rp

Blogging Tips 2017

கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்: வாசன் அறிக்கை

கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்: வாசன் அறிக்கை
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 வருடமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

உதவிக்கல்வி அலுவலகங்களில் அலுவலர் பணியில் ஆசிரியர்கள்

உதவி கல்வி அலுவலகங்களில், அலுவலர்கள் பற்றாக்குறையால் அப்பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
1993-94 ஆண்டு முதல் ஆசிரியர்களின் டி.பி.எப்.(பொது வருங்கால வைப்பு நிதி) கணக்குகள் சென்னையில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப் படாமல் உள்ளது.
உடனடியாக அதை அனுப்பும்படி அனைத்து உதவிக்கல்வி அலுவலகத்திற்கும் உத்தரவு வந்துள்ளது.

ஜாக்டோ பேரணி-கோரிக்கை முழக்கங்கள்



ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி!!

ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி!!ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு காரணமாக வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன், வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்நிலையில், ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களில் சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி

PAY CONTINUATION ORDERS FOR VARIOUS POSTS IN SCHOOL EDUCATION

DSE - 31 PGT TAMIL CLICK HERE...

DSE - 90 PGT ECONOMICS & COMMERCE CLICK HERE...

DSE - RMSA - 2009-10 - 200 UPGRADED HIGH SCHOOLS CLICK HERE...

DSE - 100 VOCATIONAL INSTRUCTORS CLICK HERE...

குழந்தை நலன் மற்றும் கல்வித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு

வரும், 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ’கிரை’ எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த, 2011 - 12ம் நிதியாண்டிலிருந்தே, மத்திய பட்ஜெட்டில், குழந்தைகள் நலன் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இதுவரை இல்லாமல், இந்த பட்ஜெட்டில் தான் மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.

தேர்வு அறையில் காலணிக்கு தடை: நீலகிரிக்கு விலக்கு; வால்பாறையில் அவதி

பொதுத் தேர்வு அறையில், காலணி அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடையில் இருந்து, நீலகிரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2, பொது தேர்வில், மாணவ, மாணவியர் காப்பியடிப்பதை தவிர்க்க, தேர்வு அறைக்குள் செருப்பு, சாக்ஸ், ஷூ உள்ளிட்ட காலணிகளை அணிந்து செல்ல தடை விதித்து, மாநில கல்வித் துறை இயக்ககம் உத்தரவிட்டது. ’நீலகிரி மாவட்டத்தில், குளிர் அதிகம்

தனித்தேர்வுக்கு வற்புறுத்தும் தனியார் பள்ளிகள்; கலெக்டரிடம் முறையீடு

பிளஸ் 2 தேர்வு, திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியில் நேற்று நடந்தது; கலெக்டர் கோவிந்தராஜ், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. காரில் கலெக்டர் ஏற முற்பட்டார். அங்கு காத்திருந்த, வாலிபாளையம் கோர்ட் வீதியை சேர்ந்த தர்மராஜ், கலெக்டரிடம் சென்று கதறி அழுதார்.

அதிரடி மாற்றங்களுடன் துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு

தமிழக அரசுத் தேர்வுத் துறையின் அதிரடி மாற்றங்களுடன், பிளஸ் 2 தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. முதல் நாளில், தமிழ் முதல் தாள் வினா மிக எளிதாக இருந்தது என்று மாணவ, மாணவியர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வில், அரசு தேர்வுத் துறை இந்த ஆண்டு பல மாற்றங்களை கொண்டு வந்தது. மாற்றங்களை தவறு இன்றி அமல்படுத்த, ஆசிரியர்களுக்கு ’பவர் பாயின்ட் பிரசன்டேஷன்’ முறையில் சிறப்புப் பயிற்சி வகுப்பும், தேர்வு நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்குத் தேர்வும் வைக்கப்பட்டது

துறை தேர்வு முடிவை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.,

TO VIEW DEPTL. DEC 2014 RESULTS CLICK HERE...

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அரசுத் துறை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு

பொள்ளாச்சி அருகே, மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய விடுப்பு அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே தெற்கு ஒன்றியம் பொன்னேகவுண்டனூர் பகுதி மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 21 மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டு

மார்ச் 11ம் தேதி முதல் பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், மார்ச் 11ம் தேதி முதல், பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை விரைந்து முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச் 11ம் தேதி துவங்க உள்ளது.
தேர்வு விவரம்
* 11ம் தேதி - தமிழ்
* 12, 13ம் தேதி - ஆங்கிலம், இரண்டு தாள்கள்.
* 20ம் தேதி - கணினி அறிவியல், மின்னணு சாதனங்கள், தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்கள்.

மாணவர்களின் ஆதார் எண் சேகரிப்பு: முறைகேடுகளை தடுக்க புது திட்டம்

கல்வி உதவித்தொகை, சீருடை, லேப் - டாப் போன்ற அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின், ஆதார் எண்ணை சேகரிக்கும் பணியை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.

மத்திய, மாநில அரசு கள் மூலம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மாணவர்களின் மொத்த எண்ணிக்கையும், நலத்திட்டங்கள் பெறுபவர்களின் எண்ணிக்கையும், பல நேரங்களில் முரண்படுகின்றன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, மாணவர் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், வேறு பள்ளி

வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாததை கண்டித்து : ஏப்ரல் 28–ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு ‘காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் திட்டம்’


மத்திய அரசு ‘பட்ஜெட்’டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததை கண்டித்து ஏப்ரல் 28–ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட போவதாகவும், ஜூலை மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள ‘பட்ஜெட்’டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தாததை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி

பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சுவரொட்டி


பிளஸ்-2 தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி தேர்வுமையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பெரிய அளவில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 80 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள்.
இன்று தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு இன்று (வியாழக்கிழமை)

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநிலசெயற்குழு-07.03.2015 சனி காலை-10 மணிக்கு நடைபெறும்

புதுடெல்லி யில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதன் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் வரும் 07.03.2015 நடைபெறும்.

இடம்-வீ .சுப்ரமணியன் மாளிகை,
                நாமக்கல்
நாள்-  07.03.2015
நேரம்- காலை சரியாக 10.00.மணிக்கு
தலைமை-திரு.கு.சி.மணி அவர்கள்
                       மாநிலத்தலைவர்.
டெல்லி மாநாடு குறித்து கலந்தாலோசனை-பொதுசெயலர் செ முத்துசாமி அவர்கள்

                                                 மாவட்ட செயலர்கள் 06.03.2015 வரை   சேர்ந்துள்ள நபர்களின் பட்டியல் மற்றும் தொகையினை உடன் டிராப்டாகவோ,அல்லது ரொக்கமாகவோ கொண்டுவந்து செயற்குழுவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.அனைத்து மாவட்டசெயலர்களும் மாநிலபொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.    
                      கலந்துகொள்ளும்செயற்குழு உறுப்பினர்களுக்கு இருவழி பயணப்படிவழங்கப்படும் .
                       இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும்தவறாது கலந்து கொள்ள வேண்டும்என பொதுசெயலர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

புதுடெல்லி மாநாடு தேதியில் மாற்றம் வருகிறது.அனேகமாக மே 10 முதல் 15க்குள் நடைபெறும்

இன்று காலை 6.30 க்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் புதுடெல்லிக்கு நமது பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களும் தலைமை நிலைய செயலர் திரு.க.சாந்தகுமார் அவர்களும் புதுடெல்லிக்கு சென்றடைந்தனர்.

துறை தேர்வு கால அட்டவணை !(Department exam time table -2015)

மார்ச் 8 மாவட்ட ஜாக்டோ போராட்டம் ஏன்

சிந்திப்பாய் இடைநிலை ஆசிரிய சகாக்களே

பக்கத்து மாநிலம் பாண்டிசேரியில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300-4200
தமிழ்நாட்டில் 5200-2800-750
அடிப்படை ஊதியத்தில் மாதம்தோரும் இழப்பு 4750-
100 சத அகவிலைபடியோடு 9500
ஒவ்வொரு அகவிலைப்படி உயரும்போதும் 500 இழப்பு சேர்ந்துகொள்கிறது


