தமிழகத்தில் 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்களை அமைக்க ரூ.7 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவியரின் அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையில், அனைத்துத் தொழிற்பிரிவுகளிலும் மொழித் திறன், கம்ப்யூட்டர் திறன், மென் திறன் பயிற்சிகள் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றைப் பயிற்றுவிக்க கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மொழி மற்றும் மென் திறன் ஆய்வகங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வகங்களுக்குத் தேவையான மென்பொருள் மற்றும் கம்ப்யூட்டர்களும் வழங்கப்படும்.
முதல்கட்டமாக, நாகலாபுரம், செக்காணூரணி, ஆண்டிபட்டி, அரக்கோணம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், மேட்டூர், தருமபுரி, அரியலூர், திருச்செந்தூர், குன்னூர், விருதுநகர், வேலூர், திண்டுக்கல், தாராபுரம், ஒசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், வடசென்னை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, மதுரை, கோவை, சேலம், திருச்சி, கடலூர் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கரூர், வேப்பலோடை, ராதாபுரம், அருப்புக்கோட்டை, திருவையாறு மற்றும் போடி ஆகிய இடங்களில் உள்ள 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த ஆய்வகங்களை அமைக்க ஏதுவாக கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் மின் இணைப்பிற்காக ரூ.32 லட்சம், ஆய்வகங்கள் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.5 கோடியே 72 லட்சம், பயிற்றுநர்களுக்கு ஊதியமாக ரூ.1 கோடியே 5 லட்சம், இணையதளத்துக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் ரூ.7 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வகங்களுக்காக 44 பயிற்றுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யவும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment