rp

Blogging Tips 2017

தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற ஆசிரியர்களுக்கு கெடு

இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும் முறை

குறைந்த பட்சம் 10 வருட காலம் செய்து இருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும்..ஆனால் இதைப் பெற 55 வயது ஆகி இருக்கவேண்டும்.முடியுமானால் 60 வயது வரை சேவை ஆற்றலாம்
எனினும் பத்து வருட சேவையை பூர்த்தி செய்ய முன்னர் மரணமடைந்தால் துணைக்கு அல்லது அநாதை குழந்தைகளுக்கு இந்த உரித்து உண்டு.
யாரும் விரும்பினால் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறலாம்.ஆனால் 55 வயதானால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.ஆசிரியைகள்,தாதிகள்,பெண்போலிஸ் உட்பட சில சேவையைச் சேர்ந்த பெண் அரசாங்க ஊழியர்கள் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றாலும் உடன் ஓய்வூதியம் கிடைக்கும்

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை:செயலர் விளக்கம்

பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்காக விண்ணப்பித்தோர் 'புரவிஷனல்' சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டாம்; கலந்தாய்வுக்கு வரும் போது கொண்டு வந்தால் போதும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., மற்றும் பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் மே 13ல் துவங்கியது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 9- கடைசி நாள். ஜூன் 20க்கு மேல் கலந்தாய்வு துவங்கும்.டிப்ளமோவை பொறுத்த வரை, கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் கடைசி இரண்டு பருவத் தேர்வுகளின்படி

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம் நஷ்டஈடு நிர்ணயிக்க நீதிபதிக்கு கூடுதல் அவகாசம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் கமிஷனுக்கு ஆறு மாத காலஅவகாசம் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கடந்த 2004ல் கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 90 குழந்தைகள் உயிரிழந்தனர்.
18க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர்.உயிரிழந்த மற்றும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்திற்கு நஷ்டஈடு நிர்ணயிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விபத்தில் குழந்தையை இழந்த இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இணையவழி முறையில் பட்டப் படிப்புகளையோ, பட்ட மேற்படிப்புகளையோ வழங்க எந்தவொரு பல்கலைக்கழகத்துக்கோ அல்லது கல்வி நிறுவனத்துக்கோ இதுவரை யு.ஜி.சி. அனுமதி வழங்கவில்லை. எனவே, இணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது.

இணையவழி (ஆன்-லைன்) முறையில் பட்டப் படிப்புகளையோ, பட்ட மேற்படிப்புகளையோ வழங்க இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற அறிவிப்பு பல்கலைக்கழகங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த அறிவிப்பு காரணமாக, பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் இணையவழி முறையிலான படிப்புகளில் சேர்ந்துள்ள ஆயிரக் கணக்கானவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

பூட்டுப் போட்டார் ஒரு சி.இ.ஓ., உடைத்தார் மற்றொரு சி.இ.ஓ.,

குமரி மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்துக்கு ஒரு சி.இ.ஓ., பூட்டு போட்டார். சிறிது நேரத்தில் மற்றொரு சி.இ.ஓ. தாசில்தார் முன்னிலையில் பூட்டை உடைத்தார்.குமரி மாவட்ட சி.இ.ஓ. ராதாகிருஷ்ணன். இவர் அண்மையில் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய சி.இ.ஓ.வாக விருதுநகர் சி.இ.ஓ.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை பதவி ஏற்றார்.

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட செயற்குழு .

நமது பொது செயலாளரின் 60 ஆண்டு கால இயக்கபணியின் பாராட்டு விழாவிற்கு  தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் செயற்குழுவில் பொறுப்பாளர்கள் மூலம் ரூபாய் 10000 வழங்கப்பட்டது .

