rp

Blogging Tips 2017

சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்


FLASH NEWS:அரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018  -பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.*


*FLASH NEWS:ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்பு-GO.Ms.No.265 Dt: July 31, 2018  -Tamil Nadu Revised Pay Rules, 2017 – Constitution of One Man Committee for rectification of pay anomalies – Extension of tenure of the Committee upto 31.10.2018– Orders – Issued.*


6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆங்கிலவழி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பிசி எம்பிசி மாணவர்களுக்கு வழங்கப்படும்


GPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.

GPF,TPF CPS ஆசிரியர்   அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.

வருடத்திற்கு 15000 குறைந்த பட்சவட்டி இழப்பு



1999-2000 முடிய 12% வட்டி வழங்கப்பட்டது.2000-2001 ல்11% ,2001-2002 ல் 9.5% ,2002-2003 ல் 9% 2003-2004 ல் 8 % , 2004-11ஃ20011 முடிய 8% ,12ஃ2011 முதல் 3ஃ2012 முடிய 8.6% , 4/2012 முதல்3/ 2013 8.8% , 2013-2015  ல் 8.7 %

வருடத்திற்கு 12 சதவீத வட்டி பெற்று வந்த நாம் கழுதைதேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது 7.6சதவீத வட்டியே பெறுகிறோம்.

வட்டி இழப்பு- GPF ல் உள்ளவருக்கு

குறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 100000 – சந்தா ரூ 7000உள்ளவருக்கு

12 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 17460

7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 11058   -இழப்புரூ 6402.

திரும்ப செலுத்தும் தொகை குறைந்தது ரூ 10000என்றால் -இழப்பு ரூ 9262.


வட்டி இழப்பு-CPS  ல் உள்ளவருக்கு

குறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 300000 – சந்தா ரூ 4000உள்ளவருக்கு

12% வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 39120

7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 24776   -இழப்புரூ 14344 CPS  ல் உள்ளவருக்கு இந்த இழப்புவருடத்துக்கு வருடம் கூடிக்கொண்டேவரும்.இறுதியில் பல இலட்சங்களை நாம்இழந்திருப்போம்.

 மறைமுகமாக நமக்கு பேரிழப்பை அரசுஏற்படுத்துகிறது. நாம் வங்கியில் தனி நபர் கடன்பெற்றால் செலுத்தும் வட்டி குறைந்தது 12சதமவீதம்.வீட்டுக்கடனுக்கே 8.5 சதவீதத்திற்குமேல்தான்.இன்று கடன் வாங்காத ஆசிரியர்கள் ஏது ?நம் பணம் மட்டும் தெருவிலா கிடக்கிறது.முறையானவருமான வரி கட்டி வரும் நமக்கு அரசு அளிப்பதுபட்டை நாமம்.

பள்ளி வேலை நாட்கள் பட்டியல் ஒரே பக்கத்தில்

_CRC & BRC LEVEL TRAINING 2018 – 19 FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS – TENTATIVE TRAINING SCHEDULE_*


புதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது.

புதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது..
புதுக்கோட்டை,ஆக.9: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டைக்கு ஆய்வு அலுவலராக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்..அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது…இக்கூட்டத்தில் ஆய்வு அலுவலரான இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி மாவட்டத்தில. அமைந்துள்ள மொத்த பள்ளிகள் வகை வாரியான எண்ணிக்கை,1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி வாரியாக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை,மாவட்டத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை,பள்ளி மாணவர்கள் சேர்க்கை விபரம்,தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி (ஆர்.டி.ஐ) மாணவர்களின் சேர்க்கை விபரம்,நீதிமன்ற வழக்குகள் நிலுவை விவரங்கள்,அவற்றின் தற்போதைய நிலை பற்றிய விபரம்,கடந்த 2014 முதல் 2018 வரை மாவட்ட அளவில் பொதுத் தேர்வு முடிவுகள் விவரம்,கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்)யின் படி பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விபரம்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வை விவரம்,மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்..அதிகாரியின் ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி,அறந்தாங்கி( பொ) கு.திராவிடச் செல்வம்,இலுப்பூர் க.குணசேகரன் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..முன்னதாக இலுப்பூர் கல்வி மாவட்டம் மாத்தூர் சிறப்பு அரசு மேல்நிலைப் பள்ளி,கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றையும் பின்பு புதுக்கோட்டை கல்வி மாவட்டம் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் ஆய்வு அலுவலரான அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்..
படவிளக்கம்: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கான ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய போது எடுத்த படம்..அருகில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் உள்ளனர்.

வாத்தியார் குரல்-செங்கமலன் திண்டுக்கல்.

வாத்தியார் குரல்
 ==============
வாத்தியாரு வேலதான்
வசதின்னு பேசுறாக...
உக்காந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...

 பசங்க மனசெல்லாம்
பாழடைஞ்சு கெடக்குது
சொல்லிக்கொடுத்த
வாத்தி மனசோ
சுக்கு நூறாக்கெடக்குது.

காலையில பள்ளியில
கால் வெச்சு போகையில...
டிக் டிக் டிக் மணியடிக்க
திக் திக்குன்னு மனசடிக்குது.

பசங்க முடியெல்லாம்
பக்காவா இருக்கனுமாம்
பக்குவமா சொன்னாலும் மனசு
பக்கு பக்குனு அடிக்குது
பசங்க ஏதாச்சும்
பண்ணிடப் போரான்னு
துடிக்குது...

படிக்கச்சொன்னாலே
பசங்க
துடிச்சு போற காலமிது...
படிக்க வெக்கத்தான்
வாத்தியாரு வேலையிது..

கண்டிக்கவும் ்கூடாது
கட்டளையும் கூடாது

திட்டவும் கூடாது
குட்டவும் கூடாது

மார்க்கு மட்டும்
மலை போல
கொட்டனுமாம்..

ஆதாரு இருக்கான்னு
அக்கறையா கேக்கனுமாம்
அக்கவுண்டு நம்பரை
அட்ரசோட
வாங்கனுமாம்...

சீருடை இல்லைன்னா
சிரிச்சிக்கிட்டே
கேக்கனுமாம்...

அடிச்சி கிடிச்சு
போட்டாக்க
அம்புட்டுதான் வாழ்க்க...
கழியத்தொட்டதுக்கு
களிதானே வாழ்க்க...

பசங்க
கேலிப்பேச்சு
பேசினாலும்
கேக்கத்தான் வேணும்...
கத்தியாலக்குத்தினாலும்
வாங்கத்தான் வேணும்..

போசாக்கு இல்லாத
பையனையும்
பாசாக்க
வெக்கனுமாம்
பாவப்பட்ட ஜென்மம் அது
வாத்தியாரு பொழப்பிது..

நரக வாழ்க்கையிது
நல்லபடி
நகரா வாழ்க்கையிது...

இயல்பான
ரத்த அழுத்தம்
ரெண்டு மடங்கு ஏறுது..
துடிக்கிற இதயமோ
எப்போதான்
நிற்குமோ!?

அச்சமில்லை அச்சமில்லை
சொல்லி கொடுத்த
வாத்தியாரு
சொன்னதுமே
நடுங்குறாரு..

சாக்பீசு
தேயுமுன்னே
வாத்தியாரு
தேயுராரு...

ஒத்த இதயத்த
பிளந்தெடுக்க
எத்தனை அம்புகதான்
கிளம்பி வருமோ?

பெத்தவங்க
ஒருபக்கம்
மத்தவங்க
மறுபக்கம்.

சமூகம்
ஒருபக்கம்
சங்கடங்கள்
மறுபக்கம்

அம்புகள
தொடுத்து நின்னா
அப்பாவி வாத்தியாரு
என்னதான்
பண்ணுவாரு...

வாத்தியாரை
மதிக்கும்
வசந்த காலம் போச்சு
வாத்தியாரை
மிதிக்கும்
கலி காலம் ஆச்சு...

இப்பதெல்லாம்
நெறைய வாத்தியார்கள்
கரும்பலகையை
கையால் துடைப்பதில்லை
கண்ணீரால்
துடைக்கிறார்கள்.
சாக்பீஸ்
துகள்களால்
நுரையீரலை
அடைக்கிறார்கள்..

வாத்தியாரு வேலதான்
வசதியின்னு பேசுறாக...
உக்கந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...

அவங்களிடம்
சொல்லுங்க...

" வாத்தியார் பொழப்பு
வாழ்க்கையில் இழப்பு "
என்று....

