rp

Blogging Tips 2017

அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீடு படிதான் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் , மீறினால் கடும் நடவடிக்கை !!!


தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு ( தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ) பெறுவோர்க்கு, பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல்- தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரை... (15/04/2016)

பள்ளிக்கல்வி - ICT AWARD 2016 - கணினி வழி கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களிடம் இருந்து ICT AWARD காண விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்


தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்கள்களுக்கும் EMIS ல் உள்ளீடு செய்து முடிக்க வேண்டும்!

தேர்தல் பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும்: அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் தேர்தல் பணிகள் தொடர்பாக, மூன்று பயிற்சிக் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-

G.O.Ms.No.407 Public Dept Dt: April 22, 2016 Holidays - Public Holiday - General Elections to Tamil Nadu Legislative Assembly 2016 - Declaration of the poll day 16.05.2016 as Public Holiday - Notified.


நாளை நடைபெறும் தேர்தல் பயிற்சியில் ,தேர்தல் ஆணையை ரத்து செய்யவோ ,மாற்றவோ கூடாது மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் அறிவுறுத்தலின் படி !!!

20GB அளவான 3G இன்டர்நெட் டேட்டா வெறும் 50 ரூபாய்க்கு - டிஜிட்டல் இந்தியா

இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக இன்டர்நெட் டேட்டா அளவு மற்றும் அதன் வேகம் ஆகிய இரண்டையும் கூறலாம்.
இன்டர்நெட் டேட்டா அதிகளவில் கிடைத்தால் அதன் வேகம் குறைவாகவும், இன்டர்நெட் வேகம் அதிகளவில் இருந்தால் டேட்டா குறைவாகவும் என்று, இன்டர்நெட் டேட்டாகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் நம்மை பந்தாடிக்கொண்டு இருக்கின்றன

ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும், 'குளுக்கோ மீட்டரில்' உள்ள உணர் கருவிகளை, ஐந்து ரூபாய்க்கு குறைவான செலவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை கண்டுபிடித்துள்ளது.

POLLING OFFICERS 1,2,3 ஆகியோரின் பணிகள்(DUTIES OF P1,P2,P3)


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்டத்தின் உப்பிலியாபுரம் கிளையின் சார்பாக நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழா நிகழ்வுயின் சில நிழல்கள்.

TNPSC - GROUP-1 PRELIMS RESULT PUBLISHED

  • CLICK HERE - GROUP-1 PRELIMS RESULT

TET - ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013 தேர்ச்சி சான்றிதழ்கள் உண்மைத் தன்மை வழங்குதல் குறித்து அறிவுரைகள்


வாக்காளர் பெயர் வரிசை எண் ,தொகுதி பட்டியல் எண் அறிய !!!

Click here to view Epic No .......

தபால் ஓட்டுக்கான படிவம் 24ம் தேதி... வழங்கல்! அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஏற்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக .... 'உயர்வு! கைடு'களை தலையில் கட்டுவதால் கூடுதல் சுமை

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

கோடை வெயில் உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும், விடுமுறையில் வகுப்பறை கல்வியையும் தாண்டி வெளியுலகை அறிந்து, புரிந்து கொள்ளவும், குடும்ப உறவு மேம்படவும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் உதவுகிறது.

இந்த உளவியல் அடிப்படையிலேயே, ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆனால், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் சென்டம் ரிசல்ட் பெற வேண்டும் என்பதற்காக, கோடை விடுமுறையிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ௧ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தும் போக்கு, தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது.

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன

G.O No. 118 Dt: April 20, 2016    Download Icon(93KB)
ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய அகவிலைப்படி 119 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.1.1.2016-ம் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், மற்றும் ஒய்வூதியர்கள் பயனடைவர்
G.O No. 117 Dt: April 20, 2016    Download Icon(96KB)
படிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013–14 & 2014–15

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013–14 & 2014–15 CV-II BATCH CLICK HERE...

