rp

Blogging Tips 2017

குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷன் ரூ.1,000 கிடைக்குமா?

புதுடில்லி : "பென்ஷன்தாரர்களின் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை, 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்; அதற்காக மத்திய அரசு இப்போது வழங்கும், 1.16 சதவீத பங்கை, 1.79 ஆக அதிகரிக்க வேண்டும்' என, மத்திய தொழிலாளர் துறைக்கு, தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Tamilnadu Self Finance School Fees fixed for the year 2013-2016

Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.

                                         Fee fixed for the year 2013-2016                                      District wise Particulars (Phase III)

District
Ariyalur Fixation
Chennai Fixation
Coimbatore Fixation
Cuddalore Fixation

சென்னை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை கண்காணிக்க 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சென்னையில் 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வை 27 தேர்வு மையங்களில் 9,056 பேர் எழுதுகின்றனர். இரண்டாம் தாள் தேர்வை 75 தேர்வு மையங்களில் 26,043 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணிகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தகுதித் தேர்வைக் கண்காணிக்க 100 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்க இதில் முடிவு செய்யப்
பட்டது.
இந்தக் கூட்டத்தில் தேர்வு மையங்கள், வினாத்தாள் காப்பு மையங்களில் காவல்துறை பாதுகாப்பு, தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம், தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு, கூடுதல் பஸ்கள் இயக்குதல் போன்றவை தொடர்பாக அந்தந்த துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வருவாய்த் துறை அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

விழித்துக் கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள் நடத்தையில் மாற்றம் தேவை குறித்து தினமணி கட்டுரை

நேர்மையிலும் தியாகத்திலும் அறநெறிகளிலும் தனிமனித ஒழுக்கத்திலும் இந்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு என்று இனிமேலும் நம்மால் பெருமையுடன் மார்தட்டிக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது.
அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அமைப்புகள், அரசு நிர்வாகத் துறையினர் என்று பல தரப்பினரும் பல வகைகளில் நம் நாட்டின் சாதாரணக் குடிமக்களின் நம்பிக்கைகளை கலைத்துப்போடுவதை ஓர் அன்றாட நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றார்கள்.

இடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை விளக்கும் கட்டுரை!


ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.

தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ் ஓர் எழுத்துச்சொற்கள் 42_அறிவோம்

நமது தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247
இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள் :

ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு ஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் 13.08.2013 அன்று கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தின் கோரிக்கை முழக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் 13.08.2013 அன்று கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தின் கோரிக்கை முழக்கம் பதிவிறக்கம் செய்ய...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!...

பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.

click here to download the GO 118, dated 10.07.2013 - Cancellation of Incentive for Direct PG without UG in Open Universities

IGNOU_ஜுன்=2013 BEd,தேர்வுமுடிவுகள் வெளீயீடு

CLICK HERE TO SEE THE RESULT

தொடக்கக் கல்வி - அனைத்து வகை பள்ளிகள் / கல்வி அலுவலகங்களில் 15.08.2013 அன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப இயக்குனர் உத்தரவு

DEE - ALL SCHOOLS & EDNL OFFICES MUST CELEBRATE INDEPENDENCE DAY ON 15.08.2013 AND SUMMIT THE REPORT TO DIRECTORATE REG PROC CLICK HERE...

மாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்டம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் BC / MBC / DNC / சிறுபான்மையர் மாணவ / மாணவியர்களில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெரும் மாணவர்களுக்கு ரூ.3000/- அவர்களின் உயர்கல்விக்காக வழங்க முதல்வர் உத்தரவு

TN GOVT PR NO.435, DATED.08.08.2013 - Honble Chief Minister Merit Award Scheme for Backward Classes, Most Backward Classes, Denotified Communities and Minority students Click Here...

ஆசிரியர்கள் பற்றாக்குறை; கேள்விக்குறியாகும் கல்வி

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களே ஆசிரியர் ஆன அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கலசப்பாக்கம் அடுத்த அணியாலை காம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 106 மாணவர்களும், 107 மாணவிகளும் படிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டாக இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எட்டு ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் தலா இரண்டு

5 புதிய ஐ.டி.ஐ.,க்கள்; முதல்வர் உத்தரவு

ஐந்து புதிய ஐ.டி.ஐ.,க்களை, 26.39 கோடி ரூபாய் செலவில், இந்த கல்வியாண்டிலேயே துவக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில், தற்போது, 62 அரசு ஐ.டி.ஐ.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க, மாணவ,

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர்க்கை: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

புள்ளம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், அரசின் தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ) செயல்படுகிறது. இந்த கல்வி ஆண்டின், மூன்றாம் கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களின் அடிப்படை அறிவை ஆய்வு செய்ய உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கில, கணித பாடங்களின் அடிப்படை அறிவை மதிப்பீடு செய்து, ஆக.19ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிப் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரைச் சந்தித்தனர்

எம்.பில்., பிஎச்.டி., போன்ற பகுதி நேர ஆய்வு கல்விக்கு இயக்குனர் அனுமதி பெற்று படிக்கலாம் - நாளிதழ் செய்தி

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது.

அகவிலைப்படி கணக்கீடு எப்படி!

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர்.

தொடக்ககல்வி - அகஇ மூலம் 1 முதல் 4 வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல், 6 முதல் 8 வரை படைப்பாற்றல் கல்வி முறையை கண்காணித்து, பள்ளிகளை வகைப்படுத்தி அறிக்கை ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு

DEE - SABL / SALM SCHOOL WISE GRADING & INSPECTION REPORT WILL BE SEND WITHIN 10 EVERY MONTH REG PROC CLICK HERE...

SSA - MINUTES OF THE MEETING CONDUCTED BY PRINCIPAL SECRETARY

SPD - TO DOWNLOAD MINUTES CLICK HERE...

தொடக்ககல்வி - அகஇ மூலம் 1 முதல் 4 வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல், 6 முதல் 8 வரை படைப்பாற்றல் கல்வி முறையை கண்காணித்து, பள்ளிகளை வகைப்படுத்தி அறிக்கை ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு

DEE - SABL / SALM SCHOOL WISE GRADING & INSPECTION REPORT WILL BE SEND WITHIN 10 EVERY MONTH REG PROC CLICK HERE...

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கான கூட்டுப் போராட்டத்திற்கு, அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தமிழ்நாடு ஆரமப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அழைப்பு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அண்மையில் தமிழக அரசு 88 அரசாணைகள் வெளியிட்டது. இதில் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லாததையொட்டி

ஓய்வூதியத்தாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.35000/-லிருந்து ரூ.50000/- ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு

TN GOVT P.R. NO.429 DATED.07.08.2013 - Tamil Nadu Government Pensioners Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs.35000/- to Rs.50000/- Press Release Click Here...

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு.

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர்

பள்ளிகளுக்கு திடீர் "விசிட்' அடித்து ஆசிரியர் வேலை பார்த்த அமைச்சர்

பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று, திடீர், "விசிட்' அடித்தார். அப்போது, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களின் கற்றல் திறன் குறித்து, ஆய்வு செய்தார்

டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு

"வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார்.

அஇகதி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMDC சிறப்பு கூட்டம் 15.08.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

RMSA - SMDC - DIRECRTOR ORDER TO OFFICIALS, ALL HIGH / HS SCHOOLS TO CONDUCT SMDC SPECIAL MEETING ON 15.08.2013 REG PROC CLICK HERE...

ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியவில்லையா.பயப்படவேண்டாம்

Google-Chrome ல் ஹால்டிக்கெட் லவுன்லோட் செய்ய முடிகிறது
TRB தளத்திலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்குவதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால், இம்முறையினை முயற்சி செய்து பாருங்கள். POPUP எனப்படும் செட்டிங்ஸ் உங்கள் ப்ரௌசரில் DISABLE ஆகி இருந்தால் முதலில் அதனை ENABLE செய்து பின் ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கவும்
நீங்கள் பயன்படுத்துவது Firefox browser ஆக இருந்தால், அது .ASPX File ஆக download ஆகும்.  அதை download செய்த பிறகு, அதனை Rigth Click செய்து, Open with , Adobe Reader என கொடுக்கவும். File open ஆகி விடும். Print எடுத்துக்கொள்ளலாம்.
நிறைய ஆசிரியர்கள் இந்த வாசகம் “Corresponding Record Was Not Found... Please Check Your Details and Retry!” வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் paper 1 & 2 எதற்கு நீங்கள் அப்பளை செய்து உள்ளீர்களோ அந்த OPTION ஐ click செய்தால் இப்பிரச்சனை வராது. மாற்றி CLICK செய்வதாலேயே வருகிறது.
  click here for PLEASE CLICK FOR PAPER I  

click here for PLEASE CLICK FOR PAPER II 
 

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு


பள்ளிக்கல்வி - அகஇ - 2012-13ம் கல்வியாண்டில் வள மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்க திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

DSE - BRTE CONVERSION LIST REG PROC CLICK HERE...

