கு யார் சொன்னாங்க வே... மொட்டையா சொல்லுதீரு...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''சமீபத்துல, 15 அம்ச கோரிக்கைக்காக, ஆசிரியர்கள் போராட்டம் நடத்துனாங்க... இதுல 2004க்குப் பிறகு பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களுக்கு, அவங்க தொகுப்பூதிய காலத்துல, வேல செஞ்ச நாட்களை, சீனியாரிட்டி கணக்கில் எடுத்து பணி வரன்முறை செய்யணும்னு ஒரு கோரிக்கைங்க...

''இதை கேட்ட கல்வி அதிகாரிகள், நிதித்துறையில் கலந்து பேசுவதற்கு பைல் குடுத்தாங்க... அதுக்கு, நிதித்துறையில கைவிரிச்சு பைலை வாங்க மறுத்துட்டாங்க... பணி வரன்முறைக்கு, 400 கோடி ரூபா கூடுதல் செலவாகும்... 'இதுக்கு அரசுக்கு மனசு இருக்கு, ஆனா கஜானாவுல காசு இல்லே'ன்னு கறாரா சொல்லிட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி. 

Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Primary and Upper primary Trs

Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Primary and Upper primary Trs in Govt Schools.

Primary Level at District
02.11.2015 to 06.11.2015
(SABL, Maths Kit,CCE)

Upper primary Level at Dt
16 to 20.11.2015
(ALM, CCE)

RPs: BRTEs (Well Trained)

CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014 - 2015 - AVAILABLE - JUST TYPE CPS NUMBER AND DATE OF BIRTH

CLICK HERE -CPS ACCOUNT SLIP 2014-2015

தொடர் பயிற்சிகளால் ஈராசிரியர் பள்ளிகளில், கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப் படுகிறது

அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார அளவில், குறுவட்டார அளவில் நடத்தும் பல்வேறு பயிற்சிகளில் (குறைந்தபட்சம் 10 + 10 ) ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். பயிற்சி என்பது தேவையை ஒட்டி உண்மையிலேயே ஆசிரியரிடமிருந்து கோரிக்கை
வந்தால் வழங்குவதில் தவறில்லை. புதிதாகப் பணியில் சேர்ந்தவர்க்கு வேண்டுமானால் கட்டாயம் வழங்கலாம். ஆனால், ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவு செய்தே ஆக வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும் அரைத்த மாவையே அரைப்பதுபோல் தன்சுத்தம், பல்சுத்தம், உடல்நலம், கை கழுவுதல், உடற்பயிற்சி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வாசித்தல், எழுதுவதில் மேம்பாடு; போன்ற தலைப்புகளில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையதல் குறித்து, முதல் கட்ட பரிசீலனை நடத்தப்பட உள்ளது-Dinamalar


GENERAL ELECTION TNLA 2016


CRC தகவல்

SSA- RC.No.1108/Trg/2015

Primary CRC on 07.11.2015
Topic: Every day Science and Simple Projects on CCE

Upper primary CRC on 14.11.2015
Reg: Preparation for Competitive and Talent Search examination.

தொடக்கக்கல்வி - மாணவர்களுக்கு "ஆதார் அட்டை" பெற்றுத்தர தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள்

மொஹரம் பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் என -தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு

G.O.Ms.No.1197 Dt: October 19, 2015 Public Holiday for Muharram declared on 24.10.2015 under Negotiable Instruments Acts 1881 - Orders - Click Here..
மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதிக்கு (சனி கிழமைக்கு) மாற்றம் -அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மொகரம் மாதத்தின் முதல் நாளில்பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொகரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தெரிந்தது. இதனால், 10-ம் நாளான அக்டோபர் 24-ம் தேதியை மொகரம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை காஜி வேண்டுகோள் விடுத்தார்.

இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, அக்டோபர் 23-ம்தேதிக்குப் பதிலாக 24-ம் தேதியை மொகரம் பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது

விரைவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 604 விரிவுரையாளர்கள் நேரடி நியமனம் தேர்வு!!

பொது விடுமுறை - மொகரம் பண்டிகை 23.10.2015ம் தேதிக்கு பதிலாக 24.10.2015 அன்று கடைபிடிப்பதையடுத்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு

G.O.Ms.No.1197 Dt: October 19, 2015 Public Holiday for Muharram declared on 24.10.2015 under Negotiable Instruments Acts 1881 - Orders - Click Here...

ஆசிரியர் பயிற்றுனராக பணிபுரிய பட்டதாரி ஆசிரியர் யாரும் முன் வரவில்லை -கல்வித்துறை அதிர்ச்சி

பள்ளிகளில் நூடுலஸ்,சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை

'நுாடுல்ஸ், சிப்ஸ்' போன்ற, 'ஜங்க் புட்' எனப்படும், சத்தற்ற உணவுப் பொருட்களை, பள்ளிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விற்பதற்கு தடை விதிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்கட்டுப்பாடு, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுதும், பள்ளிகளிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், 'ஜங்க்' உணவுகள் விற்பதை தடுக்கும் விதிமுறைகளை, மூன்று மாத காலத்தில் வகுக்குமாறு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்துக்கு, டில்லி ஐகோர்ட், 2015, மார்ச்சில் உத்தரவிட்டிருந்தது.

ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்!!

அரசுப் பள்ளிகளை வேரறுக்கும் மத்திய மாநில அரசுகள்

இன்றைய அரசுப் பள்ளிகளில் - குறிப்பாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?

ஓட்டுநர் என்றால் பேருந்தை ஓட்ட வேண்டும்; நடத்துனர் என்றால் பயணச்சீட்டு வழங்க வேண்டும். ஒரு வேளை பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி பெற்ற பலரும் அவ்வேளை கிடைக்காமல் ஓட்டுநர் பணிக்கு வந்துவிட்டனர் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக, பேருந்தைப் புளியமரம் புளியமரத்திற்கு நிறுத்தி முறைசாராக் கல்வி என்னும் பேரில் பயணிகளுக்குப் பாடம் நடத்தச் சொல்லி அவர்களுக்கு அரசு உத்தரவிட்டால் (அப்படியும் நடக்கலாம்! யார் கண்டது?) அது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து? அது மட்டுமல்ல, அப்பேருந்து ஊர்போய்ச் சேருவது எப்பொழுது? ஆசிரியர்கள்மீது திணிக்கப்படும், அவர்களுக்குத் தொடர்பே இல்லாத பிறபணிகள் இத்தகையனவே! கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் கேட்கும் பள்ளி விவரங்கள் எழுதிக் கொடுத்தே பள்ளிப் பாடங்களை மறந்து போனார்கள் ஆசிரியர்கள்!

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்!!

பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)
பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)

31-ல் போராட்டம்'ஜாக்டோ' முடிவு

சென்னை,:'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க கூட்டுக்குழுவின், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளி ஆசிரியர்களின், 27 சங்கங்கள் இணைந்து,

ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்

போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி

தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அதிக மதிப்பெண் பெற்ற, 100 மாணவர்களை தேர்வு செய்து, குறிப்பிட்ட மையத்தில் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாளில் பயிற்சி வழங்கப்படுகிறது. பொதுத் தேர்வு வரை, 50 நாட்களுக்கு, இப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட அளவில், ஒரே மையம் என்பதால், மாணவர்களுக்கு, போக்குவரத்து படியும், மாலை வரை வகுப்பு நடத்த வேண்டும் என்பதால், சிற்றுண்டி செலவுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை பார்த்த, ஆசிரியர்களுக்கு மயக்கம் வராத குறையாக புலம்புகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி

அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது 
போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

web stats

web stats