செங்கமலன்
திண்டுக்கல்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ஞாயிறு அன்று (02.09.2018) மேட்டூரில் நடைபெறும்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ரத்து செய்யப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ஞாயிறு அன்று (02.09.2018) மேட்டூரில் நடைபெறும்.கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.                 பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு -வட்டார, நகரக்கிளை தலைநகரங்களில் மௌன ஊர்வலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு வேண்டுகோள்

இந்திய தேசம் முழுவதையும் சோகத்துக்குள்ளாக்கிய முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு ஆசிரியர் இனமான நம்மையெல்லாம் பேரதிர்ச்சிக்கும், தீராத வேதனைக்கும் உள்ளாக்கிருக்கிறது. 
தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன் வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய தமிழ்நாட்டின் தலைமகன் கலைஞர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். 

ஆசிரியர்களை அரவணைத்து அன்பு காட்டிய அப்பெருமகனார்க்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அனைத்து வட்டார, நகரக் கிளைகளும் அஞ்சலி செலுத்தும் விதமாக வட்டார, நகரக்கிளை தலைநகரங்களில் திரளாக ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்து மெளன ஊர்வலம் நடத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறது
.
துக்கம் அனுசரிக்க அரசு அறிவித்துள்ள 7 நாட்களுக்குள் பள்ளி வேலைநாட்களில் மாலை 5 மணிக்கும், விடுமுறை நாளில் வசதியான நேரத்தையும் முடிவு செய்து ஆசிரியர்களுக்கு உடனே தகவல் தெரிவித்து சிறப்பாக நடத்தவும், 

ஊர்வலத்தின் போது கருப்பு பேட்ஜ் அணிந்தும், 

பெரிய கறுப்புக் கொடியும், 

கலைஞரின் திருவுருவப் படமும், 

நமது அமைப்பின் பெயர் தாங்கிய ஃப்ளக்ஸ் –ம்

 பிடித்துக் கொண்டு ஆசிரியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று நம் ஆசிரியரினத்தின் அஞ்சலியை செலுத்த வேண்டும்.
                                                      இங்ஙனம்,
                     தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்,
                                    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

Middle school to High school upgrade list published

CLICK HERE

Flash News : தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

CLICK HERE







இன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜியோவின் கண்டன ஆர்ப்பாட்டமானது..ஒத்திவைப்பு

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான பேச்சைக் கண்டித்து,

இன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜியோவின்  கண்டன ஆர்ப்பாட்டமானது...

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்  மு.கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

இவண்...
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,
ஜேக்டோ-ஜியோ.

கருணாநிதிக்காக பெற்ற கடைசி வெற்றி!

மெரினாில் இடம் ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பல முக்கிய வழக்குகளில் வாதாடி உள்ளார். தி.மு.க., ஆட்சியின் போது கட்டப்பட்ட, அண்ணா நுாற்றாண்டு நுாலக கட்டடத்தை, பள்ளிக்கல்வி துறை வளாகத்துக்கு மாற்ற, அ.தி.மு.க., அரசு முடிவு எடுத்தது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடி வெற்றி பெற்றார். இதற்காக, கருணாநிதியின் பாராட்டை பெற்றார்.முக்கியமான வழக்குகளில், வில்சனை வரவழைத்து, சட்ட ஆலோசனைகளை, கருணாநிதி கேட்பார். புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேட்டை விசாரிக்க, நீதிபதி ரகுபதி கமிஷனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும், வில்சன் தான் ஆஜரானார். கடைசியில், விசாரணை கமிஷனின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இப்படி பல வழக்குகளில், கருணாநிதிக்காகவும், கட்சிக்காகவும் ஆஜரானவர், கடைசியில், கருணாநிதி மறைந்த பின்னும், அவரது உடல் அடக்கத்துக்காக வாதாடி, இடம் பெற்று தந்துள்ளார்.

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும்பியபடியே மெரினா கடற்கரையில் அண்ணாதுரை சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கலைஞர் செய்த சாதனைகள் பட்டியல் தொடர்ச்சி


1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

கலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்

1) இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.

2) குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம் போன்றவைகளை
அமைத்து தந்தது தலைவர் கலைஞர்.
3) இலவச கான்கிரீட் வீடுகளை ஒதுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர்.
4) கையில் இழுக்கும் ரிக்க்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்க்ஷா தந்தவர் கலைஞர்.
5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்
6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
7) குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
10) மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
11. போக்குவரத்தை தேசியமயமாக்கிவர் கலைஞர்.
12. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியவர் கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்து தந்தவர் கலைஞர்.
14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.
15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக உயர்த்தி தந்தவர் கலைஞர்.
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.
17. மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தவர் கலைஞர்.
18. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவித்தவர் கலைஞர்.
19. முதல் விவசாயக் கல்லூரியை உருவாக்கி தந்தவர் கலைஞர்.(கோவை)
20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம் தந்தவர் கலைஞர்.
21. அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.
23. கோயில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர் கலைஞர்.
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
27. பெட்ரோல் தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர் கலைஞர்.
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தவர் கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தவர் கலைஞர்.
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர் சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர் கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.
43. இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை உள்ளது என சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர் கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தவர் கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தை அமைத்தவர் கலைஞர்.
52.கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்களை அமைத்து தந்தவர் கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தவர் கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தவர் கலைஞர்.
61. மெட்ராஸ்/சென்னை :கலைஞர் (Arignar Anna CM )

62. முதல் முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர் கலைஞர்.
64. முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.
65. கிராமங்களில் கான்கீரிட் சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
66. 24 மணி நேரமும் மருத்துவ சேவை தந்தவர் கலைஞர்.
67. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.
70. இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர் கலைஞர்.
72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர் கலைஞர்.
73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.
74. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்கலைஞர்.
75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர் கலைஞர்.
76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர் கலைஞர்.
77. கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் கலைஞர்.
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர் கலைஞர்.
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்.
80. வீட்டுமனை வழங்கும் திட்டத்தை தந்தவர் கலைஞர்.
81. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர் கலைஞர்.
82. ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
83. விவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
84. பொது கூலிவேலை செய்வோர் நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.
86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.
88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர் கலைஞர்.
89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.
90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர் கலைஞர்.
92. நலிவுற்ற குடும்பநல திட்டத்தை தந்தவர் கலைஞர்.
93. 9 மாவட்டங்களில் புதிய மாவட்டாச்சியர் அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தவர் கலைஞர்.
95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம் செய்தவர் கலைஞர்.
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தவர் கலைஞர்.
97. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 9 மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
98. ரூ.1500 கோடியில் 350 துணை மின்நிலையங்களை உருவாக்கியவர் கலைஞர்.
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமரியில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்து தந்தவர் கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். திட்டத்தை தந்தவர் கலைஞர்.
103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்.
104. நியாயவிலைக்டையில் 10 சமையல் பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.
105. விவசாய கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர் கலைஞர்.
106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர் கலைஞர்.
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
109. 172 உழவர் சந்தைகளாக உயர்த்தியவர் கலைஞர்.
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
111. மாவட்டத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
112. ரூ.189 கோடி செலவில் காவிரி- குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தவர் கலைஞர்.
115. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.
116. 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயபாடமாக்கியது கலைஞர்.
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தவர் கலைஞர்.
118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியவர்
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர் கலைஞர்.
120. இதயநோய்,சர்க்கரை நோய்,புற்று நோய்க்கான நலமான தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.
121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர் கலைஞர்.
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புதிய
நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தவர் கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர் கலைஞர்.
124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர் கலைஞர்.
125. புதிய டைடல் பார்க் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கியவர்
126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.
128. அருந்ததியினர் இனத்திற்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர் கலைஞர்.
130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.
132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர் கலைஞர்.
133. ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.
134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.
135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர் கலைஞர்.
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தவர் கலைஞர்.
137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தவர் கலைஞர்.
138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.
139. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.
140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர் கலைஞர்.
141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
143. 119 புதிய நீதிமன்றங்களை உருவாக்கியவர் கலைஞர்.
144. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர் கலைஞர்.
145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கி தந்தவர் கலைஞர்.
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.
148. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.
149. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர்
151. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
152. பேருந்து,பால்,மின்சார கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர். ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.
153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ கல்லூரி,பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.


பள்ளி, கல்லூரிகள் இன்று (09.08.2018) இயங்கும்

கருணாநிதியின் உடலுக்கு இறுதி சடங்கு முடிந்த நிலையில், இன்று வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன.கருணாநிதி மறைவுக்காக, தமிழக அரசின் சார்பில், நேற்று ஒரு நாள், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால், நேற்று பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை.