TAMIL CLICK HERE...

ENGLISH CLICK HERE...

MATHS CLICK HERE...

PHYSICS CLICK HERE...

CHEMISTRY CLICK HERE...

BOTANY CLICK HERE...

ZOOLOGY CLICK HERE...

HISTORY CLICK HERE...

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் மருத்துவமனைகளின் பட்டியலை அங்கீகரித்து தமிழக அரசு உத்தரவு

GO.680 FINANCE DEPARTMENT DATED.29.07.2013 - NHIS - 2012 - Consolidated List of Hospitals covered under the Scheme based on the recommendations of the Accreditation Committee for empanelment of Hospitals- Notified - Orders Click Here...

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - புள்ளி விவர மையத்தில் இருந்து பெறப்பட்ட ஆசிரியர்களின் CPS விவர தாட்களை 08.08.2013க்குள் சமர்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DEE - DEE ORDERED TO ALL DEEOs REG TEACHERS CPS SUBSCRIPTION DETAILS TO BE SUBMITTED TO DATA CENTER WITHIN 08.08.2013 REG PROC CLICK HERE...

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

First Published : 06 August 2013 06:30 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Google-Chrome ல் ஹால்டிக்கெட் லவுன்லோட் செய்ய முடிகிறது
TRB தளத்திலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்குவதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால், இம்முறையினை முயற்சி செய்து பாருங்கள். POPUP எனப்படும் செட்டிங்ஸ் உங்கள் ப்ரௌசரில் DISABLE ஆகி இருந்தால் முதலில் அதனை ENABLE செய்து பின் ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கவும்
click here for PLEASE CLICK FOR PAPER I  

click here for PLEASE CLICK FOR PAPER II 

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி போராட்டம் - களம்கான ஆசிரியர்கல்ளை அழைக்கும்அறிவிப்பு:


இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 4வது வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 22ந்தேதி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதபதிகள் விசாரணையை வருகிற 22.8.2013 ஒத்திவைத்தனர்.
இன்று இன்று நடைபெற்ற விசாரணை 5 நிமிடங்கள் மட்டுமே நடந்ததது என்றும், இந்த வழக்கு வருகிற 22.8.2013 அன்று விரிவாக நடக்கவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

10 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் மிகபெரிய மாற்றம் வரும்.தினமணி கட்டுரை


வலைதளம் அறிமுகம் -தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் வலைதளம்

தினமலர், சிறுவர்மலர், சுட்டி விகடன், தினத்தந்தி, தினகரன், தினமணி, அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா, கண்ணன், கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர், டிங்டாங், டமாரம், சங்கு, பாலர் மலர், பாலவிநோதினி, பால தீபிகை, முத்து, பாப்பா மலர், அணில், ஜில்ஜில், மத்தாப்பு, பூஞ்சோலை, கரும்பு முதலிய சிறுவர் இதழ்கள், இந்தத் தொகுப்பில் உள்ளவற்றை எல்லாம் எழுதிய கவிஞர்கள்/ஆசிரியர்கள் மற்றும் இணைய வலைப்பூக்கள், பத்திரிக்கைகள், இங்கே வாசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
நாற்றங்கால்

இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைய களைய அரசு முயற்சி-thanks to asiriyar kural

இடைநிலை ஆசிரயர்களுக்கு 6வது ஊதியக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதிகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்ககோரி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் வைத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடக்ககல்வி இயக்குனரின் வேண்டுகோளின் படி ஊதிய முரண்பாடு பற்றி முழுமையான விளக்கங்கள்,கணக்கீடுகள் பட்டியல்கள் நேற்று (5/8/13) தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் அவர்களால் தொடக்ககல்வி இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ளது 

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து அனைத்து சங்கங்களும் இணைந்து போராடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு சங்கங்கள்  தனித்தனியாக பல்வேறு கட்ட போராட்டங்கள் அறிவித்தன. ஆனால் தனிப்பட்ட சங்க போராட்டம் பெரியளவில் வெற்றியடைய வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில் 4/8/13 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் கூட்டு போராட்டத்திற்க்காக அழைப்பு விடுக்க 5 நபர் குழு அமைத்து அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்தது.

ஆத்திசூடியை- உலகறியச் செய்வோம்..!ஆத்திசூடி-ஆங்கில மொழிபெயர்ப்புடன்.நன்றி-திரு மீனாட்சிசுந்தரம்.பெருந்துரை


ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.

