rp

Blogging Tips 2017

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் மாற்றம் கொண்டுவர முடியாது: பிரதமர் மோடி

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் மாற்றம் கொண்டுவர முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளிடம் நேரடியாக கலந்துரையாடியபோது மோடி இவ்வாறு தெரிவித்தார்.
தொழில்நுட்ப பயன்பாடுகளை அனுபவிக்கவிடாமல் மாணவர்களை தடுப்பது குற்றம் என்று மோடி கூறினார். விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், மாணவர்கள் அவற்றில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டில்

பிரதமராவதற்கு நான் என்ன செய்யவேண்டும்: மோடியிடம் குறும்பு மாணவன் குசும்பு கேள்வி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டில் உள்ள மாணவர்களிடம் உரையாற்றினார்.

அப்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து பேசிய குறும்பு மாணவன் ஒருவன் மோடியிடம் நம் நாட்டின் பிரதமராவதற்கு நாள் என்ன செய்யவேண்டும் என்று குசும்புத்தனமான கேள்வியை கேட்டான். இதை கேட்ட மோடி சிரித்துவிட்டார்.

ஆசிரியர்களை மாணவர்கள் கதாநாயகர்களாக பார்க்கின்றனர்: பிரதமர் மோடி உரை



நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி மாணவர்கள் முன் பேசினார். அப்போது ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.

தனது உரையில் அவர் கூறியுள்ளாவது; மாணவர்களுடன் உரையாற்ற எனக்கு இந்த நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆசிரியர்களை எப்படி மதிக்கவேண்டும் என்றும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நாளுக்கு தான் ஆசிரியர் தினம் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.

TET Online Certificates ஒரு வாரம்வரை மட்டுமே இணையதளத்தில் இருக்கும்?

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தச் சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

Personal Pay – Grant of 5percent Personal Pay to the Steno-typists, Grade-III who were in position as on 1-8-92 and 1-9-98 – clarification – Issued

TN Govt. Letter No. 46847/Pay Cell/14-1 Dt: September 02, 2014 Click Here...

கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை, வாழ்வின் தர்மம்: பிரதமர் நரேந்திர மோடி

கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம் என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாகவும், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுக்காக, நாடு முழுவதும் 350 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று(செப்டம்பர் 5) நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 350 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதன் ஒரு பகுதியாக, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்-tntf.in

கல்வித்துறை வெளியிட்டுள்ள செப்டம்பர் -2014 மாத நாட்காட்டி


கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆசிரியர் நாள்" வாழ்த்துச் செய்தி

வளரும் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில் அறிவு வளர்ச்சிப் பயிர் செய்திடும் பொறுப்பில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் நாட்டுப் பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழ் மொழிப்பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழகத்தின் நலனை - தமிழ்ச் சமுதாயத்தின் தன்மானத்தைக் காக்கும் பொறுப்பினையும் மேற்கொண்டிடவேண்டும்- கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆசிரியர் நாள்" வாழ்த்துச் செய்தி

3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்கள் பணி நியமனம்: முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து



“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற் கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும்  எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்
                                                                       -முதல்– அமைச்சர் ஜெயலலிதா
சிரியர் தினத்தையொட்டி முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும்: வலுத்துவரும் கோரிக்கை

ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள வெயிட்டேஜ் எனப்படும் தகுதிகாண் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வினை, இடைநிலை ஆசிரியர் படிப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். 10,782 இடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில், மொத்தம் 72 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், தமிழக அரசு தகுதிகாண் மதிப்பெண் முறை

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசிரியர் தினச் செய்தி







ஆசிரியர்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்வதுடன், மாணவர்களையும் மாற்றத்துக்கு ஏற்ப தயார்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தினச் செய்தியாக அறிவித்தார்.

சி.பி. எஸ்.இ. மாணவர்களின் கல்வித்தரம் - ஆசிரியர் கருத்துக்களை குறிப்பிடும் முறையில் மாற்றம்

மத்திய கல்வி வாரிய (சி.பி. எஸ்.இ.,) பாடத் திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த, ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தரத்தை மேம்படுத்த...

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் எழுதும் தேர்வுகளில், அவர்களுடைய செயல்பாடு குறித்து ஆசிரியர்கள், வெரி குட், குட், புவர், வெரி புவர் என குறிப்பு எழுதி வந்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு;

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% லிருந்து 107% ஆக உயர்ந்துள்ளது.

அகவிலைப்படி உயர்வை ஜுலை 1ம் தேதி முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு பிடித்தம் செய்த தொகை எங்கே? பதில் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவிப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி

PR.NO.166 DATED.04.09.2014 - Teachers Day greetings message of the Honble Chief Minister Click here...

கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு தகுதிச் சான்றிதழ் கிடையாது: கேரள அரசு அறிவிப்பு

கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படாது என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள முதல்வர் உம்மன்ன் சாண்டி இதனை தெரிவித்தார்.

கேரள மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கேரள மாநிலத்தில் பள்ளிகளில் கழிவறை வசதி இருப்பதை கட்டாயமாக்கும் வகையில், கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படாது என்ற முடிவு எட்டப்பட்டது.

உதவி பேராசிரியர் நியமனம் மதிப்பெண் பட்டியல் வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட, நேர்முகத் தேர்வின் மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டது.
தமிழக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம், பல்வேறு

டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. தேர்வர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், 'ரோல் எண்' மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, டி.இ.டி., சான்றிதழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எப்போது? - தினமலர்

காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என, அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

TNTET PAPER-1 : கலந்தாய்வில் கலந்துக்கொண்டு பணிஒப்புகை ஆணை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்கப்படாது - சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும்

கடந்த 01.09.2014 & 02.09.2014 நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும் பணி ஒப்புகை ஆணை வழங்கப்பட்டது.... அவர்கள் அனைவரையும் நாளை( 04.09.2014 )அணைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்க இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.

உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம்??

பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில், உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.

'புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், பணியில் சேர அனுமதிக்கக் கூடாது' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவால், ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கலக்கம் அடைந்துள்ளனர்.

பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவை பெறாமல் உள்ளவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) முறையை கொண்டு வந்ததில் இருந்து, தமிழகத்தில், தொடர் குளறுபடி நடந்து வருகிறது.

மதிப்பெண் சான்று உண்மைத்தன்மை ஆன்லைன் மூலம் பெறலாம்



பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய விரும்புவோர் இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.


அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல்கள் அனைத்து அரசுப் பணிக்கும், தனியார் பணிக்கும் அடிப்படையாக உள்ளன. பணியில் சேரும் எந்த நபரும் தங்கள் உண்மை சான்றுகளை பணி வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். பணி வழங்கும் நிறுவனம் அந்த சான்றுகளின் உண்மைத் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கும். இதை ஏற்று பணி நாடுவோர் நிறுவனங்களுக்கு கொடுத்த சான்றுகள் உண்மையானவையா இல்லையா என்பது குறித்து தேர்வுத் துறை ஆய்வு செய்து சான்று வழங்கும். இந்த சான்றுகளை அந்தந்த நிறுவனங்களே தேர்வுத்துறைக்கு நேரடியாக அனுப்பி நேரடியாகவே பதில் பெறுவார்கள்.

TNTET - ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை - வழக்கின் முழு விவரம்


நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
பி.லிட்., பி.எட். பட்ட தாரியான நான் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப் பெண்களை பெற்றுள்ளேன். தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

2013 TET EXAM-தகுதித்தேர்வில் வெற்றிபெற்றோர் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் TRB அறிவிப்பு


CLICK HERE-TO DOWNLOAD PAPER 1 & 2 CERTIFICATES 
  CLICK HERE FOR TNTET PAPER-I CERTIFICATE

CLICK HERE FOR TNTET PAPER-II CERTIFICATE
CLICK HERE TO KNOW HOW TO DOWNLOAD TNTET CERTIFICATE

ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் சார்பில் 377 பேருக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5), தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

விசாரணையில் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்: இன்று இறுதி பட்டியல்


நல்லாசிரியர் விருதுக்கான தேர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதா? என விசாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்., 5ல், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கல்வித் துறை சார்பில் 'நல்லாசிரியர்' விருதுகள் அறிவிக்கப்படும். விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்கள், அவர்களின் பணிக்காலத்தில் எந்த புகாருக்கும் ஆளாகாமல் இருப்பது, சமூக சேவையில் அவர்களின் பங்களிப்பு, ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு மற்றும் மாணவர்கள் சேர்க்கைக்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி போன்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்படும்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 03.09.2014 மற்றும் 04.09.2014 ஆகிய நாட்களில் பணி ஒதுக்கீட்டு ஆணையும், 06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு

DEE - BT APPOINTMENT REG PROC CLICK HERE...

TNPSC - Departmental Examination - Dec. 2014

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Current Online Registration for...
(Click to Apply Online)
Notification Current Status


Departmental Examinations - December 2014
Tamil  |  English Online up to
30 Sep 2014
*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014


*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14


*தேர்வு கட்டணம் ரூ30,அஞ்சலக கட்டணம் ரூ.12 சேர்த்து விண்ணப்ப பாடத்திற்கும் சேர்த்து


*தேர்வு நுழைவுச்சீட்டு 17.12.14 முதல் 31.12.14


*தேர்வு முடிவு 7.3.15&16.3.15

பொது வருங்கால வைப்பு நிதி - 2014-15ம் ஆண்டுக்கான இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படும் கணக்குத்தாள்களை கொண்டு ஊழியர்களுக்கு தற்காலிக முன் பணம் மற்றும் பகுதி இறுதி பணம் பட்டியல்களை அனுமதிக்க உத்தரவு

Govt Ltr No.40490/Allowances/2014-1, Dated.25.8.2014 - GPF – Annual Account Statement – Value Added Service – Reg order Click Here...

நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான காலாண்டு பொதுத் தேர்வு பணிகள் மற்றும் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் சார்பு

DSE - 2014-15 SSLC / HSC - QUARTERLY EXAMINATION - IN-CHARGE DETAILS & INSTRUCTIONS CLICK HERE... 

கல்வி நிறுவனங்கள் உயர்வதும் தாழ்வதும், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தது.

உயர்கல்வி நிறுவனங்கள் உயர்வதும் தாழ்வதும், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தது. நல்ல தொழில்நுட்பத்துடன் வகுப்பறை, தங்குவதற்கும், படிப்பதற்கும் தேவையான நல்ல வசதிகளுடன் சூழல் இருந்தாலும், கல்வி கற்றுத் தரும் தரமான ஆசான் இல்லை என்றால், உயர்கல்வி என்பது உயராது.

நல்ல கல்வி நிறுவனங்கள், நல்ல ஆசிரியர்களை நியமனம் செய்து, அவர்கள் தங்கள் நிறுவனங்களை விட்டுச் சென்றுவிடாத அளவுக்கு அவர்களை மகிழ்வுடன் வைத்து உள்ளனர். தரமான, திறன் கூட்டப்பட்ட ஆசிரியர்கள், மூன்று மிக முக்கி யமான அடிப்படைப் பணிகளான கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல், விரிவாக்கம் செய்தல் என, மூன்றையும் திறம்பட செய்ய வேண்டும். அப்படி திறனுடன் செயலாற்றக்கூடிய

வழக்கம் போல், ஆசிரியர் தினம், 'டீச்சர்ஸ் டே' என்ற பெயரிலேயே கொண்டாடப்படும். -மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார்.

''மத்திய அரசு அறிவித்துள்ள, 'குரு உத்சவ்' ஆசிரியர் தினத்தன்று நடத்தப்படும் கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு தான். கட்சித் தலைவர்கள், இதில் அரசியல் ஆதாயம் தேட நினைத்தால், அது கண்டிக்கத்தக்கது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார்.

நேரடி ஒளிபரப்பு:

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:வரும் 5ம் தேதி, கொண்டாடப்பட உள்ள ஆசிரியர் தினத்தன்று, டில்லியில், பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார். மாணவர்களின் கேள்விகளுக்கு, மோடி பதிலளிப்பதை, நாடு

கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய அரசு முடிவு

தேசிய கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொழில்நுட்பம் மற்றும் கணிதத்துறையில் எதிர்காலத்தில் திறமையான மாணவர்கள் உருவாகும் வகையில் திட்டங்கள் தீட்டுவது தொடர்பாக ஐ.ஐ.டி.,

திருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இந்நிலையில், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்களை துன்புறுத்தக் கூடாது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தல்

மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை
எழுதிவராமல் இருத்தல், நன்றாக படிக்காதது,

குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டி: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம்

ஆசிரியர் தினம் என்பதை இனி 'குரு உத்சவ்' என்றுதான் அழைக்க வேண்டும் மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டிக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு மட்டுமே என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: 'குரு உத்சவ்' ஆசிரியர்களைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு. இதற்குக் கூட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றால் எனக்கு அது வேதனை அளிக்கிறது. அதேபோல், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ஆற்றும் உரையை பள்ளி மாணவர்கள் கட்டாயம் பள்ளியில் இருந்து காண வேண்டும் என எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தேவையில்லாமல் அரசியல் கட்சிகள் திரித்துக் கூறுகின்றன என்றார்.

தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு

DEE - SERVICE REGISTER OPENING FOR NEWLY APPOINTED SECONDARY GRADE TEACHERS ON 08.09.2014 (JOINING DAY) REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு

DEE - DEE ORDERED TO RELIEVE TRS WHO R GOT TRANSFER FROM GENERAL COUNSELING REG PROC CLICK HERE...

ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு

ஆசிரியர் தினத்தின் பெயரை இனிமேல் சமஸ்கிருத மொழியில் குருஉத்சவ்-2014 என்று அழைக்கப்பட வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நாளில் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை கேட்க வேண்டுமென நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

சுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு

DEE CIRCULAR - 4 - DEE ORDERED TO PASTE VACANT LIST IN CONCERN COUNSELING CENTRE AT TOMORROW 8.30AM REG PROC CLICK HERE..

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% உயருகிறது அகவிலைப்படி...

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான சில்லரை பணவீக்க விகிதம் 7.25 சதவீதம் உயர்ந்ததையடுத்து, அவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படியை வழங்க நிதியமைச்சகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 100% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாத நாட்காட்டி


# 05.09.2014-ஆசிரியர் தினம்.

# 06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்

# 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்
ட விடுப்பு

# 06.09.2014-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி.

# 10.09.2014 முதல் 12.09.2014 வரை- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி.

'ஒன்பது மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லை'

'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம் தேதியும் நடக்கிறது. இதில், சென்னை, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில்

குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.

* 01.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும்

* 02.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்.

ஆசிரியர்களுக்கு மேற்படி கலந்தாய்வு தேதியன்று பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
* 04.09.2014 முதல் 06.09.2014 வரை - சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

* 08.09.2014 - புதிய இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட ஒதிக்கீடு ஆணை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை

தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு

DEE - ALL DEEO / AEEO's OFFICES ARE WORKING DAY ON 30.08.2014 & 31.08.2014 REG ORDER CLICK HERE...

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"

web stats

web stats