rp

Blogging Tips 2017

தெரியுமா சேதி?


1. கொசு அடிக்கும் எலக்ட்ரானிக் பேட் எப்படி வேலை செய்கிறது?

2. டியூப் இல்லாத டயர்கள், காற்றடைக்கும் டயர்களைவிட சிறந்ததா?

3. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம

மாவட்ட தலைநகரில் நாளை நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைதமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. 
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

SBI QUICK FACILITY

State Bank Quick Details:
Registration:
REG Accountnumber to +919223488888

De-Registration:
DREG Accountnumber to +919223488888

Balance Inquiry:
Call or SMS as BAL on +919223766666

Mini Statement:
Call or SMS as MSTMT on +919223866666

ATM Card Blocking:

BLOCK XXXX to 567676 (XXXX is last 4 digit of ATM Card No)

Loan Features:
SMS as HOME or CAR to +919223588888 or 567676

State Bank Team@

வருமான வரி செலுத்துவோர் தங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது

2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கானபுதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கணக்கு வைத்துள்ள வங்கிகளின் பெயர்கள் ஐ.எப்.சி. குறியீடு, கடந்தநிதியாண்டில் இறுதியில் கணக்கில் உள்ள தொகை போன்றவற்றைவருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது தெரிவிக்க வேண்டும்என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களைவருமான வரி செலுத்துவோர் கூற வேண்டும்.
மேலும் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டியது அவசியம்.

SSA- 2014-15 QMT III - Quarter -FORMAT

CLICK HERE TO DOWNLOAD QMT FORMAT...

சத்துணவு பெண் ஊழியர்களுக்கு போலீஸ் அடிஉதை : மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

ஊதிய உயர்வு உட்பட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது நாளான நேற்று மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடியில், பெரியார் சிலை அருகே சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்களை சேலை மற்றும் தலை முடியை பிடித்து இழுத்ததுடன், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இதில், பெண் ஊழியர்களின் பலரது ஆடைகள் கிழிந்தன. சாலையில் ஏராளமான செருப்புகள், டிபன் பாக்ஸ்கள் சிதறிக் கிடந்தன. அப்பகுதியே போர்க்களம்போல் காட்சி அளித்தது. 

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படி வழங்க வேண்டும்

அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை திருவள்ளூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.குப்புசாமி தலைமை தாங்கினார்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம்: ஏழு பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த என்.செல்வதிருமால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு இந்திய குடிமகனும் தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டியது கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள முக்கியமான 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் காலையில் நடக்கும் இறைவழிபாட்டில் (அசெம்பிளி) தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அதனால் அங்கு பயிலும் மாணவர்கள் தேசிய கீதத்தின் முக்கியத்துவத்தை அறிய வாய்ப்பில்லை.
எனவே, மேற்கண்ட பள்ளிகளில் தினமும் காலையில் நடக்கும் அசெம்பிளியில் தேசிய கீதம் இசைக்கவோ அல்லது பாடவோ உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான மண்டல அதிகாரியிடம் கடந்தாண்டு ஆகஸ்டு 25-ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் ஆயிரக்கணக்கானோர் கைது

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.சாலை மறியல் முயற்சிசத்துணவு திட்டத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டம் நடத்தினார்கள். 

சென்னையில் 30 சத்துணவு ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம்அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி, மாநில செயலாளர் எஸ்.சொர்ணம், சென்னை மாவட்ட தலைவர் கேசவன் ஆகியோரிடம் போலீசார் பேச்சுவார்த்தைநடத்தினார்கள்.
தள்ளுமுள்ளு
முறையான அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது, உடனே கலைந்து செல்லுங்கள் என்று சத்துணவு ஊழியர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து, கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே சாலை மறியல் செய்ய முயன்றனர்.போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
அடுத்தகட்ட போராட்டம்

ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி


பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

2015-2015ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஏற்கனவே பள்ளிக்கூடம் திறந்த அன்றுதான் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தன. வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு வழங்கும் விலை இல்லாத 14 வித பொருட்களும் மாணவர்களுக்கு தேவைப்படும்போது உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல வருகிற கல்வி ஆண்டிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

ஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்

ஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்
தமிழக பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதால், கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சமையல் தொழிலாளர்களுக்கு கிராக்கி:சத்துணவு ஊழியர் 'ஸ்டிரைக்' எதிரொலி

 திருச்சி:சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், பள்ளிகளில், 300 ரூபாய், தினக்கூலி அடிப்படையில், சமையலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்; இதனால், சமையல் தொழிலாளர்களுக்கு, திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம்:தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சத்துணவு வழங்கும் பணியில், சமையலர், சமையல் உதவியாளர் என, 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

சத்துணவை ருசி பார்த்து வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு?

சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்' என, கண்டிப்பான உத்தரவிடப்பட்டு உள்ளது.

கலப்பு திருமணத்திற்கு வழங்கப்படும் மத்திய அரசு நிதி எங்கே? தமிழகத்தில் இருந்து யாரும் பெறாத அவலம்

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் நிதியுதவியை பெற்றுத் தர, தமிழக அரசு அதிகாரிகள், கடந்த, இரண்டு ஆண்டுகளாக, எந்த நடவடிக்கையும் எடுக்காதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சேவை செய்ய, மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, 1992ல், அம்பேத்கர் அறக்கட்டளை துவக்கப்பட்டது.
ஜாதியை ஒழிக்க:

-ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?

பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல.

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு

 ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வுநடத்தப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் நேரடியாக இந்தப் படிப்புகளில் சேர்ந்து ஆசிரியர் பணிக்கான தகுதியைப் பெற முடியும்.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் 20ம் தேதி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது. குழப்பமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நாளையுடன் பெரும்பாலான இடங்களில் முடிகிறது.

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று: அமைச்சர்கள் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மாநிலத்திலேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச்சான்று பெற்றுள்ளதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் ஆகியோர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு நலத் திட்டங்களை கொண்டு சேர்ப்பது, கண்காணிப்பது ஆகியவற்றில் இணையதள வசதியை அறிமுகப்படுத்தி அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், "புதுகை சிலெட்' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் உடனுக்குடன் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

‘ஒரு மாணவருக்கு, ஒரு மரம்’ திட்டத்தை நிறைவேற்ற உத்தரவு


நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கல்லூரிகளில், அதிக அளவில் மரங்கள் நட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பசுமைத் தீர்ப்பாயம் சார்பில், பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,க்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், ஒவ்வொரு கல்லூரியிலும் மரம் வளர்க்கும் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாடத்திட்டம் கட்டாயம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

தனியார் நிதியுதவி பள்ளியில் வேலைபார்த்து பணி முறிவின்றி அரசு பள்ளியில் நியமனம்பெற்றாம் அதே பணிப்பதிவேட்டை தொடரலாமா?

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2015-2016 ஆம் ஆண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு வாக்காளர் சரிபார்த்தல்.

கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

 பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


  இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தனியார் பள்ளி செயலர் பி.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

விருத்தாசலன் வட்டாரம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா இன்று நடைபெறுகிறது

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமிழக அரசு அறிக்கை

பல்வேறு சலுகைகளைப்பெற்ற பின்னரும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் செய்வது தேவையற்றது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்தும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல்வேறு படிகள்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்ககளுக்கு ஈடுசெய் விடுப்பு அளிப்பதில் சிக்கல்

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தது.

ஆசிரியர் தேர்வு முறைக்கு எதிர்ப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யுமாறு அந்த தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

MBBS விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாம் வாரத்தில் துவக்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. புதிய அரசு மருத்துவக் கல்லூரியில், 100 மாணவர்களை சேர்க்கவும் முயற்சி நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே மாதம், 10ம் தேதிக்குள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!


பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர். இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.

இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:

1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ், ஐ.டி., கார்டு

அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்றும் பள்ளி விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்கு உடனடி சிகிச்சை தரும் வகையில், இத்திட்டம் அமலாகிறது. பள்ளி வாகனங்களில் விபத்து, சுவர் இடிந்து விபத்து, மாணவர்களிடையே பஸ்களில் மோதல், பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்து ஏற்பட்டு பலி மற்றும் காயம் என, எதிர்பாராத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு

டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்புகளில், சமீப காலமாக, தொடர் புகார்கள் எழுந்துள்ளன. டி.ஆர்.பி.,யை எதிர்க்கும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு; நீதிமன்றம் கண்டிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.
* ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 6 % உயர்வு எப்போது ?

வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படும் அகவிலைப்படி ,இந்த ஆண்டு 6 % அகவிலைப்படி ஜனவரி முன்தேதியிட்டு மத்திய அரசு வழங்கியுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவுஎடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக பணப்பயன்கள் கிடைக்கும். தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் என 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணை யான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் மாதம் தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதே அளவு தொகையை அரசு தனது பங்காகச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவீதம் ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக் கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக அளிக்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தில், பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎஃஎப்) ஊழியர்கள் தங்கள் தேவைக்கு முன்பணம் எடுக்கலாம். கடன் பெறலாம். ஆனால், இத்தகைய வசதிகள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (சிபிஎஃப்) கிடையாது. புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 12 ஆண்டுகளில் ஏறத்தாழ 25 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ஓய்வுபெற்றிருக்கிறார்கள்.
உயிரிழந்தவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியை ராஜினாமா செய்தவர்கள் ஆகியோரும் இந்தபட்டியலில் அடங் குவர். இதுவரையில் அவர் களுக்கு சிபிஃஎப் ஓய்வூதிய பயணப்பயன்கள் கிடைக்க வில்லை. மாதம்தோறும் சம்பளத்தி லிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை கூட கிடைக்கவில்லையே என்று அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக அரசு தகவல் தொகுப்பு விவர மைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது,
“புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்றவர்கள், உயிரிழந் தவர்கள்குறித்த பட்டியலை அரசு கேட்டிருக்கிறது. எனவே, ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கும், உயிரிழந்த பணியா ளர்களின் குடும்பத்தி னருக்கும் சிபிஎஃப் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தெரி வித்தனர்.

ஆசிரியைகளுக்கான உடை அமைப்பு: சீர்படுத்த கோரிக்கை

ஆசிரியைகளுக்கான உடை அமைப்பை சீர்படுத்தக் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஓவிய ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் நல்ல காசிராஜன், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில்-17-04-2015 அன்று கூடுகிறது

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் காரணமாக பள்ளித்தலைமை ஆசிரியர் எதிநோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஜாக்டோ சென்னையில்17/04/2015 அன்று கூடுகிறது.

பிளஸ் 2வில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு? திருத்தும் பணியில் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் பல புகார்கள் எழுந்ததால், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், 95 சதவீத தேர்ச்சி இலக்கை நோக்கி, விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிந்தது. மார்ச் 16ம் தேதி முதல், மொழிப்பாட விடைத்தாள் திருத்தம் துவங்கியது. படிப்படியாக, மற்ற பாடங்களுக்கு விடை திருத்தம் துவங்கி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதும், 73 மையங்களில்,

1 முதல்9 ஆம் வகுப்பு வரை புத்தகங்கள் மே முதல் வாரத்தில் வழங்கப்படும்

1 முதல்9 ஆம் வகுப்பு வரை புத்தகங்கள் மே முதல் வாரத்தில் வழங்கப்படும்
முப்பருவ முறையின் கீழ் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்கள் மாவட்டங்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் அனுப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. பொதுத்தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில் அவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலேயே புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை அருகே ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கண்டியூர்சாலை முருகன் கோவில் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் திருமணமான ஆசிரியை செல்போனில் தேவையில்லாத குறுஞ்செய்தியும். அவ்வப்போது மிஸ்டுகாலும் வந்தது. சில சமயங்களில் செல்போனில் அழைத்து காது கூசும் வார்த்தைகளால் பேசியும் உள்ளனர்.
இந்த தொல்லை குறித்து பக்கத்து மாவட்டத்தில் உயர் பதவி வகிக்கும் தன் கணவரிடம் ஆசிரியை தெரிவித்தார். தொடர்ந்து குறுஞ்செய்தியும். மிஸ்டுகாலும் வரவே தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் ஆசிரியை புகார் தெரிவித்தார்.

சத்துணவு சமையல் வேலை பார்க்க சொல்வதா: ஆசிரியர்கள் கொந்தளிப்பு?

சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்ட அறிவிப்பால், சத்துணவு சமைத்துப் போடும் பணி செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால், ஆசிரியர்கள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள், நாளை முதல் கால வரையற்ற போராட்டம் அறிவித்து உள்ளனர். எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சத்துணவுக் கூடங்களை திறந்து, சமையல் செய்து, மாணவ, மாணவியருக்கு சாப்பாடு போட வேண்டும்; இதற்கு தலைமை ஆசிரியர்கள், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கல்வித் துறை வழியே, சமூகநலத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர்கள் மூலம், வாய்மொழியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது; இதற்கு தலைமை ஆசிரியர்கள், கடும்கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள்( D.T.Ed) : மே 18-இல் தொடக்கம்

 தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வுகள் மே 18-ஆம் தேதி தொடங்குகின்றன.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 19-ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 18-ஆம் தேதியும் தொடங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பாடநூல் கழக விற்பனை மையத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விற்கப்படாது என அறிவிப்பு

பாடநூல் கழக விற்பனை மையத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் புத்தக நிலையங்கள் மற்றும் பள்ளிகளில்தான், பெற்றோர்கள் அதிக விலைக்கு புத்தகம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது மாடி
கல்வித்துறையின் முக்கிய அலுவலகங்கள் உள்ள சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டாவது மற்றும் மூன்றாம் மாடியில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைமை அலுவலகம் செயல்படுகிறது. கீழ்தளத்தில், பாட புத்தக விற்பனை மையம் உள்ளது. இங்கு, இன்னும் புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வரவில்லை. எனவே, பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

INDIRAGANDHI NATIONAL OPEN UNIVERSITY REVALUATION RESULTS 2014 UPDATED!

