கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது.
கலை, அறிவியல் படிப்புகள்
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கலை அறிவியல் படிப்பில் சேரும் வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது.
கலை அறிவியல் படிப்பிற்கு அடுத்தபடியாக என்ஜினீயரிங் பட்டப்படிப்பிலும், பாலிடெக்னிக் படிப்பிலும்தான் அதிகம் பேர் சேர்கிறார்கள். குறிப்பாக பாலிடெக்னிக் படிப்பில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற உடன்தான் அதிக மாணவர்கள் சேர்கிறார்கள். பிளஸ்-2 முடித்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் சேர்கிறார்கள்.
எம்.பி.பி.எஸ்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம், நர்சிங், பிஸியோதெரபி, மருந்தாளுனர் படிப்பு, வேளாண்மை ஆகிய படிப்புகளில் குறைந்த மாணவர்களே சேர்கிறார்கள். மருத்துவப்படிப்பில் மட்டும் அதிகம் பேர் சேர விரும்புகிறார்கள். ஆனால் மருத்துவப்படிப்பில் சேர குறைந்த இடங்களே உள்ளன.
பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து இருக்கிறார்.