rp

Blogging Tips 2017

மார்ச் இறுதிக்குள் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை உத்தரவு

மார்ச் இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடிப்படைக் கல்வியின் தரம் அறிய தேர்வு: எஸ்.எஸ்.ஏ., ஏற்பாடு

அரசு பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் வாசிப்புத் திறன், அடிப்படை கணித அறிவு தரமறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்விற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு 3,5,8ம் வகுப்பில் இருந்து தலா 10 பள்ளிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த 30 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களிடமிருந்து ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வி தரத்தை பரிசோதிக்கும் விதமாக தமிழ், ஆங்கில பாடத்தில் வாசிப்பு, அடிப்படை கணிதத்தை அறிய அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வை நடத்தி சர்வே எடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

அரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்


வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி கல்வித்துறையின் மீளாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுகல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறை கல்வி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு சார்பான வழக்கு ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முதுகலை பட்டதாரி / ஆசிரியர் தகுதித்தேர்வு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் (WRIT PETITIONS RELATING TO AWARD THE MARK AND PERMIT THE PETITIONER'S PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION FOR THE POST OF P.G.ASSISTANT / B.T.ASSISTANT /GRADUATE ASSISTANT / SECONDARY GRADE TEACHER -  YEAR 2013 ) அனைத்தும் 03.01 2013 அன்று விசாரணைக்கு வந்தன.

கல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழகம்

ல்வித் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச வினா-விடைப் புத்தகம் வழங்கும் விழா மற்றும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம், திருப்பூர் மாவட்டம், உடுமலை ஜி.வி.ஜி. கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி களில் நியமனம் செய்த 17701 ஆசிரியர் / ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களுக்கான ஊதியத்திற்கு மூன்று மாத காலத்திற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு.

DSE - PAY CONTINUATION ORDER FROM JAN'14 TO MAR'14 FOR 17701 TEACHING & NON-TEACHING POSTS SANCTIONED AS PER GO (MS) NO.150 / 127 / 325 / 137 / 230 / 149 / 411 / 58 / 63 / 143 / 361 REG ORDER CLICK HERE....

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை 1.12.2013 அன்றைய நிலவரப்படி பணி மூப்பு பட்டியலை தயாரித்து நிரப்பிக்கொள்ள அனுமதியளித்து உத்தரவு

DSE - RMSA 544 LAB ASST POSTs TO BE FILLED THROUGH PROMOTION AS PER PANEL 1.12.2013 REG PROC CLICK HERE... 

ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடிவு 6-ம் தேதி வெளியாகிறது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற6-ம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. அன்றைய நாளிலேயே
மதிப்பெண்சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் முதல்,இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும்,தனித்தேர்வர்களுக்கும் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜீன்-2013ல் நடைபெற்றது

முதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களின் உத்தேச பெயர் பட்டியல் (கோர்ட் விதிமுறைகளின் படி) TRB வெளியீடு

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Tamil Subject Tentative Provisional Selection List After Certificate Verification

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Tamil Subject Tentative Provisional Selection List After Certificate Verification PDF

ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி

ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி அளித்துள்ளது.


வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.

5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் ஆங்கிலப் பாடநூலில் முதல் பாடத்தில் விடுபட்டுள்ள பத்தியை இணைத்து திருத்தம் மேற்கொள்ளு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு

click here to download the scert proceeding of corrections to be made in 5th std 3rd Term English Book

அரசு/ நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் - பொதுமாறுதலில் மாறுதலாணை பெற்று விடுவிக்கப்படாமல் உள்ளவர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

click here to download the dse proceeding of non-relieved BT Asst. Reg

ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மாநில கணக்காயரிடம் உள்ள கணக்குகள் அனைத்தும் 01.01.2014 முதல் ஆணையாளர், மாநில தகவல் மையத்திடம் ஒப்படைக்க உத்தரவு.

  click here to download the GO of Pension – Contributory Pension Scheme - Maintenance of Accounts - Revised Orders - Issued

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வு துவக்கம்



ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று, அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில்,

2 தேர்வுகளில் வென்று சாதனை நெல்லை சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டனில் படிக்க தேர்வு

நெல்லை சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். இரண்டாமாண்டு படிப்பவர் சுப்புலட்சுமி. இவரது சொந்த ஊர் சேரன்மகாதேவி அருகேயுள்ள காருகுறிச்சி. இவரது தந்தை முப்பிடாதி அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முழுவதையும் இலவசமாகப் படித்து தேர்வு எழுதுவதற்காக சிறப்பு தகுதி தேர்வு நடந்தது.

அண்ணாமலை பல்கலையில்உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'


அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தபடி, முனைவர் பட்டப்படிப்பு படித்து, அதற்கான கட்டண நிலுவையைச் செலுத்தாததால், 286 உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 3,020 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


2008 - 09ம் ஆண்டில், பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்கள், முனைவர் (பிஎச்.டி.,) பட்ட ஆய்வை, அதே பல்கலைக் கழகத்தில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு, முனைவர் பட்ட கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.இவர்கள், முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு, அடுத்த ஆண்டுக்கான கட்டணம் செலுத்துவது இல்லை.முனைவர் பட்டத்திற்கான, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போது, முழு கட்டணத்தையும் செலுத்தி, பட்டத்தை பெற்றுக் கொள்வது என, ஏற்கனவே இருந்த நிர்வாகம் கடைபிடித்து வந்தது.


இதனால், முனைவர் பட்ட ஆய்வு செய்யும் உதவி பேராசிரியர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில், 4.5 கோடி ரூபாய், பாக்கி நிலுவையில் உள்ளது. இந்தக் கட்டண பாக்கியை வசூலிக்க, தற்போதைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.2008 - 09 கல்வி ஆண்டில்...: முதல் கட்டமாக, 2008 - 09ல், பேராசிரியராக சேர்ந்து, முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், நீண்ட காலமாக, கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள், 19 ஆயிரம் - 57 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

அகஇ - மூன்றாம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு 07.01.2014 முதல் 10.01.2014 பதிலாக 21.01.2014 முதல் 24.01.2014 வரை நடைபெற உள்ளது.

SPD - ACHIEVEMENT TEST FOR CLASS 3 / 5 / 8 POSTPONED TO 21.01.2014 REG PROC CLICK HERE...

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு


காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில் ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது.

அதில், முதுகலை ஆசிரியர்களில் 2014 மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகின்றவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி ஓய்வுபெறுகின்றவர்கள் விபரத்தை சேகரித்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதில் தற்போது முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி முதுகலை பாடங்களில் காலியாக உள்ள பணியிடங்க ளின் விபரங்களையும், மொழிவாரியாக பாடவாரியாக தனித்தனியே சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என்றும் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் குறித்து முக்கிய உத்தரவு

"அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என, அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும்

சி.பி.எஸ்.இ. 10–வது மற்றும் 12–வது வகுப்பு தேர்வு = தேர்வு அட்டவணை முழுவிவரம்


சி.பி.எஸ்.இ. 10–வது மற்றும் 12–வது வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தேர்வு அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

12–வது வகுப்பு தேர்வு அட்டவணை:–

மார்ச் 1–ந்தேதி ஆங்கில விருப்பபாடம்.

4–ந்தேதி வரலாறு

6–ந்தேதி வர்த்தக கல்வி

8–ந்தேதி அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட தேர்வுகள்

10–ந்தேதி நடனத்தேர்வு

அரசு ஊழியர்க்கான பொங்கல் போனஸ் திங்கள்கிழமை அறிவிக்கலாம் என் எதிர்பர்க்கப்படுகிறது

அரசு ஊழியர்க்கான பொங்கல் போனஸ் திங்கள்கிழமை அறிவிக்கலாம் என் எதிர்பர்க்கப்படுகிறது.மேலும்
அரசாணையும் அன்றைய தினமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒரு நாள் லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு தொடர் விடுமுறை அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சி


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வருகிற 11ம்தேதி (சனிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி, 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 13ம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை, 15ம் தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை, 16ம் தேதி (வியாழக்கிழமை) உழவர் திருநாள் அரசு விடுமுறை, 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைபூசம் கடலூர் மாவட்டத்தில் விடுமுறை, 18ம் தேதி (சனிக்கிழமை) வழக்கமான அரசு அலுவலகங்கள் விடுமுறை, 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை

புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்?

ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

58 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்

மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசுகள் புதிதாக 58 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, போதிய மருத்துவ வசதி இல்லாத பகுதிகளிலுள்ள 58 மாவட்ட மருத்துவமனைகள் 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களைக் கொண்ட கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதன் மூலம், கூடுதலாக 5,800 மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி! வருகைப் பதிவுக்கு புதிய முறை அமல்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதிகாரிகள் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டு இன்று முதல் "பஞ்ச்சிங்" முறையில் வருகைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படுகிறது.

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் நிர்வாக சிறப்பு அதிகாரியாக ஷிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., விண்ணப்பம்: ஜன., 27 கடைசி நாள்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் பாடத்தில், முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம், 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என பல்கலைக்கழக

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு விடுமுறை நாட்கள் பின்வருமாறு:


பொங்கல் - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)

மீலாதுநபி - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)


குடியரசு தினம் - ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை)

உகாதி/தெலுங்கு வருடப்பிறப்பு - மார்ச் 31 (திங்கள்கிழமை)

மகாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 13 (ஞாயிற்றுக்கிழமை)

புனித வெள்ளி - ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை)

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (02.01.2013) முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 அப்பொழுது அரசு தரப்பு, இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால் வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.

மனப்பாடம் செய்து படிப்பதை தவிர்க்க சி.பி.எஸ்.இ. புதிய முயற்சி

மனப்பாடம் மூலம் படிப்பதில் சிரமப்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இந்த 2014ம் ஆண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக, பார்முலாக்களைக் கொண்ட load papers -ஐ கொண்டுவர CBSE திட்டமிட்டு வருகிறது. மாணவர்கள் வெறுமனே மனப்பாடம் செய்து படித்து தேர்வெழுதும் பழக்கத்தை தகர்க்கும் ஒரு முயற்சியாக, மேற்கண்ட கேள்வித்தாள் சீர்திருத்தத்தை CBSE கொண்டு வந்துள்ளது.

தனித்தேர்வர்களுக்கு தனி அறை இல்லை: தேர்வுத்துறை

"பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு இனி, தனி அறை கிடையாது. பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து தேர்வெழுத வேண்டும்" என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோல்வி அடைந்தவர்கள், அவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தேர்வு

வகுப்பு 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அடைவுத் தேர்வு தேதி மாற்றம் மற்றும் சார்பான அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்

click here to download the ssa proceeding of Achiement Test Reg

click here to download the ssa Guidelines of Achiement Test Reg

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு

:பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட, வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவு குறைப்பு ஆகிய காரணங்களால், இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாக, வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த, வங்கி பெண் அதிகாரியை, அடையாளம் தெரியாத நபர், கொலை செய்ய முயற்சித்தார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண் அதிகாரி, உடல் நலம் தேறி வருகிறார்.

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர்
ஆகிய இடங்களில் டிஆர்பி உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு

மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஏழு சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த உயர்வு காரணமாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதத்துக்கு ரூ.700 முதல் ரூ.13 ஆயிரத்து 160 வரை கூடுதலாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார வாரிய ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஊதிய உயர்வினை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார். அந்த அறிவிப்பின் விவரம்:
மின்சார வாரியம் உள்பட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்துச் சலுகைகளும் காலத்தே அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தச் சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும்

டிட்டோஜாக் பொருப்பாளர்கள் கல்வி அமைச்சருடன் சந்திப்பு

டிட்டோஜாக் பொருப்பாளர்கள் கல்வி அமைச்சருடன் சந்திப்பு
டிட்டோஜாக் சார்பில் அத்திலுள்ள7 சங்க பொறுப்பாளர்களும் 31.12.2013 செவ்வாய் காலை 11 மணியளவில் கல்வி அமைச்சரை சந்தித்தனர்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.  மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பீதியடைய தேவையில்லை: ஆர்பிஐ விளக்கம்

