rp

Blogging Tips 2017

அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.
கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஓட்டுநர், நடத்துநர், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கக் கோரியும் விளம்பரம் வெளியிட்டிருந்தது.

தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு

மத்திய ஆட்சி மொழியாக தமிழ் உள்ளிட்ட எந்த புதிய மொழியையும் சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

பி.எட் .,எம் .எட் -2 வருடங்களாக உயர்வு- NCTE -ன் NOTIFICATION கடிதம்

CLICK HERE-NCTE -NOTIFICATION LETTER

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் வருகிற டிசம்பர் 30 அன்று நாமக்கலில் நடைபெறவுள்ளது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் 30.12.2014 அன்று நாமக்கல் மாவட்டத்தில் டாக்டர் வீ.செ.சுப்ரமணியம் மாளிகையில் தலைவர் கு.சி.மணி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்ந்த தமிழக அரசின் கடித எண்.60473/சி.எம்.பி.சி/2014-1, நாள்.10.12.2014, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், டெல்லி பிரதிநிதிகள் மாநாடு,

ஜனவரி முதல் மதுரை காமராஜ் பல்கலையில் ‘ஆன்லைன்’ தேர்வுகள்


”மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் ஜனவரி முதல் ’ஆன்லைனில்’ தேர்வுகள் நடக்கும்,” என துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார்.
பல்கலை ’செனட்’ கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொலைநிலைக் கல்வியில் ’இ- லேர்னிங்’ முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 1600 ’இ-புக்ஸ்’ பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நடைமுறையால்

தமிழக கல்வி திட்டங்களை பின்பற்றி நாடு முழுவதும், உயர்கல்வி சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்



மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை, செயலாற்றல் இவற்றின்மூலம் தமிழகத்தில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் மிகுந்த வளர்ச்சியடைந்து, மாணவ மாணவியரின் அறிவுத்திறன் பெருகியுள்ளதாகவும், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் கல்வி

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2-வது இடம்

சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள்,

சாகித்ய அகாதெமி விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி-தினமணி

எழுத்தாளர் பூமணியின் "அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. அஞ்ஞாடி என்பதற்கு அம்மாடி, அதாவது அன்னை என்று பொருள். இந்த நாவலை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக நாவலை வெளியிடும்போதே பூமணி குறிப்பிட்டிருந்தார்.
விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி-தினமணி
சாகித்ய அகாதெமி விருது பெற வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை; இருப்பினும் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே என்று எழுத்தாளர் பூமணி கூறினார்.
எழுத்தாளர் பூமணியின் "அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. அஞ்ஞாடி என்பதற்கு அம்மாடி,

குடியரசு தின விழா கொண்டாட்டம்-அறிவுரைகள் வழங்கி அரசு உத்திரவு

ஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி

கமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன் திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி செய்தனர்.
எனது மகன்தான் கேலி செய்ததாகக் கருதி அவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது.
தற்போது மார்ச் 2015ல் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வில் தட்டச்சு பாடத்தை செய்முறை பாடமாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்: ஏற்பாடுகள் தொடங்கின

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும், முதல்–அமைச்சர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார்.இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதன்படி மார்ச் மாதத்துக்குள் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க வேண்டும். இந்த தொகுதியில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

DSE - SECTION SUPERINTENDENT TRANSFER & ASSISTANT TO DESK SUPERINTENDENT PROMOTIONAL COUNSELING REG PROC CLICK HERE...

அ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர் பட்டியல் 24.12.2014 மாலைக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்து கொள்ளுமாறும், அவ்வாறு தயார் செய்த பட்டியலை 02.01.2015 முதல் www.tndge.in இணையதளத்தில் ஆன்லைனில் (Online) பதிவேற்றம் செய்யுமாறு இயக்குனர் உத்தரவு

DGE - SSLC NOMINAL ROLL UPLOAD REG INSTRUCTIONS CLICK HERE...

பாட தேர்வினை இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி -அரசு மேல் நிலைத் தேர்வுகள் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொகுப்பு எண்.461 அலுவலக செயலாண்மை பாட தொகுப்பிலுள்ள தட்டச்சு செய்முறை-1 பாட தேர்வினை பிற செய்முறைப் பாடத் தேர்வுகளோடு இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு

இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது" என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.

652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

CLICK HERE-TRB-CIRCULAR POSTPONEMENT OF CERTIFICATE VERIFICATION

NMMS தேர்வு 27.12.2014க்கு பதிலாக 03.01.2015 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

1997-1998 முன் மற்றும் 1997-1998-இல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டதாரி கல்வி தகுதியுடன் நியமனம் செய்யப் பட்ட SC/ST ஆசிரியர்களின் விவரம் -கோருதல்

CLICK HERE-DEE-DIR.PROCEEDINGS -REG

மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

பள்ளிக் குழந்தைகளை 21ம் நூற்றாண்டு குடிமக்களாக உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. மாநில கல்வியியல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மேற்கண்ட பயிற்சி மற்றும் மாநாடு 2 நாட்கள் டிபிஐ வளாகத்தில் நடக்கிறது. இதை தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பில் மாநிலத்தில் 3ம் இடம் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு சாவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்தவர் தேவதாஸ். கோவை அரசு போக்குவரத்து கழக மேலாளர். இவரது மனைவி சாந்தி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் கீர்த்தனா(17). பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்தவர் ஆவார்.

நடுநிலை பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி : பராமரிப்பு பணியிலும் தாமதம் ஏற்படும்

வாலாஜாபாத் ஒன்றியத்தில், நான்கு நடுநிலைப் பள்ளிகளுக்கு, சமையல் அறை கட்டடம் கட்டுவதற்கு, ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாததால், நடப்பாண்டு வேறு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு அந்த நிதி மாற்றப்பட்டுள்ளது. இதனால், சமையல் அறை கட்டமைப்பு வசதி இல்லாமல், இட நெருக்கடியிலும், சுகாதாரமற்ற இடத்திலும் சமையல் செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.வாலாஜாபாத் ஒன்றியத்தில், 109 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு, தேவையான கட்டட வசதி மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து, தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு, கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்வது வழக்கம்.

விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்கள் நிறுத்தம்: அரசு உத்தரவு

பொதுத்தேர்வு நெருங்குவதால் நடப்பு கல்வியாண்டில் இனி ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளி கல்வி செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னரும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் 7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
திருநெல்வேலியில் 2013 அக்., 26ல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உஷாராணி, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் பங்கேற்றனர்.

புதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திடுதல் சார்பு-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை


தொடக்கக்கல்வி - 345 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோரி இயக்குநர் செயல்முறைகள்

CLICK HERE-DEE-ELE.DIR SEEKS-345 SG TR TO BT PROMOTION -PANEL PREPARATION-REG

உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் மூன்று மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க வேண்டும் - உதவித் தொடக்க அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் செயல்முறைகள்

CLICK HERE-DEE-DIR ORDERD TO CLOSED THE PENDING FILES WITHIN 3 MONTHS IN ALL AEEO & DEEO OFFICE-REG

நடுநிலைப் பள்ளிகளாக இருந்து (உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் பட்டதால்) ஆரம்பப் பள்ளிகளாக மாறும் பள்ளிகளின் பட்டியல்

CLICK HERE-PRIMARY SCHOOL LIST-AS PER NEW UPGRADE SCHOOL

எட்டாக்கனியாகும் தொடக்கக் கல்வி! இருளர் இன குழந்தைகளின் அவலம்

உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள இருளர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் தொடக்கப் பள்ளிகள் இல்லாததால் 3 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்ப அந்தச் சமுதாய மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தரமேரூர் வட்டம், தளவராம்பூண்டி பஞ்சாயத்துக்கு உள்பட்ட பட்டாங்குளம், வினோபா நகர் கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வினோபா நகரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் பயிற்று மொழி அல்ல !

அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.

மராட்டிய மாநிலத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலே, அதே மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான கோதாவரி பர்லேக்கர் ஆகியோர் எளிய குடும்பங்களின் குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நிறுவினார்கள்.

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – FEB 2015

TO DOWNLOAD CTET - FEB 2015 NOTIFICATION CLICK HERE...

CTET - FEB 2015 ONLINE REGISTRATION & FEES PAYMENT CLICK HERE...

DSC-தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

DSE - PANEL 2015 - SGT TO BT PANEL DETAILS CALLED REG PROC CLICK HERE... 

ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அது வருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.

பி.எட்., எம்.எட். படிப்பின் காலம் 2 வருடமாக உயர்வு
நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வது உண்டு. அந்த அளவுக்கு மாணவர்களை வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்றும் கூறுவது உண்டு.
கல்வியில் உலக நாடுகளோடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத்தயார் என்ற நிலையில் உள்ளது.

அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி


அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி நேற்று துவங்கியது.

