rp

Blogging Tips 2017

ஜனவரி 1 -2014 முதல் அனைத்து வங்கிகளும் எழுத்துக்கள் எழதப்பட்ட ரூபாய் நோட்டுகளை பெற RBI தடை


RBI-FROM 1st JANUARY 2014:

ANY BANK WILL NOT ACCEPT ANYTHING WRITTEN ON NOTE 


RBI Guidelines: Because of writing on Indian currency notes, Indian Govt loses Rs 2,638 cr each year, so please don't write anything on currency note

2ம் வகுப்பு மாணவனுக்கு அடி, உதை: பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், 2ம் வகுப்பு மாணவன் ஒருவனை, பள்ளி நிர்வாகத்தினர் அடித்து உதைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், சூரமங்கலம், ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணகுமார், மனைவி லதிகா ஆகியோர், மகன் ஷாம் சுந்தர், 8, அழைத்துக் கொண்டு நேற்று, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் மாணவன் ஷாம் சுந்தர் உடலில், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக்கட்டு காணப்பட்டது. அவனை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பணி நிரவலில் பாகுபாடு ஏன்? -ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருத்து

மெல்லக் குறையுது மாணவர் எண்ணிக்கை: 1268 துவக்கப் பள்ளிகளுக்கு "பூட்டு"

அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இல்லாமல் போகும் என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

பொதுத் தேர்வு மைய அறையில் 20 பேருக்கு மேல் இருக்க கூடாது : தேர்வுத்துறை எச்சரிக்கை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுதேர்வில், அறை ஒன்றில் 20 மாணவர்களுக்கு மேல் அமர வைப்பதை தவிர்க்க, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த, சி.இ.ஓ.,க்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர், ரோல் நம்பர் உள்ளிட்ட விபரங்களை

பள்ளிக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள்

பரந்து விரிந்த செம்மண் பூமி. சுற்றுவட்டாரம் முழுவதும் செங்கல் சூளைகள். வேட்டி கட்டிய தமிழ் முதலாளிகள். மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து குடும்பத்தோடு குமரிக்கு வந்து தங்கியிருந்து வேலை பார்த்து வயிற்றை நிரப்பும் கூலித் தொழிலாளர்கள். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, ஆரல்வாய் மொழி சுற்றுவட்டாரப் பகுதியின் காட்சியமைப்புதான் இது.

கொலைக்களமாகும் கல்வி கூடங்கள்-ஓர் ஆய்வுக்கட்டுரை

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியை உமா மகேஸ்வரி , 9ம் வகுப்பு மாணவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  உண்டாக்கியது. இந்த சோக சம்பவத்தின் சுவடுகள் கூட ஆறாத நிலையில், மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவமாக தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வராக இருந்த சுரேஷ் (49), மாணவர்கள் 3 பேரால்  வெட்டி கொலை செய்யப்பட்டார்.

4000 மாணவர்களுக்கு படிக்கும்போதே புரவிஷனல் சான்றிதழ் தந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுத் துறையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள குளறுபடியால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
திருவள்ளுவர் பல்கலையில் படிக்கும் சுமார் 4 ஆயிரம் எம்சிஏ மாணவர்களுக்கு படித்துக்கொண்டிருக்கும்போதே புரவிஷனல் சான்றிதழ்கள் அச்சடித்து, அவர்கள் படிக்கும் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூடி மறைக்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான ஆவணங்களின் நகல்களை, பெயர் சொல்ல விரும்பாத ஓர் அதிகாரி அளித்தார்.

ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் வசூல் வேட்டை கண்டுகொள்ளாத உயர் அதிகாரிகள்

உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில், கட்டாய வசூல் கொடிகட்டி பறப்பதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடக்கக்கல்வித்துறையின் கீழ் வரும், நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம், நிலுவை மற்றும் ஆய்வுப்பணிகளுக்காக, ஒவ்வொரு ஒன்றியத்திலும், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒன்று அல்லது இரண்டு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அலுவலக கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.

அடுத்த கல்வி ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப, தனியார் கல்லூரிகள், இப்போதே, மாணவர்களுக்கு, வலை விரித்து வருகின்றன.