இன்று முதல், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசின் சார்பில், ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படுவதால், வரும், 14ம் தேதி வரை, அரசின் சார்பில் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படாது.தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கும். சுதந்திர தினமான, வரும், 15ம் தேதி முதல், இயல்பு நிலை திரும்பும். சுதந்திர தின கொண்டாட்டமும் நடத்தப்படும்.

நீதியரசர் மாண்புமிகு ரமேஷ் அவர்களின் மெரீனாவில் கலைஞருக்கு இடம் -தீர்ப்பு நகல்.

ஒப்பற்ற தமிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.-செ.முத்துசாமிEx.MLC

  ஒப்பற்ற தமிழினத்தின்  ஒரே தலைவர் மறைவு.
உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் ஒரே தலைவர் கலைஞர் அவர்களின் சகாப்தம் முடிந்தது.
அவருடைய காலம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு பொற்காலமாக அமைந்தது. ஆசிரியர்கள் மீது எல்லா காலமும் மாபெரும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் மறைந்து விட்டார் . ஏராளமாக சலுகைகள் வழங்கிய தலைவர் மறைந்து விட்டார். அண்ணா என்று என்னால் உரிமையோடு அழைக்கப்பட்ட தலைவர் கலைஞர் மறைந்து விட்டார். துயரம் தாங்கமுடியவில்லை. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தமிழாகவே பிறந்து விட்ட தலைவர் கலைஞர் பெறுமகனாரை வரலாறு உள்ளளவும் மறக்க முடியாது.
என்னே சாதனை..
என்னே சாதனை ....
என்றென்றும் மறக்க முடியாத தலைவர் .
காலனே இயற்கையே அவரை கொன்று விட்டாயே
. தாங்காத துயரத்தோடு கண்ணீர் விட்டு அழுகிறோம்.
 எம் தலைவா உன் புகழ் உலகம் உள்ள அளவு நீடிக்கும் என்பதில் ஐயமில்லை
 இதற்கு மேல் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அவர் புகழ் என்றென்றும் வாழ்க.

செ.முத்துசாமிEx.MLC
. மாநிலத் தலைவர்
.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

Lr. No.14914/S2/2018-1 Dt: July 18, 2018 Alteration of date of birth of Government servants - Orders of High Court of Madras, dated 11.07.2017 in W.P. No.17792 of 2004 - Reckoning of age criteria based on the S.S.L.C Examination - Guidelines - Issued.

Lr. No.14914/S2/2018-1 Dt: July 18, 2018 

கிழக்கே மறைந்த சூரியன்..கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது.. .முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் பூதவுடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7 காலமானார். காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் ஆகஸ்ட் 7 இரவு கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிஐடி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று காலை 4 மணிக்கு ராஜாஜி ஹால் வந்தடைந்தது.
பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, நேற்று சரியாக மாலை 4 மணிக்கு கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் இருந்து புறப்பட்டது. சிவானந்தா சாலை, ராஜாஜி சாலை வழியாக கருணாநிதியின் உடல் மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டே சென்றது. அண்ணா சாலை வருவதற்கே அரை மணி நேரம் ஆனது. தொடர்ந்து மணிக்கு மெரினா வந்தடைந்தது.

முன்னதாக அழகிரி, கலாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தார் அனைவரும் மெரினாவில் காத்திருந்தனர். ஸ்டாலின், தமிழரசு உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் நடந்தே வந்தனர்.

மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக கவர்னர் பன்வரிலால் புரோஹித், முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ஜெயக்குமார், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வைரமுத்து ஆகியோர் இருந்தனர்.

தொடர்ந்து இறுதிச்சடங்கிற்கான பணிகள் நடைபெற்றன. இறுதியில் அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மெரினாவில் காத்திருந்த தலைவர்கள், குடும்பத்தினர் அனைவரும் மரியாதை செலுத்திய பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் விரும்பியபடி, "ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறான்" என்று எழுதப்பட்ட சந்தனப்பேழையுடன் அவரது உடலை பூமித்தாய் பெற்றுக்கொண்டாள்.

சூரியன் அஸ்தமித்தது..!!!!

