rp

Blogging Tips 2017

Service tax will be charged @ 14.50% with effect from 15/11/15.

உ.பி., பள்ளிகளில் 2000 போலி ஆசிரியர்கள்

உத்திர பிரதேசத்தில் ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் 2000 ஆசிரியர்கள், போலி ஆசிரியர் சான்றிதழ் (பி.எட்.,) வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் போலி சான்றிதழ் அளித்து ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் நவம்பர் 24 முதல் செல்லாது: மண்டல அலுவலகம் அறிவிப்பு

கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்கள்) நவம்பர் 24-ஆம் தேதி முதல் செல்லாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:"கையால் எழுதப்பட்ட கடவுச் சீட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். 

'டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள, 'டிஸ்லெக்சியா' மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.தமிழகத்தில், தமிழ் வழியில் படிக்கும், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 10 முதல், 15 சதவீதம்பேருக்கு, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் குறைபாடு உள்ளது. 
இந்த மாணவர்கள் அறிவிலும், உடல் நலனிலும் மற்ற மாணவர்களை விட, நல்ல முறையில் இருந்தாலும், பாடங்களை புரிந்து படித்தல், மனப்பாடம் செய்தல் போன்றவற்றில் திணறுகின்றனர்.

கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: ரகுராம் ராஜன்

கல்விக்கடன் வழங்குவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஆன்லைன் வர்த்தகம் உலக சந்தையை உள்ளூர் சந்தையுடன் இணைப்பதாகக் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிஅவர் மேலும் பேசியதாவது:

மாணவர்கள் வறுமை காரணமாக தங்களுடைய படிப்பை இடையில் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் 14 விதமான விலையில்லாப் பொருள்களை வழங்கி மாணவர்கள் கல்வியைத் தொடர வ

தொடக்கக் கல்வி-அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவர்கள் - ஆதார் அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் அமைத்தல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு...


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலசெயற்குழு கூட்ட அழைப்பு

பள்ளிக்கல்வி - த.அ.உ.ச 2005 - தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) கடைபிடித்தல் சார்பான உத்தரவு

புதிய கல்விக் கொள்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்: பேராசிரியர் ராமானுஜம்

மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று, கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், கல்வியாளருமான ஆர்.ராமானுஜம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுப் பள்ளிக்கான மாநில
மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் "உயர் கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய கல்விக் கொள்கை குறித்து கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும்,

பொறியியல் மாணவியர்க்கு உதவித்தொகை அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில், பி.இ., பி.டெக்., மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவியர், 4,000 பேருக்கு, மத்திய அரசின், பிரகதி திட்டத்தில், உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல், இப்படிப்புகளில் சேர்ந்துள்ள மாற்றுத் திறனாளி
மாணவர்கள், 1,000 பேருக்கு, சாக் ஷம் என்ற திட்டத்தில், உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு

ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை ஆரப்பாளையம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் தினகரன் (50). நகைத்தொழில் செய்து வருகிறார். இவரிடம், ஐராவதநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பால்சாமி (72) என்பவர், நகை செய்வதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார்.

தவறான உணவுப் பழக்கம்: இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு காரணம்!!!

தவறான உணவுப் பழக்கங்களாலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 8 நகரங்களில் உள்ள 4000 சர்க்கரை நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

உணவு, மசாலா மற்றும் சர்க்கரை என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியர்கள் உட்கொள்ளும் சாதம், மாவுப் பொருட்கள் அல்லது உப்புமா என அனைத்து உணவுப் பொருட்களிலும் கார்போஹட்ரேட்களே அதிகம் நிறைந்துள்ளது, அதிக கலோரிகளை

மாணவர்களுக்கு காய்ச்சலா? தகவல் தெரிவிக்கதலைமையாசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

        தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளால், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் அறிகுறியுடன் சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், தொற்று கிருமிகளால், டெங்கு,

ந.க.எண்:28551 நாள்:5/11/15 தொடக்கக் கல்வி இயக்குனரின் பட்டாசு விழிப்புணர்வு கடிதம்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாகூர் நியமனம்.

WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள்.

WhatsApp Messenger அவ்வப்போது பல புதுமைகளைசெய்து வருகிறது. இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம்பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.
           சில தினங்கள் முன் வாட்ஸ்ஆப் தனது புதிய பதிப்பை வெளியீட்டு உள்ளது. இதில் இரண்டு சிறப்பு வசதிகளை வாட்ஸ்ஆப் புகுத்தி உள்ளது. உங்களுக்கு இது பெரிதும் வசதியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த பதிவில் புதிய வசதிகளை தெரிந்துக்கொள்வதோடு புதிய WhatsApp 2.12.342 பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் உத்திரவின்படி தீபாவளி -கொரிவிரதம் 11-11-2015 அன்றும் 25-11-2015 கார்த்திகை தீபம் அன்றும் நமது வட்டாரத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஈடுசெய்யும் விடுமுறை விடப்படுகிறது... இதனை 21-11-2015, 28-11-2015 ஆகிய சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும்


கணித திறனறித் தேர்வில் 18-க்குள் மாணவர்கள் பங்கேற்கலாம் ...

ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்காத்தால் பள்ளியை புறக்கணித்து மாடு மேய்க்கச் சென்ற மாணவர்கள்!!

ஓசூர் அடுத்த சூளகிரி அடுத்த கீழ்முரசுபட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த, 2005ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, கீழ்முரசுபட்டி, மேல்முரசுபட்டி, கும்மனூர், ஓசஹள்ளி உட்பட, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 152 மாணவ, 
மாணவியர் படித்து வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில், ஆரம்ப காலத்தில் இருந்தே ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையுள்ள

மாணவர்களின் தன்மைக்கேற்ற கற்பித்தல் அவசியம்

மாணவர்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் இரா. திருவளர்செல்வி.

கும்பகோணத்தில் தொடக்கக் கல்வி துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கும்பகோணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:

கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விரிவாக்கம்!!!

ABBREVIATIONS

ABL   : Activity Based Learning
ADEPTS  : Advancement of Education performance through teachers support
ALM   : Active Learning Methodology
APO   : Assistant Programme
Officer
AEEO   : Assistant Elementary Educational Officer
AAEEO  : Additional Assistant Elementary Educational Officer
AIE   : Alternative & Innovative Education
AR   : Attendance Rate
AWP&B  ( Annual Work Plan & Budget)

இந்திய அரசியல் அமைப்பின் பகுதிகள்!!!

பகுதிகள் மற்றும் உறுப்புகள்
( Parts & Articles)

பகுதி I - இந்திய அரசின் எல்லைப் பகுதிகள் (உறுப்பு 1 - 4).

பகுதி II - இந்திய குடியுரிமை (உறுப்பு 5 - 11).

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தங்க டெபாசிட் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்துகிறார் பிரதமர் மோடி

அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்த உள்ளார்.
இது தவிர தங்க டெபாசிட் திட்டம் மற்றும் தங்கப் பத்திரத் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் பிரதமர் அறிமுகப்படுத்துவார் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'

மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள், பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்

பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.இந்த முறைப்படி, பி.எட்., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமின்றி, சி.சி.இ., முறையில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது

கனமழை காரணமாக, அரியலுார் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05-11-15) விடுமுறை

அரியலுார் : கனமழை காரணமாக, அரியலுார் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05-11-15) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளில், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'ஓவர்?'

வரும், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, பொது உத்தரவு துறை வெளியிடுவதற்கு முன்பே, பல தனியார் கல்வி நிறுவனங்கள் முடித்து விட்டதாக அறிவித்துள்ளன. இது, பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக, கல்வி நிறுவனங்களில் கல்வி உரிமை சட்டத்தின் - ஆர்.டி.ஐ., கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டவுடன், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த உத்தரவை, பொது உத்தரவு துறை - டி.பி.ஐ., டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடும். அதன் பின்னரே மாணவர் சேர்க்கை துவக்கப்படும்.

