2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை
TET ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை, இந்த அவையில் நானும் மற்ற எதிர்க்கட்சிகளும் எடுத்துரைத்ததை ஏற்று, அந்தச் சலுகை வழங்கப்ட்டது. ஆனால் 2013 லிருந்துதான் அந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 2012 ல் அந்தத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகமான மதிப்பெண் பெற்றிருக்கின்றார்கள். இந்தச் சலுகை இல்லாததால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வரக்கூடிய நிலை இல்லை. எனவே 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அந்தச் சலுகை வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.