rp

Blogging Tips 2017

பிளாஸ்டிக் தடை: பள்ளிகளில் நாளை அமல்

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு, ஜன., 1 முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

Fund crunch may force govt to close down 3,000 schools:-After Binning TOI Report,TN Admit Plan!

மொகரம் பண்டிகை 21.09.2018 வெள்ளியன்று கொண்டாடப்படும்.தலைமை காஜி அதிகார பூர்வ அறிவிப்பு

தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி -இடைநிலை/ பட்டதாரி / துவக்க நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிகளில் 10 ஆண்டுகாலம் பூர்த்தி செய்தவர்கள்-தேர்வுநிலை / சிறப்புநிலை கோரும் கருத்துருக்களை அனுப்பிவைக்க தெரிவித்தல்

கிளிக் செய்யவும்

DSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல் மேலாண்மை நெகிழிபிபிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் தடுக்கும் பொருட்டு மாணவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்!!


அரசுத்தேர்வுகள் இயக்ககம்-எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு தேதி அறிவிப்பு. 01.12.2018 சனிக்கிழமை அன்று நடைபெறும்


EMIS வலைதளத்தில் மாணவர்கள் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*⭐EMIS வலைதளத்தில் மாணவர்கள் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*வழிமுறைகள்:
*🔶EMIS வலைதளத்தில் Username and Password கொடுத்து open செய்துகொள்ள வேண்டும்.

*🔶Student option ல் Student list ஐ கிளிக் செய்ய வேண்டும்.

*🔶வகுப்பு வாரியாக Student strength காண்பிக்கும், முதலில் ஒன்றாம் வகுப்பினை கிளிக் செய்யவும், பின் Section ஐ கிளிக் செய்து உள்ளே செல்லவும்.


*🔶மாணவர்கள் பெயர் வரிசையாக காண்பிக்கும், அவற்றில் Unique I'd number ஐ கிளிக் செய்யவும்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை: என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு செப்.17 முதல் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை: என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு செப்.17 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு (என்.எம்.எம்.எஸ்.) வரும் செப்.17-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு

65 வட்டார கல்வி அதிகாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு தொடக்கப்பள்ளிகளில் வேலை பார்த்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 56 பேர் கடந்த கல்வி ஆண்டில் (2017-2018) ஓய்வு பெற்றனர். 240 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக 80 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளது. தொடக்க கல்வி இயக்குனரின் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அதிகாரிகள் ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.

Vinayaka Mission University - Unrecognized Course Increment Cancellation is Correct - High Court Judgment Order ( 06.09.2018 )

CLICK HERE FOR ORDER COPY

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்த படிப்புகள் தகுதியுள்ளவையா? - விளக்கம்

யாரெல்லாம் Professional Tax கட்ட தேவையில்லை தெரியுமா?

மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்டாத ஆசிரியர்களுக்கு மெமோ

சிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடக்க்கல்வி இயக்குனர் உத்திரவு


சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு

அக்டோபர் 2 மகாத்மா காந்திஜி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்


வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.: அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி எவை தவறு என்பன குறித்து இங்கு காண்போம்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அலுவல் சம்பந்தமான செய்தி
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.:
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி எவை தவறு என்பன குறித்து இங்கு காண்போம்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் "அவர்களின்" என்கிற வார்த்தை தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக..
வேலூர் மண்டல இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு.

வேலூர் மண்டல இணை இயக்குநரின் செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர் பிறப்பிப்பவர் திரு. இராஜாராம் என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ வாக்கியங்களையும் அவற்றுள் எது தவறு, எது சரி என்பதையும், இணையான தமிழ்ச் சொற்களையும் பின்வருமாறு தருகிறேன்.

பார்வை 1 - ல் கண்ட = தவறு
பார்வை 1 - இல் கண்டுள்ள = சரி

30 - ம் தேதி என்பது தவறு
30 - ஆம் தேதி என்பது சரி.

கடிதப் பொருள் குறித்து எழுதும் போது அதன் இறுதியில் குறித்து, சார்பாக என்று எழுதுதல் தவறு.

தொடர்பாக என்று எழுதுவதே சரி.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு = தவறு
ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு = சரி

பயணத்திட்டம் = தவறு
பயண நிரல் = சரி.

அய்யா = தவறு.
ஐயா = சரி.

ஊதியப் பட்டியல் = தவறு.
ஊதியப் பட்டி = சரி.

அனுப்புனர் = தவறு.
அனுப்புநர் = சரி.

இயக்குனர் = தவறு
இயக்குநர் = சரி.

நகல் = தவறு.
படி = சரி.

கட்டிடம் = தவறு.
கட்டடம் = சரி.

விபரம் = தவறு.
விவரம் = சரி.

ஆவண செய்யுமாறு = தவறு.
ஆவன செய்யுமாறு = சரி.
( சிலர் ஆவணம் செய்யுமாறு என்று கூட எழுதிவிடுகின்றனர்.)

நிர்வாகம் = தவறு.
நிருவாகம் = சரி.

பொருப்பு = தவறு.
பொறுப்பு = சரி.

விடுமுறை விண்ணப்பம் = தவறு.
விடுப்பு விண்ணப்பம் = சரி.

சில்லறைச் செலவினம் = தவறு.
சில்லரைச் செலவினம் = சரி.

ஆரம்பம், துவக்கம் = தவறு.
தொடக்கம் = சரி.

அனுமதி = தவறு.
இசைவு = சரி.

தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை, தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு முறையே முதற்பரிசாக ரூபாய் 3000/-ம், 2ஆம் பரிசாக ரூபாய் 2000/-ம், 3ஆம் பரிசாக ரூபாய் 1000/-ம் வழங்கப்படுகின்றன. இதேபோன்று தெரிவு செய்யப்பெற்ற தலைமைச் செயலகத் துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அரசாணை எண். 1134. நாள்: 21.06.1978 இல் ஆணையிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த நினைவிடம் நோக்கி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஊர்வலமாக சென்ற போது -வீடியோ


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு-பள்ளிக்கல்வி துறை மற்றும் தொடக்கக்கல்வி துறை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை சார்ந்த ஆசிரியர்களின் பான் கணக்கில் வரவு வைக்குமாறும் உரிய காலத்தில் Form 16 வழங்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கடிதத்தை மேற்கோள் காட்டி இயக்குநர் உத்தரவு


மாபெரும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அசைக்க முடியாத இயக்கத்திற்கு தலைமை ஏற்றுள்ள தளபதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது நாள் 8 செப்டம்பர் 2018 மாலை 5 மணி





தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த நினைவிடம் நோக்கி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஊர்வலமாக சென்ற போது




















8/9/2018 அன்று முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புகழஞ்சலி


























web stats

web stats