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES - I EXAMINATION (GROUP–I SERVICES) (PRELIMS)

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES - I EXAMINATION (GROUP–I SERVICES) (PRELIMS) RESULT CLICK HERE...

POSTS OF LIBRARIAN / ASSISTANT LIBRARIAN IN VARIOUS SERVICES

POSTS OF LIBRARIAN / ASSISTANT LIBRARIAN IN VARIOUS SERVICES CV-I BATCH CLICK HERE...

CHILD HEIGHT AND WEIGHT -TABLE:

சென்னை மாநகராட்சியில் இன்று முதல் விடுப்பு கிடையாது

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று(20-04-16) முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை(மே 20ம் தேதி), சென்னை மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது எனவும், மீறி விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் தடை

: விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கி, ஏப்., 13ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 2,000 ஆசிரியர்கள் வரை பணியில் ஈடுபடுவர். ஆசிரியர் சங்கங்கள்,

நாகப்பட்டினம் மாவட்டதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்


பி.எஃப். புதிய விதிமுறைகளை ரத்து செய்தது மத்திய அரசு

பி.எஃப். புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்தது. 58 வயதுக்கு முன் பி.எஃப். பணத்தை எடுக்கவிதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டது. புதிய கட்டுபாட்டு அமலாக்கத்தை ஏற்கனவே மூன்று மாதம் மத்திய அரசு ஒத்திவைத்திருந்தது.

நாடு முழுவதும் தொழிலாளர்கள் எதிர்ப்பை அடுத்து பி.எஃப். அறிக்கையை மத்திய அரசு தற்போது ரத்து செய்துள்ளது. அரசு அறிவிக்கை ரத்தானதை தொடர்ந்து பி.எஃப். நிதியை திரும்ப எடுப்பதற்கான கட்டுப்பாடு நீங்கியதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி மாதனுார் ஓன்றியம்., வேலூர் மாவட்டம்., பணி நிறைவு பாராட்டு அழைப்பிதழ்..

தேர்தல் வகுப்பு கால அட்டவணை- விவரம்

மதுரை ஏப்ரல் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை.

வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும் சித்திரை  திருவிழா மதுரையில் நடைபெறுவதால்
அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

உப்பிலியாபுரம்வட்டார பாராட்டுவிழா பொதுசெயலர்பங்கேற்பு

தொடக்கப்பள்ளிகளுக்கும் அரசு 24ந்தேதி முதல்விடுமுறைவேண்டும்-நாமக்கல் பொதுக்குழு வலியுறுத்தல்

தேர்தல் பணி ஆணை 2 நாள்களுக்குமுன்பே வழங்க வேண்டும்-நாமக்கல் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு வலியுறுத்தல்


மதிய உணவு திட்டத்தில் தர சோதனை கட்டாயமாகிறது!

 பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தரப் பரிசோதனையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட, 12 லட்சம் பள்ளிகளில் படிக்கும், 12 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய ஊட்டச்சத்து திட்டமாக இது உள்ளது. 450 கலோரி சக்திஉணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு, 450 கலோரி சக்தி, 12 கிராம் புரோட்டின் கிடைக்கும் வகையில் உணவு அளிக்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 700 கலோரி சக்தியும், 20 கிராம் புரோட்டினும் அடங்கிய உணவு அளிக்கப்பட வேண்டும்.

ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை

பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் இந்த ஆண்டும்  தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகள் வருகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் தொடக்க  கல்வித்துறையின் கீழ் வருகின்றன. மேற்கண்ட பள்ளிகளில் மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கான  புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்  மாணவ மாணவியருக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது

மே 9 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் மே 9-ம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.விண்ணப்பங்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில்பெற்றுக்கொள்ளலாம். அல்லது tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த தடை

தமிழகத்தில்,பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள்,நேற்று முதல் முழுவீச்சில் தொடங்கியது.ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,வாயில் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாதுஎன,இயக்குனரகம் தடை விதித்துள்ளது.தமிழகத்தில் மார்ச், 15முதல் ஏப்ரல், 13வரை,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. இதில், 11லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.

இவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முகாம்,ஏப்ரல்16ம் தேதி தொடங்கியது. முதன்மை தேர்வர் மற்றும் கூர்ந்தாய்வர்களின் முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில்,உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.ஒவ்வொரு மையத்திலும், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுவது வழக்கம். இங்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,காலையில் வாயில் கூட்டம் நடத்தி,சங்கத்தின் சாதனைகளை நோட்டீஸாக வினியோகம் செய்வர். இதற்காக,நேற்று காலை முதல்,வாயில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டன.

மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்

மருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது. குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், இன்ஜி., படிப்புக்கு, முதல் முறையாக, ஆன்லைன் விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்., 15 முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதற்கு முன் கலந்தாய்வு நடத்த வேண்டிய, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு
களுக்கான விண்ணப்பம் குறித்து எந்த அறிவிப்பும் வராதது, மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

All ITRs activated for E-Filing : I-T Dept

E-filing of income tax return for all category of filers for the assessment year 2016-17 has been operationalised.

“All ITRs including ITR 6 and ITR 7 for AY 2016-17 are available for e-Filing,”
the Income Tax Department said. The different category of ITRs were operationalised in a phased manner starting April 2.
tax returnThe Central Board of Direct Taxes (CBDT) had notified the new forms on March 30 and ITRs can be filed till the stipulated deadline of July 31.

தொடக்க /நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை படிவம் /கருத்துரு படிவம்

CLICK HERE-TO DOWNLOAD SELECTION GRADE OFFICIAL FORMAT

2003, 2004, 2005, 2007 Trb ல் தேர்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை என்ற RTI act தகவல்

தமிழ் இணைய வழி கல்விக் கழகம் - கான் கல்விக் கழகக் காணொளி மொழிப் பெயர்ப்பு பணிமனை - ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்தல் சார்பு


கொளுத்தும் வெயிலில் தவிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள்

10க்கு புதிய நிபந்தனை:மொழி பாடங்களில் 'சென்டம்' கஷ்டம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 13ல் முடிந்தது; 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும், 40க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இந்த ஆண்டு
முதல், விடைத்தாள் திருத்தத்தில் மொழி பாடங்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பாடங்களுக்கு, விடைத்தாள் திருத்தத்தின் போது, 'சென்டம்' மதிப்பெண் வந்தால், அதை, இரண்டாவது மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு

சிவகங்கை;அரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுமுன்தினம் (ஏப்., 16) துவங்கியது. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தினர். இன்று (ஏப்., 18) முதல் உதவி தேர்வாளர்கள் திருத்த உள்ளனர். கணிதத் தேர்வில் பிரிவு 4 ல் 47 வது 'அ' பிரிவு 'கிராப்க்கான' (10 மதிப்பெண்கள்) வினாவில் இரு சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. இதில் முதல் சமன்பாடு சரியாகவும், 2 வது தவறாகவும் இருந்தன. இதையடுத்து தவறான சமன்பாட்டிற்கு 4 மதிப்பெண்கள் கருணையாக கொடுக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


மேலும் முதல் சமன்பாட்டை சரியாக செய்து 6 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே 4 மதிப்பெண்கள் கருணையாக வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையால் கருணை மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் "MANN KI BAAT" நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு - இயக்குனர் செயல்முறைகள்

தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கான வாக்கு சீட்டு பெறுதல் குறித்து பள்ளி கல்வி செயலர் அவர்களின் செயல்முறைகள்

25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர்.

இதுகுறித்து ஆட்சியர் டிபி.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1)ன் படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்

ஏப்ரல் 18 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை

 தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்

தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?

அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளதால் அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பு இல்லையென்றும், ஆனால் கோப்புகள் தயாராக உள்ளதெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் ஏப்., 22 முதல் மூடல் :ஜூன் 1ல் மீண்டும் திறப்பு.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே, 1ல்துவங்குகிறது. 'ஜூன், 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

web stats

web stats