INDIRAGANDHI NATIONAL OPEN UNIVERSITY REVALUATION RESULTS 2014 UPDATED!

CLICK HERE TO VIEW...

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

TAMILNADU OPEN UNIVERSITY TERM END EXAMINATION -2015 RESULTS PUBLISHED..

TAMILNADU OPEN UNIVERSITY TERM END EXAMINATION -2015 RESULTS PUBLISHED...

CLICK HERE TO VIEW RESULTS...

ஆசிரியர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்-செ.முத்துசாமி

                 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்கள் இயக்கத்தின் மாநில ,மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும்” இத்தமிழ்ப்புத்தாண்டு எல்லாவளங்களையும்,அவரவர்  எண்ணங்களையும் நிறைவேற்றும்  ஆண்டாக திகழவேண்டும் ”என தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களாக அனைவருக்கும் தெரிவித்துள்ளார்
                     மேலும் தனது உடல்நிலை மேம்பட வேண்டி தனக்காக பிரார்தனை செய்துகொண்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுசெயலர் பூரண சுகத்துடன் நாமக்கல் இல்லத்தில்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி ExMLC  அவர்கள், இருதய அறுவை சிகிச்சைக்காக  கோவை  குப்புசாமி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு open heart surgery நடைபெற்றது.பின்னர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு கோவையில் தனது இளையமகன் இள்லத்தில் ஓய்வில் இருந்தார்,தற்போது பூரண உடல் சுகத்துடன் நாமக்கல் இல்லத்திற்கு திரும்பியுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்
திரு செ.வடிவேல்
நேர்முக உதவியாளர்

அரசு உதவி பெறும் 50,000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை!

ஒவ்வொரு மாதமும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் போதே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.

பிரதி மாதம், 5ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம்
சேர்க்கப்படும். ஆனால், இம்மாதம், நிதியாண்டு கணக்கு

சென்னையில் பள்ளிச் சுவர் இடிந்து 2 மாணவிகள் பலி: தமிழக அரசு நிதியுதவி...

சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மரணமடைந்த இரு மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' சென்னை, அடையாறு, பெசன்ட் அவென்யூவில் உள்ள தனியாரால் நடத்தப்படும் அவ்வை ஹோம் டி.வீ.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (13.4.2015) மதியம் 12.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில், ஊரூர்குப்பம் பகுதியிலிருந்து அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் நந்தினி, மோனிஷா மற்றும் சந்தியா ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என மற்றொரு சங்கமான தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

பென்ஷன் ,ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லை .திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என மற்றொரு சங்கமான தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு .திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்.
நாளை மறுநாள் முதல் நடத்துவதாக இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு. அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை எனவும் அறிவிப்பு.

சத்துணவு ஊழியர்கள் - அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு -தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன்

சத்துணவு ஊழியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, இன்று சென்னையில் சத்துணவு ஊழியர்களுடன் அரசுபேச்சுவார்த்தை நடத்தியது.
அமைச்சர்கள் வளர்மதி, வீரமணி, பழனியப்பன் தலைமையில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 10 சங்கங்கள் பங்கேற்றன.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். ''இந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்துள்ளது'' என சண்முகராஜன் கூறினார.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

புத்தாண்டில் தாய்,தந்தையரை வணங்குங்கள்..குருவிடம் ஆசி பெறுங்கள்...குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்..இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள்..வருடம் முழுக்க உங்களுக்கு அந்த ஆசி நிலைத்து நின்று வழிகாட்டும்... நாளை காலை 10.35 மணியளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி மேசம் ராசிக்கு சூரியன் வருகிறார்.. . ...12 ராசிகளில் மாதம் ஒரு ராசி என வலம் வந்து, சூரியன் மீண்டும் முதல் ராசியான மேசத்தில் தன் வருடக்கணக்கணக்கை தொடங்கும் நாளே தமிழ் புத்தாண்டு .. முக்கனி எனப்படும் மா,பலா,வாழை முன்றையும் பூஜை அறையில் வைத்து நிறை படி பச்சரிசி வைத்து,பூரண கும்பம் வைத்து,நெய்தீபம் ஏற்றி வைத்து கண்ணாடி வைத்து,வெள்ளி ,தங்கம்,பணம் வைத்து காலையில் புத்தாண்டில் அவற்றை பார்த்து தொட்டு வணங்கினால் வருடம் முழுக்க இவை குறையின்றி கிடைக்கும் என்பது ஐதீகம்...!

புது அரசு மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு: வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை?

அரசு ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யின் குழு, திடீர் ஆய்வு நடத்தியது. முறையான அனுமதி பெற்று, திட்டமிட்டபடி, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கும் என தெரிகிறது.

சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, பிரம்மாண்டமாக, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு,

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரத்த பிரிவு கட்டாயம்

பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதற்கான பணியை இன்று தொடங்கி 17ம் தேதிக்குள் முடிக்கவும், மாணவர்களின் ரத்த பிரிவு கட்டாயம் தேவை என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கோடை விடுமுறையிலேயே வழங்க ஏற்பாடு செய்யும்படி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வழிகாட்டுதல் கூட்டத்தை நடத்தி நடத்தி வந்தார். நேற்றுடன் அந்த கூட்டம் முடிந்தது.

அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் எதிர்ப்பு

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் இ.பி.எப். ஓய்வூதியம் ரூ.1000 வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்போவதாக அதிர்ச்சிக்குரிய செய்தி வெளியாகியுள்ளது.ஏற்கெனவே பெற்றுவந்த ஓய்வூதியம் மிகவும் குறைந்ததொகை என்பதற்கா அதனை உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்று ஓய்வூதியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

பள்ளி கல்வி துறை திடீர் முடிவு: கோடை விடுமுறையிலும் வகுப்பு

பள்ளி கல்வி துறை திடீர் முடிவு: கோடை விடுமுறையிலும் வகுப்பு அடுத்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் படிக்க உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்து துறை முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடந்தது. கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளும் தற்போது நடக்கிறது. தற்போது சில மாவட்டங்களில் பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிந்துள்ளன. 22ம் தேதியுடன் இந்த கல்வியாண்டு முடிவடைகிறது. 23ம் தேதிக்கு பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு ஜூன் 1ம் தேதிதான் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதால் அதே நாளில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது 9ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு செல்ல உள்ளனர். அவர்களுக்கு கோடை விடுமுறையிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதற்காக பள்ளி ஆண்டுத் தேர்வு முடியும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்களை கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியரில் 1 முதல் 8ம் வகுப்பு வரை யாரையும் பெயில் ஆக்க கூடாது

மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இந்த வசதியை பெறும் முதல் அரசுப் பள்ளி என்ற பெருமையை பெறும் இப்பள்ளி, 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் முற்றிலும் சேதமானது. இப்பள்ளி மாணவர்கள் 80 பேரும் இந்த கிராம மக்கள் 650 பேரும் சுனா மிக்கு பலியாயினர். அப்படி பாதிப்புக்குள்ளான இவ்வூரும், இப்பள்ளியும் அந்தச் சுவடே தெரியாத அளவுக்கு சீரமைக்கப்பட்டு இன்று முன்னு தாரணமாகத் திகழ்கின்றன.

அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை

தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள் ளது என்றார் கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்திதேவி. 


சமூகக் கல்வி நிறுவனம் மற்றும் யுனிசெஃப் இணைந்து குழந்தைகள் நேயப் பள்ளிகளை உருவாக்குவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. 

ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு கையாள்பவரா? போலி ‘மொபைல் ஆப்ஸ்’... உஷார்

ஸ்மார்ட் போன் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, இதன்மூலம் வர்த்தகநடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்மொபைல் அப்ளிகேஷன் மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவித்து வருகின்றனர். 

ஆனால், பொழுது போக்கு அம்சமாக பயன்படுத்துவதை விட வங்கி கணக்குகளை பார்ப்பது மற்றும் பண பரிவர்த்தனைக்கு மொபைல்போன்களை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து பாரத ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அவ்வப்போது எச்சரித்து வந்துள்ளது

பீகாரில் சம்பள உயர்வு கேட்டு 73,000 பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டம்

இந்திய அளவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 74. ஆனால் பீகாரில் 63 சதவீதம் பேரே படித்துள்ளனர்.


அடிப்படைக்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிதீஷ்குமார் ஏற்கனவே முதல்–மந்திரியாக இருந்த போது 3.5 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தார். இவர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது

வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் திருத்தம், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும். தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்கள் எந்தெந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தார்களோ, அந்த வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமின் போது பல்வேறு பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவது ஆகியவற்றுக்கு வாக்காளர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை தேர்தல் ஆணையம்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்



மிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

web stats

web stats