பெரம்பலூர் மாவட்டத் தில் எஸ்எஸ்எல்சி எனப்ப டும் 10ம்வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம்தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 125 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ மாணவி கள் எழுதுகின்றனர். அதே போல பிளஸ்&2 வகுப்புக் கான அரையாண்டு தேர்வு கள் டிசம்பர் 10ம்தேதி தொ டங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை 65 மேல்

மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல! - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை

மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல என்பதை அவர்களுக்கு ஆசிரியர்கள் உணர வைக்க வேண்டும் என்று, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை கூறினார்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, புதிய கற்றல் யுக்திகளை ஆசிரியர்களுக்கு கற்பிப்பது, புதிய கற்றல் - கற்பித்தல் திட்டங்களை வகுப்பது, பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளித்துப் பாராட்டுவது போன்ற நோக்கங்களுக்காக மாவட்டங்கள்தோறும் தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சேற்றில் தத்தளிக்கும் அரசுப் பள்ளி: மாணவர்கள் அவதி

போரூரை அடுத்த பரணிபுத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி சேற்றில் தத்தளித்து வருவதால், மாணவர்களின் கல்வித் திறன் பாதிப்படைவதுடன், அவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சென்னைப் போரூர் அருகே அமைந்துள்ளது பரணிபுத்தூர் ஊராட்சி. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த இந்த ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகு உள்பட்ட இந்திரா நகர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.

ஜனவரி 12ல் பிஎப் முகாம்

சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு குறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் (DBTL) நாடு முழுவதும் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி, 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வங்கிக் கணக்கு மூலம் மானியத் தொகையைப் பெறும் நுகர்வோர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

தமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் விளைவாக, தமிழகத்தில் பள்ளிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இது குறித்த விவரம்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் அங்கு 132 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.
இந்தத் தாக்குதலின் விளைவாக இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுபோல, இந்தியாவிலும் சில தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக

9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் அதிகரித்துவரும் குழந்தைகளின் டிஸ்லெக்சியா குறைபாடு!

குழந்தைகளின் கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மாநில அளவில் கல்வியின் தரம் பாதிக்கப்படும்; இதை தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
துவக்க நிலையில் உள்ள குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை போக்க, கல்வித்துறை சார்பில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வெவ்வேறு முறைகளில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலும், ஓரிரண்டு வகுப்புகளை கடந்தபின், அவற்றை மாணவர்கள் மறந்து விடுகின்றனர்.

உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் ! : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு

தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்விக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்கி வருகிறது.
பிளஸ் 1 வகுப்பில் சேரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற முடியும். இதற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும். அதனைக் கொண்டு, தலைமை ஆசிரியர் "ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்து, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முன்மொழிவார். அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து அரசிடம் நிதியை பெற்று நலத்துறை மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 2,760 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற இதுவரை விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம் இதற்கான விண்ணப்பம், நலத்துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மாநில அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற்றிட வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் கடந்தாண்டே விண்ணப்பித்து விட்டதால், அவர்களின் மனுவை இந்தாண்டு புதுப்பிப்பதில் சிக்கல் இல்லை. பிளஸ் 1 சேர்ந்துள்ள 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இதற்கான விண்ணப்பத்தை நலத்துறை வழங்காமல்,

state General body Meeting on 30.12.2014 at Namakkal



நடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தேர்வு எழுத தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு எழுதத் தேவையில்லை என்றும் ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக தொடரலாம் என்றும் மத்திய அரசு முன்வைத்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்று வழக்கை முடித்து வைத்தது.

132 குழந்தைகள் சுட்டுக்கொலை எதிரொலி: பள்ளி- கல்லூரிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு- மத்திய அரசு நடவடிக்கை

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நேற்று பகலில் ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிர வாதிகள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தி 132 பள்ளிக் குழந்தைகளை கொன்று குவித்தனர்.
இந்த படுகொலை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பக்கத்து நாடான இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை தாக்குதலைப் போல் பெஷாவரிலும் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளையும், பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துமாறும் மத்திய அரசு உஷார் படுத்தியுள்ளது.

இணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்-மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது

'ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் தான், இணையதளங்களில், திருமண பதிவு களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம், மோசடி நபர்களின் மாய வலையில், பெண்கள் சிக்காமல் பார்த்துக் கொள்ள, மத்திய அரசு முயன்று உள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, அமைச்சர் மேனகா தலைமையிலான, மத்திய, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

பொதுத்தேர்வு ஏற்பாடு; அதிகாரிகள் ஆலோசனை


அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்துவது, பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து, தலைமை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
திருப்பூர் குமார் நகர் பிஷப் உபகாரசாமி பள்ளியில், பொதுத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கூடுதல் மையங்கள் ஏற்படுத்துவது குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டில் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் பள்ளி, குண்டடம் அரசு பள்ளி ஆகியன, புதிய தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போது, பள்ளிகளில்

3ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பாடபுத்தகங்கள் வழங்கி வருகிறது. 2014-15ம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி, நேற்று துவங்கியது.
மூன்றாம் பருவத்திற்கான, ஆறு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் டிச.22 முதல் விண்ணப்பிக்கலாம்