எம்.பி.ஏ,எம்.சி.ஏ விண்ணப்பம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகள், கலை கல்லூரிகள், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் போன்றவற்றில் எம்பிஏ மற்றும் எம்சிஏ சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 8ம் தேதி முதல் 30ம் தேதி முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைதேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: ஜூன்- ஜூலையில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வை எழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு பஸ் பாஸ்.பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய மாணவர்களுக்கு அடுத்த மாதமும் பழைய மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதலும் 'பஸ் பாஸ்' வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. ஆனால் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் அட்டை இன்னும் வழங்கவில்லை. இதனால் பஸ்களில் மாணவ மாணவியர் கட்டணம் இல்லாமல் பயணிப்பது சவாலாக உள்ளது. 'பல பஸ்களில் நடத்துனர்கள் பாஸ் காட்ட வேண்டும்;

962 சத்துணவு மையங்களுக்கு "காஸ்' இணைப்பு தர உத்தரவு

: திருப்பூர் மாவட்டத்தில், "காஸ்' வசதியில்லாத, 962 சத்துணவு மையங்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்குள் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காதாரமான உணவு வழங்கவும், பணியாளர்களின் சிரமத்தை குறைக்கவும், சத்துணவு மையங்களில், "காஸ்' அடுப்பு வசதி ஏற்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இத்திட்டத்தின்படி, சத்துணவு மையங்களில் "காஸ்' சிலிண்டர் வைப்பதற்கான தரைதளம், மேடை கட்டப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மையங்களில், 2012 முதல், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள், அனைத்து மையங்களுக்குள் "காஸ்' இணைப்பு அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் 'மேகி' நூடுல்சுக்கு தடை

புதுடில்லி : 'மேகி நூடுல்ஸ், மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு அல்ல. அதில் கலந்துள்ள பொருட்கள் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை' என, இந்திய உணவு மற்றும் தர ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் ஒன்பது வகையான நூடுல்ஸ் வகைகளை சந்தையிலிருந்து உடனடியாக திரும்ப பெறும்படியும், அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது

அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம் நீட்டிப்பு

 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த மே 6-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நடைபெறவுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 5 என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை விமான நிலையத்தில் 100 அடி உயரத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில், 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
100 அடி உயரம்
தேசிய கொடி பொதுவாக பகலில் மட்டுமே பறக்கவிடப்படும். மாலை 6 மணிக்கு அரசு அலுவலகங்களில் பறக்கும் தேசிய கொடிகள் இறக்கப்படும். ஆனால் இரவிலும் தேசிய கொடிகள் பறப்பதற்கு சில இடங்களுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்குகிறது

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்த திருமதி.அமுதவள்ளி அவர்களை இணை இயக்குனர் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்

Lab Asst Post - தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம்

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது.

4,362 காலியிடங்கள்
அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பள்ளியில் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்: தலைமை ஆசிரியை–4 ஆசிரியர்கள் இடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக திருச்சியை சேர்ந்த காயத்திரி ஈஸ்வரி பணியாற்றினார்.

பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: கல்வித்துறை.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு செல்போன்கொண்டு வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றன.

தீர்ந்தது குழப்பம்: சட்டப் படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பம்

ஜூன் 5-ம் தேதி முதல் சட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் (http://www.tndalu.ac.in/) வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க உத்தரவு.

குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவரான செல்வம் தொடர்ந்த வழக்கில்சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது.டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதன்மை தேர்வு வெள்ளிக்கிழமை முதல்3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி?- 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது அரசு

  1. பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

    இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ''வளர் இளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்கு போலிக் அமிலம் அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், மாணவர்களின் நினைவுத்திறனும், சிந்திக்கும் ஆற்றலும் கற்றல் திறனும் வளரும். அவர்களின் உடல்நலன் மேம்படும்

பொதுசெயலர் திரு செ.முத்துசாமி அவர்களுக்கு பாராட்டுவிழா- விழாக்குழு அமைப்பு



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திருச்சி மாவட்ட செயற்குழு அழைப்பு-திரு நாகராஜ் மாவட்ட செயலர்

பொது செயலாளரின் 60 ஆண்டு கால இயக்கபணியின் பாராட்டு விழாவை குறித்து தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் மாவட்ட பொதுக்குழு நாளை (5.6.15) மாலை 6 மணிக்கு No.1 டோல்கேட்டில் நமது அலுவலகத்தில் நடைபெறுகிறது. அது சமயம் அனைத்து மாவட்ட , வட்டார பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு-பொதுசெயலரின் பாராட்டு விழாவினை வெகு சிறப்பாக நடத்துவது என தீர்மானம்

நாமக்கல்-தமிழ்நாடுன் ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு மாவட்டத்தலைவர் தலைமையில் நடந்தது.சிறப்பு அஐப்பாளராக பொதுச்செயலர் (பொறுப்பு) திரு க செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டார்,
வரும் ஜூலை 5 அன்று நடைபெற உள்ள நமது பொதுசெயலர் திரு செ.முத்துசாமி அவர்களின் 60 ஆண்டுகால ஆசிரியர்களுக்கான இயக்கசேவைக்காஅன நன்றி அறிவிப்பு பாராட்டுவிழாவினை நாமக்கல் மாவட்டம் சார்பாக முன்னின்று திறம்பட நடத்துவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.