அடுத்த கல்வி ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப, தனியார் கல்லூரிகள், இப்போதே, மாணவர்களுக்கு, வலை விரித்து வருகின்றன. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரை, தங்கள் கல்லூரிகளுக்கு, 'டூர்' அழைத்துச் சென்று, கல்லூரிகளைப் பற்றி, 'ஆஹா... ஓஹோ...' என, புகழ்பாடுகின்றனர். இதில், எத்தனை மாணவர், 'சிக்குவர்' என, தெரியவில்லை.

01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது!செப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப்பு உள்ளது. அதாவது 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம்.
 மேலும் விவரங்களுக்கு

http://www.igecorner.com/da-calculation-sheet/

ஆன்-லைனில் மாணவர்களின் விவரம்:பதிவேற்றும் பணி 80 சதவீதம் முடிவு

கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, ரத்த வகை, பயிலும் பாடப்பிரிவு உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்யுமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்

CCE செயல்பாடுகள் 1முதல் 4 வகுப்புகளுக்குண்டான SABL அட்டைகளினை பயன்படுத்தியே கற்பிக்க மாநில திட்ட இயக்குனர் அறிவுரை


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "தீபாவளி" வாழ்த்துச் செய்தி

தமிழக அரசின் செய்தி குறிப்பு எண்.262 நாள்.01.11.2013 பதிவிறக்கம் செய்ய...

அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால் பயன்பாடின்றி முடங்கி உள்ளது.

பள்ளி மாணவர்கள் கல்வியை எளிமையாகவும், இனிமையாகவும் கற்றுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.,) திட்டம் மூலம் பள்ளி வளர்ச்சிக்காக நிதி உதவி, உபகரணங்கள் வழங்குகிறது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அரசு - தனியார் கூட்டுமுயற்சியுடன் இது நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படும்.

கடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் கானல் நீராகும் 100 சதவீத தேர்ச்சி

பள்ளிகளில் கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் 100 சதவீத தேர்ச்சி கேள்விக்குறியை
எட்டியுள்ளது.

தனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் - CEO's & DEEO's கோரிக்கை

தனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் -CEO's & DEEO's கோரிக்கை மேலும்

தனியாருடன் சேர்ந்து மத்திய அரசுப் பள்ளி- புதிய திட்டத்துக்கு திமுக எதிர்ப்பு திமுக தலைவர் கருணாநிதி

இது மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கான மற்றொரு முயற்சியாகும். தமிழ்நாட்டில் மாதிரிப் பள்ளிகளை தனியாருடனான கூட்டு இல்லாமல், மாநில அரசே நேரடியாக
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத இடங்களில் மாதிரிப் பள்ளிகளை தொடங்க விண்ணப்பம் செய்யுமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை

ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை

வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில்வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்பட்டது.

இடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் மறுகூட்டல் (Retotalling), பிளஸ்2 மதிப்பெண் மறுகூட்டல் / விடைத்தாள் நகல் ஆன்லைனில் 04.11.13 முதல் 08.11.13 வரை இணையதளம் வாயிலாக விண்ணபிக்கலாம்

DGE - SSLC / HSC SUPPLEMENTARY EXAMINATION SEP / OCT 2013 - RETOTALLING / COPY OF THE ANSWER SCRIPTS REG PRESS RELEASE CLICK HERE...

திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை

திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

நவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ.,

தமிழகத்துடன் குமரி இணைந்த நவம்பர் 1ம் தேதி அரசு விழா கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

பள்ளியில் பல் இளிக்குது சுகாதாரம் ஜொலிக்குது "அம்மா உணவகம்' - தினமலர் செய்தி

மாநகராட்சி பள்ளிக்குள், "அம்மா உணவகம்' அமைக்க காட்டிய ஆர்வத்தை, அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, அதிகாரிகள் காட்டவில்லை என, புகார் எழுந்துள்ளது.
மசக்காளிபாளையத்தில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 123 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்குள் அமைந்துள்ள அங்கன்வாடி, குழந்தைகள் நலமையத்தில் 50 மழலைகள் உள்ளனர். பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
கோவை மாநகராட்சியின் கீழ், 16 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 15 நடுநிலைப்பள்ளிகள், 41 நடுநிலைப்பள்ளிகள், சிறப்பு பள்ளி ஒன்று என, மொத்தம் 83 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பொதுவாக பள்ளிகள் என்பது, அடிப்படை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செயல் திட்டங்களை வகுக்கவேண்டும். மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக வகுப்பறைகளாக பயன்படுத்தப்பட்ட கட்டடம் தற்போது, "அம்மா உணவகமாக' மாற்றப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டஉயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு நாளை (01.11.13)உள்ளூர் விடுமுறை அறிவிப்பு :


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும்  உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு திபாவளி திருநாளை

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?