அரசுப்பள்ளிகளீல் பணியாற்றும் ஆசிரியர்கள் இனி ( regular) நேரடிச்சேர்க்கை மூலம் Bed,பட்டப்படிப்பு,முதுகலைப்படிப்புகள் படித்திட அனுமதி வழங்குவதை தவிர்த்திட கல்விச்செயலர் உத்திரவு

Click here பள்ளிகல்வி இயக்குநர் செயல்முறைகள் ந .க .எண் 6462/டி2/இ1/2008நாள் 31.07.2013

click here பள்ளிக்கல்வி துறை அரசானை எண் 135.dt 23.07.2013 நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்த்தல்  

கல்வி முறையில் மாற்றம் தேவை-தினமணி கட்டுரை-தாய்மொழிவழிக்கல்வி முறையே சிறந்தது


தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களின் கூட்டம் 08.08.2013 அன்று சென்னை தொடக்க கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது

DEE - ALL DEEOs PA MEETING WILL BE HELD ON 08.08.2013 REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - அனைத்து அரசு பள்ளிகளில் 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவ / மாணவிகளுக்கு, சதுரங்க பலகைகள் மாவட்ட கொள்முதல் குழு மூலமாக கொள்முதல் செய்வது அதனை ஒதுக்கீடு செய்து மீதமுள்ள சதுரங்க பலகைகள் தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவு

DEE - ALL PRIMARY / MIDDLE SCHOOLS CHESS BOARD PURCHASE REG PROC CLICK HERE...

நடுவண் அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்கியது போன்று தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கவதற்காக அனைத்து ஆசிரியர் சங்கங்கள் இணைந்து போராட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அழைப்பு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் (பொறுப்பு) திரு க செல்வராஜ் அவர்கள் முகவரியிட்டு அனுப்பப்பட்ட கடிதம்.
மூத்த தலைவர் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஏற்கனவே தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அனைத்து சங்கங்களுடன் இனைந்து போராட ஒத்த கருத்து உருவாக்க 5 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.பிற சங்கங்களின் தலைவர்களும் தங்கள் மாநில செயற்குழுவைக்கூட்டி அனைத்து சங்கங்களும் சேர்ந்து போராட முன்வர அன்புடன் அழைக்கிறோம்
ஒன்றுபட்டு இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் 4200 பெற்றிடுவோம்.

அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு - தினமலர்

கல்வி அதிகாரி உத்தரவு ரத்து ஆசிரியர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதா?

நாகப்பட்டினம் வேதாரண்யம் வட்டத்தை சேர்ந்த வீரக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: திருவாரூர் மாவட்டம் செங்கலூரில் உள்ள முஸ்லிம் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி சேர்ந்தேன்

ஊதிய உயர்வு; உண்மை என்ன: கருணாநிதி கேள்வி

"ஊதிய உயர்வு விவகாரத்தில் பாராட்டிய சங்கங்கள், உண்மை நிலை தெரிந்ததும், அதிருப்தியடைந்து போராட்டத்தை அறிவித்து உள்ளன. தி.மு.க., ஆட்சி தான், அரசு அலுவலர்களுக்கு பொற்காலம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

அடுத்த மாதம் அறிவிப்பு மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தும் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கேற்ப ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, அகவிலைப்படியை 10 முதல் 11% வரை உயர்த்துவது குறித்து ஆரம்ப கட்ட பரிசீலனையில் உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் இன்று ஹால்டிக்கெட் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிஆர்பியின் இணையதளத்தில் ஹால்டிக்கெட்களை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை

மூன்று நபர் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம், குறைந்தபட்சம் தனி ஊதியத்தை கூட 01.01.2006 முதல் வழங்கப்படவில்லை, ஆனால் மற்ற பதவிக்கு வழங்கப்பட்டது

CLICK HERE TO VIEW THE ATRICLE
THAKS To  tnkalvi.com

04.08.2013 ல் நாமக்கல்லில் நடந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் செயற்குழுவின் நிழற்படங்கள்.


