ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1-ல்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 2 நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் பேஜர், மொபைல் போன், கால்குலேட்டர், நினைவகக் குறிப்பு புத்தகங்கள், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றின் ஒரு பகுதியாகவோ எடுத்துவர அனுமதியில்லை.