சராசரியாக ஒர் ஆண்டிற்க்கு இழப்பு120000 திருடப்படுகிறது கடந்துபோன ஆண்டுகளில் மட்டும்2006முதல்8*120000=960000(1000000)திருடப்பட்டுள்ளது

6வது ஊதியகுழு அமைக்கப்படாமல் இருந்தால் கூட இடைநிலைஆசிரியர்கள் அதிக ஊதியம் பெற்று இருப்பர் பழைய ஊதியம் 4500-2250-11205மொத்தம் 17956:
6வது ஊதிய குழுவின் அபத்தம் 5200-2800-750-7000=15750

இழப்பு 2205 யார் தருவார் இந்த இழப்பை யார் வருவார் இதைக்கேட்க?

நீ கேட்பது பிச்சை அல்ல!
உனது பணம் !
உனது உரிமை
நமது உழைப்பு!
நமது வாழ்க்கை ஆதாரம்!

இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை
என்பதை மறந்துவிடாதே!
உனக்காக மற்றவன்போராடுவான் என்று இருந்துவிடாதே
எழு
அலைகடலென திரண்டிடு
அதுவே ஆட்சியாளர்கள் நம் மீது
கவனம் கொள்ள வைக்கும்
மீண்டும் உரைப்போம்
இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை
எண்ணிக்கை மட்டுமே ஆட்சியாளர்களின்
எண்ணத்தை மாற்றும்

கே.பி.ரக்‌ஷித்
TNTF

தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர் ஒன்றியம். ஜேக்டோ ஆலோசனைக் கூட்டம் 3.3.2015 மாலை நடைபெற்றது

தகவல்-திரு சு.ராஜ்குமார்-மாவட்ட அமைப்பு செயலர் தஞ்சாவூர் மாவட்டம்

நடுத்தரவர்க்கம்எது- இந்து தமிழ் நாளிதழ் கார்ட்டூன்

அரசு பள்ளி மாணவ , மாணவிகள் சார்ந்த விவரங்களை முகநுாலிலோ அல்லது வேறு முறையிலோ பகிரப்படுவது சட்டபடி குற்றம்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா?
அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா? அப்படி எனில் ஆசிரியர் நண்பர்களே உஷார்...
முகநுாலில் பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும், மற்ற புகைப்படங்களையும் அப்லோட் செய்வதற்கு கல்வி துறை தடை செய்ய உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பிரிவு உபசார விழாவினை பள்ளியில் கொண்டாடியுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டது

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுத 3ஆயிரத்து 298 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.
தேர்வை சிறப்பான முறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வர்கள் ஆகியோர் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச் 11ல் துவக்கம்

பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், மார்ச், 11ம் தேதி முதல், பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை துவங்கி, மார்ச், 31ம் தேதி முடிகிறது. இந்நிலையில், பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை விரைந்து முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச், 11ம் தேதி துவங்க உள்ளது.
தேர்வு விவரம்:
* 11ம் தேதி - தமிழ்

வரும் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி முறை முடங்கும் அபாயம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைதொடந்தால், வரும் கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வி முறை முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தல்; பள்ளிகள் மீது பெற்றோருக்கு ஆர்வம் உண்டாக்குதல்; கல்வித்தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கில வழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு, துவக்கப்பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம் : 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் இத்தேர்வில், முறைகேடுகளைத் தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது.

* நாளை, தமிழ் முதல் தாள், நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடக்கிறது.
* மொத்தம், 6,256 பள்ளிகளில், 2,377 மையங்களில், 3.91 லட்சம் மாணவர்களும், 4.52 லட்சம் மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர்; தனித் தேர்வர்கள், 43,000 பேர். புதுச்சேரியில், 14,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர்

DA from January 2015 will be 113%

DA from January 2015 will be 113%

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8ல் பேரணி-kirushnakiri dist


துறைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும்

அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஆன்-லைன் விண்ணப்பம்
தமிழக அரசுத் துறைகளில்

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் எம்.ராஜா, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள்,

தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டில் பயிலும் பார்வையற்ற குழ்ந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க சிறப்பு உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிகளின் பெயர் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

DEE - VISUALLY IMPAIRED STUDENTS - SCHOOLS DETAILS CALLED REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - 2014-15ம் ஆண்டு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு மின் கட்டணம் முழுவதும் செலுத்துவது சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

DEE - 2014-15 - EB BILLS PAYMENT REG PROC CLICK HERE..

