Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

5 புதிய ஐ.டி.ஐ.,க்கள்; முதல்வர் உத்தரவு

ஐந்து புதிய ஐ.டி.ஐ.,க்களை, 26.39 கோடி ரூபாய் செலவில், இந்த கல்வியாண்டிலேயே துவக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில், தற்போது, 62 அரசு ஐ.டி.ஐ.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க, மாணவ,
மாணவியர் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இத்தகைய தொழிற்பயிற்சி நிலையங்கள் கூடுதலாகத் துவங்கப்பட வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு, ஐந்து புதிய ஐ.டி.ஐ.,க்கள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி, தூத்துக்குடி - வேப்பலோடை, தேனி - போடி, தஞ்சாவூர் - திருவையாறு, திருநெல்வேலி - ராதாபுரம், விருதுநகர் - அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில், ஐ.டி.ஐ.,க்கள், 26.39 கோடி ரூபாயில் துவக்கப்பட உள்ளன.
நடப்பாண்டிலேயே, இவை செயல்படத் துவங்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats