rp

Blogging Tips 2017

பள்ளி மாணவர்களுக்குஇலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்தொடங்குகிறது

அரசு, அரசு உதவி பெறும் இலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் தொடங்குகிறது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசக்காலணிகள், புத்தகப் பைகள் ஆகியவை இந்த ஆண்டு முதல் கடுமையான தரப்பரிசோதனைக்கு உள்படுத்தப்பட உள்ளன. இவற்றின் தரத்தை தனியார் ஆய்வகங்கள் பரிசோதித்து வந்த நிலையில், முதல்முறையாக இலவசப் பொருள்களின் தரத்தைப் பரிசோதிக்கும்பொறுப்பு மத்திய அரசு நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி மாதம் இரு முறையே இலவசம்


வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம். 3வது முறை எடுக்கும் போது ரூ.20 செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.ஏ-பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000லிருந்து 7000ஆகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last date for filing income tax returns extended to August 5


The government on Wednesday extended the last date for filing of income tax returns by five days to August 5.

The due date,which was July 31,has been extended in wake of “unprecedented surge” in number of I-T returns being filed electronically.

“As a measure of taxpayers convenience,it has been decided to extend the due date of filing of returns from July 31,2013 to August 5,2013,” the Finance Ministry said.

As per the Central Board of Direct Taxes (CBDT),there has been an unprecedented surge in number of returns being e-filed.

This year till July 30,about 92 lakh returns have been electronically filed,which is 46.8 per cent higher than the returns e-filed during the corresponding period last fiscal.


Source: http://indianexpress.com

இன்று பி.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைத்தின் பி.எட். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பி.எட். தேர்வு முடிவுகளை www.tnteu.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மாநில நல்லாசிரியர் விருதுப்பட்டியல்-(2013-2014) தயாரிக்க மாவட்ட தேர்வுக்குழுவுக்கு வழிகாட்டுமுறைகள்

இங்கே சொடுக்கி  நெறிமுறைகளைப்படிக்கலாம்

5 ஆயிரம் தமிழ்ச் சொற்களை கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி

மாவட்ட தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழில் 5 ஆயிரம் சொற்களை பிழையின்றி, எழுத மற்றும் வாசிக்கும் வகையில் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மாணவ, மாணவிகள் தமிழை பிழையின்றி எழுத, வாசிக்க கற்றுக் கொள்வதற்கு கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
மொழியை முழுமையாகத் தெரிந்து கொள்ளும்போது தான், மாணவர்கள் பிற பாடங்களையும் ஆழமாக கற்றுக் கொள்ள முடியும். எனவே, தொடக்கப் பள்ளியிலேயே மாணவர்களிடம் தமிழ் வாசிப்பு, எழுத்துத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
அதன்படி தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5ஆம் வகுப்பு பயிலும் போது குறைந்தபட்சம் 5 ஆயிரம் தமிழ் சொற்களை படித்து, புரிந்து கொள்ளும் வகையில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பழைய நாடுகளும் புதிய பெயர்களும்

மனிதர்கள் மட்டும்தானா மாறி வருகிறார்கள்? பல நாடுகளின் பெயர்கள்,எல்லைகளும் மாறிக்கொண்டே, இருக்கின்றன.அவற்றின் பழைய பெயர்களை பார்க்கலாமா?
டச்சு கயானா — சுரினாம்,
அபிசீனியா —எத்தியோப்பியா,
கோல்டு கோஸ்ட் — கானா,
பசுட்டோலாந்து — லெசதொ-
தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா,
வட ரொடீஷியா — ஜாம்பியா,
தென்ரொடீஷியா — ஜிம்பாப்வே,
டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா,
கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட்.
சாயிர் — காங்கோ,
சோவியத்யூனியன் — ரஷ்யா,
பர்மா — மியான்மர்,
கிழக்குபாகிஸ்தான் — பங்களாதேஷ்.
சிலோன் — ஸ்ரீலங்கா,
கம்பூச்சியா — கம்போடியா,
பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்,
மெஸமடோமியா — ஈராக்,
சயாம் — தாய்லாந்து,
பார்மோஸ — தைவான்,
ஹாலந்து — நெதர்லாந்து,
மலாவாய் — நியூசிலாந்து,
மலகாஸி — மடகாஸ்கர்,
டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா,
சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்,
அப்பர்பெரு — பொலிவியா,
பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா

விதிமுறைகளைப் பின்பற்றாத மழலையர் பள்ளிகள்: மூடுவதற்கு கால அட்டவணை வெளியிட உத்தரவு

அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் கே.பாலசுப்ரமணியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விபரம்: தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் மழலையர் பள்ளி நடத்த வேண்டும்.

ஆனால், சென்னையில் செயல்படக் கூடிய 760 பள்ளிகள் அரசின் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாகச் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 163 புதிய படிப்புகள்: அரசு அறிவிப்பு

தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: மாநிலத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் தொடங்கப்படும். இதில், 62 எம்.பில்., படிப்புகளும், 52 பிஎச்.டி., படிப்புகளும் அடக்கம்.

மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் அளவில், பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். கடந்த 2011ம் ஆண்டில் எனது அரசு பொறுப்பேற்றதிலிருந்து, உயர்கல்வியில் புதிதாக 797 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 38.2% என்ற அளவிற்கு அதிகரித்தது.

2014 மே/ஜூன் -ல் நடைபெற்ற பி.எட் தேர்வு முடிவு இன்று 02.08.2014 வெளியீடு

2014 மே/ஜூன் -ல் நடைபெற்ற பி.எட் தேர்வு முடிவுஇன்று 02.08.2014வெளியீடு என தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்அறிவிப்பு .

1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் - சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.

சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

நாட்டை வளப்படுத்துவதிலும், மக்களை மேம்படுத்துவதிலும், அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது உயர் கல்வி என்பதைக் கருத்திற் கொண்டு, உயர் கல்வியை அனைத்துத் தரப்பினரும் கற்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியுமா ?

சட்டசபையில் கேள்விநேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது:

அ.தே.இ - HSC / SSLC தனிதேர்வர்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது குறித்து கணினி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது

DGE - HSC / SSLC PRIVATE EXAM - APPLICATION ONLINE ENTRY REG ONE DAY TRAINING REG PROC CLICK HERE...

தினமலர் மற்றும் தினமணி செய்திகள் 11000, 15000 என முரன்பாட்டு செய்திகள் எது உண்மை

”யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்”
தினமலர் மற்றும் தினமணி செய்திகள்
11000, 15000 என முரன்பாட்டு செய்திகள்
எது உண்மை


TNTET: 15 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் இன்று பிற்பகல் வெளியீடு..!!! - Dinamalar


பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது.
ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து,

10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.

பள்ளி மாணவர் இடைநிற்றல் குறைந்துள்ளது: தமிழக அரசு


தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வித்துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல் 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலை வகுப்புகளில், 2001 - 02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013 - 14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப, நடுநிலை வகுப்புகளில், மாணவர் சேர்க்கை 99 சதவீதமாக இருப்பதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, திடீர் சிக்கல்

ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், மாணவர்கள் சேராததால், நடப்பாண்டில் மட்டும், 100 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடு விழா கண்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

தமிழகத்தில், 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்; 42, அரசு உதவிபெறும் பள்ளிகள்; 450 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது.இந்த பயிற்சியை முடித்து, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு பெற்றால், அரசு ஆரம்பப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியராக பணியாற்ற முடியும்.

வரவேற்பு இல்லை:

சேவையாற்றும் இளைஞர்களுக்கு முதல்வர் மாநில இளைஞர் விருது: ஜெயலலிதா

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், "முதல்வர் மாநில இளைஞர் விருது" உருவாக்கப்படும்.
15 - 35 வயதுடைய மூன்று ஆண்கள், மூன்று பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். 5,000 ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கத்தை உள்ளடக்கியதாக விருது இருக்கும்.

ஆகஸ்ட்-2014 இயக்குனர் வெளியிட்ட நாட்காட்டி(விடுமுறைப்பட்டியல்)


தாமதம் -பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம்

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது.
கடந்த, 2006ல், பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அமல்படுத்தப்பட்டன. ஒன்பது ஆண்டுகள் முடியும் நிலையில், இன்னும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தவில்லை.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

நள்ளிரவில் அமலுக்கு வந்தது : பெட்ரோல் 1 ரூபாய் குறைப்பு-டீசல் விலை யில் லிட்டருக்கு 0.60 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.09 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், டீசல் விலையில் லிட்டருக்கு 56 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றரை மாதங்களில் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மற்றும் அதிகரிப்பு ஆகிய மாற்றங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. பெட்ரோல் விலை குறைப்பால், சென்னையில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.78 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.76.93க்கு விற்கப்பட்டது. இதேபோல், டீசல் விலை யில் லிட்டருக்கு 0.60 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு லிட்டர் ரூ.62.30 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.61.70 ஆக விற்கப்பட்டது.

ஆண்ட்ராய்டு போன் பயன் படுத்துகிறீர்களா? இதோ சில வசதிகள்- கணிணி மூலம் உங்கள் போனை கட்டுப்படுத்தலாம்

கேள்விகள்
1.என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா?.
2.கடைசியாக எப்போது பயன்படுத்தப்பட்டது.
3.மொபைலை lock செய்யலாமா?
4., ஒரு வேலை காணாமல் போன உங்கள் மொபைலில் ரகசியமாக பாதுகாக்க வேண்டிய டேட்டாகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை கடவுச்சொல்கள் இருந்தால் அவற்றை Erase செய்யலாமா?
5.  மொபைலை ஃபேக்டரி ரிசெட் செய்யலாமா?
6.. இதற்க்கெல்லாம் உங்கள் மொபைல் அருகில் இருக்கவேண்டிய அவசியமா?
7.மொபைல் ஸ்லைட் அல்லது பாட்டன் லாக்கில் இருந்தால் அன்லாக் செய்யலாமா?

01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி!

30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று (31.07.2014) வெளியிடப்பட்டது.இதன்படி அகவிலைப்படி உயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. இக்கணக்கீட்டின்படி அரசு ஊழியர்களுக்கு 01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3 ஆம் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்காக மத்திய அரசு 2400 கோடி ஒதுக்கீடு !!!!

தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கான பெரும் அளவு நிதியை, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.நடப்பு (2014 - 15) கல்வியாண்டில், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை,

தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் முதல்வர் அறிவிப்பு

  தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களுடைய குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையும் அதன் முதிர்வுத் தொகையும் மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும்.

பள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்டில் உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு

DSE - 2014-15 ACADEMIC YEAR VI TO XII STD ADMISSION EXTENDED TO 30.09.2014 REG ORDER 

ஆகஸ்ட்-2014 மாத நாட்காட்டி

>2- குறைதீர்வு நாள்
>3-ஆடிப்பெருக்கு RL & 3-சர்வதேச நண்பர்கள் தினம்

>4,5- BRC Level Trainingதொடக்க நிலை ஆசிரியர்களுக்கு

>8- வரலக்‌ஷ்மி விரதம் RL & 8- உலக மூத்த குடிமக்கள் தினம்

>10- ரிக் உபகர்மா RL

>11- கயத்திரி ஜெபம் RL
>12- சர்வதேச இளைஞர்கள் தினம்

>15-சுதந்திர தினம்

>28- சாம உபகர்மRLா

> 29- விநாயகர் சதுர்த்தி Govt H'day

பணிகொடை (Gratuity) CPS திட்டத்தில் இருக்கா ? இல்லையா ? பெரும் குழப்பம் -

ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்

சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அத்துறை உயரதிகாரிகள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின்நேர்முக உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார்

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்.

தொடக்கக் கல்வி - நர்சரி மற்றும் பிரைமரி துவக்கப்பள்ளிகளின் விவரங்கள் கோருதல் சார்பு

தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

10726 BT, 4224 SG, Post will be filled by TRB

சற்றுமுன் தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வுவாரியம் தயார்...
தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ...
தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....
Source: SUN NEWs

எம்.காம்.பிஎட் பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம்-தகவல் அறியும் சட்டப்படி கடிதம்


நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47..அவற்றில் சில

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் 110–வது விதியின் கீழ் அறிக்கை

TN ASSEMBLY P.R.NO.014 DATED.30.07.2014 - NEW SCHOOLS & UPGRADED SCHOOLS REG HON'BLE CM ANNOUNCEMENT

நடப்புக் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்படும் பள்ளிகள்-முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் அறிக்கை

19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் 
19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். 
 
50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் 
 
நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்

100 உயர்நிலைப் பள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்
 
நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்

1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: முதல்–அமைச்சர் தகவல்



சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள்
பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாதமாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர்இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் விடுதலையானோர் விபரம்:

தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 8 அதிகாரிகள், 3 ஆசிரியைகள் உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, 
அப்போதைய தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, 
நகரமைப்பு அலுவலர் முருகன், 
வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், 
 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன்.
 கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன் பாலகிருஷ்ணன்,
 நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் தீ விபத்து வழக்கின் தீர்ப்பு வேதனையளிக்கிறது: பெற்றோர் குமுறல்

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதாக, உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை; 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அந்தப் பள்ளியின் தாளாளரும், பழனிச்சாமியின் மனைவியுமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கமளிக்க வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை


அரசு இணையதளம் மூலம் அனைத்து சேவைகள்- தமிழக அரசு தீவிரம்


குடந்தை பள்ளி தீ விபத்து வழக்கில் இன்று தீர்ப்பு

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் புதன்கிழமை (ஜூலை 30) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.   தவிர, 18 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை, உதவிகள்-1

உடல் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நிதியுதவி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இடஒதுக்கீடு போன்றவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு என்னென்ன சலுகைகள் வழங்குகிறது. அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் அளிக்கும் விளக்கங்கள் இனி இடம்பெறுகின்றன…
மாற்றுத்திறனாளிகள் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநலத் துறையின் ஓர் அங்கமாக ஊனமுற்றோர் துறை செயல்பட்டு வந்தது. 1995-ம் ஆண்டு ஊனமுற்றோர் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்துறை 2010-ம் ஆண்டில் ‘மாற்றுத் திறனாளிகள் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் துறை செயல்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர்?
மாற்றுத் திறனாளிகள் 8 பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர். அதன்படி கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம், புற உலகு சிந்தனையற்றோர் (ஆட்டிசம்), பல்வகை ஊனம், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் என 8 வகையாக மாற்றுத் திறனாளிகள் பிரிக்கப்படுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடுவதற்கு உடல் குறைபாட்டில் அளவு ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுமா?

பொழுதுபோக்கு இடமாகவும், மது அருந்தும் கூடாரமாகவும் அரசுப் பள்ளிகள் பயன்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பள்ளிகளுக்கு கட்டாயம் இரவு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு ஆதாரமாக அரசு பள்ளிகள் விளங்குகின்றன. கல்வித்தரம், பள்ளியின் கட்டமைப்பு, விளையாட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவைகளை கருத்தில் கொண்டே பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
அரசுப் பள்ளிகள் பாதுகாப்பில்லாமல் இருப்பதே

பகுதி நேரம் மற்றும் தொலைதூர முறையில் பயில துறைமுன் அனுமதி & தடையின்மை கோரும் விண்ணப்பம்

CLICK HERE-HIGHER STUDIES PERMISSION NEW FORMAT

New Pay scale minimum 7TH CENTRAL PAY COMMISSION TABLE

CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS SUBMITTED MEMORANDUM TO 7TH CENTRAL PAY COMMISSION
 Memorandum to the 7th Central Pay Commission on issues common to All Central Government Employees- Submission of –

On behalf of the Confederation of Central Government Employees and Workers, we submit the memorandum for the consideration of the Commission.

The staff side, National council, JCM vide their letter in NC-JCM-2014/7th CPC dated 30th June 2014 have submitted a memorandum in respect of issues common to all Central Government Employees. We are in agreement with the views canvassed therein and endorse the same fully.

அலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்றால் சம்பளம் கட்: வெங்கையா நாயுடு ஆணை

நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று (28.07.2014) தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். காலை 9.10 மணிக்கு திடீரென ஆய்வில் ஈடுபட்டார். ஒவ்வொரு அறையாக சென்று ஒரு மணி நேரம் ஆய்வில் ஈடுபட்டார். அதில், 80 ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராததை கண்டுபிடித்தார். அவர்களின் பெயரைக் குறித்து கொண்டதுடன், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
 
 அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன அல்லது இருக்கையில் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து, அவர்களிடம் விளக்கம் கேட்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி : 6 சான்றிதழ் அனுப்ப கல்வி துறை உத்தரவு



வெளி மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறு வகை சான்றிதழ்களை அனுப்ப
வேண்டும்' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மதிப்பீடு :

ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்த தமிழக மாணவர்கள், அம்மாநிலங்கள் வழங்கிய சான்றிதழை, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்திடம் சமர்ப்பித்து, மதிப்பீடு செய்ய வேண்டும்.

இதன்பிறகே, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யவும், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வை எழுதவும் முடியும். இந்த வகையில், 2,000 பேர், தமிழக கல்வித் துறையிடம், மதிப்பீடு செய்ய காத்திருக்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.
'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது.இதற்கு,ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர்.

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் ஜெ. அறிவிப்பு!

காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
இன்று (28ஆம் தேதி) நடைபெற்ற காமன்வெல்த் 4வது நாள், விளையாட்டுப் போட்டியில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல்

Click here-Desk supdt working seniority list as on 15.03.2014

Click here-Desk supdt working seniority dir proc reg

100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.

வேலைவாய்ப்பு பதிவு மூலம் வேலை கொடுக்காததால் இந்த வருடம் 100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்ந்து எடுக்கப்படாததால் 100 சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இந்த ஆண்டு மூடப்பட்டன.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்

தமிழ்நாட்டில் 38 அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 42 அரசு உதவி பெறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. இவை தவிர சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சிநிறுவனங்கள் 454 இருந்தன. சமீபத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.அதில் 2 ஆயிரத்து 240 பேர் மட்டுமே சேர்ந்தனர். ஆனால் சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளில்மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. ஏராளமான பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடக்கவில்லை.

ஆசிரியர் பேரணி-JULY-20 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)

படிக்க இங்கே கிளிக் செய்யவும்

அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்



ஆசிரியர் பேரணி-JULY-05 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)

படிக்க இங்கே கிளிக் செய்யவும்

புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை!

சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள நிலப்பரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 44). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என 133 அதிகாரங்களில் 1330 குறள்களை இயற்றியுள்ளார்.
இதில் எக்காலத்திற்கும் பொருந்துவது போல் கருத்துக்களை கூறியுள்ளார். திருக்குறளை போல இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றார் போல் வீரபத்திரன் புதிய திருக்குறளை எழுதி உள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை

BRTEs JUDGEMENT COPY AGAINST BT APPOINTMENT - Click Here

ஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.




காமன்வெல்த் 4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ரம்ஜான்" திருநாள் வாழ்த்துச் செய்தி

PR [Press Note No : 145 ] Ramzan Greetings message of the Honble Chief Minister dated 28th July 2014 Click Here..

இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் கோரி உத்தரவு.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2014-15ம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் கோரி உத்தரவு.

MATRICULATION DIRECTOR - 25% RESERVATION FOR WEAKER SECTION STUDENTS, NOT IMPLEMENTED SCHOOLS LIST CALLED REG PROC CLICK HERE...

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு

பல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றி கணக்கெடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இலவச கல்வி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் 462 செயல்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 284 அரசு பள்ளிகளில், நகரப்பகுதியில் 140 பள்ளிகளும், கிராமப்புறத்தில் 127பள்ளிகளும் இயங்கி வருகின்றன

13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில்மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது

DSE - ZONAL WISE REVIEW MEETING - 70% LESS RESULTS IN PUBLIC EXAMS & CEO / DEO / DEEO / IMS / SUPERVISOR & AEEOs REVIEW MEETING REG PROC CLICK HERE...

தகுதியிருந்தும் பதவி உயர்வு பெற முடியாத ஐ.டி.ஐ. ஊழியர்கள்

சிறப்பு விதிகளில் இடம் பெறாத ஒரே காரணத்தால், தகுதியிருந்தும், பதவி உயர்வு பெற முடியாமல் ஐ.டி.ஐ., ஊழியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், மாணவர்களுக்கு தொழிற்கல்வி தரும் பணியில், 72 ஐ.டி.ஐ.,க்கள் செயல்படுகின்றன. அங்கு, பல துறைகளிலும், டிப்ளமோ முடித்தோர், இளநிலை பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர், பயிற்சி அலுவலர்களாக பணிபுரிகின்றனர்.

பாரதியார் பல்கலைக்கழக எம்.எட் நுழைவுத்தேர்வும்-சில சந்தேகங்களும்!!!