ரூபாய் நோட்டுகளில் பேனா மற்றும் பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தால் அவை வாங்கப்பட மாட்டாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளின் வெள்ளை பகுதியில் எண்ணோ அல்லது கையெழுத்து போன்ற கிறுக்கலோ அல்லது வாசகமோ இடம்பெற்றிருந்தால் அது செல்லாது என்றும், 2014 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு இந்த நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது

ஊதிய உயர்வு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் குறைந்தபட்சம் 700 ரூபாய் முதல் 13ஆயிரத்து 160 ரூபாய் வரை மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

நேற்று, ஒரே நாளில் மட்டும்,1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு

நேற்று, ஒரே நாளில் மட்டும், 1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு, உடன் பணியாற்றிய ஊழியர்கள், பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு பொறுப்பாளரை தேர்வுத்துறையே தேர்ந்தெடுக்கும்

தேர்வுத் துறையில் புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள் வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு மையங்களுக்கான துறை அலுவலர்கள், தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள்,
அறைக் கண்காணிப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புக்களுக்கான ஆசிரியர்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, பணிமூப்பு அடிப்படையில், பிளஸ் 2 தேர்வுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பிற்கு, பட்டதாரி ஆசிரியர்கள் என, பட்டியல் தயாரித்து, இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தலைமை தேர்வாளர்கள், பறக்கும் படையில் இடம் பெறுவோர் என அனைத்து முக்கிய பொறுப்புகளில் இடம் பெறுவோரை, தேர்வுத்துறை இயக்குனரே முடிவு செய்வார். இதன் மூலம் ஒரு சில கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே நீடிக்கும் "இணக்கமான உறவு" முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்குகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை சுறுசுறுப்பு

மலை போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும், மண்டல வாரியாக, "லீகல் செல்" அமைக்க, பள்ளி கல்வித்துறை, திட்டமிட்டு உள்ளது.

சம்பளம், பதவி உயர்வு, நிலுவை தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசு துறைகள், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காத போது, பாதிக்கப்படும் ஊழியர்கள் கோர்ட்டை அணுகுகின்றனர். இதுபோன்ற வழக்குகள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்றாலும் பள்ளி கல்வித்துறையில் மிக அதிகம்.

ரூ.2 லட்சம் வரை அனுமதி : ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்துவதை போல, ஓய்வூதியர்களுக்கு தனியாக மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான ஆய்வு செய்து ஓய்வூதியர்கள், அவர்களின் மனைவி அல்லது குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பி உள்ள உத்தரவு:
பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு

மாணவர்கள் சேர்க்கை சரிந்தது : ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடங்க ஆர்வம் இல்லை-இருப்பதையும் மூட முடிவா?


ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட் கல்லூரிகள், உடற்கல்வி கல்லூரிகள் ஆகியவற்றை புதியதாக தொடங்க வேண்டும் என்றால் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்திடம்(என்சிடிஇ) அனுமதி பெற்று மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். அப்படி தொடங்கப்படும் கல்லூரிகள் பள்ளிகள் அனைத்தும் என்சிடிஇ விதிகளுக்கு கட்டுப்பட்டவை. இந்நிலையில் 2009ல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள்  நியமிக்கும்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவித்தது.

நமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C, அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி


SASTRA UNIVERSITY B.ed, 2013 EXAM RESULTS

CLICK HERE TO VIEW RESULTS

TNOU -B.Ed & B.Ed(SE) Term End Examination December 2013 Results published

Tamil Nadu Open University, Chennai -B.Ed & B.Ed(SE) Term End Examination December 2013 Results published
Click Here For View Your Result

ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற பத்து அதிகாரிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
  சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஆகிய இரண்டு பணியிடங்கள் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டு இரண்டு பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு பணியிடங்களும் ஒரு ஆண்டு அல்லது தேவைக்கேற்ப ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 தொகுதி அதிகாரிகள் பத்து பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, பத்து பேருக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
எஸ்.மலர்விழி-சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநர், வருவாய் நிர்வாக ஆணையாளர்-பேரிடர் மேலாண்மை (மோகனூரிலுள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர்)
எஸ்.பழனிசாமி-பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் (கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்_www.tntf.in

2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு

ஜனவரி
04: மத்திய அரசு வழங்கும் மானியம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில்  "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது
05: "பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்" என, புதுச்சேரி கல்வியமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

இரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மதுரை மாநகர மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மதியழகன் அவர்கள்   காஞ்சிபுரம் அகஇ மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது,
கன்னியாகுமரி மாவட்ட (IMS) திருமதி.ஜாய் அவர்களை பள்ளிக்கல்வித்துறையில் உள்ள E-GOVERNANCE (CEO CADRE) பிரிவிற்கு பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

New Year Greetings 2014 from the Hon'ble Chief Minister Click Here...

ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ.ஆ.ப., அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்

1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200 

2) Hostal Superintendent and Physical Training Officer 5200-20200+2800 - 9300-34800+4200 

3) Laboratory Assistant 5200-20200+2800 - 9300-34800+4200 

4) Laboratory Technician Grade-1 5200-20200+2800 - 9300-34800+4200 

5) Laboratory Technician Grade-II 5200-20200+2800 - 9300-34800+4200 

6) Dental Hygienist/Dental Mechanic 5200-20200+2800 - 9300-34800+4200 

7) Refractionist/opthalmic Assistant/Opticial / Optometrist 5200-20200+2800 - 9300-34800+4200

8) Leprosy physiotherapist Physio therapy Technician 5200-20200+2400 - 9300-34800+4200

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

GO.462 FINANCE (PENSION) DEPT DATED.27.12.2013 Pension – Medical Aid – New Health Insurance Scheme for Pensioners (including spouse) / Family Pensioners - Implementation of the Scheme- Orders Click Here...

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை விவரம்:  பேரவையில் 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர்

தொடக்கக் கல்வி - 43வது சர்வதேச தபால்துறை "கடிதம் எழுதும்" போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

DEE - 43RD INTERNATIONAL LETTER WRITING COMPETITION - PARTICIPATION OF STUDENTS REG PROC CLICK HERE....

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு: தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

டிட்டோஜாக்-இன்றைய நடவடிக்கைகள்-(30-12-13)

இன்று டிட்டோஜாக் சார்பில் 7 சங்கப்பொதுச்செயலர்களும்(தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி உட்பட) பங்கேற்று 7 கோரிக்கைகள் அடங்கிய மனு மற்றும் எதிர்வரும் டிட்டோஜாக் நிகழ்வுகள் குறித்து தலைமை செயலகத்தில் கல்வித்துறை செயலர் அவர்களை சந்தித்து கூட்டாகமனு செய்தார்கள்.
அப்போது டிட்டோஜாக் தலைவர்கள் தமிழக முதல்வரை சந்திக்கவும், கோரிக்கைகள் சார்பாக பேச்சு வர்த்தைக்கு அழைக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது

பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் 31.12.2013 அன்று பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும்

DSE - 115 BRTE / CRTESs CONVERSION TO BT ASST IN GOVT HIGH / HSS SCHOOLS - COUNSELING HELD AT CONCERN CEO OFFICES ON 31.12.2013 @ 2PM REG PROC CLICK HERE...

முதுநிலை தமிழாசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக  ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.

16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

கேள்வித்தாள் அவுட்; தேர்வை ரத்து செய்தது ஆம் ஆத்மி


அரசு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அமர்ந்ததை அடுத்து, அங்கு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு நேற்று நடந்தது. சுமார் ஒரு லட்சம் பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனத் தேர்வை

டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்றைய சந்திப்பின் போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொண்டது

இன்று சென்னையில் டிட்டோஜாக்கில் உள்ள 7 சங்க தலைவர்களும் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்தித்து மனு அளித்தனர்.

பிஎப் வட்டி உயருமா? ஜனவரி 13ல் தெரியும்

தொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது. ‘தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்’ நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். இவர்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பிஎப் தொகைக்கு 2011&2012 ஆண்டில் வட்டி 8.25% வழங்கப்பட்டது. இந்நிலையில், 8.25 சதவீதத்தை உயர்த்தி 2012&2013ம் ஆண்டில் வட்டி தொகை 8.5% ஆக வழங்கப்பட்டது. இதன் மூலம் பிஎப் தொழிலாளர்களின் ஒட்டு மொத்த கணக்கில் ரூ.56.96 கோடி கூடுதலாக சேர்க்கப்படுகிறது.

