rp

Blogging Tips 2017

ரூ.25 கோடி 'தண்டம்' 10,000 இலவச 'லேப்டாப்'கள் மாயம்!

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், மாணவர்களுக்கு வழங்காமல் மாயமான, 10 ஆயிரம், 'லேப்டாப்'களுக்கான கணக்கை சரிக்கட்ட முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். மாயமான, 'லேப்டாப்'களுக்காக, 25 கோடி ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சொந்த பணத்தில் இருந்து செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் சந்திப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரை சந்தித்து ஆதார் எண் பணி வழங்கப்படுவதை தவித்திட வேண்டியும,பிற கோரிக்கைகள் குறித்தும்  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று பெசண்ட் நகர் ராஜாஜி பவன் சென்சஸ் அலுவலகத்தில்மனு அளித்து தக்கநடவடிக்கை வேண்டப்பட்டது

29 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு

அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-


பிப். 10ல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

மதுரை: ''பேச்சுவார்த்தைக்கு கூட அரசு அழைக்காததால், திட்டமிட்டபடி, பிப்., 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடக்கும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:''புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்.

மெல்ல கற்கும் மாணவர்களுக்காக ‘கற்றல் சி.டி.’: பெற்ற விருதுக்கு பெருமை சேர்த்த தமிழாசிரியர்

பள்ளி இடைநிற்றல் வெகுவாக குறையும் மாணவர்கள்
மெல்லக் கற்கும் தொடக்க நிலை மாணவர்களுக்கு உதவும் வகை யில் கற்றல் சி.டி. தயாரித்து வழங்கியுள்ளார் மாநகராட்சிப் பள்ளி தமிழாசிரியர் ஒருவர்.

பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாண வர் இடைநிற்றலைத் தடுக்கவும் தமிழக கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறிப்பாக, 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு எளியவழி கற்றல் திட்டம், 5-ம் வகுப்புக்கு மட்டும் எளியவழி படைப்பாற்றல் கல்வி முறை, 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக படைப்பாற்றல் கல்வி முறை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஏற்க முடிவு: பட்ஜெட்டில் ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

ஏழாவது சம்பள கமிஷன் பரிந்து ரைகளை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் 2014 பிப்ரவரியில் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 7-வது ஊதிய கமிஷன் நியமிக்கப்பட்டது. இந்த கமிஷன் தனது 900 பக்க பரிந்துரைகளை கடந்த நவம்பர் 19-ல் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்ப்பித்தது

FEB -16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை எவ்வாறு கணக்கிடுவது

FEB -16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.12280 எனில்,
 FEB -16 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

INCOME TAX -2016 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்:

Income Slabs Tax Rates
 i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL 
 ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) :
 Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.
  iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.
 iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000
 Ø  தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு  2.5 லட்சம்
Ø   வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1.5 லட்சம்

income tax-2016-. Rebate under section 87A -- யாருக்கு ரூ-2000 கழிவு பொருந்தும்-ஓர் விளக்கம்

income tax-2016 . Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less .
  இதற்கு ஓர் விளக்கம்
சந்தேகம் 
 இங்கு (whose net income does not exceed Rs. 5,00,000) என்றால் net income என்பது வருமானத்தில் எதைக்குறிக்கிறது?
  விளக்கம்
 net income என்பது வரி கணக்கிடுவதற்கு தகுதியான தொகையைக்குறிக்கும் அதாவது முதலில் ஒருவரது மொத்த வருமானமும் அது Gross Total Income எனப்படும்.

அரசின் அனுமதி பெற்ற பிறகே அரசு ஊழியர்களிடம் விசாரணை!

'அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

EMIS 25-01-2016 அன்றைய தேதியின் படி முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்தல்


SSLC மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் - தேர்வுக்கூட அனுமதி சீட்டு - பதிவிறக்கம் செய்தல்

அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டவிடுப்பு முடிந்த பின்னும், விடுப்பு எடுத்தால், அந்த நாளுக்குரிய சம்பளம் மற்றும் சலுகைகள் ரத்து

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் டேவிதார், அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
அரசு ஊழியர்கள் பணி செய்யாமல், அனுமதிக்கப்பட்ட விடுப்பு நாள் முடிந்த பின்னும், நீண்ட விடுப்பில் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

CPS ஐ களைய இன்னும் ஒரு 5 வருசம் வேண்டுமாம் ...

29 மாவட்டங்களுக்கு புதிய டிஇஓ நியமனம்

கல்வி மாவட்ட வாரியாக காலியாக இருந்த 29 பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் மகாமகம் திருவிழாவை முன்னிட்டு 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.

கும்பகோணம் மகாமகம் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 22 அன்று தஞ்சை,நாகை,திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனதமிழக அரசு அறிவிப்பு

7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஏற்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு

புதுடெல்லி,மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
இது தவிர 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.

2015-16 ஆம் கல்வி ஆண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும் குடியிருப்பின் பெயர் பட்டியல்...

தமிழ்நாடு ஆசிரிய கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் தமிழக பொதுத்தேர்தல் ஆணையாளர் திரு.ராஜேஷ் லக்கானி .இ.ஆப. அவர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு ஆசிரிய கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திரு செ முத்துசாமி அவர்கள் தலைமையில் தமிழக பொதுத்தேர்தல் ஆணையாளர் திரு.ராஜேஷ் லக்கானி .இ.ஆ.ப.அவர்களைசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அலுவலகத்தில்  சந்தித்து தேர்தல் பணி ஆசிரியகளுக்கு வழங்குமுன் கவனத்தில் கொள்ளவேண்டி 17 கோரிக்கைகள் கொண்ட மனுவினை  அளித்தனர்.அவர் ஒவ்வோரு கோரிக்கையாக வாசித்து அதுகுறித்து விவாதித்து தக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும்,மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
     சந்திப்பின்போது மாநில பொருளாளர் திரு அலெக்சாண்டர்,மாநில துணைத்தலைவர் திரு.கே.பி.ரக்‌ஷித்,மாநிலதுணைப்பொதுச்செயலர் திரு.வெ விஜயகுமார்,ஆசிரியர்பேரணி இதழ் நிர்வாக ஆசிரியர் திரு செ.வடிவேலு,மற்றும் தலைமைநிலையச்செயலர் திருகசாந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

TET : தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

'தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்குமுடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது.

SASTRA UNIVERSITY DDE B.ED.,COUNCELLING ON 27.02.2016&28.02.2016

பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள் விவரம் தலைப்பு : வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம் தொடக்க நிலை : 20.02.2016 உயர்தொடக்கநிலை 27.02.2016

2016 - 17 SSA TRAINING

Primary – CRC: 10 Days
• Strengthening of SABL  - 2 Days(1st Term – 1 day, 2nd Term – 1 day)
• Discussion on Children Achievement  – 1 Day
a) Achievement  Test
b) District initiatives
c) Grading of schools
d) Periodical Assessments            
• Discussion on Impact of Trainings – 1 Day

சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பணி இடங்களை அடையாளம் காண வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும், அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய பணி இடங்களை அடையாளம் கண்டு அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

ஒருநாள் ஊதியப்பிடித்தம் - உறுதியான தகவல் இல்லை: பிப்ரவரி மாத ஊதியம் தள்ளிப்போகும் !!

ஜாக்டோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் இது பற்றி அரசுதான் முடிவு எடுக்கும் என தெரிவித்திருந்தனர். இதுபற்றி இதுவரை உறுதியான தகவல் தெரியாததால், ஊதியப் பட்டியல் கோருவதிலும், வருமானவரிக்கான கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Lr No.39623/FR-3/2015-1 Dt: January 07, 2016 Leave - Tamil Nadu Leave Rules 1933 - Sanction of Leave on Medical Certificates during probation period of Government servants - Instructions - Issued.


வருமானவரி மாதிரிக்கணக்கீடு


6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு

தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் விவரம்:

*பிளஸ் 1 வகுப்புக்கு, மார்ச், 11ல் தேர்வு துவங்கி மார்ச், 31ல் முடிகிறது

போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி

போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

NHIS திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் ரூ150 - ஐ 80 D ன் கீழ் வருமான வரி சலுகை பெறலாம் (RTI) தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை முதன் முதலாக ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும்போது மாணவ–மாணவிகள் தேர்வின் போது ஒழுங்கீனத்தில் ஈடுபடாதீர்கள் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் தண்டனை உண்டு என்றும் ஹால் டிக்கெட்டில் முதன் முதலாக எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.தேர்வுகள்

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கும் பிரசவ கால விடுமுறை

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கும் மற்றவர்களைப் போன்று பிரசவ கால விடுமுறை வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய ரெயில்வேயில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அவர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்காக ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்தார்.

அண்ணாமலைப் பல்கலை 369 உதவிப் பேராசிரியர்கள்,அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 369 உதவிப் பேராசிரியர்கள், தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் தெரிவித்தார்.

நேற்றைய மறியல் போராட்டம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி

கட்டுமான பணி நிதியை கேட்கும் கட்சியினர் திணறும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்

மதுரையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.) கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 'கட்டிங்' கொடுக்கும் பிரச்னையை சமாளிக்க முடியாமல் தலைமையாசிரியர்கள் திணறுகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 'சம்பளம் கட்'

ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகள் மூடக்கூடாது, முழுமையாக திறந்து செயல்பட வேண்டும் என்பதில் பள்ளிக் கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தியது.
அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் கூறியதாவது:–

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் ஆசிரியர்கள் கைதாகி விடுதலை

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

கல்வி உதவித் தொகை: மின்னஞ்சலில் புகார் அனுப்பலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறும்போது ஏற்படும்பிரச்னைகள் குறித்து புகார்களை மின்னஞ்சலில் தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் நலிந்த பிரினர் உயர் கல்வி பெற கல்விஉதவித்தொகையை மத்திய அரசு வழங்கிவருகிறது. 

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' : தேர்வுத்துறை ஏற்பாடு

மதுரை: ''பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' எண்கள் (தனித்துவ அடையாள எண்) வழங்கப்படவுள்ளது,'' என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:

மக்கள் தொகை பதிவேடு பணி: ஆசிரியர்களுக்கு தடை கோரி வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

'ஆதார்' எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில், 'அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'- சென்னை உயர் நீதிமன்றம்

எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை வழங்கக் கோரி, போலீஸ் துறையில்பணியாற்றுபவர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு தொடர்பாக, 2015 பிப்ரவரியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிவிப்பாணை வெளியிட்டது.

அடுத்த 5 ஆண்டுகளில் அரசு சேவைகள் அனைத்தும் செல்போனில் கிடைக்கும்

அடுத்த 5 ஆண்டுகளில் அரசு சேவைகள் அனைத்தும் செல்போனில் கிடைக்கும்
பல்வேறு அரசுத் துறைகளின் அனைத்து சேவைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செல்போனில் கிடைக்கும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என மத்திய அரசு 

ஜாக்டோ மறியல் -திருவண்னாமலை மாவட்ட பொறுப்பாளர்கள்


ஜாக்டோ மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள்

திருப்பூர் மாவட்ட ஜாக்டோ ஆர்பாட்டம்

ஜாக்டோ ஒருங்கினைப்பாளர் திரு இராஜேந்திரன் (TNTF மாவட்டசெயலர்) தலைமையில்

மாநிலம் முழுவதும் ஆசிரியர் போராட்டம்;

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் கூட்டமைப்பினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்த போராட்டத்தில் 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .

2 ஆம் நாள் ஜாக்டோ மறியல் போராட்டத்தில் நமது இயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம்
சென்னை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்
வேலூர் மாவட்டம்

சிலிண்டர் சப்ளையில் கமிஷனுக்கு 'குட்பை': மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

சமையல் காஸ் சிலிண்டருக்கு, இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் ஏஜன்சிகள் மூலம், வீடுகளுக்கு, சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்கின்றன. ஏஜன்சி ஊழியர்கள், சிலிண்டருக்கு, பில் தொகையுடன், 50 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர்

கே.வி.பள்ளிகளில் 'எம்.பி. கோட்டா' சேர்க்கை 10 ஆக உயர்வு

கே.வி.பள்ளிகளில் 'எம்.பி. கோட்டா' சேர்க்கை 10 ஆக உயர்வு
கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.,க்கள் ஒதுக்கீடு, ஆறு இடங்களில் இருந்து, 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி.,யும்., ஆறு மாணவர்களை சிபாரிசின் படி, கே.வி., பள்ளிகளில் சேர்க்க முடியும். இந்த ஒதுக்கீடு, வரும் கல்வி ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகக் குழுவுக்கு 11 பேர் புதிய உறுப்பினர்களை ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகக் குழுவுக்கு 11 பேர் புதிய உறுப்பினர்களை ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்.

புதிய உறுப்பினர்களின் பட்டியல் விவரம்:

1. பிரதாப் குமார்

2. சுப்பையா

3. முத்துராஜ்

ஓய்வு பெற்ற ஊழியரை நியமிக்க உத்தரவு

அரசு ஊழியர் போராட்டத்தை ஒடுக்க, ஓய்வு பெற்ற பணியாளர்களை நியமிக்குமாறு, அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அரசு ஊழியர்
சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில், பிப்., 10ம் தேதி, காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்க உள்ளது. இதற்கு, சத்துணவு,

சென்னை மாநகராட்சி பெயர் மாற்றம்: 'பெருநகர சென்னை மாநகராட்சி'யாக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை 'பெருநகர சென்னை மாநகராட்சி' என அறிவித்து முதல்வர் துவக்கி வைத்தார்.

மக்கள் தொகை பதிவேட்டுப் பணி : ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி வழக்கு

ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:

மாணவர் சேர்க்கைக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வசதிகள் குறித்த நோட்டீஸ் வினியோகிக்க திட்டம்

உடுமலை, அரசு துவக்கப்பள்ளிகளில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளது; பிப்., இறுதி முதல் 'நோட்டீஸ் 'வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவடைந்து வருவதால், பல பள்ளிகள் மூடும் நிலையை எதிர்நோக்கி வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் கல்வித்துறை சார்பில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி: பிப்., 1ல் சான்றிதழ்

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பிப்., 1ல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியிட தடை

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு, நாளை நடக்கும் தேர்வின் முடிவை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில் வழக்கு சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் என, பல மாவட்டங்களைச் சேர்ந்த, 51 பொறியாளர்கள் சேர்ந்து, தாக்கல் செய்த மனு:நாங்கள், பட்டதாரி பொறியாளர்கள்; எங்களை, 'அப்ரன்டிஸ்' பயிற்சிக்கு, மின் வாரியம் தேர்ந்தெடுத்தது

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பள்ளிகள் தோறும் பிப்.10ல் வழங்கல்

சுகாதாரத்துறை சார்பில் பிப்.,10ல் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.மத்தியரசு சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளாக பிப்.,10 கடை பிடிக்கப்படுகிறது. அன்று சுகாதாரத்துறை சார்பில் அங்கன்வாடிமையம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட உள்ளது.

சாதி சான்றுகள் வழங்கும் அதிகாரம் பெற்றவர்கள்..


web stats

web stats