TNPSC - கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை செய்ய இனி டி என் பி எஸ் சிக்கு வர வேண்டியதில்லை; அரசே பணிவரண்முறை செய்யலாம் என அரசாணை வெளியீடு!( G.O NO : 100 | DATE : 01.08.2018 )

GO Ms. No. 100 Dt: August 01, 2018  

கலைஞர் 95


கலைஞர் 95

கலைஞர் 95

1. பிறப்பு : 1924 ஜுன் 3ஆம் தேதி

2. தந்தை : முத்துவேல்

3. தாயார் : அஞ்சுகம்

4. சகோதரிகள் : சண்முகசுந்தரம், பெரியநாயகி

5. இடம் : திருக்குவளை கிராமம், திருவாரூரில்இருந்து 15 மைல் தொலைவில்

6. தந்தையின்முதல்மனைவி : குஞ்சம்மாள்

7. இரண்டாம்மனைவி : வேதம்மாள்

8. மூன்றாவதுமனைவி : அஞ்சுகம்

9. கலைஞரின் முதல்மனைவி :பத்மா (திருமணம் 1944 செப்டம்பர் 13. காலமானது 1948). இவர் இசைச் சக்ரவர்த்தி சி. எஸ். ஜெயராமனின் சகோதரி.

10. இரண்டாம் மனைவி : தயாளுஅம்மாள் (1948 செப்டம்பர் 15)

11. மூன்றாம் மனைவி : ராஜாத்திஅம்மாள் (திருமணம் 1966)

12. பிள்ளைகள் :மு.க. முத்து, முதல்மனைவிக்குப் பிறந்தவர்.

13. ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு(தயாளு அம்மாவுக்குப் பிறந்தவர்கள்)

14. கனிமொழி (ராஜாத்தி அம்மாள்)

15. அவருடைய பெற்றோர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடனக் கலைஞராக இருந்தார்.

16. கலைஞரின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவம், ஏழ்மையில் இருந்த போதிலும், அவர் தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்தார்

கலைஞருக்கு அஞ்சலி


  • வழியெங்கும் விழிநீரில் மிதந்தபடி
  • உடன்பிறப்பே என லட்சக்கணக்கான தமிழர்களை காந்தக் குரலால் கட்டிப்போட்ட தலைவனுக்கு தொண்டர்களும் பொதுமக்களும் கண்ணீர் மல்க இன்று இறுதி அஞ்சலி
  • மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா ஒழித்துக்கட்டிய தலைவன்
  • 95 ஆண்டுகள் ஒளி கொடுத்த சூரியன் மறைந்தது தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுத் தந்த செந்தமிழ்ச்செல்வன்
  • மூன்றாம் பாலினத்தவருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கினார்
  • மூடநம்பிக்கைக்கு மூடுவிழா கண்டு சமத்துவபுரம் கண்டு தமிழன் சாதி வேறுபாடுகளை கலைந்து சாதனை படைத்த சரித்திர நாயகன்
  • : உழவர் சந்தை அமைத்து இலவச மின்சாரம் கொடுத்து விவசாயிகளுக்கு வாழ்வளித்த விவசாயிகளின் தோழன்
  • நெருக்கடிநிலை காலத்தில் முதலமைச்சராக இருந்து கொண்டே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்த தமிழன்
  • பராசக்தி மூலம் பகுத்தறிவு ஊட்டிய படைப்பாளி
  • ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டு இருக்கிறான் என கல்லறையில் எழுத அவா கொண்ட ஆதவன்
  • கருணாநிதியை அரவணைக்க காத்திருக்கும் மெரினாவினை
  • அதிமுக அரசு தராமல் நீதியின் மூலம் பெற்றிட்ட உத்தமன்.
  • அரசியலில்,ஆட்சியில் எல்கேஜி எடப்பாடியிடம் தான் துயில இடம் பெறாமல் தான் மதித்த நீதியிடம் பெற்றவர்
  • அண்ணாவின் அறவழியில் இட ஒதுக்கீடு பெற்றவர்
  • ஆசிரியர் சமுதாயம் உயரவும் ,மாண்போடு வாழவும் வாழ்ந்திட்ட இமயம்
  • அவரால் பயன்படாத ஒரு குடும்பம் தமிழ்நாட்டில் இல்லை எனும் நிலையை உருவாக்கியவர்
  • இல்லாதவனுக்கு 2 ஏக்கர் நில்ம் கொடுத்த வள்லல்
  • குடியிருந்த வீட்டிற்கு பட்டா வழங்கிய மஹான்
  • அவருக்கு கண்ணீர் அஞ்சலி

  •                                                                     கே.பி.ரக்‌ஷித்

பாசத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி....தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

G.O NO : 100 | DATE : 01.08.2018 கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை செய்ய இனி டி என் பி எஸ் சிக்கு வர வேண்டியதில்லை; அரசே பணிவரண்முறை செய்யலாம் என அரசாணை வெளியீடு!!