த்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த மையங்கள் குறித்த விவரங்களை www.tndge.in என்ற

தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்


பள்ளிக்கல்வி - உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்

BHARATHIDASAN B.ED NOV/2014 EXAM RESULTS PUBLISHED

CLICK HERE - BHARATHIDASAN UNIV.B.ED EXAM RESULT -NOV/ 2014

TNPSC - Departmental Examinations, December 2014 Hall Ticket Published

TNPSC - Dept Exam, Dec 2014 Memorandum of Admission (Hall Ticket) (Dates of Examinations: 23.12.2014 to 31.12.2014) Click Here...

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

DSE - PANEL - BT TO HIGH SCHOOL HMs PANEL AS ON 01.01.2015 REG DETAILS CALLED REG PROC & FORMAT CLICK HERE...

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததா? சிக்கலில் பள்ளிக் கல்வித் துறை- vikatan.com

கல்வி உரிமைச் சட்டத்தில் நடந்த முறைகேட்டை தோலுரித்திருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். ஒருபக்கம் முட்டை விவகாரத்தில் அரசு முழி பிதுங்கிக் கொண்டிருக்க... பள்ளிக் கல்வித் துறையில் 23 கோடி ரூபாய் முறைகேடு புகார் சந்தி சிரிக்கிறது!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தது. சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர 25 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு வழி செய்கிறது இந்தச் சட்டம். இதற்கான செலவை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிவிடும். இப்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில்தான் தகிடுதத்தங்கள் அரங்கேறி இருக்கின்றன.

சமச்சீர் கல்வி முறையா? - CCE முறையா? வெற்றி எதற்கு? - சிறப்புக்கட்டுரை

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது.
இந்த முறையின் கீழ் ஆண்டு பொதுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் அவர்கள் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.
மூன்று பருவங்களில் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், மாணவர்களின் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும். ஆண்டு இறுதியில் இந்த மதிப்பெண்ணின் சராசரி மாணவர்களுக்கு மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

தலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கல்வித்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கல்வித் துறை விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நேரடி தொந்தரவு
சென்னை ஐகோர்ட்டில் காஞ்சீபுரம் மாவட்டம், கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைகள் ஏ.சாந்தி, கே.சி.கவிதா, வி.அனுராதா, எம்.மரகதம், கே.அன்னபூரணி, எல்.ரேவதி, எஸ்.உமா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ மோகம் !பெற்றோர்களை ஆட்டுவித்து வருகிறது

சி.பி.எஸ்.இ மோகம், ஒரு பேயைப்போல் பெற்றோர்களை ஆட்டுவித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் இருந்து, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வெறிகொண்டு சேர்த்தார்கள். இப்போது அங்கிருந்து சி.பி.எஸ்.இ பக்கம் கூட்டம், கூட்டமாகத் தாவுகின்றனர். மிக மூர்க்கமானதாக மாறியிருக்கும் இன்றைய பந்தய வாழ்வில், ஓடி ஜெயிக்க சி.பி.எஸ்.இ-தான் உதவும் என்பது பெற்றோர்களின் கணக்கு. சமச்சீர் கல்வியின் வருகைக்குப் பிறகு, இது இன்னும் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது.

உள்தாள் பெற குடும்பத்தலைவரே வர வேண்டும்; போலி கார்டுகளை கண்டறிய அதிகாரிகள் மும்முரம்

ரேஷன் கார்டுக்கு உள்தாள் பெற, குடும்பத்தலைவர் மட்டுமே வர வேண்டும், என்ற உத்தரவால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தாலும் கூட, அப்போது மட்டுமே போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்பதில், அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,092 ரேஷன் கடைகளிலும், உள்தாள் வழங்கும் பணி நேற்று துவங்கியது. அந்தந்த கடைகளில் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தினமும் 150 முதல் 200 கார்டுகளுக்கு உள்தாள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் அதுதொடர்பான விவரம் வெளியிடப் பட்டுள்ளதால், அந்தந்த நாட்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்தாள் பெறுவதற்கு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைஅடுத்த காங்குப்பம் 6–ம் வகுப்பு மாணவி கொலையில் மாணவன் கைது

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். பால் கறக்கும் கூலி தொழிலாளி. அவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ஏழுமலை (20), மகள்கள் சித்ரா (15), கீர்த்திகா (11).
ஏழுமலை பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். அருகில் உள்ள மாச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சித்ரா 10–ம் வகுப்பும், கீர்த்திகா 6–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் சித்ராவும், கீர்த்திகாவும் தனித்தனியாக சைக்கிள்களில் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி உள்ளனர். சித்ரா தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் படிப்பதற்காக பள்ளிக்கு சென்று விட்டார். ஆனால், கீர்த்திகா வீட்டிற்கு வரவில்லை.

கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் - ரத்து செய்து ஆணை வழங்குதல்

click here to view the order

பணியிட மாறுதல்களை நிறுத்திவைக்க அரசு முதன்மை செயலாளர் உத்தரவு - அரசானை வெளியீடு


2nd Term Exam TimeTable


சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள் இறந்த நிலையில் கோழிக் குஞ்சுகள்!

சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள், கோழிக் குஞ்சுகள் இறந்த நிலையில் கிடப்பதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டியில், நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலர் குமார் அளித்த பேட்டி: மாநில அரசு, சத்துணவு ஊழியர்களை, கொத்தடிமைகள் போன்று நடத்துகிறது. சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள், அழுகிய நிலையில், காலாவதியானதாக உள்ளன.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2015ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல், அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.

DSE - PANEL - HIGH SCHOOL HM / HIGHER SECONDARY HMs LIST CALLED FOR DEO PANEL 2015 REG PROC CLICK HERE...

வெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்


திருப்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், வெளியாட்களால் ஆசிரியர் தாக்கப்பட்டார்; மூடி மறைக்கப்பட்ட இச்சம்பவம், ஒரு வாரத்துக்குபின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், 7,200 மாணவியர் படிக்கின்றனர். சில மாணவியர், ஆண் நண்பர்களோடு போனில் அரட்டை அடிப்பதாக புகார் வந்தது; அவர்களை, ஆசிரியர்கள் கண்காணித்தனர். 5ம் தேதி, ஒரு ஆசிரியர், ரயில்வே ஸ்டேஷன் அருகில் சில மாணவியர், காயின் பூத்தில், பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.

மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.

இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம்

பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.

RTI : மேல் முறையீடு பதிவு எண் SMS, மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு


தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம், 2004 டிசம்பரில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே மாதம், சட்ட முன் வடிவு, பல திருத்தங்களுடன், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டம், ஜம்முகாஷ்மீர் நீங்கலாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அரசு அதிகாரிகளிடம் இருந்து, தகவல் பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக, மக்களுக்கு வழங்கி உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்! -vikatan news

தமிழகத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஓரு கோடியே 30 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவற்றில் மொத்தம் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றையெல்லாம் நிர்வகிப்பது பள்ளிக்கல்வித்துறையும், அதில் உள்ள தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உள்பட பிற துறைகள்தான்.

* பவர்புல் இயக்குனர் பதவி & பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி

பள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம், பொது நூலகத்துறை என்று 8 இயக்குனரகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிதான் பவர்புல்லானது. ஆசிரியர்கள் டிரான்ஸ்பர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, முதன்மை கல்வி அலுவலர்களை நிர்வகிப்பது என்று பல முக்கிய பணிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை சார்ந்தது

PGTRB Exam 2014-15 Hall Ticket Published.


PGTRB Exam 2014-15 | Hall Ticket Download - Click Here

VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது தெரிந்துகொள்ள

தேர்வான நண்பர்கள் ஜனவரி இறுதிக்குள் பணிநியமணம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. வாழ்த்துக்கள் நண்பர்களே!
To Check VAO 2014 Result - Click Here
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர்எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை எண் ஆகியவையும் வெளியிடப்பட உள்ளது. பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியானதரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு என வெவ்வேறு நிலையையும் தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு அறிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் 27ம் தேதி தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கானபட்டியலும் முடிவுகள் வெளியிடப்படும் போது வெளியாகும்.

டிச.25-ல் பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைதான்: அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கம்

டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கமளித்துள்ளார்.
சில ஊடகங்களில் திட்டமிட்டே மக்களை திசை திருப்பும் வகையில், செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார்.
டிசம்பர் 25-ம் தேதியன்று நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு

ஏழு மாணவர்கள்... பத்து பதக்கங்கள்!

பள்ளி மாணவர்கள் பலரிடம் பல திறமைகள் உள்ளன. அந்த திறமையைக் கண்டறிந்து, அவர்களை சரியாக வழிநடத்தி சென்றால் மாணவர்கள் ஜொலிப்பார்கள். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான புரிதல் வேண்டும். அப்போது தான் மாணவர்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து, அவர்களை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்ல இயலும்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில்

பெண்கள் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி

அரசு பள்ளிகளில் தற்காப்பு கலைகள் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. இஸ்ரேலிய தற்காப்பு கலையான கிரவ் மகா என்ற கலையை கற்று தருகின்றனர். கடந்த 4 மாதமாக இலவசமாக மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வந்தால் மட்டும்

ரூ.1 லட்சத்துக்கு மேல் பொருள் வாங்கினால் ஆதார் அட்டை நகல், 'பான்' எண் சமர்ப்பிப்பது கட்டாயம்

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான மதிப்பிற்கு பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவரும், நிரந்தர கணக்கு எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும். அத்துடன் ஆதார் அட்டையின் நகலையும் சமர்ப்பிக்க உத்தரவிட
வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை

வரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்! மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா?

மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம். இந்த ஆண்டு கூடுதலாக 50,000 ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வரிச்
சுமையைக் கணிசமாகக் குறைக்கலாம்

ஆம், இதுவரை ஒரு லட்சம் வரை முதலீடு செய்து வரிவிலக்கைப் பெற்ற நீங்கள், இந்த வருடம் முதல் கூடுதலாக ரூ.50,000 வரை முதலீடு செய்து, 15,000 வரை வரியைச் சேமிக்க முடியும். எது சிறந்த முதலீடு? வருமான வரியைச் சேமிக்க பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.முதலீட்டுத் திட்டங்கள் அல்லாத சில செலவினங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, வீட்டுக் கடனுக்கான அசலுக்கும், வட்டிக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது

அசல் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி-ல் வரிச் சலுகை பெறலாம். இதுபோக, நீங்கள் ஏதேனும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் எடுத்திருந்தால், அந்த பிரீமியத் தொகை மூலமும் வருமான வரியைச் சேமிக்கலாம். இங்கே உங்களுக்கு வலியுறுத்துவது என்னவென்றால், காப்பீடும், முதலீடும் கலந்த பாலிசிகளைத் தவிர்த்துவிடுவது சிறந்தது

இந்தவகை பாலிசிகளில், உங்கள் பிரீமியத் தொகையில் பெரும்பகுதி செலவினங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், இந்தவகை பாலிசிகள் குறைந்த லாபமே (4-6%) தருகின்றன. அதனால் முதலீடு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களைவிட முதலீடு சேராத வெறும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Pure Term life Insurance) மிகச் சிறந்தது. மிகக் குறைந்த பிரீமியம் மிகக் குறைந்த செலவுடன், வரிவிலக்கையும் அளிக்கக்கூடியது

இதன்மூலம் அதிக ஆயுள் காப்பீட்டையும், மீதமுள்ள தொகையினை, அதிக லாபம் ஈட்டும் திட்டங் களிலும் முதலீடு செய்யலாம். மற்ற வரிச் சேமிப்புத் திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் வரிசேமிப்பு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது. குறைந்தபட்ச மாத முதலீடு (ரூ.500), மூன்று வருட குறைந்த முதலீட்டுக் காலம்; நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் மற்றும் லாபத்துக்கு வரிவிலக்கு என இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், முதலீட்டாளர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மற்ற முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் ரிஸ்க் அதிகம். ஏனென்றால், உங்கள் பணம், பங்குச் சந்தையில் உள்ள சில முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட பங்கு களின் வளர்ச்சியைப் பொறுத்து, உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் மாறுபடுகிறது. நீண்ட கால அடிப்படையில் இந்தவகை முதலீடுகள் அதிக லாபம் ஈட்டித்தரும் வகையில் அமைந்துள்ளது. இதனால், நீங்கள் செய்த முதலீடு விலைவாசி உயர்வை மிஞ்சி வளரும். உதாரணத்துக்கு, நீங்கள் வங்கி வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து 9% வட்டி வருமானம் பெறுவதாக வைத்துக்கொள்வோம். இந்த வருடத்தில் விலைவாசி உயர்வு 8% என்று வைத்துக்கொண்டால்; நீங்கள் பெறும் நிகர வட்டி வருமானம் வெறும் 1% மட்டும்தான்

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் தரும் லாபம், விலைவாசி உயர்வை வெகுவாக மிஞ்சியிருக்கும் என எதிர்பார்க்கலாம். எவ்வளவு முதலீடு செய்யலாம்? இந்த வருடம் ரூ.1,50,000 வரை 80சி பிரிவில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்த திட்டங் களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மீதித் தொகை யினை வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுங்கள். எப்படி முதலீடு செய்யலாம்? மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இருவழிகள் உள்ளன

ஒன்று, மொத்தமாக ஒரேதவணையில் முதலீடு செய்வது. மற்றொன்று, முறை படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்களின் (SIP) வாயிலாக முதலீடு செய்வது. வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பெரும்பாலானோர் முதல் முறையையே பின்பற்றுகிறார்கள். இந்த முதலீட்டை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் திரும்பப் பெற முடியும். பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மாறுபடலாம். தகுந்த லாபம் இருந்தால் முதலீட்டை அதற்குரிய லாபத்துடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இன்னும் சிறிது காலத்துக்கு அதே ஃபண்டில் முதலீட்டை தொடரலாம். தகுந்த லாபம் வரும்போது முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எஸ்ஐபி முறையில் ஒரே ஃபண்டிலேயே எல்லா மாதங்களிலும் முதலீடு செய்வதால் சந்தை அபாயம் (Market risk) குறைகிறது. நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் பெறும் வாய்ப்பும் உள்ளது. எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்

மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல வரிச் சேமிப்பு திட்ட எஸ்ஐபி முடிந்த வுடன் மொத்த முதலீட்டையும் திரும்பப் பெற இயலாது. ஒவ்வொரு தவணையும் 36 மாதங்கள் முடிந்தவுடன் மட்டுமே வெளியே எடுக்க முடியும். இதனால் சிலர் வரிச் சேமிப்பு ஃபண்டுகளில் எஸ்பிஐ

நீதி மன்ற வழக்கு மூலம் +2,டிப்ளமோ கல்வி தகுதி காரணமாக 9300 + 4600 பெற்ற பணியிடங்கள் விபரம்

பணியிடம் -ஓவர்சியர் -

கல்வி தகுதி

Diploma in Printing Technology
வழக்கு எண் ; W.P.19570 / 2009 ல் 17.11.2009 வழங்கப்பட்ட தீர்ப்பு

" has directed the respondent to consider and dispose the petitioners representation date 22.6.2009 with eight weeks for the date of receipt of a copy of this order "
ஆதாரம் .ராஜீவ் ரஞ்சன் . . . .அவர்களின் ஒரு நபர் அறிக்கை பக்கம் 261

TNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும், வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரிய மனுவுக்கு டி.ஆர்.பி அளித்துள்ள பதில்

பள்ளி விடுமுறை நாள்களில் சிறப்பு தேர்வை தவிர்க்க கோரிக்கை

பள்ளி விடுமுறை நாள்களில் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில்

உதவி தொடக்ககல்வி அலுவலர் 649 பேருக்கு நிர்வாக பயிற்சி

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி நாளை மறுதினம் சென்னையில் நடைபெற உள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி 8

தகவல் அறியும் உரிமைச் சட்டம் : மேல் முறையீடு பதிவு எண் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம், 2004 டிசம்பரில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே மாதம், சட்ட

ஆளில்லா விண்கலத்துடன் டிசம்பர் 18-இல் ஏவப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட்


ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட்


ஆளில்லா விண்கலத்துடன் அதிநவீன ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 சோதனை ராக்கெட் விண்ணில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) ஏவப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து

2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் உத்தரவை செயல்படுத்தவில்லை என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.



ராஜபாளையம் இன்பக்குமார் தாக்கல் செய்த மனு: தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்.சி.டி.இ.,) அறிவிப்பின்படி 2010 ஆக.,23 க்கு பின் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் தகுதித்தேர்வு

குழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...


ஸ்பெல்லிங் எனப்படும் எழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையை உருவாக்குவதற்கான மூலாதாரங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல சாதனங்கள் வந்துவிட்டதால், ஸ்பெல்லிங் தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன.
U cn narrate stories n 2nds என்ற ஒரு வார்த்தை. இந்த வார்த்தையை, உங்களால்

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: ‘புளூ பிரின்ட்’படி வினாக்கள் இல்லை



தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தமிழ் முதல் தாள் வினாத் தாளில், ‘புளூ பிரின்ட்’படி நெடுவினாக்கள் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 10-ம் வகுப்புக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அதில்

INCOMETAX CIRCULAR-2014-15

CLICK HERE-TAX DEDUCTION FROM SALARIES DURING THE FINANCIAL YEAR 2014-15 UNDER SECTION 192 OF THE INCOMETAX ACT, 1961

REBATE OF RS 2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UPTO RS 5 LAKH [SECTION 87A

This rebate is available for A.Y. 2014-15 and subsequent assessment years.Finance Act 2013 provided relief in the form of rebate to individual taxpayers, resident in India, who are in lower income bracket, i. e. having total income not exceeding Rs 5,00,000/-. The amount of rebate is Rs 2000/- or the amount of tax payable, whichever is lower.

Now CPS online service working

http://218.248.44.123/auto_cps/public/

       In the above website you can download cps account slip up to February2013. If u need upto date slip mail to [email protected]: With ur Name,CPS no,DDO code,financial year which is ur need.

வரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்! மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா?

மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா?
கவலை வேண்டாம். இந்த ஆண்டு கூடுதலாக 50,000 ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வரிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கலாம். ஆம், இதுவரை ஒரு லட்சம் வரை முதலீடு செய்து வரிவிலக்கைப் பெற்ற நீங்கள், இந்த வருடம் முதல் கூடுதலாக ரூ.50,000 வரை முதலீடு செய்து, 15,000 வரை வரியைச் சேமிக்க முடியும்.
எது சிறந்த முதலீடு?
வருமான வரியைச் சேமிக்க பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.முதலீட்டுத் திட்டங்கள் அல்லாத சில செலவினங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, வீட்டுக் கடனுக்கான அசலுக்கும், வட்டிக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அசல் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி-ல் வரிச் சலுகை பெறலாம்.

SASTRA- UNIVERSITY -B.Ed (Distance Mode) Application and Prospectus 2015 -2016

click here

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் தேவையா?

பள்ளி மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். நடப்பு 21ம் நூற்றாண்டில் உலகில் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்ற ஒரே தொழில்நுட்ப சாதனம் செல்போன் என்றால் மிகையல்ல. தற்போதைய எலக்ட்ரானிக் யுகத்தில் கேமிராவுடன் கூடிய செல்போன், படங்கள், பாடல்கள், பைல்களை பதிவு செய்யும் மெமரி கார்டுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. சைனா செல்போன்கள் வரவால், கேமிரா, வாட்ஸ்அப், ஆன்ட்ராய்டு (ஓஎஸ்) வசதி செல்போன்கள் கூட குறைந்த விலையில் கிடைக்கின்றன.

குழந்தைகளின் சிந்தனை திறனை வளர்க்க வழிகள்

கம்ப்யூட்டரும், ஸ்மார்ட்போனும், வீடியோ கேமும் குழந்தைகளின் சிந்தனை திறனை முடக்கிப் போடுகின்ற நிலைதான் இன்று பல வீடுகளிலும் உள்ளது. இவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகின்ற நிலையும் உள்ளது. இவற்றில் இருந்து அவர்களை மீளச்செய்து, குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி எனப்படும் சிந்தனை திறனை வளர்க்கவும் பல வழிகள் உள்ளன. அது அவர்களை வெற்றிப்படிகளில் அழைத்து செல்லும்.

பதட்டமின்றி பரிட்சை எழுத மாணவ, மாணவிகளுக்கு சில டிப்ஸ்

பொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுகிறது. இந்த பயத்தினாலே சிலருக்கு காய்ச்சல் வர கூட வாய்ப்புள்ளது. என்னதான் தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தாலும், தேர்வு அறைக்கு செல்லும் வரை திக்கு திக்கு என இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தை மறந்து, சாப்பாட்டை ஒதுக்கி இரவும், பகலுமாக படித்துக் கொண்டே இருப்பார்கள். இதுவே, பரீட்சை நன்றாக எழுத முடியாமல் போய்விடுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரம் வந்துவிட்டது. அதுமட்டுமின்றி குளிர் காலமும் ஆரம்பித்துவிட்டது. சில மாணவர்கள் தேர்வு நேரங்களில் மட்டுமே விடியற்காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலருக்கும் மற்ற நாளை விட தேர்வு நேரத்தில் தான், எங்கிருந்து இந்த தூக்கம் வருமோ தெரியாது. ஒரு வருட காலமாக

ஆந்திரத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஆதார் எண் அவசியம்

வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறை ஆந்திரத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்த விவரம்:

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்கவேண்டும்?

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க விரும்புபவர்கள் சிறப்பு பதிவு முகாம்களுக்கு ஆதார் அடையாள அட்டை நகல் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் இருக்கவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, கியாஸ் சிலிண்டர் சமீபத்தில் வாங்கியதற்கான கட்டண ரசீது, ஒருவேளை கட்டண ரசீது இல்லை என்றால் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான நுகர்வோர் அட்டையின் நகல் (நீல நிற புத்தகம்) மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: ‘புளூ பிரின்ட்’படி வினாக்கள் இல்லை

தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தமிழ் முதல் தாள் வினாத் தாளில், ‘புளூ பிரின்ட்’படி நெடுவினாக்கள் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 10-ம் வகுப்புக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அதில் பிரிவு 5, பகுதி -1ல் 8 மதிப்பெண் கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
செய்யுளில் சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் அதற்குப் பதில் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
உரைநடை நெடுவினாவில், இயல்-1 உயர்தனி செம்மொழி, இயல்-10 பல்துறை வேலைவாய்ப்பு கள் ஆகிய பாடங்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட வேண்டும். ஆனால் அவற்றுக்குப் பதில் வேறு இயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் வினாத் தாளைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் கண்காணிப்பு கல்வி த்துறை ஏற்பாடு



web stats

web stats