தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் குறைந்தபட்சம் 700 ரூபாய் முதல் 13ஆயிரத்து 160 ரூபாய் வரை மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
10ஆண்டுக்கு மேல் பணியாற்றும் ஊழியருக்கு பணிக்கால பயனாக 3% ஊதிய உயர்வையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு, கடந்த 1.12.2011 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மொத்தம், 25 மாதங்களுக்கான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முதல் தவணை ஜனவரியிலும், 2-வது தவணை ஏப்ரலிலும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தம் 30.11.2015 வரை அமலில் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பழைய ஊதிய ஒப்பந்தம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
No comments:
Post a Comment