மேலும் விழா செலவுக்காக நாமக்கல் மாவட்டக்கிளை சார்பாக நிதி அறிவிப்பு செய்யப்பட்டது.அதனடிப்படையில் நேற்றைய கூட்டத்தில் முதல் தவணையாக ரூ 50,000- சேகரிக்கப்பட்டது.மேலும் ரூ-50000- சேர்த்து மாவட்டக்கிளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் நிதி அளிப்பது என முடிவாற்றப்பட்டது வ்இழாவில் மாவட்டசெயலர் திரு செல்வகுமார்,துணைசெயலர் அருள் மணி,மாநில துணைத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட வட்டார ,மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

AEEO -அலுவலகங்களில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்தல் - இணைய வசதி இல்லாத உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள் அருகில் உள்ள இணைய வசதி உள்ள வட்டார வள மையத்தில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்ய இயக்குனர் உத்தரவு


பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்த உத்தரவு

ஜூன் 2015 குறு வள மைய பயிற்சி

ஜூன் 2015 குறு வள மைய பயிற்சி - தலைப்பு குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் தொடக்க நிலை ; 20.06.2015 உயர் தொடக்க நிலை ; 27.06.2015

பள்ளிக்கல்வி - விலையில்லா பேருந்து அட்டையில் விவரங்களை பதிவு செய்தல் சார்பாக ஆசிரியர்களுக்கு 10.06.2015 பயிற்சி இயக்குனர் உத்தரவு

DSE - TRAINING TO TEACHERS FOR NO COST BUS PASS ENTRY REG PROC CLICK HERE...

பள்ளிக்கல்வி - மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது நன்கொடை வசூல் செய்யக்கூடாது என இயக்குனர் உத்தரவு

DSE - DONATIONS NOT COLLECT FROM STUDENTS REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - 21 தமிழ், 25 தலைமையாசிரியர், 100 இடைநிலை ஆசிரியர்கள், 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடை நிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

DEE - 146 TEACHERS AND 1581 SGT, 3565 BTs PAY ORDER ISSUED UPTO 31.12.2015 REG ORDER CLICK HERE...

இந்த ஆண்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் இல்லை

 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.பல்வேறு
தகவல்களை உள்ளடக்கிய வகையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அட்டை வழங்க அரசு திட்டமிட்டது. இதற்காக மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்தது. 2015-16 கல்வியாண்டில் இந்த 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர்.

மாணவர்களை ஈர்க்க கே.ஜி வகுப்புகள் தொடங்க திட்டம்?

மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்கப் பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், கே.ஜி., வகுப்புகளைத் துவங்க, தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால், அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது

பள்ளிகள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்:மகா., அரசு உத்தரவு

மகாராஷ்டிரா :இம்மாதம், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று, ஞாயிறு என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. ஆனால், 'யோகா வகுப்புக்காக அன்று, பள்ளிகள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்' என, மகாராஷ்டிரா மாநில பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் 2 அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சிக்கு உட்பட்ட கோவை சாலையில் உள்ள துவக்கப் பள்ளி மற்றும் அழகாபுரி வீதியில் உள்ள துவக்கப் பள்ளியில் சேர மாணவர்கள் முன்வரவில்லை. இதனால் இந்த 2 பள்ளிகளையும் மூட மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு: பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் ஆய்வக உதவியாளர் தேர்வு தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 நாமக்கல்லைச் சேர்ந்த முத்துசாமி உட்பட 4 பேர் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதி ஹரி பரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி பட்டியலில் நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கீடு செய்வது போல எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கீடு செய்யாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சமூக அறிவியல் பாடத்துக்கு 7 வகுப்புகளை ஒதுக்க பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், வி.எம்.உமா சந்த ர் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், தமிழக பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்துக்கான வகுப்புக்களை போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. எனவே, வாரத்துக்கு 7 வகுப்புகள் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கல்வித்துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார்

SSA – Quality initiatives – CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 – State level training- Deputation of participants -reg.