தமிழகத்திலிருந்து 2012- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் 22 ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


அதன்படி இந்த ஆண்டு 8 பெண் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதொடர்பாக விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. விருதுக்கான பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஒருங்கிணைந்த ஆசிரியர்சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்துவதற்கு கருத்தொற்றுமை ஏற்பட வழிவகை செய்ய 5 நபர் குழு அமைப்பு-நாமக்கல் நகரில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு முடிவு

இடைநிலை ஆசிரியர்  ஊதியம்,PB-2=9300-34800 என்றஊதிய விகிதத்தில் தர ஊதியம் 4200ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்தும் விதமாக அனைத்து சங்க பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு  பேச்சுவார்த்தை நடத்திட 5 நபர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவை  அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருங்கிணைந்த ஆசிரியர்  சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்துவதற்கு கருத்தொற்றுமை ஏற்பட வழிவகை செய்ய   தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில  செயற்குழு கேட்டுக்கொண்டது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் உயர்த்தக்கோரி- தொடர் போராட்டம் அறிவிப்பு.நாமக்கல்லில் இன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம்

நாமக்கல் நகரில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு தீர்மானங்கள் வருமாறு

=>        ஊதியக்குறைதீர் குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணைகளில் இடைநிலை ஆசிரியர் தர ஊதிய உயர்வு  முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளதை செயற்குழு அரசுக்கு  தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.

=>               இடைநிலை ஆசிரியர்  ஊதியம்,PB-2=9300-34800 என்றஊதிய விகிதத்தில் தர ஊதியம் 4200ஆக உயர்த்த வே ண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டராங்களில் உள்ள உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்அலுவலகங்கள் முன்பாக 13/08/13 செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

=>                   நாளை 5/8/13 முதல் 12/08/13 வரையிலான காலத்திற்கு கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து  பணிக்கு செல்வது எனவும் தீர்மாணிக்கப்பட்டது

=>                    மேலும் 5/09/13 அன்று மாவட்ட த்தலைநகரில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

 மேலும்
ஒருங்கிணைந்த ஆசிரியர்சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்துவதற்கு கருத்தொற்றுமை ஏற்பட வழிவகை செய்ய 5 நபர் குழு அமைப்பு

 அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஒருங்கிணைந்த ஆசிரியர்சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்தும் விதமாக அனைத்து சங்க பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு  பேச்சுவார்த்தை நடத்திட 5 நபர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவை  அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருங்கிணைந்த ஆசிரியர்சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்துவதற்கு கருத்தொற்றுமை ஏற்பட வழிவகை செய்ய  இச்செயற்குழு கேட்டுக்கொண்டது
தீர்மான நகல் பார்வையிட

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் .தினகரன் செய்தி

(இந்த பிரச்சினையை நேற்றே தொடக்கல்வி இயக்குனர் கவனத்திற்குகொண்டுசென்றுள்ளது.நமது சங்கம். விரைவில் அரசிடம் கொண்டுசெல்ல உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். இன்று நாமக்கல் நகரில் நடைபெறும் அவசர செயற்குழுவில் இது சார்ந்து விவாஅதித்து முடிவெடுக்க உள்ளது தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி நன்றி)
ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். ‘அ‘ என்ற எழுத்துக்கு உய¤ர் கொடுத்து ‘அம்மா‘ என ஆரம்பித்து ஆய்த எழுத்து வரை எழுத, படிக்க கற்றுக் கொடுப்பவர்கள் ‘ஆசான்கள்‘. அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஆசிரியர்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளோம்.அந்த ஆரம்பக் கல்வ¤யை புகட்டும் ஆசிரியர்களுக்கே ஊதியக்குழு முரண்பாடுகளால் சோதனை வந்திருக்கிறது. தமிழக அரசின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.

லண்டன்_கற்கும் ஆர்வத்தை தூண்டும் வீடியோ கேம் கல்வி

"படிப்பில் நாட்டமில்லாத குழந்தைகள் கூட, "வீடியோ கேம்" மூலம் அளிக்கப்படும் கல்வியை விரும்புகின்றனர்; இதனால், அவர்களது கற்கும் திறன் அதிகரிக்கிறது" என பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தின், கலை மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர், கிறிஸ் மே கூறியதாவது: படிப்பில் சிறிதும் நாட்டம் இல்லாத குழந்தைகளுக்கு, "வீடியோ கேம்" மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள், அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு 12% சேவை வரி: வருமான வரித்துறை நோட்டீஸ்

நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கூடுதல் வரியையும், மாணவர்களிடமே வசூலிக்க வேண்டியிருக்கும். பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், வரும், 7ம் தேதி, பெங்களூருவில் கூடுகின்றனர்.
நடப்பு ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகைகள் திரும்ப பெறப்பட்டு, சேவை வரி விதிக்கப்பட்டது. வரி விலக்கு வாபஸ், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டி, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு, நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 4,000 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், சேவை வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நெருக்கடியால், நாடு முழுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவாதித்து, முடிவு எடுப்பதற்காக, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாணவர்களுக்கான கல்வி கட்டணம், நோட்டு புத்தக கட்டணம், வாகன கட்டணம், கராத்தே கட்டணம், நடனம் கற்றுக்கொடுத்தால், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் என, ஒன்று விடாமல், அனைத்து இனங்களுக்கும், தனித்தனியே வசூலிக்கப்படும் கட்டணத்தில், 12 சதவீதத்தை, சேவை வரியாக செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.பி., புதிய தலைவராக பதவியேற்றார் விபு நய்யார்

டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார், பதவியேற்றார். டி.ஆர்.பி., தலைவர் பதவியில், இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்.

ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவு: நேரில் வரத்தேவையில்லை

தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பட்டதாரிகள், கல்வித் தகுதியை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மதுரை) "ஆன்லைனில்" பதிவு செய்யலாம். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த அலுவலகத்தின் கிளை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மாடியில் உள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தினர், இங்கு பதிவு செய்ய வேண்டும். இதனால், பதிவு செய்வோருக்கு அலைச்சல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க "ஆன்லைன்" பதிவு திட்டம் நடைமுறையில் உள்ளது.
இருப்பினும், பலர் இம்முறையை அறியவில்லை. புதிதாக பதிவு செய்வோர், www.tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் சென்று, "நியூ யூசர் ஐ.டி., ரெஜிஸ்ட்ரேசன்" என்பதை "கிளிக்" செய்து விபரங்களை பதிவு செய்யலாம்

சதுரங்க போட்டிகள் நடத்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

"அனைத்து வகை பள்ளிகளிலும், வரும், 23ம் தேதி முதல், அக்., 22ம் தேதி வரை, பல்வேறு நிலைகளில், பள்ளி மாணவர்களுக்கிடையே சதுரங்கப் போட்டிகளை நடத்த வேண்டும்" என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள உத்தரவு: மாணவர்களின் திறமையையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்கும்,

பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோருக்கு உயர் கல்வித்தகுதிக்காக வழங்கப்படும் 2 ஊக்க ஊதியங்களை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு


பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோருக்கு உயர் கல்வித்தகுதிக்காக வழங்கப்படும் 2 ஊக்க ஊதியங்களை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு
2 ஊக்க ஊதியம் தமிழக அரசில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோர் பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவர்களின் உயர்கல்வித்தகுதியை கருத்தில் கொண்டு 2 ஊக்க ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. (இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியில் சேரும் பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.8,060 ஆக இருக்கும். அதேநேரத்தில், குரூப்–2 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக உதவியாளர், கணக்காளர் பணியில் பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.8,000 தான்.

அனைவருக்கும்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்



ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினம் அல்லது நட்பு தினமாக சர்வதேச அளவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

விருத்தாசலத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, வட்டார கிளை அலுவலகம் திறப்பு விழா,

விருத்தாசலம்:தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, வட்டார கிளை அலுவலகம் திறப்பு விழா, விருத்தாசலத்தில் நடந்தது.வட்டாரத் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலர் ஜெகதீசன் வரவேற்றார். நிர்மலா, கீதா, சுலோச்சனா, உஷாராணி, பெனட்டிக் அருள் செல்வராணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து, சங்க ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் இலவச வகுப்பு துவங்கியது.மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், உட்பட பலர் பங்கேற்றனர்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை : அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இயக்குனர் உறுதி .

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை : அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இயக்குனர் உறுதி .

  இன்று 03.08.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் புதிதாய் பொறுப்பேற்ற தொடக்க கல்வி இயக்குநர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவின் பாராபட்ச போக்கை - விரிவாக நிதி இழப்புடன் எடுத்துக் கூறினர். கனிவுடன் பொறுமையாக கேட்ட இயக்குநர், அரசின் பார்வைக்கு இப்பிரச்சனைகளை எடுத்து செல்வதாக உறுதி அளித்தார். மேலும் ஆசிரியர்களின் பிரச்சனை சார்பாக தங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். புதிய இயக்குநரின் அணுகுமுறை திருப்தி அளிப்பதாக தலைமை நிலைய செயலாளர் திரு. க.சாந்தக்குமார் தெரிவித்தார்.

web stats

web stats