முதன் முதலாக இந்த ஆண்டுமுதல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை வழியில் எம்.எட் படிப்பு அறிமுகம் செய்துள்ளார்கள்.இதற்கான நுழைவுத்தேர்வு இன்று (27.07.2014) காலை 10:30முதல் 12:30மணிவரை தமிழகம் முழுவதும் சுமார் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.பி.எட் பாடதிட்டமான PSYCHOLOGY,INNOVATION, EVALUATION போன்ற பாடங்களில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டது.கேள்வித்தாள் சரியாக கேட்கப்பட்டது ஆனால் தேர்வெழுதிய ஒட்டு மொத்த ஆசிரியர்களின் சந்தேகம் என்னவென்றால்....

எதற்காக விடைகளை பென்சிலால் குறிக்க சொன்னார்கள்?பதிவு எண்ணை பேனாவால் குறிக்க சொன்னார்கள் ?
கேள்வித்தாள்களை எதற்காக விடைத்தாள்களுடன் சேர்த்து வாங்கிவிட்டார்கள் ?

இந்த குழப்பத்தில் தேர்வு எழுதிய ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர் -பதில் அளிக்குமா பல்கலைக்கழக நிர்வாகம்???

மத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்; கலைஞர்

முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத்திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள்
என எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பி.எட்., படிப்பிற்க்கு விண்ணப்பிக்க‌ 31‍ந் தேதி வரை காலஅவகாசம்: துணைவேந்தர் விஸ்வநாதன் அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முதல்முறையாக இந்த வருடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட்., கல்லூரிகளில் உள்ள பி.எட் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக கலந்தாய்வை நடத்த உள்ளது. இந்த கல்லூரிகளில் 300 இருக்கின்றன. இந்த இடங்களில் சேர ஆன்லைன் மூலம் பட்டதாரிகள் வருகிறார்கள். இன்றுடன் (திங்கட்கிழமை) விண்ணப்பிக்கும் தேதி முடிவடைவதாக இருந்தது.

இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.சமூக, பொருளாதார பிரச்னையால், பள்ளி படிப்பை, மாணவர்கள் பாதியில் கைவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, 2011 - 12ல் இருந்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச்சாட்டு


தகுதித்தேர்வு எழுதிய இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனம் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால், ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஆசிரியர் நியமன எண்ணிக்கையை

வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர். இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.
அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.

ஐந்தாம் வகுப்பு தமிழ்=எனக்கு இறக்கைகள் முளைத்தால் =உரைநடைப்பாடம் வீடியோ வடிவில்

 

click here to down load 

you tube link


எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 கடைசி நாள்.



திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து



இன்று அனைவரின் கைகளிலும், ஆறா விரலாய் செல்போன் ஒட்டி உறவாடுகிறது.

இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னென்னவென்று கீழே பாருங்க..!


தலைவலி

செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.

சோர்வு

மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளையில் உள்ள செல்களை பாதித்து, விரைவிலேயே சோர்வை உண்டாக்கிவிடும். இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.

மக்கள் கருத்தை அறிய புதிய இணையதளம் "மை கவ்'

CLICK HERE "MYGOV" PM'S NEW WEBSITE

அரசு நிர்வாகத்தில் நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் "மை கவ்' (ம்ஹ்ஞ்ர்ஸ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) என்ற புதிய இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 60 நாள்கள் நிறைவடைந்துள்ள தினத்தில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Thiruvalluvar university may 2014 examination result Released


Thiruvalluvar university may2014 examination result click here...

பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு 28ல் துவக்கம் - தினமலர்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு, நாளை துவங்குகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு இடைத் தேர்வுகளும், பொது வினாத்தாளை கொண்டு நடத்தப்படுகிறது. 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளி அளவில், வினாத்தாள் தயாரித்து வைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரே தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுகிறது. இதில், பிளஸ் 2 வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு, நாளை துவங்குகிறது. காலை இயற்பியல், பொருளியல், தட்டச்சு மற்றும் கணினி இயக்கம் ஆகிய தேர்வுகளும், மதியம் தமிழ் தேர்வும் நடத்தப்படுகிறது

ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை!



வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.

web stats

web stats