CLICK HERE TO DOWNLOAD CRC LEVEL TRAINING-SPD LETTER...

FLASH NEWS : TNPSC குருப் 4 கலந்தாய்வுக்கு அழைப்பு


TNPSC குருப் 4 கலந்தாய்வுக்கு அழைப்பு

25.08.2013 அன்று நடைபெற்று குரூப் 4 தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

JUNIOR ASSISTANT (V PHASE)- CERTIFICATE VERFICATION 10.06.2015 (8.30 AM)
                                                            COUNSELLING- 11.06.2015(8.30 AM)

TYPIST (IVPHASE)-  CERTIFICATE VERFICATION 08.06.2015 (8.30 AM)
                                                            COUNSELLING- 09.06.2015(8.30 AM)

STENO-TYPIST GR.III (III PHASE)- CERTIFICATE VERFICATION 09.06.2015 (8.30 AM)
                                                            COUNSELLING- 10.06.2015(8.30 AM)

CLICK HERE FOR JOB SEATS COUNTING CAST WISE DETAILS

நியமன ஆணைக்கு காத்திருக்கும் உதவிப் பேராசிரியர்கள்

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்பணியிடங்களுக்காக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை கிடைக்காததால், செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

       மாநிலத்திலுள்ள அரசுக் கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு, 2012ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் வெளியிடப்பட்டது. கணிதம், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு, புள்ளியியல், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.

எம்.பி.பி.எஸ்., பதிவுக்கு தேசிய தகுதித்தேர்வு:மத்திய அரசு முடிவுக்கு டாக்டர் சங்கம் எதிர்ப்பு

எம்.பி.பி.எஸ்., படிப்பை பதிவு செய்ய தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நடைமுறை தேவையில்லாதது; மருத்துவ பல்கலை தேர்வு முறையை கேலிக்கூத்தாக்கும் செயல்' என டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்., முடித்த மாணவர்கள் 'எக்சிட்' தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பதிவு செய்து சிகிச்சை அளிக்க முடியும் என்ற நடைமுறை இந்தியாவில் உள்ளது.

Grant of notional increment to Government Servants for pensionary benefits for those who retire on superannuation on the preceding day of increment - Clarification Reg

GOVT LTR NO.5085 / CMPC / 2015-1, DATED.01.06.2015 - Grant of notional increment to Government Servants for pensionary benefits for those who retire on superannuation on the preceding day of increment - Clarification Reg Order Click here...

திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி: ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? - காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள்

 ஆசிரியர் கல்வி (பி.எட்.) படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்தும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சூழலில், ஓராண்டு பி.எட். படிப்பு இந்த ஆண்டு தொடருமா என்று கல்வியியல் கல்லூரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன
.நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ), ஆசிரியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த முடிவு செய்து, ஓராண்டு படிப்புகளான பி.எட்., எம்.எட். படிப்புகளை 2 ஆண்டுகளாக உயர்த்துவதாக அறிவித்தது

மாணவர்களை தேடி ஆசிரியர்கள் நடைபயணம்:அரசு பள்ளி சேர்க்கைக்கு புது திட்டம்

 அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி செல்லா குழந்தைகளை அழைத்து வர, மாணவர்களை தேடிச் செல்லும் நடைப் பயணத்தை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளன. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

இதன்படி,

தமிழகத்தில் 13 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதிலும் 13 முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விவரம்

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு இணைய வழி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
           இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி: 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

         பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு பள்ளிகள் - தேர்வு எழுதிய மையங்கள் மூலமாக தலைமை ஆசிரியர்களால் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்ப்டடது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மொத்த இடங்களை மூன்று நாள்களில் இணையதளத்தில் வெளியிட ஆணை

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மொத்த இடங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதன் இணையதளத்தில் மூன்று நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

        "மாற்றம் இந்தியா' நிறுவனத்தின் இயக்குநர் ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு மழலையர், தொடக்கப்பள்ளி, மெட்ரிகுலேஷன், மேல் நிலை, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சங்கத்தின் மாநாடு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது.

ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள் undefined

பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு


=Mr.Radhakrishnan ceo Kanyakumari to PTA Secretary Chennai
= Virudhu Nagar ceo Mr. Jayakumar to Kanyakumari,
= Tiruvannamalai SSA ceo Mr.Pugazhendhi to Viruthunagar ceo,
= Krishnagiri SSA ceo Mr.Ponkumar to Tiruvannamalai ceo,
= Karur ceo Mrs.Tiruvalarselvi to Tanjore,
= Tanjore ceo Mr.Tamilvannan to Krishnagiri, 
=Krishnagiri ceo toKarur,
= Tuticorn ceo Mr.Munusamy to Perambalur,CEO
= Nagapattinam ceo Mr.Ramakrishnan to Tuticorin, 
=Coimbatore ceo Mrs.Gnanagowri to Salem..
= Kanchipuram ceoMrs. Shanthy to Pudhukottai
=Pudhukottai ceo Mr.Arulmurugan to Coimbatore,
= Salem SSA ceo Mrs. Usha to Kanchipuram.

பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு


=Mr.Radhakrishnan ceo Kanyakumari to PTA Secretary Chennai
= Virudhu Nagar ceo Mr. Jayakumar to Kanyakumari,
= Tiruvannamalai SSA ceo Mr.Pugazhendhi to Viruthunagar ceo,
= Krishnagiri SSA ceo Mr.Ponkumar to Tiruvannamalai ceo,
= Karur ceo Mrs.Tiruvalarselvi to Tanjore,
= Tanjore ceo Mr.Tamilvannan to Krishnagiri, 
=Krishnagiri ceo toKarur,
= Tuticorn ceo Mr.Munusamy to Perambalur,CEO
= Nagapattinam ceo Mr.Ramakrishnan to Tuticorin, 
=Coimbatore ceo Mrs.Gnanagowri to Salem..
= Kanchipuram ceoMrs. Shanthy to Pudhukottai
=Pudhukottai ceo Mr.Arulmurugan to Coimbatore,
= Salem SSA ceo Mrs. Usha to Kanchipuram.

ஜூலை-2015 மாதத்திற்க்கான அகவிலைப்படி எவ்வளவு உயரலாம்?


As far as DA from July 2015 is concerned we have CPI (IW) for 9 months out of 12 months.
Jul-2014 252
Aug-2014 253
Sep-2014 253
Oct-2014 253
Nov-2014 253
Dec-14 - 253 - 113.30

பள்ளி பஸ் பாஸ் போக்குவரத்து துறை அறிவிப்பு


சென்னை: கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு்ள்ள நிலையில் பள்ளிமாணவர்கள் புதிய பஸ் பாசை பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய பாஸ் அளிக்கும் வரையில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து
பழைய பஸ் பாசையே பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது

உண்மையில் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறதா?வெளிநாட்டுக் கல்வி மாய மான் வேட்டையா?

நடுத்தரக் குடும்பத்திலேயே, ‘என் பையன் உக்ரைன்ல படிக்கிறான்’, ‘ரஷ்யாவுல படிக்கிறான்’ என்று சொல்லும் அளவுக்கு வெளிநாட்டுக் கல்வி எளிமையாகி விட்டது. ‘50% மதிப்பெண் போதும். உலக ரேங்கிங் கல்லூரியில் குறைந்த செலவில், பகுதிநேர வேலை, இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளோடு படிக்கலாம். முடிந்ததும் லட்சங்களில் மாதச் சம்பளம். குடியுரிமையும் வாங்கலாம்’ என்றெல்லாம் விளம்பரங்கள்் மயக்குகின்றன. ஆண்டுக்கு ஆண்டு வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இந்தக் கல்வியாண்டில் தமிழகத்திலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடு் செல்ல இருக்கிறார்கள்.

RTI LETTER :பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வரஇயலாத நிலையில் பள்ளிப்பொறுப்பினை மூத்த ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கோடை விடுமுறையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 1 மாத ஊதியம் 'கட்'

கோடை விடுமுறையால், 15 ஆயிரம் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு, ஒரு மாத ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், சிறப்பாசிரியர்கள் பலர், பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கண்ணீரும், கவலையுமாக பணிக்கு வந்து சென்றனர்.