"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட விசாரணைக்கு பிறகு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனமும், டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்பதாலும் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மேல் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.

வழக்கின் முடிவை பொறுத்து ஆசிரியர்கள் தேர்வு அமையும்: ஐகோர்ட்


ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில்,தேர்வு மற்றும் நியமனங்கள்,வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த
,வழக்கறிஞர்,எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு:

பள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்க உத்தரவு

DSE - DEEPAVALI 2013 PRECAUTIONS MEASURES REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட இயக்குனர் உத்தரவு.

DEE - ALL DEEO / AEEO OFFICES R CELEBRATE ANTI-CORRUPTION WEEKFROM 28.10.2013 TO 02.11.2013 REG PROC CLICK HERE...

OFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி? வீடியோ விளக்கம்


வீடியோவை காண Pls Click Here SaveFrom.net

SCHOOL EDUCATION - PAY CONTINUATION ORDER FOR 1591 BT ASST POSTs SANCTIONED AS PER GO.274 DATED.29.10.2012


TO DOWNLOAD PAY ORDER FOR 1591 BT ASSTs CLICK HERE...

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது.

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவருக்கு அபராதம்

ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், முழு மதிப்பெண் வழங்க தாக்கலான வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யாருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட  வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியல்-2014

இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்

தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு

இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு 

click here to download the govt letter of instruction of prevention of national flag from insult reg

தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்.

click here-Search Your Name in Electoral Roll by EPIC Number
click here-To see ur Roll No & Part No

தலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS உறுதி மொழி படிவம்

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில், தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.

அக்டோபர், 28 முதல், நவம்பர், 2ம் தேதி வரை, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அனைத்து அரசு ஊழியர்களும், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்


புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்
கே. சி. வீரமணி (பிறப்பு: 1964) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. 1993 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்த இவர் தற்போது வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய

முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்க்கப்படும் இடம் மற்றும் அழைப்பு கடிதம் TRB வெளியீடு.

Additional list certificate verification date and place announced by TRB


TRB UPLOADED  CALL LETTER TO CANDIDATES


CLICK HERE TO DOWNLOAD YOUR CV

டிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னையில நடைபெற உள்ளது

இதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும்
1. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
2. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
3. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (30.10.13) விசாரணை பட்டியலில் உள்ளது.

இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 43ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு
இடைவேளைக்கு பின்னால்தான் இவ்வழக்கு விசாரணைக்கு வரும். எனவே வழக்கு விசாரணைக்கு வருமா?

மழை வருமா?இல்லை வெறும் காற்றுடன் சென்று விடுமா என்பது இன்று மாலை தெரியவரும்.காத்திருப்போம்..."

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி

அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.

வாசிப்புத் திறன்--முக நூலில் ஆசிரியர்குரலின் பதிவு

கடந்த முறை ஏசர் ரிப்போர்ட் வந்ததிலிருந்து தமிழக பள்ளி,தொடக்கல்வி துறை அதிகாரிகள் வாசிப்புத் திறன் ,வாசிப்புத் திறன் என கூக்குரலிட தொடங்கி விட்டனர்.

கடந்த மாதம் கடலூர் மாவட்ட நடுனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்பள்ளியில் வாசிப்புத்திறன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களின் அதிகமான தேர்ச்சி விழுக்காடே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?

 
THANKS TO  TEACHERS FRIEND DEVARAJAN. TANJORE
 
            அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது..  பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில
அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது.  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.  அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள்,டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன.

த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

RTI - TRB - B.ED., WITH OTHER OPTION ELIGIBLE TO GET BT APPOINTMENT REG TRB LETTER CLICK HERE...

நவம்பர் 1 பள்ளிகளுக்கு சில மாவட்டங்களில் ஈடுசெய்யும் விடுமுறை அறிவிப்பு

தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.9300 அடிப்படை ஊதியம், ரூ.4200 தர ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து தொடக்க ஊதியமாக ரூ.27,100 வழங்கப்படுகிறது.
அதேநேரத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம், ரூ.2800 தர ஊதியம், ரூ.750 சிறப்பு ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து ரூ. 17,165 மட்டுமே

'நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்படுமா


'நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்படுமா' என, பாதிக்கப்பட்ட பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது.

அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்தபோட்டி நிலவுகிறது.
அரசு பணியாளர் தேர்வாணையம்,எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர்.

School Profile Updation Extended upto 08/11/2013 | தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை  தேதி நீடித்து
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது

தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு.

DEE - GRIEVANCE DAY POSTPONED FOR NOV'2013 DUE TO DEEPAVALI HOLIDAY REG PROC CLICK HERE...

திருச்சி மாவட்டத்தில் நாளை (29.10.2013) முதல் ஆசிரியர்களுக்கு SMS வருகைப்பதிவு அமல்

திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMS மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.காலை
9.40 மணிக்குள் SMS மூலமும், மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும்.

உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

நடை பயிற்சி டிப்ஸ்

கோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்புப் பயிற்சி

எதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்றைய மாணவ, மாணவிகளுக்கு அறிவு வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. அதே அளவிற்கு கோபமும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடந்து விடுகிறது. இதன் மூலம் மாணவ சமுதாயத்தின் மீது ஒருவித களங்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

"மக்-அப்' மாணவர்கள் உயர்கல்வியில் "பேக்-அப்': அடிப்படை காரணம் என்ன?

அடிப்படை கல்வியின்மையால் மாணவர்களின் உயர்கல்வியில் பின்னடைவு ஏற்படுவதுடன், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாத நிலை உருவாகிறது. சில பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை, அதற்கு முந்தைய வகுப்புகள் முதலே நடத்தப்படுவதால் இந்நிலை ஏற்படுவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவன், கல்லூரிகளில் "அரியர்' வைப்பது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், அப்பின்னடைவுக்கான காரணத்தை உற்றுநோக்கினால், பள்ளிகளில் முக்கிய கட்டத்தை (9, 11ம் வகுப்புகள்) எட்டும் மாணவர்களுக்கு, அடிப்படை கல்வி கிடைப்பதில்லை என்பதுதான். சில பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்களை அதற்கு முந்தைய வகுப்புகள் முதலே நடத்தப்படுகிறது; இதனால், அடிப்படை கல்வி கிடைக்காமல், பாடங்களை மனப்பாடம்செய்யும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர், என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்னல் பெருக்கல் - ஓரிலக்க எண்கள்

அனைவருக்கும் மனப்பாடமாக பத்தாவது வாய்ப்பாடு வரை சொல்லத் தெரியும். ஆனால் வாய்ப்பாடு மறந்து விட்டால் என்ன செய்வது? கவலையே வேண்டாம். நான் சொல்லித் தரப்போகிற இந்த உத்தி உங்கள் வாய்ப்பாடு மனப்பாடப் பிரச்சனையை தீர்த்து வைக்கும்.

ஓரிலக்க எண்கள் அனைத்தும் பத்துக்கு கீழே உள்ள எண்கள். எவ்வளவு கீழே அல்லது அருகில் உள்ளன என்பதை வைத்துதான் நாம் இந்தக் கணக்குகளை போடப் போகிறோம்.

முதல் உதாரணம் : 7 x 8

மின்சாரம் தாக்கி மாணவர் பலி - தலைமை ஆசிரியை கைது

FLASH NEWS-டிட்டோ ஜாக் கூட்டம் 9/11/13 காலை நடைபெறவுள்ளது-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி .பொதுச்செயலாளர் செ.முத்துசாமி தகவல்டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் 09.11.2013 சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
கூட்ட அழைப்பு கடிதத்தினை தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு. இரங்கராஜன் அவர்கள் தோழமை சங்கத்தினருக்கு அனுப்புவார். அனைவரும் தவறாமை கலந்து கொள்வோம்.
தகவல்
பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர் வலியுறுத்தல்.

மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுவை ஏற்படுத்த வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பிச்சையப்பன் வலியுறுத்தினார். பிச்சையப்பன் கூறியதாவது:
பள்ளி வளாகத்திற்குள் பெற்றோர்களை அனுமதிக்கக்கூடாது.அதற்கு பதிலாக குழந்தைகளின் தாய்கள் 5 பேரை உள்ளடக்கிய அன்னையர் குழுவை உருவாக்கி பள்ளியின் சுற்றுப்புறம்,

வகுப்பறையில் மொபைல் போன் விளையாட்டு-கண்டித்ததால் மாணவன் தற்கொலை முயற்சி எங்கே போகிறது மாணவர் சமுதாயம்?

காவு கேட்கும் கல்விக்கூடங்கள் - இரா.ஆஞ்சலா ராஜம் சமூக நல விரும்பி-தினமலரில் கட்டுரை

'ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை' போன்ற செய்திகளையே, சில ஆண்டுகளாக கேட்டுப் பழகியிருந்த நமக்கு, புதுவரவாக, ஆசிரியரை மாணவர்கள் கொலை செய்யும் செய்திகளும் வரத் துவங்கி விட்டன.

கடந்த ஆண்டு, சென்னையில், ஆசிரியை ஒருவரை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவத்தை, யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஒருவரை, மாணவர்கள், 'போட்டு'த் தள்ளி விட்டனர்!இதில் வேடிக்கை என்னவென்றால், ஆசிரியர், மாணவனைத் தாக்கினாலும்; மாணவன், ஆசிரியரைத் தாக்கினாலும், பழி என்னவோ, ஆசிரியர்கள் மீது தான். 'இன்றைய ஆசிரியர்களின், அணுகுமுறை சரியில்லை' என, ஆவேசப்படுவோர், ஒன்றை மறந்து விடுகின்றனர்... இன்றைய கல்வி முறை, அன்று போல் இல்லை என்பதை.அன்று, ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் தந்தனர். ஆனால் இன்று? கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதனால், பள்ளியானாலும், கல்லூரியானாலும், நல்ல மதிப்பெண் எடுப்பவனுக்கே முக்கியத்துவம்; அவனே, 'ஹீரோ!' அதுவே, அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும், சரியாக படிக்கவில்லை என்றால்,

ல, ழ, ள தெரியணுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்!

'படிக்க தெரிந்தவனுக்கு நல்ல வேலை மட்டுமே கிடைக்கும். நடிக்க தெரிந்தவனுக்கு தமிழ்நாடே கிடைக்கும்' என்ற சமீபத்திய நகைச்சுவை வரிகள், சமூக இணையதளங்களில் ஜோராக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை கலக்கிய, 'வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்' சினிமா கானா பாடல், துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சி புத்தகத்தில் இடம் பெற்று, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.வியாசர்பாடியில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பள்ளி பாடப்புத்தகத்துடன், 'வாள மீனு' கானா பாட்டுப் புத்தகத்தையும் கொடுத்து வாசிக்க வைக்கின்றனர். இதற்காக, மாநகராட்சியிடம் அனுமதி பெற்று உள்ளனர்.

பெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம் ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.

தவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை ஐகோர்ட்டு உத்தரவு

தாவரவியல் முதுநிலை ஆசிரியர் தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
முதுநிலை ஆசிரியர் தேர்வு

நம் ஊரில் உள்ள வங்கி தேசிய மயக்கமாட்டப்பட்டதா?அல்லது இல்லையா?குழப்பமா இதோ பட்டியல் தயார் இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் :

*. Allahabad Bank
*. Andhra Bank
*. Bank of Baroda
*. Bank of India
*. Bank of Madura
*. Bank of Maharashtra
*. Bank of Punjab
*. Banque Nationale De Paris

கோவையில் அங்கீகாரமில்லாத 28 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

கோவை வருவாய் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் 28 பள்ளிகளுக்கு  இரண்டாம் கட்ட நோட்டீஸை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார்.
இக்கல்வியாண்டில் அங்கீகாரம் புதுப்பிக்காமல் மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் நிலைகள் குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

web stats

web stats