Saturday, 26 April 2014

தேர்தல் பணி என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தேர்தல் ஆணையத்திடம் நேரில் புகாரளிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு-பொதுச்செயலர் செ.முத்துசாமி

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கவனத்திற்கு,
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் பட்ட பாடு சொல்லி மாள முடியாததாக அமைந்தது.
1. பயிற்சி என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டோம்.
2.பயிற்சி மையங்கள் 2 மற்ரும் 3 கட்டத்திற்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டோம்
3.முழு நேர வகுப்பு என்பதை முன்னரே தெளிவாக அறிவிக்காமல் பயிற்சிக்கு சென்ற பின்னே அறிவிக்கப்பட்டதால் மதிய உணவு கிடைக்காமல் அவதி
4. காலை 11 மணிக்கு வகுப்பு ஆரப்மிக்கப்பட்டாலும் இரண்டு வேளைக்கும் சேர்த்து மாலை 4 மணிக்கே கையொப்பம் பெற்ற கொடுமை
5. தேர்தல் பணிக்கு முந்தைய நாள் பணி ஆணை கிடைக்கப்பட்ட பின் சரியான வாகன வசசி இன்மையால் அலைக்கழிக்கப்பட்ட பின்பே வாக்கு சாவடிக்கு சென்ற கொடுமை.

6. பணிசெய்யுமிடத்தில்ல், பயிற்சி நடைபெற்ற இடத்தில் அடிப்படை வசதிகள்,  இயற்கை உபாதைக்கழிப்பிட வசதிகள் செய்து தராமை
7. பயிற்சியின் போது டீ,பிஸ்கட் வழங்காமல் கணக்கு காட்டிய கொடுமை
8. வாக்குபதிவு நாளன்று உணவுக்கு கூட வழியின்றி பட்டினியோடு பணியாற்றிய கொடுமை
  மொத்தத்தில் ஆசிரியர்களை படித்த அடிமைகள் போன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள்(தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள்)
நடதிய கொடுமையை தேர்தல் ஆணையத்தின் ஆணையாளர் ஹிரு பிரவீன் குமார் அவர்களிடம் நேரில் புகாரளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழ்நாடு ஆசிரியர் க்கூட்டணி சார்பில் மாநில த்துணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித் நமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களிடம் வேண்டினார். அவரும் அது சார்பாக மே முதல் வாரத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முறையிட  ஒப்புக்கொண்டுள்ளார்.
எனவே தேர்தல் பணியில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை உடன் புகாராக அனுப்பினால் சந்திப்பின் போது வழங்க ஏதுவாக இருக்கும்.
எனவே தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தேர்தல் அவசரம் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்படும் முன் முயற்சிக்கு தங்கள் கருத்துகளை கீழ்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ,அல்லது பொதுச்செயலர் முகவரிக்கு கடிதம் வாயிலாகவோ தெரிவிக்கவும் .
மின்னஞ்சல் முகவரி
 
அன்புடன்
கே.பிரக்‌ஷித்

மாநில துணைத்தலைவர்

1 comment:

  1. N.SUNDRAMURTHY26 April 2014 19:38

    mudivu varum varai thodar nadavadikkai thevai.

    ReplyDelete

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats