rp

Blogging Tips 2017

அரசு விடுமுறை அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிகள் செயல் பட்டால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - கடலூர் முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை

தொடக்கக்கல்வி - பள்ளிகளில் DEC 07 "கொடிநாள்" கொண்டாடுதல் - இயக்குனர் செயல்முறைகள்


சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்

சென்னை மாநகர பேருந்துகளில் வரும் 8 ஆம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும்,

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்துகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், என். கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு வேறொரு மனு மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது. அந்த வழக்கில் ஆஜரான வழக்குரைஞர்கள் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும் எனக் கோரினர்.

உடனடி உதவிகளைச் செய்வீர்!

 கடலூர் கடலூர்ன்னு மொத்தமாகச் சொல்லிவிடுறோம். கடலூர் நகரத்தைக் கடந்தும் அதனைச் சுற்றியுள்ள 80 மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

கடலூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் இவை :

மேலகுப்பம் ,
நல்லாத்தூர்
தூக்கணாம்பாக்கம் ,
தென்னம்பாக்கம்
செல்லஞ்சேரி ,
கீழ்குமாரமங்கலம்
ஒடலப்பட்டு,
புதுக்கடை
வடபுரம் கீழ்பாதி,
கிளிஞ்சிகுப்பம்
சிங்காரகுடி
மதலம்பட்டு
கீழ்அழிஞ்சிபட்டு

திரு தருண் விஜய் எம்.பிதனது எம்.பி நிதியிலிருந்துசென்னை வெள்ளநிவாரண நிதிக்கு ரூபாய்5000000 ஐம்பது லட்சம் வழங்கி உள்ளார்

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுத்த சட்டமன்ற நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்களே மேயர்களே சேர்மன்களே தமிழக மக்களுக்கு உயிரை கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு கஷ்டம் துன்பம் என்று வரும்போது வேடிக்கை பார்ப்போர் மத்தியிலே

தனது எம்.பி நிதியிலிருந்துசென்னை வெள்ளநிவாரண நிதிக்கு ரூபாய்5000000 ஐம்பது லட்சம் வழங்கி உள்ளார் திரு தருண் விஜய் எம்.பி பாரதிய ஜனதா கட்சி பாராட்டுவோம்  இவர் தமிழின்பால் தமிழர்களின் மேல் காட்டும் அன்பே போற்றத்தக்கது

பொது விடுமுறை நாட்கள் 2016

வரும், 2016ம் ஆண்டுக்கு, 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அவற்றின் விபரம்:

சென்னை விமானநிலையம் நாளைமுதல் இயங்கும்

கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
இதனிடையே, தற்போது சென்னையில் இயல்புநிலை திரும்ப துவங்கியுள்ளதால், விமான நிலையம் நாளை ( 05ம் தேதி) முதல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி-காசோலை,வரைவோலை மற்றும்ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

தமிழகத்தில் டிசம்பர் 11 வரை சுங்கக் கட்டணம் கிடையாது: நிதின் கட்கரி உத்தரவு

வெள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

3 மாவட்டங்களுக்கு இலவச அரசு பஸ் : தமிழக அரசு உத்தரவு

முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்த உத்தரவில், கனமழை காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அரசு பஸ்களில் பயணிப்பபோர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , ஆகிய மாவட்டங்கள் வரை செல்ல இலவசமாக இயக்கப்படும்,

வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு

வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நவ., 7 முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆற்று ஓரங்களில் இருந்த வீடு, தொழிற்சாலைகளில், தண்ணீர் உட்புகுந்துள்ளது. சாலைகளில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கின.


இதையடுத்து, வாகனம், வீடு உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் செய்த பாலிசிதாரர்கள், இழப்பீடு கோரி அதிகளவில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர்.

தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளானார்கள். வீடுகளில் முடங்கிய அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஏ.டி.எம்.,களுக்கு சென்று பணம் எடுக்கலாம் என சென்ற போது அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக ஏ.டி.எம்., மையம்களும் தண்ணீரில் மூழ்கின. பணம் எடுக்க முடியவில்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்ட மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திணறினர்.
இந்நிலையில், டில்லியில் பொது மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கனமழை காரணமாக சேதமடைந்த ஏ.டி.எம்.களை சரிசெய்யவும், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பவும், பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நடமாடும் ஏ.டி.எம்.,களை அமைக்க வேண்டும். வங்கிகளின் வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

நாளை (05/12/2015) குறுவள மைய பயிற்சி (PRIMARY CRC) தேதியில் மாற்றமில்லை


கனமழை காரணமாக அரசு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் 5.12.2015-க்கு பதிலாக 19.12.2015-ல் Primary CRC மாற்றியமைக்கப் பட்டுள்ளது...
மற்ற மாவட்டங்களில் நாளை (5.12.2015) திட்டமிட்டபடி Primary CRC நடைபெறும்...
In AEEO-Office Block level-Teacher's Grievance day-வும்நடைபெறும்..

ஆசிரியர் பதவியும்,கல்வித் தகுதிக்கு ஏற்ப, பெற தகுதிவாய்ந்த ஊக்க ஊதியமும் தொடர்புடைய அரசாணைகளும்.

பள்ளிக்கல்வி - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அருகில் உள்ள அஞ்சலகங்களில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் - உயர்திரு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபிதா அவர்களின் செயல்முறைகள்

அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015

Thiruvallur DEEO Proceedings Regarding Saturday working Days

இடைநிலை ஆசிரியர்கள் -3 ஆவது ஊக்க ஊதியம் தொடர்பாக இயக்குனரின் தெளிவுரை

ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோநிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.

”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரின் பதில்


23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது.

அத்தலையங்கத்திற்கு பதில் :
தமிழகத்தில் தொண்ணுற்று ஐந்து ஆண்டு காலம் பாரம்பரியமிக்கதும்,தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருவதும்,தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதும்,தமிழக அரசு அலுவலர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தினை தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன்.

web stats

web stats