எஸ்.எஸ்.ஏ.,திட்ட நிதிக்குறைப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கையால், இத்திட்ட மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தம், பள்ளி செல்லா குழந்தைகளை ஒருங்கிணைத்து படிக்க வைத்தல், அனைவரும் 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு 2000ல் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தை அனைத்து மாநிலத்திலும் அமல்படுத்தியது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2010ல் இத்திட்டம் நிறைவு பெறும் பட்சத்தில் 2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2013-14க்கான நிதி ஒதுக்கீட்டில் கால தாமதம் ஏற்படுவதோ<டு, பயிற்றுநர்,மேற்பார்வையாளருக்கான சம்பளம், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான நிதி, கம்ப்யூட்டர் நிதி, ஆசிரியர்களுக்கான பயிற்சியை குறைத்தல் போன்ற முக்கிய நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.திட்ட ஒப்பந்தப்படி,10 ஆண்டு முடிந்த நிலையில், 2010ல் துவங்கிய அனைவருக்கும் இடைநிலை கல்வி(ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தோடு இணைக்க,மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக எஸ்.எஸ்.ஐ.,திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகாரி ஒருவர் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., திட்டப்படி, 8 ம் வகுப்பு வரை அனைவரும் "பாஸ்' என்ற உத்தரவு உள்ளது. இதனால் வாசிப்பு திறன் குறைந்து, அரசு பள்ளிகளில் 10 ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதை மேம்படுத்த 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில வாசிப்புத் திறன், பிற பாடத்திற்கான சிறப்பு வகுப்பு எடுத்தல் திட்டம் வந்தது. நிதிக்குறைப்பு போன்ற நடவடிக்கை எஸ்.எஸ்.ஏ., திட்டத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.மேற்பார்வையாளர்களை உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பயிற்றுநர்களை ரெகுலர் பள்ளிகளிலும் நியமிக்கப்படலாம் என,தெரிகிறது,'' என்றார்