35 அரசு ஐ.டி.ஐ.க்களில் ரூ.7 கோடியில் ஆய்வகங்கள்

தமிழகத்தில் 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்களை அமைக்க ரூ.7 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவியரின் அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையில், அனைத்துத் தொழிற்பிரிவுகளிலும் மொழித் திறன், கம்ப்யூட்டர் திறன், மென் திறன் பயிற்சிகள் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

என்ன என்ன பொருள் மக்கிப்போக எவ்வளவு வருடங்கள்-ஓர் எச்சரிக்கை தகவல்

Photo Galleryஒரு பிளாஸ்டிக் பாட்டில் மக்கிப்போக ஐநூறு வருடங்களோ அதற்கு மேலோ கூட ஆகலாம்

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர்கள் ஏமாற்றம்

 தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள், 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.அதே நேரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும், தமிழகம் முழுவதும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

உயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு """"அறிவோம் அகிலத்தை"" என்ற புவியியல் வரைபடத்திறன் (Map reading Skill Training) மாநில, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான தேதிகள் அறிவிப்பு

click here to download the scert proceeding of Upper Primary Teachers Training of Map reading  Skill Training reg

மீண்டும் பணியமர்த்த தீர்ப்பு ஆசிரியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

புதுச்சேரி கல்வித்துறை வழங்கிய காரைக்கால் ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, உடனடியாக ஆசிரியரை பணியமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, காரைக்கால் விரிவுரையாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது

மாநிலத்தின் பல பகுதிகளில், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சில பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று சமகல்வி இயக்கம் எனும் தன்னார்வ அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டுவருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.

தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் 500 நடுநிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்


தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் 500 பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1300 கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற உள்ளது.தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம். இதை செயல்படுத்தும் நோக்கமாக 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் நடுநிலை பள்ளிகளையும் தரம் உயர்த்தி 9ம் வகுப்பில் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதுகலை தமிழாசிரியர் தேர்வு அடுத்தடுத்து வழக்குகள்

அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில்  தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி எழுத்து தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி நடத்தியது. தமிழ் உள்பட அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 முதுகலை பட்டதாரிகள் எழுதினார்கள்

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 79 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

TO VIEW TNPSC NOTIFICATION FOR GROUP - I CLICK HERE...

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது

தமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்பில் சேர்வதற்கான கனவோடு, மாணவ, மாணவியர், இரவு, பகலாக படிக்கின்றனர். உயிரியல் பாடத்தில், அதிக மதிப்பெண் பெற்றால் தான், மருத்துவத் துறையில் சேர முடியும்.

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம் முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர்.

TRB, TNPSC மற்றும் இதர தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் படிவங்கள்

FORM - TAMIL MEDIUM CERTIFICATE FOR SSLC, HSC, DEGREE & B.ED., REG MODEL FORMS CLICK HERE...

இந்தியா நிலவுக்கு மனிதனை அனுப்புகிறது அதற்கான ஆயுத்த பணி தொடங்கியது

நீல்ஸ் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து அரை நூற்றாண்டுகள் ஆகிறது.தற்போது இந்தியா அவரது காலடியை பின்பற்ற தயாராகிறது.இந்திய விமானப்படை  நிலவில் மனிதனை குடியேற்ற திட்டங்கள் தீட்டி அதற்கான ஆயுத்த பணியில் இறங்கி உள்ளது.
சந்திரனுக்கு  மனிதனை அனுப்பவும்  அதற்கன  ஒரு நபரை  தேர்வு செய்யவும்  மற்றும் தேவையான சோதனைகள் மேற்கொள்ளளவும் இந்திய விமான படைக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதகவலை ஏர் மார்ஷல் டி.பி. ஜோஷி, ஆயுதப்படை  பொது இயக்குனர் ( மருத்துவ பிரிவு) ஒரு டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்கு மெமோ

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. 

web stats

web stats