அலகு விட்டு அலகு மாறுதல் சென்றவர்களின் cps கணக்கினை தொடர்வது குறித்து RTI தகவல்.


ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள் தி இந்து'

தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன். ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. "இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள்

ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள் தி இந்து'


தமிழகத்தில் ஒன்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. செயலாளர் நிலையில் உள்ள அவர்களுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட செய்தியில்,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.

மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு வாய்ப்பு

டி.ஆர்.பி., சார்பில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நேரடி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது.இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி

பிளஸ் 2 தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
«தேர்வு பணியில் நல்ல அனுபவமும், நேர்மையும் வாய்ந்த துடிப்பான குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும்படை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களை சோதனையிட பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

தேர்வு அறையில் நாற்காலி: உத்தரவில் மாற்றம் : ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பணிந்தது கல்வித்துறை

பிளஸ் 2 தேர்வில், தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும்,

நமது இலக்கு மார்ச்-8 ஜாக்டோ மாவட்டப்பேரணி முழுக்கவனம் அதிலேயே செலுத்துவோம்

குட்டிகதை கேட்போமா?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.
அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.
பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.

பணி நியமன ஒப்புதல் ஆணை வழங்க ரூ.4 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் மீதுஆசிரியர்கள் புகார்

தூத்துக்குடி: பணி நியமன ஒப்புதல் ஆணை வழங்க ரூ.4 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாகப் புகார் கூறி தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தை புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். கல்வி அலுவலர் ஒப்புதல் ஆணை தாரதாதால் 7 மாதம் சம்பளம் இல்லை என ஆசிரியர்கள் புகார் கூறினர். தனியார் சுயநிதி பள்ளியில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 33 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பணிநியமன ஒப்புதால் ஆணை தராவிட்டால் ஆசிரியர் சங்கங்களுடன் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்து தமிழகம் முழுவதும் மார்ச் 8-ல் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தேசியச் செயலர் வா.அண்ணாமலை கூறினார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூரில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். 50

நாகை மாவட்ட ஜாக்டோ பேரணி அழைப்பிதழ்


நாகை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட கூட்டம் புகைப்படம்


பள்ளி ஆண்டு விழா கொண்டாட நிதி

குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு14/3/15 அன்று நடைபெறும்



 தலைப்பு-

குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்

TNPSC - Departmental Examinations - May 2015 - Online Registration

TNPSC - Departmental Examinations - May 2015 - Online Registration Click Here...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-டெல்லி மாநாடு கலந்து கொள்வோர் பட்டியல் உடனே தயார் செய்து தொகை செலுத்த வேண்டுகோள்

மே மாதம் முதல் வாரத்தில் டெல்லியில் நமது கோரிக்கை மாநாடு நடைபெறுவது அனைவரும் அறிந்ததே.
அதற்கான பட்டியல் மற்றும் பங்கேற்புத்தொகை வட்டாரசெயலர்கள் உடன் மாவட்ட செயலர் கள் வாயிலாக செலுத்த கோரப்படுகிறது.6 நபர் கொண்ட தனித்தனித்தாளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உடன் பூர்த்திசெய்து தொகையுடன் தரக்கோரப்படுகிறது.வட்டார,மாவட்டப்பொறுப்பாளர்கள் தங்கள் புறப்படும் வசதியான ரயில் நிலையத்தின் பெயரை குறித்து கொடுக்கவும், அடையாள அட்டை நகல்( ஜெராக்ஸ் காபி) கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும்.

இங்கே கிளிக் செய்து படிவத்தை தரவிறக்கம் செய்ய

கர்நாடக மாநிலத்தில் 535 தொடக்க பள்ளிகள் மூடப்படலாம் என்று அச்சம்

535 தொடக்க பள்ளிகளில், மாணவ, மாணவியர் வருகை இல்லை. எனவே, இப்பள்ளி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு அரசு நியமித்துள்ளது. எதிர்வரும் நாட்களில், இப்பள்ளிகள் மூடப்படலாம் என்ற அச்சம், பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில், 9,503 அரசு தொடக்கப் பள்ளிகளில், 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல், ஓரிரு ஆசிரியர்களை மட்டும் விட்டு விட்டு, மற்றவர்களை பக்கத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, அரசு நியமிக்கிறது. இது, ஆசிரியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ்-2 செய்முறை தேர்வு மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியது

கோவை கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கானசெய் முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன்படி பள்ளிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.
‘ஏ‘ பிரிவில் இடம் பெற்றிருந்த பள்ளிகளுக்கு பிப்ரவரி 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையிலும்,

புத்தகங்களே இல்லாத பாடங்களுக்கு போட்டி தேர்வு:கல்வித்துறை'தமாஷ்:' கலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

அரசுப் பள்ளிகளில், கலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்குபுத்தகங்களேதெரியாமல், பள்ளிக்கல்வித் துறை பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் புத்தகங்களை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.தொகுப்பூதியம்தமிழக அரசுப் பள்ளி களில், தொகுப்பூதியத்தில், 16,549 கலை ஆசிரியர் பணியாற்றுகின்றனர்.
ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உட்பட, பல்வேறு தொழிற்கல்வி கற்பிக்கும் பணியில், இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்த உள்ளது. இத்தேர்வு எப்போது நடக்கும் என,

பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி 2 மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதாக புகார் எழுந்தது. மாணவர்களின் சத்தம் கேட்டு, சிறிது நேரத்துக்கு பின் கதவுகளை திறந்து வெளியேற்றியதாகவும் கூறப்பட்டது.

காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை பிளஸ் 2தேர்வில் புதிய நடைமுறைகள் : வரிசை எண் மாற்றப்பட்டு 2 வித வினாத்தாள்கள்

பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முக்கிய  பாடங்களுக்கு வரிசை எண்கள் மாற்றப்பட்டு ஏ, பி என 2 வித வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.

             பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிளஸ்&2 அரசுப் பொதுத்தேர்வுகள் குறித்த முன்னேற்பாட்டு கூட்டம் நடந்தது. சிஇஓ நாகராசு, கூடுதல் சிஇஓ கணேசன், டிஇஓ (பொ) பாலு, மாவட்டதொடக்க கல்வி அதிகாரி எலிசபெத் முன்னிலை வகித்தனர்.

பிளஸ் 2 தேர்வு அறைகளில் நாற்காலி கிடையாது! :ஆசிரியர்கள் 3 மணி நேரம் நிற்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும், மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது' என, தேர்வுத் துறை இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

5ம் தேதி:பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது. காலை, 10:00 மணிக்குத் தேர்வு துவங்கி, பிற்பகல், 1:15 மணிக்கு முடிகிறது.

* முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிகப்பட்ட தமிழக அரசின் துறைகள்


ஸ்மார்ட்போனில்' இசை: 100 கோடி இளைஞர்களின் கேட்கும் திறன் பறிபோகும் அபாயம்!

காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ரசிக்கும் வழக்கம் இளைஞர்களிடையே பெருகி வருவதால், 100 கோடி இளைஞர்களுக்கு கேட்கும் திறன் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபுள்யூ.ஹெச்.ஓ.) கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை கூறியதாவது:

அதிக வருவாய் கொண்ட நாடுகளிலுள்ள 12 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களில், சுமார் பாதி பேர் "ஸ்மார்ட்போன்'கள் உள்ளிட்ட ஒலிச் சாதனங்களிலிருந்து கேட்பொலிக் கருவிகளைப்

JACTTO அமைப்பில் SSTA வும் இணைந்தது. நமது ஆசிரியர்களின் ஒற்றுமையை மார்ச் 8 அன்று தமிழகத்திற்கே பறைசாற்றுவோம்.

தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி தஞ்சாவூர் மாவட்டபொதுக்குழு-அழைப்பு-திரு-ராஜ்குமார் மாவட்டசெயலர்

           அவசியம் வாங்க.நாளை(02-03-2015) மாலை 5 மணிக்கு திருநாகேஸ்வரம் ஊ.ஓ தொ.பள்ளிக்கு

'மேற்பார்வையாளர்(பொறுப்பு)' என்பது 'வட்டார ஒருங்கிணைப்பாளர்' என பெயர் மாற்றம், - RTI கேள்வி-பதில்.


வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில்(CMC) மருத்துவ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு


வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:

எம்பிபிஎஸ், பி.எஸ்சி, பிஓடி, பிபிடி, எம்எஸ்சி

தகுதி:

+2வில்(ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல்)ஆகிய பாடப்பிரிவுகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து வாக்காளர்களும் இ-மெயில், ஆதார் எண் சமர்ப்பிக்கவேண்டும் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு

அனைத்து வாக்காளர்களும் இ-மெயில், ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
புதுப்பிக்கும் புதிய திட்டம்
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவதற்காக தேசிய அளவிலான திட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேசிய வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு மற்றும் அங்கீகரிப்பு திட்டம் என்ற அந்த திட்டம், இந்த மாதம் மார்ச் 3-ந் தேதியில் இருந்து அமலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.நோக்கம் என்ன?இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால்,

மார்ச் டைரி

அலுவலக பயன்பாடுகளுக்கு சொந்த மின்னஞ்சலைப் பயன்படுத்த அரசு ஊழியர்களுக்குத் தடை

அதிகாரபூர்வ செய்தித்தொடர்புகளுக்கு சொந்த மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்த அரசு ஊழியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தகவல்தொடர்பு ஆதாரங்களை பயன்படுத்துதல் பற்றிய கொள்கையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதில், “அரசு நெட்-வொர்க்கிலிருந்து சொந்த மின்னஞ்சல் முகவரிகளை பயனாளர்கள் பயன்படுத்துவது கூடாது. அதிகாரபூர்வ தகவல்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்த மின்னஞ்சல் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு: தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

திருக்கோவிலூர் அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், பாடியந்தல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை பவானி, சக ஆசிரியர் ஐந்து பேருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்தது.
சில நாட்களுக்கு முன், தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 'குடியரசு தினத்தன்று கொடியேற்ற, தலைமை ஆசிரியர் வரவில்லை' என, மக்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் கூறினர்

கற்றல் அடைவு தேர்வில் 35 சதவீதம் பேர் தேர்ச்சி

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 2012ம் ஆண்டில், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஒன்றியத்துக்கு, 10 பள்ளிகள் வீதம், 'ரேண்டம்' முறையில், தேர்வு செய்யப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது.
* இதில், தமிழ் பாடத்தில், 61 சதவீதம், ஆங்கில பாடத்தில், 39 சதவீதம், கணிதப்பாடத்தில், 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை நாள் : 1.03.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.
மேலும் விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in
இணைய தளத்தைப் பார்க்கவும்.

மாத சம்பளம் வாங்குவோரின் எதிர்பார்ப்பு புஸ்ஸ்: வருமான வரிச் சலுகையில் மாற்றம் இல்லை

மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது மாதச் சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பட்ஜெட் என்றாலே வருமான வரி எவ்வளவு, விலக்கு எவ்வளவு என்பது தான் பெரும்பாலான நடுத்தர, ஊதியம் வாங்கும் குடும்பங்களின் பார்வையாக உள்ளது.

செயல்வழி கற்றல் முறையில் மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள்: திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்த வருடம் மத்திய அரசுக்கு அனுப்பிய திட்டத்தில், குழந்தை திருமணத்தை தடுக்கும் திட்டத்திற்கும் சேர்ந்து நிதி கேட்டுள்ளோம்.
பெண்ணின் திருமண வயது 18. அந்த வயதுக்கு குறைவாக பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதை குழந்தை திருமணம் என்று அழைக்கிறோம். குழந்தை திருமணத்தை தவிர்க்க திட்டமிட்டுள்ளோம்.

ரூ.4.4 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?


வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 'சலுகை' அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும்.

அதற்கான விளக்கம் இதோ:

இந்த பட்ஜெட்டில் பிரிவு '80 டி' மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறும் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த குடிமக்களுக்கு ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

web stats

web stats