Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர்க்கை: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

புள்ளம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், அரசின் தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ) செயல்படுகிறது. இந்த கல்வி ஆண்டின், மூன்றாம் கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன.

இதில், மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிஸிங் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், சுருக்கெழுத்து (ஆங்கிலம்) மற்றும் தையல் போன்ற படிப்புகளுக்கு, சேர்க்கை நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பெறலாம். சேர்க்கை கவுன்சலிங் வரும், 19ம் தேதி, திருவெறும்பூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கவுள்ளது.
இங்கு படிப்போருக்கும் தமிழக அரசின் லேப்டாப், சைகிள், சீருடை, கல்வி உதவித்தொகை போன்றவை வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.
இதில், பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவிகள் தங்கி பயில விடுதி வசதி உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 0431- 2908 480/ 2909 481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தர்மபுரி: தர்மபுரி அரசு ஐ.டி.ஐ.,யில், 2013ம் ஆண்டிற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பங்கள் அனுப்ப வரும் 14ம் தேதி மாலை 5.45 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி அரசு ஐ.டி.ஐ.யில் அரசு ஐ.டி.ஐ.,யில், இரண்டாண்டு பாடங்களாக கட்டிட பட வரைவாளர், மின் பணியாளர், பொருத்துனர், கம்மியர் மோட்டார் வண்டி மெக்கானிக், கம்மியர் ரேடியோ, டி.வி., மெக்கானிக், தானியங்கி ஊர்தி மெக்கானிக், கடைசலர் உள்ளிட்டவையும், ஓராண்டு பாடங்களாக கம்மியர் டீசல், வெல்டிங் ஆகியவைக்கான சேர்க்கை நடக்கவுள்ளது.
இதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்கள் வரும், 14ம் தேதி மாலை, 5,45 மணி வரை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ.,யில் சேர எட்டாம் வகுப்பு, எஸ்.எல்.எஸ்.ஸி., பாஸானவர்கள் மற்றும் ப்ளஸ் 2 பெயிலான மாணவ, மாணவியர் மற்றும், 40 வயது வரை உள்ள ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,க்களில் தொழிற் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றை சாலர முறையில் நிரப்படவுள்ளது. மேலும் இந்த கல்வி ஆண்டு முதல் அரசு, தனியார் ஐ.டி.ஐ.,க்களில் தொழிற்பிரிவுகளுக்கான தேர்வுகள் செமஸ்டர் முறையில் நடக்கவுள்ளது.
ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து படிக்கும் அனைத்து மாவணவர்களுக்கும் மாத ஊக்கத்தொகை, 500 ரூபாய், விலையில்லா காலணி, சீருடை, சைக்கிள், லேப்டாப் வழங்கப்படும். மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் கூடுதலாக ஒவ்வொரு மாணவர்களுக்கும், 40 மணி நேரம் கம்யூட்டர் பயிற்சி வழஙக்கபடவுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மென்திறன் பயிற்சி, பிரபல அரசு, தனியார் தொழிற்கூடங்களில் இன்பிளான்ட் பயிற்சி தரப்படுகிறது.
தர்மபுரி ஸ்ரீசக்தி ஐ.டி.ஐ., மாரண்டஹள்ளி ஸ்ரீமல்லேஸ்வரா ஐ.டி.ஐ.,க்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தர்மபுரி அரசு ஐ.டி.ஐ.,யில் நடக்கவுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats