தமிழகமே போராட்டக்களங்களாக மாறி மண்ணெல்லாம் சிவந்த மண்ணாக உருவெடுத்து வருகிறது.
ஆனால் நிதிநிலை அறிக்கையில் ஆறுதல் அறிக்கைக்கூட எதுவும் இல்லை என வேதனை தீ பற்றி எரிகிறது.
மனித நேயம் என்ற வார்த்தையே இந்த அரசின் அகராதியில் இல்லை என்பதை நாம் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்.
உயிர் தியாக போராட்டமே நாம் செய்ய துணிந்தாலும் அன்றாடம் சாதாரணமாக மாண்டு போகிறவர்களின் எண்ணிக்கையில் கூட நமது இறப்பு எண்ணிக்கையை கொண்டு வரமாட்டார்கள்.
விதி 110ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கைகூட பொய்த்துவிட்டது.
எனவே சென்னையில் 18.02.2016 ஆம் தேதி கூடவுள்ள ஜாக்டோ மாநிலப் பொதுக்குழு ஜாக்டோவின் தனித்தன்மையை இழக்காமல் ஜாக்டோ போராட்ட செயல்திட்டங்களை வடித்தெடுத்து அறிவியுங்கள்.
ஜாக்டோ மீது நம்பிக்கை வைத்துள்ள ஆசிரியர்களை காயப்படுத்திவெந்த புண்ணாக்குகிற போராட்ட முறைகளை தீர்மானமிட்டு அறிவிப்பதை தவிர்த்துவிடுவது ஆசிரியர்களை சேதாரமின்றி பாதுகாக்கின்ற கவசமாகும்
2002,2003 ல் டெஸ்மா காலத்தில் களத்தில் இருந்தவர்கள் இன்று நம்மிடையே இல்லை.
தேர்தல் அறிவிப்பு வெளிவரும் வரை நாம் போராட்ட களத்தில் நின்றே ஆக வேண்டும் .
ஆசிரியர்களின் சினத்தீயினை அணையாமல் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும் .
ஆனால் அதே நேரத்தில் பலியாகவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
.போராட்ட முறைகளை நிதானமாக எடுத்து அறிவியுங்கள்.