rp

Blogging Tips 2017

இயக்கத்தலைவர் செ மு.அவர்களின் 82 ஆவது பிறந்த நாள் விழா

கூட்டமே கூட்டப்படாத வல்லுனர் குழு

EMIS: முக்கிய அறிவிப்பு:அனைத்து வகை பள்ளிகளும் EMIS PORTAL ல் LOGIN செய்து, முதல் பக்கத்தில் தற்போது புதியதாக தோன்றும் படிவத்தில், பள்ளியின் Actual Enrolment எண்ணிக்கையினை டைப் செய்யுவும் (ONE TIME WORK).

தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு.

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளி்ல் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடன் பதவி உயர்வில் நிரப்ப உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்     தெரிவித்துள்ளார்கள்.கலந்தாய்வு தேதி இந்த வாரமே அறிவிக்க உள்ளார்கள் என்பதை தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம்.

SSA திட்ட இயக்குநர் திரு. நந்தகுமார் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக மாறுதல். புதிய இயக்குநர் திரு.சுடலை கண்ணன் அவர்கள்

SSA SPD Mr.Nanthakumar Transfer To TRB - Transfer IAS List

SSA SPD Mr.Nanthakumar Transfer To TRB - Transfer IAS List

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதனமை செயலர் அந்தஸ்தில் முதல்வரின் செயலராக எம். சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதன்மை செயலராக ராஜேஷ் லக்கானி  நியமிக்கப்பட்டுள்ளார். சர்வசிக் ஷான் அபியான் மாநில திட்ட இயக்குனராக சுடலைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக கே.நந்தகுமாரை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் டான் ஜெட்கோ தலைவராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குனராக சம்பு கல்லோலிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி ஆணையராக கே.விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா மேலாண்மை நிறுவன நியக்குநராக டிகே ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீன்வளத்துறை இயக்குனர் ஜிஎஸ். சமீரானும், கால்நடைத்துறை இயக்குனராக கே.ஞா ன சேகரன் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

TNPSC GROUP-II A Result Published!!

 Click Here -to view Tnpsc Group 2

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை அறிவிப்பு!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த பிரதமர்
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு என ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன் பெறுவார்கள்.7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் 2004-2006 தொகுப்பூதியகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியகாலம், பணிக்காலமாக சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி பதிலளிக்குமாறு தொடக்கக்கல்வி துணை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறையின் தலைமைச்செயலக அரசு சார்புச் செயலாளர் கடிதம்!!!


31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு நீட்டிக்கப்படலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வரும் 31ம் தேதிக்கு பின்னரும், செல்போன், வங்கிக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு நீட்டிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, கன்வில்கர், சந்திராசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் கே.ேக.வேணுகோபால், ‘‘கடந்த காலத்தில் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரையில் காலக்கெடுவை நீட்டித்துள்ளோம். அதேபோல், இம்முறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.ஆனால், இம்மாத இறுதியில்தான் அதை அறிவிக்க முடியும்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.


தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
முதற்கட்ட தேர்தல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்

ஆசிரியர் தகுதித்தேர்வு 
ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!
இடம் : சென்னை

வரவிருக்கும் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற  விரும்பும் ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். TET தேர்வில் வெற்றி பெற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுலபமாக வெற்றியை அடைய வைக்கும் இந்த சிறப்பு பயிற்சி .முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி!!முன்பதிவு செய்ய அழைக்கலாம்:                            044 4863 7811 /  2432 7811, 81444 47811

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை அமைக்க தேவையான நிதி சேர்ந்தது.


போலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி வரி ரீபண்ட் அரசு ஊழியர்கள் மோசடி

புதுடெல்லி: போலி ஆவணங்கள் மூலம் அரசு ஊழியர்கள் ரூ.1,000 கோடி வருமான வரி ரீபண்ட் வாங்கி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் திருத்திய விவரங்கள் சமர்ப்பிக்க கெடு இந்த மாதத்துடன் முடிகிறது. வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விச்செலவு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சில முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வருமான வரி விலக்கு உள்ளது. எனவே, பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியை மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து ரீபண்டாக பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் பலர் போலி ஆவணங்களை தயாரித்து சமர்ப்பித்து, போலி கணக்குகளை காட்டி ரீபண்ட் வாங்கியுள்ளனர். இதன்படி ரூ.1,000 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. 


வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் இந்த மோசடி நடந்துள்ளது. மும்பையில் மட்டும் திருத்தம் செய்யப்பட்ட 17,000 வருமான கணக்குகள் தாக்கல் செய்து ரீபண்ட் வாங்கியுள்ளனர். பெங்களூருவில் 100க்கும் மேற்பட்ட கணக்குகளில் செலவை அதிகரித்து காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளன. வீட்டுக்கடன் செலுத்தியதாக இதில் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிகளால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதுவரை ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்..!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Soon, CS to be allied with science . .. news:Indian Express.

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்

டெல்லி: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 இந்த திட்டத்துக்கு சிக்கிம், புதுச்சேரி, டெல்லி, ஹிமாச்சல், குஜராத், பஞ்சாப் உட்பட 22 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா உட்பட 6 மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்களுக்கு தவிர்ப்பு ஆணை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆணை*

TNSchool Attendance-பள்ளி வருகைப்பதிவேடு- Android செயலியில் மாணவர்களின் புகைப்படங்கள் தெரியும் வண்ணம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது...

Click here - TN School Attendance Mobile App



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் 11.03.2018 அன்று நடைபெறுகிறது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 10.03.18 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது


SPD PROCEEDINGS- School team visit- to Dharmapuri & Krishnagiri Districts



web stats

web stats