நவ. 8-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு 1.50 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

தமிழகம் முழுவதும் 387 தேர்வு மையங்களில் நடைபெறும் தேசிய திறனாய்வுத் தேர்வை (என்.டி.எஸ்.இ.) 1.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்தத் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை(நவ.8) 
நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்குவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக மாநில அளவிலும், அடுத்த கட்டமாக அகில இந்திய அளவிலும் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா கோழி இறைச்சி?

கோழி வளர்ப்புப் பண்ணைகளில் கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்க அளவுக்கு அதிகமாக முறையற்ற விதங்களில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுப்பது பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புதுடெல்லியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த எச்சரிக்கை விடுத்தனர். அதாவது அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கோழிகளுக்கு நோய் தடுப்பிற்காக கொடுக்கப்படுவதால், கோழி இறைச்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு இருக்கும் இயலான நோய் எதிர்ப்புச் சக்தி குறைய சாத்தியமிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மழைக்காலம் முடியும் வரை விடுமுறை கிடையாது: அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 'திடீர்' உத்தரவு

மழைக்காலம் முடியும் வரை அரசு மருத்துவர்களுக்கு தேவையின்றி விடுமுறை வழங்கக்கூடாது என மருத்துவ நலப் பணிகள் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பருவம் தவறி பெய்வதால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பெரியவர்கள், குழந்தைகளுக்கு மர்மக் காய் ச்ச்சல், மூளைக்காய்ச்சல், வாந்திபேதி, டைபாய்டு, சளி, டெங்கு மற்றும் பிற காய்ச்சல்கள்

தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு-15-11 -2015 அன்று சேலம் -தாரமங்கலத்தில் நடைபெறும்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகரில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு நடைபெற உள்ளது
நாள்-15/11/2015
நேரம் காலை -10 மணி
இடம்-தாரமங்கலம், சன்னதிதெரு துவக்கப்பள்ளி
பஸ்நிலையம் அருகில் ,டவுன் போலீஸ் நிலையம் அடுத்த சன்னதிதெரு தொடக்கப்பள்ளி

  • மாவட்டச்செயலர் அனைவரும் வட்டாரப்பொறுப்பாளர்களுடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • நவம்பர் 20 உதவிதொடக்ககல்வி அலுவலகம் முன்பு நடைபெறும்  ஆர்பாட்ட்டத்திரற்கான சுவரொட்டி வழங்கப்படும்
  • பேரணி சந்தாக்கள், 2015 ஆண்டு உறுப்பினர் சந்தா ஆகியன கொண்டுவந்து செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
  • முறையான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது
சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பரில், தடையை மீறி மறியல் மற்றும் சிறை செல்லும் போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ கூட்டு நடவடிக்கை குழுவின், உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க,

ஆசிரியர்களை கேவலமாக சித்தரிக்கும் பள்ளிக்கூடம் போகாமலே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்

ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம் போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் 10 மாதங்களுக்கு மட்டும் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்

பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கி வந்தனர்.

பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் 2015-16-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிதது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தீபாவளிக்கு முதல் நாள் நவ., 9ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம் - ஓர் பார்வை

இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம்

ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.

ஜோக்டோ கூட்ட மாநில பொதுக்குழு முடிவுகள்

அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் ஆதார் எடுப்பதற்கான படிவம்....

தொடக்கக்கல்வி - அசோக சக்ரா விருதுகள் - வீரதீர செயல்கள் புரிந்த மாணவர்/ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்.


டெங்கு' காய்ச்சலால் இறப்புகள் தொடரும் நிலையில், சித்தா மருத்துவர்களுடன் ஆலோசித்த தமிழக அரசு, ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யும், 'ஆடாதொடை மணப்பாகு' என்ற, கசப்பில்லா கஷாயத்தை, அரசு மருத்துவமனைகளில் வழங்க முடிவு செய்துள்ளது;

டெங்கு' காய்ச்சலால் இறப்புகள் தொடரும் நிலையில், சித்தா மருத்துவர்களுடன் ஆலோசித்த தமிழக அரசு, ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யும், 'ஆடாதொடை மணப்பாகு' என்ற, கசப்பில்லா கஷாயத்தை, அரசு மருத்துவமனைகளில் வழங்க முடிவு செய்துள்ளது; ஓரிரு நாளில், புதிய கஷாயத்தின் வினியோகம் துவங்கும்.தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல், ஜன., 15 வரை, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. நன்னீரில் உருவாகும், 'ஏடிஸ்' வகை கொசுக்களே இதற்கு காரணம். 2012ல் டெங்கு பாதிப்பால், 66 பேர் இறந்தனர்.

சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பரில், தடையை மீறி மறியல் மற்றும் சிறை செல்லும் போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ கூட்டு நடவடிக்கை குழுவின், உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க,

கருவூலத்துறை ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்

தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள், 3,000 பேரின், ஒருநாள் சம்பளத்தை, தமிழக அரசு பிடித்தம் செய்துள்ளது. 
சென்னை, பனகல் மாளிகை, கருவூல கணக்குத்துறை தலைமையகத்தில், அக்., 1ல் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அதிகாரி மூர்த்தி, மயங்கி விழுந்து இறந்தார். இதற்கு, 'இயக்குனர் முனியநாதன் கொடுத்த,

பி.எட்., கல்லூரிகளில் போலி முதல்வர்கள்?ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிர்ச்சி

தமிழகத்தில் செயல்படும், பல பி.எட்., கல்லுாரிகளில் முதல்வர்களே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 பி.எட்., கல்லுாரிகளும், 600 சுயநிதி கல்லுாரிகளும் செயல்படுகின்றன.
இந்தக் கல்லுாரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர் நியமனங்களுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளனரா என, ஆய்வு செய்த பின், இந்த அங்கீகாரம் வழங்கப்படும்.

ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சி வழங்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், கற்றல், கற்பித்தலை எளிதாக்கும் வகையிலும், ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு திறம்படக் கொண்டு செல்லும் நோக்கத்திலும், இணையத்தைப் பயன்படுத்தி கற்பித்தலை எளிமையாக்கவும், இணையத்தில் தமிழ் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழங்கப்பட்ட இந்த பயிற்சி முகாம், நல்லானூர் ஜெயம் கல்லூரியில் அக்.28-ஆம் தேதி தொடங்கி அக்.30 வரை மூன்று நாள்கள் நடைபெற்றன.

மழை வழிபாடு நடத்த உத்தரவு: பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

அனைத்து பள்ளிகளிலும், காலையில் நடக்கும் பிரேயர் கூட்டத்தில், மழை வேண்டி வழிபாடு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும், ஒரு கோடியே, 11 லட்சம் மாணவ, மாணவியரும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர். 

இன்ஸ்பையர்' விருது போட்டி அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், 'இன்ஸ்பையர்' விருது; ஜவஹர்லால் நேரு தேசிய விருது ஆகியவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக, இயக்குனர் அலுவலகம் மூலம், சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கு அறிவிப்பு- ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக் கப்பட்டு வந்தனர். ஆரம்பத்தில் மாவட்ட அளவிலான பதிவுமூப்பும் அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டது.

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுமா?-

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கு ஜனவரி முதல் நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் குரூப்-பி சார்நிலைப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்படுமா? என்று போட்டித்தேர்வுக்குப் படித்து வரும் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
தேவையில்லாத சிபாரிசுக்கும், ஊழலுக்கும் வழிவகுப்பதாகக் கூறி மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 2016ஜனவரி முதல் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு பணிகளில் உதவியாளர், வருமானவரி ஆய்வாளர், கஸ்டம்ஸ் மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் ஆய்வாளர்

உதவித்தொகைக்கு வருமான வரம்பு நீக்கம்

அரசு பள்ளி எம்.பி.சி., மாணவியர் பயன்தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் எம்.பி.சி., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியருக்கு, ஆண்டுக்கு, 1,000 ரூபாய் வீதம், ஆறாம் வகுப்பிலிருந்து, உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிஎச்.டி., படிக்க தகுதித்தேர்வு


மத்திய கல்வி நிறுவனங்களில், இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில், பிஎச்.டி., படிப்பில் சேர்வதற்கான, 'ஜெஸ்ட்' தேசியத் தகுதித் தேர்வை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னையிலுள்ள, இந்திய கணித அறிவியல் கல்வி நிறுவனம் உட்பட, நாட்டிலுள்ள, 20 உயர் கல்வி அறிவியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில் இயற்பியல், கணிதம், நியூரோ சயின்ஸ் பிரிவுகளில், பிஎச்.டி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்: பட்டதாரிகள் ஓட்டம்

கே.வி., எனப்படும், 'கேந்திரிய வித்யாலயா' மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்ற, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டாததால், இதற்கான தகுதித் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. மத்திய அரசின், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
'சிடெட்' தேர்வு:

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மாநில அளவில், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை நடத்துகின்றன. மத்திய அரசின் சார்பில், மத்திய

Holidays 2016 Analysed

Let's see the highlights of 2016

A. March
05/03- Saturday
06/03-Sunday
07/03- Maha Shivratri
25/03-Good Friday
26/03- Saturday
27/03-Sunday

அரசு பள்ளிகளில் போலி வருகை பதிவேடு

ஜவ்வாதுமலையில் உள்ள அரசு பள்ளிகளில், போலி வருகைப்பதிவேடுகளை பராமரித்து வந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். திடீர் ஆய்வுதி.மலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை, கல்வியில் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசு தொடக்கப் பள்ளிகள், 60, மற்றும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 24 உறைவிட நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன
உறைவிடப் பள்ளிகளில், 1,909 மாணவர்களும், ஆரம்பப் பள்ளிகளில், 3,465 மாணவர்களும் உள்ளதாக, வருகைப்பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட அலுவலர்கள், 84 பள்ளிகளிலும், இரு நாட்களாக திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பங்களிப்பு தொகை - ஓய்வு பெற்றோர் & இறந்தவருக்கு இறுதி தொகை அளிக்க இதுவரை அரசாணை இல்லை - RTI பதில்

மழலையர் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை வெளியிட உத்தரவு

தமிழகத்தில், அனுமதியின்றி, 700 மழலையர் பள்ளிகள் இயங்குவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது

பள்ளிக்கல்வி - அனைத்து வகை பள்ளிகளிலும் காலை வழிபாட்டில் மழைவேண்டி பிரார்த்தனை செய்யவேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்

பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை

'பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை

பள்ளி, கல்லுாரிகளில், 'பிளாஸ்டிக்' தேசியக் கொடியை பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.பள்ளி, கல்லுாரி விழாக்களில், பலவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன; விழா முடிந்ததும் வெளியே வீசப்படுகின்றன. இவற்றில், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி மக்கிப் போகாமல், அப்படியே கிடப்பதால், அவமரியாதை செய்யப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதை தவிர்க்க, தமிழகத்தில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான, பொதுத்துறை முதன்மைச் செயலர் ஜதீந்திரநாத் ஸ்வைனின் உத்தரவு, பள்ளி, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப் பட்டுள்ளது

ஓய்வூதியம் என்பது சலுகையா?

இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.

பகுதிநேர ஆசிரியர்கள் கடந்து வந்த பாதை இதுவரை

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாணை 177ன்படி SSA மூலம் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரைநாட்கள்

இந்த வார வல்லமையாளர்!

வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும்,

web stats

web stats