rp

Blogging Tips 2017

அகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களுக்கான அகவிலைப்படியைஉயர்த்தி அறிவிக்கும். நடப்பு ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 7 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

புதிதாக பொறுப்பேற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை.

மாறி வரும் சமுதாய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி கற்பிக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சமீபத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர் ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர் - பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர் நியமனம்: இந்த முறை சரியா? -Vijayalakshmi Raja

சமீபத்தில் ஒரு பெண்மணியுடன் (அரசு பணி புரிபவர் ) பேச நேர்ந்தது .அவருடனான உரையாடல் மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியது.
அவர் என்னிடம் கேட்டார் .தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களும் ,பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுமே
போடப்படுவது நல்லது தானே அப்போ தான் இந்த உலகம் உருப்படும் என்றார் .ஏன் என்றேன். பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை பணியமர்த்தினால் அவர்கள் ஏதாவது ஏடாகூடம் செய்து விடுகின்றனர் என்றார் .
நீங்கள் சொல்வது அநியாயம் !எங்கோ யாரோ ஒருவர் தவறு செய்கிறார் என்பதை கொண்டு எல்லோரையும் குற்றம் சாட்டாதீங்க என்றேன் .
அவரும் விடாமல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றார் .
நான் ,"அது சோற்றுக்கு மட்டும் தான் பதம் !எல்லாவற்றுக்கும் அதை பொது விதி ஆக்காதீர்கள் "என்றேன் !

5% சலுகை மதிப்பெண் பற்றிய மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் கடைசி பகுதி

CLICK HERE

2ம் பருவ புத்தகங்கள் அக்.,7ல் வழங்க உத்தரவு

இரண்டாம்பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு அக்.,7ல்
வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்.,7ல் துவங்குகின்றன. 1 முதல் 9ம்வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு அன்றைய தினமே இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை

பள்ளிகளில் அடுத்த வாரம் 'கொடுத்து மகிழும் வாரம்'

அக்., இரண்டாவது வாரம், பள்ளிகளில், 'கொடுத்து மகிழும் வாரம்' கொண்டாடப்பட உள்ளது, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவ, மாணவியரிடையே நேச மனப்பான்மையை ஏற்படுத்த, சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து,
ஒருவருக்கொருவர் இணைந்து, பரிசையும் கருத்துக்களையும் பரிமாற, ஏழை மக்களுக்கு உதவும் என, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சுய சான்றளிப்பு; ஒரு வாரத்துக்குள் இதை அமல்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையைக் கைவிடுமாறும், மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி கடந்த 26ஆம் தேதி அனுப்பிய உத்தரவில் இதைத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் இதை அமல்படுத்த அவசரநடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அதர்மம் என்ற சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள் வாழ்த்து

அதர்மம் என்ற சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும், துணிவைத் தரும் மலை மகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை சக்தி ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள்.

திருமணமாகாத அரசு ஊழியர்கள் வரதட்சணை கேட்கமாட்டேன் என்று உறுதிசான்று அளிக்க வேண்டும்

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 03.10.2014 விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

DEE - DEE ISSUED DIRECTIONS TO ALL DEEOs REG VIJAYADHASAMI ADMISSION WILL BE DONE ON 03.10.2014 REG PROC CLICK HERE...

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரிய TATA தொடர்ந்த வழக்கில் 8 வாரத்தில் மனுதாரரின் மனு மீது தமிழக அரசின் நிதித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

CHENNAI HIGH COURT W.P.NO.33399/2014 - SEEKING CENTRAL SGT PAY FOR TAMILNADU SECONDARY GRADE TEACHERS - HC ORDERED TO TN GOVT FOR CONSIDER THE REPRESENTATION OF PETITIONER WITHIN 8 WEEKS - ORDER CLICK HERE...

2014 அக்டோபர் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி

2014 அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி
===================================
02-10-2014 வியாழன்-  காந்தி ஜெயந்தி/ஆயுத பூஜை
03-10-2014 - வெள்ளி-விஜய தசமி
04-10-2014   சனி-குறைதீர் மனு சிறப்பு முகாம்/அராபத்(RL)
06-10-2014 -திங்கள்- பக்ரீத் அரசு விடுமுறை

07-10-2014 -செவ்வாய் -பருவத் தேர்வு விடுமுறை
                                           முடிந்து பள்ளி மீண்டும்  திறப்பு
17-10-2014  -வெள்ளி-பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி
22-10-2014 -புதன்  -தீபாவளி
26-10-2014 -வியாழன் -ஹிஜ்ரி புத்தாண்டு(RL)

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அக்டோபர்-2014 மாத நாட்காட்டி(தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிவரை)


அனைத்து தொடக்க நடுநிலைப்பள்ளிகளிலும் “தூய்மையான பள்ளி” உறுதிமொழி மற்றும் தூய்மை வாரம் கொண்டாட இயக்குன ர்அறிவுறை

CLICK HERE TO VIEW THE DEE INSTRUCTION

”தூய்மை யான பள்ளி” 09.10.2014 அன்று உறுதிமொழியுடன் கொண்டாடப்படவேண்டும்

தமிழகத்தில் 6ந்தேதி விடுமுறை , பருவத்தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் 7ந்தேதி திறக்கப்படும்

6ந்தேதியை விடுமுறையாக அறிவிக்க தக்க நடவடிக்கை எடுக்க மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்
 CLICK HERE TO VIEW THE G.O AND DEE INSTRUCTION

பக்ரீத் பண்டிகை: தமிழகத்தில் அக்.6 அரசு விடுமுறை

பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5-ம் தேதிக்கு பதிலாக 6-ம் தேதியன்று கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்துக்கு அரசு பொது விடுமுறையை மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5-ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்றும், எனவே, தமிழக அரசு அன்றைய தினம் விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி விடுத்த வேண்டுகோள் விடுத்தார்.

தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விடுப்பில் செல்லும் போது பொறுப்பினை வழங்கல் குறித்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

DEE - MIDDLE SCHOOL HM INCHARGE REG INSTRUCTIONS CLICK HERE...

மாண்புமிகு திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக முதலமைச்சராக பொறுப்பெற்ற நிகழ்வு

முதல்வர்-ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!

ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை 
நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. 
ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். 
எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை. 

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.
பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, 
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.
பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை. 

ANNAMALAI UNIVERSITY RESULTS

TO VIEW DDE EXAMINATION RESULTS MAY 2014 CLICK HERE...

நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் அரசு நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு...

TRUST EXAM 12.10.2014 அன்று மாற்றப்பட்டுள்ளதுஇன்று நடைபெற இருந்த ஊரக திறனறிதேர்வு TRUST EXAM 12/10/2014 அன்று மாற்றப்பட்டுள்ளது.

நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு


மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 8,400 மாணவர்கள் உள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியிலும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சேவை, பெற்றோருக்கு உதவுதல், சமுதாய பணி மற்றும் முதலுதவி ஆகிய பண்புகளை, மாணவர் மத்தியில் வளர்க்க வேண்டும்; சுகாதாரம் பேணுதல், நட்புணர்வு, சேவை மனப்பான்மை, ஒழுக்கம், சுற்றுப் புறச் சூழல் மேலாண்மை, விபத்து நேரங்களில் முதலுதவி, பேரிடர் மேலாண்மை என மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும்,

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படும்?

பிறை சரியாக தெரியாததால் அக்டோபர் 6 ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளதாக தெரிகிறது. ஆகவே அக்டோபர் 6 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவிக்கலாம் என எதிபார்க்கப் படுகிறது.

புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

Joy of Giving week postponed Oct 2nd week


web stats

web stats