             நிரந்தர ஊதியம்:அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்கள், இயற்பியல், வேதியியல், பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு, நிரந்தர ஊதியத்தில் ஆசிரியர் உள்ளனர். ஓவியம், தையல், இசை, நெசவு, கைவினைக் கலை

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பள்ளிகளில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட இந்திய உச்ச நீதிமன்றம் தடை உள்ளத்தால் கோரிக்கையை பரிசிலனை செய்திட நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திட முடியாது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

ஜுன் 1 அன்று 2015-2016 கல்வியாண்டு துவங்குகிறது உங்கள்கற்பித்தல் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.-TNTF

ஜுன் 1 அன்று 2015-2016 கல்வியாண்டு துவங்குகிறது. நல்ல தொடக்கம் பாதி வெற்றி. ஆசிரியர்களின் கற்பித்தல் பணி சிறக்க  TNTF  -ன் மனமார்ந்த வாழ்த்துகள்.

தொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் (DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

இடிந்து விழும் நிலையில்-ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படிபள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள், பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன. இதில், பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஒரே வாரத்தில் மூன்று இடங்களில், பள்ளிகளின் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.

பாஸ்போர்ட்: அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல

 அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுத்துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது தடையின்மைச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. சில அரசு அலுவலகங்களில் தடையின்மைச் சான்று

பள்ளிகள் இன்று திறப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை ( ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.

          அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக கோடை வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திட்டமிட்டவாறு ஜூன் 1-ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

ஆய்வக உதவியாளர் தேர்வு: 'பேஸ்புக், மலாலா' கேள்விகள்

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வில், சமச்சீர் கல்வியில் படிக்காதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. வினாத்தாளில், 'பேஸ்புக்'கை உருவாக்கியவர் யார் என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது.

            அரசுப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது; 1,800 மையங்களில், 8.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஆண், பெண் தேர்வர்களுக்கு, தனித்தனியே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, நண்பகல், 12:30 மணிக்கு முடிந்தது.

அரசு பணிக்கான நேர்காணல் வீடியோவில் பதிவு:முறைகேடுகளை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி., அதிரடி

அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் நேர்காணலை வீடியோவில் பதிவு செய்வதால், முறைகேடுகளுக்கு இடமில்லை,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

           தமிழக அரசின் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிலுள்ள, இந்திய மருத்துவ முறையிலான ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில், உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு, நேற்று நடந்தது.மொத்தம், 83 காலிப் பணியிடங்களுக்கு, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களின், 12 மையங்களில், 3,695 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும், 1,798 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர், தேர்வுப் பணிகளை பார்வையிட்டனர்.பின், பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி:

முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியப் பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 1) கடைசி நாளாகும்.

          பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு தாமதமாகும்

பிரிட்ஜ் கோர்ஸ்' எனப்படும் நீதி போதனை வகுப்பு குறித்து உயர்கல்வி துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு அறிவிப்பு வராததால் கவுன்சிலிங் முடித்த முதலாமாண்டு மாணவர்களுக்கு 15ம் தேதிக்கு பிறகே கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளது.
          1979-க்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி., முடித்த மாணவர்கள் கல்லுாரியில் பி.யூ.சி., படித்து அதன்பிறகே பல்கலை கழகம் சார்பில் வழங்கப்படும் டிகிரி படிப்பை மேற்கொண்டனர். பி.யு.சி., யில் அவர்கள் நீதிபோதனை வகுப்பு டிகிரி படிப்புக்குரிய ஆயத்த படிப்பை மேற்கொண்டனர். இதனை 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்று அழைத்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களை பற்றிய அனைத்து விவரங்களுடன் கூடிய, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டையை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

           மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள்,

எளிதாக வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் அறிமுகம்: கெடு தேதியையும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு

வருமான வரி செலுத்துபவர்களின் வசதிக்காக, வருமான வரி தாக்கல் படிவம் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. மூன்றே பக்கங்களில், மிகக் குறைவான நிரப்புதல் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. வழக்கமாக, ஜூலை 31க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரி தாக்கல் படிவங்களுக்கான காலக்கெடு, இந்த ஆண்டு, ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31க்குள் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜூன் 24-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு உள்ளிட்ட வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்

 நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., - பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் முடிக்கலாம்.

web stats

web stats