ஆசிரியர் நலனில் கலைஞர்.........கலைஞர் ஆசிரியர்களுக்கு அளித்த சலுகைகள் சில

  • பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆசிரியர்கள் என்றும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் எனக்கூறி, அவர்கள் பெறும் உயர்கல்விக்கு இரண்டு முறை மொத்தம் நான்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கியதுடன்,
  • ஈட்டிய விடுப்பு நாட்களை விடுப்பு எடுக்காமல் சேமித்து அரசுக்கு ஒப்படை செய்து பணமாகப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் செயல்படுத்தி னார்கள்.
  • பேரறிஞர் அண்ணா அவர்களைத் தொடர்ந்து நான் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப் பேற்ற வேளைகளில் -
  • ஆசிரியர்களுக்கும், அவர்களின் மகன், மகள் திருமணங்களுக்கும் கடனு தவி, வாகனங்கள் வாங்குதற்குக் கடனுதவி, வீடுகட்டுதற்குக் கடனுதவி,
  • ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்குரிய விரிவான ஓய்வூதியப் பயன்கள், தனியார் பள்ளிகள், உள்ளாட்சி நிறுவனப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்;
  • 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை (Selection Grade); 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை (Special Grade) பதவி உயர்வுகள் வழங்கும் திட்டம்;
  • பணியில் இருக்கும் ஆசிரியர், அரசு ஊழியர் இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்குத் தற்போது 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்;
  • தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்க வகை செய்து 1.12.1974 முதல் நடைமுறைப் படுத்திய Ôதமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம்’, ஆசிரியர், அரசு ஊழியர் இறந்தால் அவர்களின் வாரிசு களுக்குக் கருணை அடிப்படை நியமனம் வழங்கும் திட்டம்;
  • தமிழாசிரியர் நியமனத்தில் இருந்து வந்த முதல்நிலை, இரண்டாம் நிலை என்ற பாகுபாடு களை நீக்கியமை; தமிழாசிரியர்கள் பெற்ற புலவர் பட்டத்தை பி.லிட். பட்டமாக உயர்த்தி யமை,
  • ஏழை எளிய ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில் வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமை அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் உட்பட ஆசிரியர் சமுதாயத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன.
  • மேலும் கழக ஆட்சிக் காலங்களில் அவ்வப் போது ஊதியக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவை அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய ஊதிய விகிதங்களும், சலுகைகளும், ஓய்வூதியப் பயன்களும் நடைமுறைப்படுத்தப் பட்டன.
  • குறிப்பாக மத்திய அரசின் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் அடிப்படையில் தென் மாநிலங்களில் முதல் மாநிலமாகத் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விகிதங்களை ஆண்டுக்கு 5ஆயிரத்து 155 கோடியே 79இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 1.1.2006முதல் நடைமுறைப் படுத்தி, அதன் காரணமாக 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக வழங்கி ஒரு புதிய வரலாறு படைக்கப் பட்டதை யும்;
  • அதில் ஆசிரியர் சமுதாயமும் உயர்ந்த ஊதியங்களை எய்தி; அவற்றின் பயனாக இலட்சக்கணக்கான ரூபாய்களை நிலுவைத் தொகையாகப் பெற்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்ததையும்;
  • அத்துடன் அப்பொழுது ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆசிரியர்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள் வழங்கியதையும் ஆசிரியர் சமுதாயம் நன்கு அறியும்.
  • இத்தகைய மகத்தான சலுகைகள் பல வற்றை ஆசிரியர்களுக்கு வழங்கிய நிகழ்வு களோடு; ஆசிரியர்களுக்கு, 'நல்லாசிரியர் விருது’ என்ற பெயரில் வழங்கப்பட்ட நடை முறையால் விருது பெறாத ஆசிரியர்கள், 'நல்ல ஆசிரியர்கள் இல்லையா?’ என்ற கேள்வி எழும் என்பதால்,
  • 'நல்லாசிரியர் விருது’ என்ற விருதின் பெயரை, 'டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ என மாற்றி வழங்கச் செய்ததையும்;
  • விருதுபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகை ரூ.1000 என்பதை முன்னர் ரூ.2000 என்றும்; பின்னர் அதனை ரூ.5000 என உயர்த்தித் தந்தும் ஆசிரியர் சமுதாயத்தை அரவணை டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ என மாற்றி வழங்கச் செய்ததையும்;
  • விருதுபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகை ரூ.1000 என்பதை முன்னர் ரூ.2000 என்றும்; பின்னர் அதனை ரூ.5000 என உயர்த்தித் தந்தும் ஆசிரியர் சமுதாயத்தை அரவணைத்து வந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசே என்பதைச் சுட்டிக் காட்டி;
  • தமிழக ஆசிரியர் சமுதாயம் என்றும் சிறந்து விளங்க வேண்டும்; அவர்கள் குடும்பம் செழிக்க வேண்டும்;
  • அப்பொழுது தான் தமிழ்ச் சமுதாயம் என்றும் அறிவார்ந்த சமுதாயமாக எழுச்சிபெற்று திகழும் என்ற விழைவோடு தமிழக ஆசிரியப் பெரு மக்களுக்கு தாங்கள் செய்த பங்களிப்பு மிக மகத்தானது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் ரத்து

