தமிழகத்தில், சமச்சீர் கல்விச் சட்டம் அமலுக்கு வந்தாலும், ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குனரகங்களால், பள்ளிகள் ஒழுங்கின்றி செயல்படுகின்றன. எனவே, ஒரே இயக்குனரகம் கொண்டு வர வேண்டும் என, தனியார் பள்ளி அதிபர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை:
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. 2011 வரை, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, பல பாடத்திட்டங்கள் இருந்தன. 2011ல் சமச்சீர் கல்வி அமலானதும், ஒரே பாடத்திட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், பள்ளிகளின் இயக்குனரகங்கள் மட்டும் இன்னும் கலைக்கப்படவில்லை. அதனால், மெட்ரிக், நர்சரி மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் எனத் தனித் தனியாக இயங்குகின்றன.
மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்குகின்றனர்; படிக்காத மாணவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என, அடிக்கடி புகார் எழுந்தாலும், பள்ளிக்கல்வி அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை. மாறாக, மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளும் அப்பள்ளிகளை கண்டிப்பதோ, நடவடிக்கை எடுப்பதோ இல்லை.
இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
சமச்சீர் கல்வி திட்டம் வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மெட்ரிக், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் இயக்குனரகங்கள் கலைக்கப்பட்டு, பொது கல்வி வாரியம் அமைத்து இருக்க வேண்டும். ஆனால், இதுவரை பழைய வாரியங்களை கலைக்கவில்லை.
ஏற்றத்தாழ்வான நிலை:
அதனால், பள்ளிகளின் பெயரில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், அரசு பள்ளி என, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வான நிலை உள்ளது. மேலும், கல்வி உரிமை சட்டத்தை தனியார் பள்ளிகளில்