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது.


எதிர்வரும் 12.08.2018 அன்று கரூரில் நடைபெற இருந்த

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம்



ரத்து செய்யப்படுகிறது.



பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

_ க.செல்வராஜு,
பொதுச்செயலாளர்

Alteration of date of birth of Government servants - Orders of High Court of Madras

*Lr. No.14914/S2/2018-1 Dt: July 18, 2018  Alteration of date of birth of Government servants - Orders of High Court of Madras, dated 11.07.2017 in W.P. No.17792 of 2004 - Reckoning of age criteria based on the S.S.L.C Examination - Guidelines - Issued.*

CLICK HERE

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புதிய தலைவர் மற்றும் புதிய மாவட்ட செயலாளர் நியமனம்

*முதல் வகுப்பு சேரும் போது கொடுக்கப்படும் பிறந்த தேதியே இறுதியானது, வயது குறைவு காரணமாக, தேதி மாற்றம் செய்து பள்ளியில் சேர்த்துவிட்டு, பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பிறந்த தேதியை மாற்ற இயலாது* *ஐகோர்ட் உத்தரவு*

DSE PROCEEDINGS-மாநில நல்லாசிரியர் விருதுக்கான பள்ளிக் கல்வி இயக்குனர் நெறிமுறைகள் வெளியீடுகனவு ஆசிரியர் விருது பெற்றவர்களை அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு ராதாகிருஷ்ணன் விருதுபெற பரிந்துரைக்ககூடாது

CLICK HERE

v ஆம் வகுப்பு ஆக்ஸ்ட் முதல் வாரத்திற்கான பாடக்குறிப்புகள்

தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்

கூட்டுறவு சங்க தேர்தல் புதிய அட்டவணை




JACTO GEO கூட்ட முடிவுகள்


JACTO GEO ஊடகச் செய்தி-முதல்வரின் அவதூறு பேச்சுக்கு பதிலடி


தொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்

தொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிப்பது குறித்து ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது.

 தமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உள் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

04.08.2018 சனிக்கிழமை, சென்னை, TNGEA சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உயர் மட்ட குழுவின் கூட்ட முடிவுகள்*🌷

1 ) *முன்னாள் முதல்வர் டாக்டர் . கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற வாழ்த்துகள்*

2) அரசு ஊழியர் ஆசிரியர் குறித்து முதலமைச்சரின் கண்ணியமற்ற பேச்சினைக் கண்டித்து 09.08.2018 தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் கண்டன ஆர்பாட்டம்

3) திருவண்ணா மலை மாவட்ட CE0 ஜெயக்குமார் மீது துறை நடவடிக்கை எடுக்க கோரியும் இது போல அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் CE0 க்களை கண்டித்தும் 16.08.2018 அன்று அனைத்து மாவட்டத்தலை நகரில் கண்டன ஆர்பாட்டம்

4) 04.09.2018 அன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்

5) 13.10.2018 அன்று சேலத்தில் 50,000 பேர் பங்கேற்கும் " வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு"

6) 19.10.2018 முதல் 23.10. 2018 வரை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம்

7) 27. 11. 2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

web stats

web stats